Breaking News

இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு

இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு
ஒரு பள்ளிவாசலில் ஒரு ஜமாஅத் முடிந்த பிறகு இன்னொரு ஜமாஅத் நடத்தக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அபத்தமாக வாதிட்டதையும், அதற்கு நாம் அளித்த விரிவான மறுப்பையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள்
அதனை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்துக் கொள்ளவும்
 
எமது மறுப்புக்கு மறுப்பு என்ற பெயரில் மேற்படியார்கள் மற்றொரு கட்டுரை வெளியிட்டனர்.அதற்கு அப்துன்னாஸர் அவர்கள் உடனே தனது மறுப்பை அனுப்பி இருந்தார். ஆனால் இலங்கை மறுப்புக் கட்டுரை உருப்படியாக் இல்லாததால் அப்துன்னாசர் மறுப்பை நாம் வெளியிடாது நிறுத்தி வைத்திருந்தோம்.  எனவே அதற்கு எந்தப் பதிலும் சொல்ல வேண்டாம் என்று நாம் முடிவு செய்திருந்தோம். ஆனால் நாம் பதில் சொல்லாததால் அவர்கள் கூறுவது தான் சரி என்பத்ற்கான ஆதராமாகக் காட்டுகிறார்ர்கள் என்று இலங்கை நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில் அதற்கான் மறுப்பை வெளியிடுகிறோம்.

அப்துன்னாஸர் எழுதிய இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு

இதைப் படிக்கும் சகோதரர்கள் இதற்கு முன்பு நாம் வெளியிட்ட மறுப்பையும் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பாமரன் கூட மிக இலகுவாக விளங்கக்கூடிய விசயங்களைக் கூட அல்ஜிப்ரா கணக்கு போல் குழப்பமாக்கிக் காட்டுவதில் தாங்கள் கைதேர்ந்தவர்கள் என்பதை இலங்கையைச் சார்ந்த சில மௌலவிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
பெண்கள் தங்க நகை அணிவது தொடர்பான இவர்களது ஆய்வில் இதனை அனைவரும் தெளிவாகவே விளங்கிக் கொண்டார்கள்.
இதே வேலையைத் தான் தொழுகை முடிந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவது பற்றிய ஆய்விலும் செய்திருந்தனர்.
ஹதீஸ்களை எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் இவர்களின் ஆய்விற்கு பதிலளிக்கும் போது மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.
ஆனால் நமக்கு ஏதாவது மறுப்பெழுதியாக வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனரே தவிர நாம் எடுத்து வைக்கும் வாதங்கள் சரியானவை தானாஎன்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இவர்களிடம் இல்லை என்பதையே அவர்களின் மறுப்பாய்வு தெளிவுபடுத்துகிறது.
ஆய்விற்கு சம்பந்தமில்லாமல் வழா வழா கொளா கொளா என்று இவர்கள் எழுதியதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆய்வு தொடர்பாக அவர்களின் அறியாமையை தெளிவுபடுத்தும் வண்ணத்தில் இந்த மறுப்பாய்வை அமைத்துள்ளோம்.
சல்லடை ஊசியைப் பார்த்து உனக்கு பின்னால் ஒரு ஓட்டையுள்ளது என்று கூறியது போல் ஹதீஸ்களை முறையாக விளங்க முடியாத இந்தச் சகோதரர்கள் அதே குற்றச் சாட்டை நம் மேல் வைப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
இதோ அவர்களின் உபதேசத்தைப் பாருங்கள் :
நமக்கென்று ஒரு நிலைப்பாட்டை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ற ஆதாரங்களை குர்ஆன் ஸுன்னாவிலிருந்து தேடுவது மனோ இச்சைவாதிகளின் கொள்கையாகும். சத்தியம் எதுவோ அதற்கு முற்றிலுமாக அடிபனிவேன் என்ற நோக்கோடு குர்ஆனிலிருந்தும் ஹதீத்களிலிருந்தும் ஆதாரங்களை தேடுவது இறை விசுவாசிகளின் போக்காகும்.
பொதுவாகஒரு ஆய்வாளரைப் பொருத்தவரைக்கும் ஸுன்னாவை தரம்பிரிக்கின்ற போதிய அறிவு அவரிடம் காணப்படும் அதே வேலைகுர்ஆனையும் ஸுன்னாவையும் எந்த அடிப்படைகள் கொண்டு விளங்க வேண்டுமென்ற சட்டக்கலையோடு தொடர்பான போதிய தெளிவு அவரிடம் இருக்க வேண்டும். இல்லாதவிடத்தில் சில வேலை அல்ல பலவேலைகளில் தப்பும் தவறுமாக முடிவெடுக்க வேண்டிவரும்.
இஸ்லாத்திற்தெதிரான அத்வைதம்காதியானிசம்பயில்வானிசம்போன்ற இன்னும் பல வழிகேடான சிந்தனைகலெல்லாம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உருப்பெற்றதற்கான அடிப்படைக் காரணமே சட்டக்களையில் போதிய தெளிவில்லாமல் இஸ்லாமிய ஆய்வியல் துறைக்குள் காலடி எடுத்து வைத்தமையே. இப்படிப்பட்ட ஒருவர் ஆய்வு என்று எதையோ சொல்லி இஸ்லாத்தை மரணிக்கச் செய்வதை விட அவர் மௌனம் சாதித்து இஸ்லாத்தை உயிர் வாழவைப்பதே மேலானதாகும்.
உண்மையில் இப்படியான விடயங்களை மாற்றுக் கொள்கையினருக்கு மறுப்புகள் எழுதுகின்ற போதுதான் குறிப்பிட வேண்டும். எனினும்துரதிஷ்ட வசமாக எமது சக தௌஹீத் மார்க்க அறிஞர்களுக்கு இப்படியான விடயங்களை தொட்டுக்காட்டுவதில் வெட்கமும் வேதனையுமாக இருக்கின்றது. மனம் இடங்கொடுக்காவிட்டாலும் சந்தர்ப்ப சூல்நிலைகள் அப்படியான ஒரு நிலைக்கு எம்மை இழுத்துச்சென்றுவிட்டன.
மேற்கண்ட உபதேசங்கள் அனைத்தும் தனக்குத்தான் முழுமையாகப் பொருந்தக் கூடியது என்பதை ஏனோ இச்சகோதரர் உணர மறந்து விட்டார்.
ஏனெனில் எதைச் செய்யக் கூடாதென்று அவர் வாதிகின்றாரோ அவை அனைத்தையுமே நமக்கு மறுப்பு என்ற பெயரில் எழுதியவற்றில் செய்திருக்கின்றார்.
இவருடைய அபத்தங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.
மக்கள் குழப்பமில்லாமல் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக விளங்குவதற்கு எளிதான முறையில் நம்முடைய ஆய்வினை அமைத்துக் கொண்டுள்ளோம்.
ஒரு தடவை ஜமாஅத் தொழுகை முடிந்த பள்ளியில் மீண்டும் ஒரு முறை ஜமாஅத்தாக தொழுகை நடத்துவது கூடாது என்கின்ற முடிவை இவர்கள் எடுத்ததற்குக் காரணம் இவர்களின் தவறான அடிப்படையே ஆகும்.
அடிப்படை சரியில்லையென்றால் அதன்மீது எழுப்பப்படுகின்ற கட்டிடமும் உறுதியானதாக இருக்காது. ஆற்றில் ஓரத்தில் கட்டப்படும் கட்டிடத்தைப் போன்றுதான் இவர்கள் அடிப்படை சரியில்லாத காரணத்தினால்தான் இவர்கள் மிக இலகுவாக விளங்கவேண்டியதைக் கூட மிகவும் சிக்கலாகக் காண்கின்றனர்.
தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்துவதற்கு நாம் ஆதாரமாகக் கூறும் செய்தியை விதிவிலக்கான ஒன்றாக இவர்கள் கருதுகின்றனர்.
இதை அவர்களின் கூற்றே தெளிவு படுத்துகிறது.
ஒரு பொது முறை இருக்க விதிவிலக்காக ஹதீஸ்கள் இடம் பெற்றால் இந்த ஹதீஸ்கள் இடம் பெற்ற சமயம்சந்தர்ப்பம்சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம்சந்தர்ப்பம்,சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் இந்த ஹதீஸ்களை நாம் அமுல் படுத்தலாமே தவிர எல்லா சமயங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எச் சூழலிலும் அமுல் படுத்த முற்படக் கூடாது. சட்டக்களையில் முக்கியமான இடத்தைபிடித்துக்கொண்ட இவ்விதியே மேற்படி ஹதீத்கள் போன்றவற்றிலிருந்தே தோன்றின.
ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத்தைத் தவிர மற்றொரு ஜமாஅத் நடத்தக் கூடாது என்பது பொதுவான விதியாம்.
(இது சரியான ஆய்வில்லாமல் இவர்களே ஏற்படுத்திய விதியே தவிர மாரக்கம் போதித்த விதியல்ல இதை நாம் முந்திய மறுப்பிலேயே தெளிவுபடுத்தியிருந்தோம். மீண்டும் ஒரு முறை இந்த ஆய்விலும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதனால் பள்ளியில் மீண்டும் தொழுகை நடத்தியதாக வரக்கூடிய ஹதீஸ் விதிவிலக்கானதாம்.
பொதுமுறை என்பதற்கு அவர்கள் தரும் அபத்தமான விளக்கத்தைப் பாருங்கள் :
முதலாவது ஜமாஅத் கட்டாயமானதும் மிக அத்தியாவசியமானதாகும். அதற்கான ஆதாரங்கள் ஹதீத் கிரந்தங்களில் நிறைந்து காணப்படுகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று (வெங்காயம் சாப்பிட்டவர்தூங்கிவிட்டவர்மறந்துவிட்டவரல்லது முடியுமான முயற்சிகள் செய்தும் தாமதமாகிவிட்டவர் ) இப்படியான நிலமைகள் நபிகளாரின் காலத்தில் இடம்பெற்றும் கூட அவற்றிற்கு பிரத்தியோகமாக தனியே ஜமாஅத் நடாதத்தியதாக எங்கும் ஆதாரம் கிடையவே கிடையாது. இது ஒரு பொது முறையாகும்.
நபியவர்கள் பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதை மட்டுமே வலியுறுத்தி உள்ளார்களே தவிர முதலாவது ஜமாஅத்இரண்டாவது ஜமாஅத் என்று வேறுபடுத்தி காட்டவில்லை.
முதலாவது ஜமாஅத் கட்டாயமானதும் மிக அத்தியாவசியமானதாகும். அதற்கான ஆதாரங்கள் ஹதீத் கிரந்தங்களில் நிறைந்து காணப்படுகிறது.
முதலாவது ஜமாஅத் மட்டும் தான் கட்டாயமானதுஅவசியமானது என்று இவர்கள் கூறியிருப்பது இவர்களின் மனோஇச்சையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே தவிர நபியவர்களின் வழிகாட்டுதலில் இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
பள்ளிவாசல் என்பதே ஜமாஅத்தாகத் தொழுவதற்குத்தான் என்பதைத்தான் நபியவர்கள் வலியுறுத்தி அதை தம்முடைய வாழ்நாளில் நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் நபியவர்கள் எங்களுக்கு சுபுஹை தொழவைத்தார்கள். பிறகு இன்னார் வந்துள்ளாராஎனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். இன்னார் வந்துள்ளாராஎன்று வேறொருவரைக் கேட்டார்கள். நபித்தோழர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள் ''(சுபுஹ்இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள். (இறை நெருக்கத்தைப் பெருவதில்) முதல் வரிசையாகிறது  மலக்கு மார்களின் வரிசை (இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதைப்) போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள். ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது  அவர் தனியாகத் தொழுவதைவிட மிகபரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகபரிசுத்தமானதாகும். (தொழுகையாளிகளின்) எண்ணிக்கை அதிகரிப்பதுதான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்''என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் (467)
இங்கே நபியவர்கள் ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவதைத்தான் வலியுறுத்துகின்றார்களே தவிர முதல் தடவை சேர்ந்து தொழுவதை மட்டும்தான் இது குறிக்கும் என்று நபியவர்கள் குறிப்பிடவில்லை.
(தொழுகையாளிகளின்) எண்ணிக்கை அதிகரிப்பதுதான் உயந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்''
இதுவும் முதல் ஜமாஅத் மட்டும் தான் என்று நபியவர்கள் கூறவில்லை. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : முஸ்லிம் (1151)
மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதின் சிறப்புகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் பள்ளியில் தொழும் போது ஜமாஅத்தாகத்தான் தொழவேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன.
பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும்தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது என்று பொதுவாகக் குறிப்பிட்டிருக்கும் போது அது முதல் ஜமாஅ;த்தை மட்டும் தான் குறிக்கும் என்பது இவர்களின் மனோ இச்சையை படம் பிடித்துக் காட்டுகின்றதே தவிர மார்க்க ஆய்வைக் காட்டவில்லை.
 கொஞ்சம் அறிவுப் பூர்வாமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதற்காகத்தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோகடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதின் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாகத்தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.
 ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதைவிட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி)  நூல் : புகாரி (647)
பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழவதுதான் என்கின்ற காரணத்தினால்தான் நபியவர்கள் வீட்டில்கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.
வீட்டில்கடையில் என்று இடத்தைக் குறிப்பிட்டுக் கூறிய நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். எங்கே ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதைக் கூறவில்லை. காரணம் பள்ளிவாசல் என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவதுதான்.
எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காக பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக்கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தை பாழ்படுத்தும் வண்ணம்தான் இவர்கள் பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை தடைசெய்து தங்கள் முதுகளில் பாவச்சுமைகளை சுமந்து கொள்கிறார்கள் .
மேலும் நபியவர்கள் தம்முடைய வாழ்நாளிலேயே முதல் ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தாமதாக வந்தவரை பள்ளியில்  ஜமாஅத்தாக தொழவைத்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
204 حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ  رواه  الترمدي
            நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார்.  அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி) நூல் திர்மிதி (204)  அபூதாவூத் 487
ஒருவரோடு சேர்ந்து தொழுவது பரிசுத்தமானது.
ஒருவரோடு சேர்ந்து தொழுவது தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு நன்மை அதிகமானது.
எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் இறைவனுக்கு மிக விருப்பமானது என்றெல்லாம் நபியவர்கள் கூறியிருப்பதை ஆதாரப் பூர்வமாகக் கண்டோம்.
இதன் காரணமாகத்தான் நபியவர்கள் தாமதமாக வந்தவரோடு சேர்ந்து தொழுவதற்கு ஆளில்லாவிட்டாலும் தொழுத சகோதரர் ஒருவரையாவது அவரோடு சேர்ந்து தொழச் சொல்லி மேற்கண்ட சிறப்புகளை தாமதாக வந்த ஒருவரைப் பெறச் செய்கின்றார்கள்.
இதன்காரணமாகத்தான் நபியவர்கள்
(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்என்று கேட்டனர்.
ஆனால் காமாலைக் காரனுக்கு பார்ப்தெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்கின்ற காரணத்தினால் தவறான விதியை ஏற்படுத்தி அதனடிப்படையில் ஆய்வு செய்த இலங்கைச் சகோதரருக்கு நாம் கூறிய கருத்துகள் நபிவழியாகத் தெரியாமல் மனோ இச்சையாகத் தெரிகிறது.
இதன் காரணமாகத்தான் பின்வரும் அபத்தமான வாதங்களை தமது மறுப்பாய்வில் முன்வைத்துள்ளார். அவருடைய அபத்த வாதங்களைப் பாருங்கள்.

அபத்த வாதம்

ஜமாஅத்தோடு தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்குமாம் என்று குறிப்பிடுகிறார். அப்துன் நாஸர் அவர்கள் குறிப்பிடுவதை வைத்து அனுமதிக்கப்பட்ட காரணங்கள் தவிர்த்து வேண்டுமென்று பிந்தியவர்களும் இவ்வாறு ஜமாஅத் நடாத்தினால் அந்தக் கூலி கிடைக்குமாகிடைக்குமென்றால் முதல் ஜமாஅதிற்கான முக்கியத்துவத்தை அவர் மறுத்ததாக அமையும். அவ்வாரு நன்மைகள் கிடைக்கமாட்டாது என்றால் (காரணத்தோடு தொழுவிக்கப்படுகின்ற மேலதிக ஜமாஅத் தொழுகையையும்காரணமின்றி தொழுவிக்கப்படும் மேலதிக ஜமாஅத் தொழுகையையும்) வெவ்வேராக பிரிப்பதற்குறிய ஆதாரம்தான் என்னஉப்புச்சப்பில்லாமல் ஆட்களை உதாசீனம் செய்வதை விட்டு விட்டு தகுந்த ஆதாரங்களோஅறிவுபூர்வமான வாதங்களோ இருந்தால் அவற்றை முன்வைப்பீர்கள் என மிகவும் ஆவலோடு எதிர்பாரத்திருக்கின்றேன்.

அழகிய பதில்

நபியவர்கள் ஃபர்லான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது பரிசுத்தாமானது. தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு உயர்ந்தது என்று கூறி எப்போது தொழுதாலும் ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தியுள்ளார்களே தவிர முதல் ஜமாஅத்திற்கு பிறகு மற்றொரு ஜமாஅத் நடத்தக் கூடாது என்று கூறவே இல்லை. இது இவர்களின் கைச்சரக்குதான். நபியவர்கள் பொதுவாகக் கூறியிருப்பதிலிருந்தே திரும்பத் திரும்ப தொழலாம் என்பதை யாரும் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் மனோ இச்சையைப் பின்பற்றி முடிவெடுத்த இவர்கள் இதனை விளங்க மறுக்கிறார்கள்.
 நீ கேட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கேள் என்று நபியவர்கள் கூறினால் எப்போது கேட்டாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்றே அனைவரும் விளங்கிக் கொள்வார்கள். இது முதல் தடவை கேட்பதை மட்டுமே குறிக்கும் என்று ஒருவன் கூறினால் அவன்தான் அதற்குரிய ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
முதல் தடவை ஜமாஅத் தொழுகை நடத்திய பின் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்ற பித்அத்தான கருத்தை புகுத்தி நபியவழியைப் புறந்தள்ளிநன்மைகளை நாசப்படுத்தும் கருத்தைக் கூறிய இவர்கள் கியாமத் நாள்வரை இதற்கு நபிவழியில் ஆதாரம் காட்ட முடியாது.
எப்போது தொழுதாலும் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதினால்தான் நபியவர்கள் தாமாத வந்தவரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமே இல்லாவிட்டாலும் தொழுத ஒருவரை அவரோடு சேர்ந்து தொழச் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுவதுதான் நபிவழி என்பதை நமக்கு முன்மாதிரியாகக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

அபத்த வாதம்

தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெறவேண்டுமென்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா?அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எம்மை குற்றம் சுமத்திவிட்டு ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும்ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மைகள் கிடைத்து விடும். இதுதான் இங்கு கவனிக்கத்தக்கதாகும் என்றும் சொல்கிறார் அப்துன் நாஸர் அவர்கள்.
இங்கு கவனிக்கதத்தக்கதுநபிகளாரின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் குறிப்பிடுவது இவர்களது மனோ இச்சைகள்தானே தவிர நபிகளாரின் ஹதீதில் இவ்வாரெல்லாம் கிடையவே கிடையாது. மறுபுரம் பார்த்தால் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும்ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மைகள் கிடைத்து விடும் என்ற கருத்தும் எந்தவொறு ஆதாரமும் இல்லாத கருத்தாகும். பித்அதான செயற்பாடுகளுக்கு நன்மை கிடைக்குமாஅந்த நன்மையை அதுவும் 27 மடங்கு நன்மையை எப்படி பெற்றுத் தருவார் என்பதுதான் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

அழகிய பதில்

இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதராமாக நாம் ஒருவர் தர்மம் செய்வதாக வரக்கூடிய ஹதீஸை கூறினோம். அதில் இவர்கள் பின்வரும் தத்துவக்  கேள்வியைக் கேட்டார்கள்.
குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்கு தருமம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இன்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடாத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார் யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமாமுடியவே முடியாது.
அதற்கு நாம் பின்வருமாறு பதிலளித்திருந்தோம்.
தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமாஅல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும்ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்துவிடும். இது தான் இங்கே கவனிக்க வேண்டும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள். தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள்.
யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. தர்மம் என்றாலே அதன் பொருள் என்னதேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது. தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவேஜமாஅத்தாக தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.
மேற்கண்ட நம்முடைய விளக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் பொத்தாம் பொதுவாக
இங்கு கவனிக்கதத்தக்கதுநபிகளாரின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் குறிப்பிடுவது இவர்களது மனோ இச்சைகள்தானே தவிர நபிகளாரின் ஹதீதில் இவ்வாரெல்லாம் கிடையவே கிடையாது. மறுபுரம் பார்த்தால் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும்ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மைகள் கிடைத்து விடும் என்ற கருத்தும் எந்தவொறு ஆதாரமும் இல்லாத கருத்தாகும்.
என்று கூறி நைஸாக நழுவிச் செல்கிறார். நாம் மேலே கூறிய கருத்து நம்முடைய மனோ இச்சையா?
ஒருவரோடு சேர்ந்து தொழுவது பரிசுத்தமானது.
ஒருவரோடு சேர்ந்து தொழுவது தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு நன்மை அதிகமானது.
எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் இறைவனுக்கு மிக விருப்பமானது என்றெல்லாம் நபியவர்கள் கூறியிருப்பதை ஆதாரப் பூர்வமாகக் கண்டோம்.
இதன் காரணமாகத்தான் நபியவர்கள் தாமதமாக வந்தவரோடு சேர்ந்து தொழுவதற்கு ஆளில்லாவிட்டாலும் தொழுத சகோதரர் ஒருவரையாவது அவரோடு சேர்ந்து தொழச் சொல்லி மேற்கண்ட சிறப்புகளை தாமதாக வந்த ஒருவரைப் பெறச் செய்கின்றார்கள்.
இதன்காரணமாகத்தான் நபியவர்கள்
(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்என்று கேட்டனர்.
ஆனால் காமாலைக் காரனுக்கு பார்ப்தெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்கின்ற காரணத்தினால் தவறான விதியை ஏற்படுத்தி அதனடிப்படையில் ஆய்வு செய்த இலங்கைச் சகோதரருக்கு நாம் கூறிய கருத்துகள் நபிவழியாகத் தெரியாமல் மனோ இச்சையாகத் தெரிகிறது.

அபத்த வாதம்

ஏற்கனவே தொழுதவர் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டுமென்றால் எப்படியாவது ஜமாஅதாக தொழ முயல வேண்டும் என்றுதான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள் என்ற வாதத்தை எடுத்துவைத்து குர்ஆன் ஹதீத்தான் சட்ட மூலாதாரம் என்று கூறிக்கொண்டு தங்களுக்கு சாதகம் என்று வருகின்றபோது ஸலபு வகையராக்கள் கூட மறுக்கின்ற கியாஸை ஆதரிப்பதின் மர்மம்தான் என்னஎப்படியாவது பதில் சொல்ல வேண்டுமென்பதற்காக கொள்கையிலிருந்து தடம்பிறலலாமாஎன்று இவர்கள் பாசையிலேயே எமக்கு கேட்கத் தோனுகிறது. அதற்காக பலவேஷக் கொள்கைதாரிகள் என்று அவர்களது பாணியில் சொல்லமாட்டோம். தவறிழைத்திருக்கின்றீர்கள் என்றுதான் கூறுகின்றோம்.

அழகிய பதில்

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது 27 மடங்கு உயர்ந்தது. பரிசுத்தமானது. இறை விருப்பத்திற்குரியது என்பதினால்தான் நபியவர்கள் ஏற்கனவே தொழுவரைக் கூட தாமதமாக வந்தவரோடு சேர்ந்து தொழுமாறு கூறியுள்ளார்கள் என்பதை ஹதீஸ்கள் வாயிலாக நாம் தெளிவாக விளக்கியிருந்தோம்.
இது கியாஸாம். நபிவழியிலிருந்து கூறினால் கியாஸாஇது கொள்கையிலிருந்து தடம் பிரள்தலாம்?
என்னே இவர்களின் ஆய்வு. ஆஹா நம்மை பிரமிக்க(?) வைத்து விட்டார்கள்.
இப்படி நபிவழிப்பிரகாரம் விளக்கினால் பலவேஷமாம். அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சட்டம் கூறுவதை பலவேஷம் என்று விளங்கிய காரணத்தினால்தானோ இவர்கள் மற்ற ஹதீஸ்களை பார்க்காமல் தர்மம் செய்த ஹதீஸை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வேஷம் போடுகிறார்கள் போல் தெரிகிறது.

அபத்த வாதம்

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால்தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். என்று அழ்ழாஹ்வோ ரஸூலோ கூறாத காரணத்தை ஏதோ அவரும் அந்த சபையில் உட்கார்ந்திருந்தது போல் அப்பட்டமான பொய்யை அழ்ழாஹ்வின் தூதரின் மீது கூறுகின்றார். தூய இஸ்லாத்தைச் சொல்லப் புரப்பட்ட இவர்களிடத்தில் ஏன்தான் இப்படியான கொள்கைப் பிரள்வுகள் வந்ததோ தெரியவில்லை. அழ்ழாஹ்தான் எமது தவறுகளை மன்னிக்கவேண்டும்.

அழகிய பதில்

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால்தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள்
இது நபியவர்கள் கூறாத காரணமாம் . ஏன் காரணத்தை நபியவர்கள் கூறினால்தான் புரிய முடியுமோ?
ஏனைய ஹதீஸ்களில் நபியவர்கள் கூறியதிலிருந்தும்இந்த ஹதீஸில் தாமதமாக வந்தவர் ஒருவர்மட்டும் தான் என்பதிலிருந்தும் இதை விளங்கிக் கொள்ள முடியாதா?
அறிவாளிகள் இதை தெளிவாக விளங்குவார்கள். அறைகுறைகளுக்கு இது விளங்காது.
قال المظهري سماه صدقة لأنه يتصدق عليه بثواب ست وعشرين درجة إذ لو صلى منفردا لم يحصل له إلا ثواب صلاة واحدة انتهى (تحفة الأحوذي - (2 / 7)
(இவருக்கு தர்மம் செய்பவர் யார்?) என்பதில் நபியவர்கள் ஸதகா தர்மம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனென்றால்  அவர் 26 மடங்கு நன்மையை அவருக்கு தர்மம் செய்கிறார். அவர் தனியாகத் தொழுதால் ஒரு தொழுகைக்குரிய நன்மையை தவரி அவருக்கு கிடைக்காது (துஹ்ஃபா பாகம் பக்கம் : 7)
அறிவாளிகளுக்கு விளங்குகிறது. சேர்ந்து தொழுதால் 27 மடங்கு நன்மை  என்று,
அங்கே சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லை என்கின்ற காரணத்தினால்தான் அவரை சேர்ந்து தொழுமாறு கட்டளையிடுகிறார்கள்.
 நபியவர்கள் காரணமில்லாமல் ஒரு காரியத்தை செய்யக்கூடியவர்கள் என்று கூறி நபியவர்களை  இவர்கள் இழிவுபடுத்துகிறார்கள்.

அபத்த வாதம்

தாமதமகப் பலர் வரும்போது அவர்களே சேர்ந்து தொழுவதின் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்கள். யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. நபிகளார் தர்மம் செய்பவர் என்று கேட்டதாக தெள்ளத் தெளிவாக ஹதீதிலே இடம்பெற்றிருந்தும் கூட யாரும் யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை. என்று கூறி தங்களது மனோ இச்சைக்கேற்றவாறு ஹதீத்களை திரித்திருப்பதற்கும் இது மிகப்பெரிய சான்றாகும்.

அழகிய பதில்

அபத்த கேள்வியை கேட்கிறோமேஎன்பது கூட விளங்காமல் கேட்டுள்ளனர். யாருமே இல்லாத காரணத்தினால்தான் ஏற்கனவே தொழுதவர் சேர்ந்து தொழுவதை தர்மம் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்
தாமதமாக பலர் வரும் போது இவர்களுக்கு யாரும் தர்ம் செய்ய வேண்டியதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : முஸ்லிம் (1151)
என்ற ஹதீஸ்களின் பிரகாரம் அவர்களே சேர்ந்து தொழுது 27 மடங்கு நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள்.

அபத்த வாதம்

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்துவிடும் என்று கூறுவதும் மேலும் மேலும் இவர்களது போக்கை உருதிப்படுத்துகின்றது. ஹதீதை வைத்து சட்டம் சொல்கின்ற எம்மை ஹதீதை மறுப்பவர்கள் என்று சொல்லும் இவர்கள் மேற்குறித்த வாதத்தின் அடிப்படையில் அவர்களே அவர்களது குற்றச்சாட்டுக்கு இலக்காகிவிட்டார்கள் என்பதுதான் இங்கு வேடிக்கையானதாகும்.

அழகிய பதில்

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்துவிடும்
இது ஹதீஸை மறுக்கும் போக்காஇவ்வாறு கூறுவது இவர்கள் அரைகுறைகள்தான் என்பதை ùன்மேலும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு செய்வது கூடாது எனும் இவர்கள்தான் ஹதீஸை மறுப்பவர்கள் என்பது தெளிவாக இதைப் படிக்கும் அனைவருக்கும் விளங்குமே.
இப்போது வேடிக்கை காட்டுவதே இவர்களின் வாடிக்கை என்பது உங்களுக்கு விளங்குகிறதா?

அபத்த வாதம்

(வெங்காயம் சாப்பிட்டவர்தூங்கிவிட்டவர்மறந்துவிட்டவரல்லது முடியுமான முயற்சிகள் செய்தும் தாமதமாகிவிட்டவர் ) இப்படியான நிலமைகள் நபிகளாரின் காலத்தில் இடம்பெற்றும் கூட அவற்றிற்கு பிரத்தியோகமாக தனியே ஜமாஅத் நடாதத்தியதாக எங்கும் ஆதாரம் கிடையவே கிடையாது. இது ஒரு பொது முறையாகும்.
தாமதித்து வந்த ஒருவருக்கு ஏற்கனவே ஜமாத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் தொழுவித்து

அழகிய பதில்

நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதுதான் அவசியம் என்று வலியுறுத்தியதை நாம் கண்டோம். எந்த இடத்திலும் நபியவர்கள் இது முதலாவதாக நடத்தப்படுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் குறிக்கும் என்று கூறவே இல்லை. மேலும் நபியவர்கள் தாமதமாக வந்தவரை ஜமாஅத்தாக தொழவைத்து ஜமாஅத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதையும் கண்டோம். இதுவே எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம். பள்ளிவாசல்கள் ஏற்படுத்தப்பட்டதின் நோக்கமே ஜமாஅத்தாகத் தொழுவதற்குத்தான். என்பதையெல்லாம் நபிவழியின் அடிப்படையில் கண்டோம். ஆனால் இவர்களுக்கோ நபியவழியிலிருந்து கூறப்படுபவை ஆதாரமாகத் தெரியவில்லை. இதன் காரணமாகத்தான்
(வெங்காயம் சாப்பிட்டவர்தூங்கிவிட்டவர்மறந்துவிட்டவரல்லது முடியுமான முயற்சிகள் செய்தும் தாமதமாகிவிட்டவர் ) இப்படியான நிலமைகள் நபிகளாரின் காலத்தில் இடம்பெற்றும் கூட அவற்றிற்கு பிரத்தியோகமாக தனியே ஜமாஅத் நடாதத்தியதாக எங்கும் ஆதாரம் கிடையவே கிடையாது. இது ஒரு பொது முறையாகும்
இப்படிப்பட்ட அபத்தமான கருத்தைக் கூறியுள்ளனர்.
நபியவர்கள் முதல் ஜமாஅத் முடிந்த பின்பும் ஜமாஅத்தாக நடத்திக் காட்டியது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்து பின்பும் தனியே ஜமாஅத் நடாதத்தியதாக எங்கும் ஆதாரம் கிடையவே கிடையாது.
என்று உளறிக் கொட்டியுள்ளனர்.

அபத்த வாதம்

மேலதிக தர்மம் செய்ததாக ஹதீத் ஒன்று இடம்பெருகிறது. இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்விதி விலக்காக ஹதீத்கள் இடம்பெருகின்ற போது அவை இடம்பெற்ற சமயம்,சந்தர்ப்பம்சூழ் நிலை என்பவைகளைக் கவனத்திற் கொண்டு குறித்த சமயம்சந்தர்ப்பம்,சூழ் நிலை என்பவற்றில் மாத்திரம் அவற்றை அமுல் படுத்த வேண்டும்.
மேற்குறித்த ஹதீதை நன்றாக அவதானியுங்கள்! ஏற்கனவே தொழுது முடித்த ஒருவரை நபிகளார் தொழுகை நடாத்துமாறு சொல்கிறார்கள். இந்த ஹதீதிதில் உள்ள சமயம்,சந்தரப்பம்சூழ்நிலை ஆகியவற்றைக் கவனத்திற்கொண்டால் இப்படியான ஒரு நிலமை எவருக்கு ஏற்படுகிறதோ அப்படிப்பட்டவர்களை மாத்திரமே இந்த சட்டம் உள்ளடக்கிக் கொள்ளுமே அல்லாமல் நமது சமூகத்தில் உள்ள நடைமுறையைப் போன்று சுரண்டித் தொழுகின்றஏற்கனவே தொழாதவரே தொழுவிக்கின்ற நடைமுறைகளுக்கு ஆதாரம் எடுப்பது மிக மிகத் தவறாகும். இஸ்லாமிய சட் டவிதிமுறைகளோடு விளக்கம் சொல்கின்ற எங்களை ஸலபி வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று சீல் குத்துகின்ற இவர்களை மனோ இச்சைப்படி ஹதீத்களை மறுக்குகின்ற முஃதஸிலா வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று நாம் சொல்வது மிக மிக சுலபமாகும்.

அழகிய பதில்

நபியவர்கள் தாமதமாக வந்தவரை ஜமாஅத்தாக தொழச் சொன்னது விதிவிலக்காம். இவர்கள் மனோ இச்சைப் படி சொன்ன கருத்திற்கு எதிராக இருந்தால் விதிவிலக்கு என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது.
ஒருவர் தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவதுதான் 27 மடங்கு உயர்ந்தது என்று நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை வலியுறுத்தியுள்ளார்கள். யாருமே இல்லாவிட்டாலும் ஏற்கனவே தொழுத ஒருவராவது தாமதாக வந்தவருடன் சேர்ந்து தொழவேண்டும் என வழிகாட்டி ஜமாஅத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளார்கள். அறிவாளிகள் இப்படித்தான் விளங்குவார்கள்.
ஆனால் ஏற்கனவே தொழுது முடித்தவர் மட்டும் தான் தாமதமாக வந்தவருக்கு  தொழுகை நடத்த வேண்டும். ஏற்கனவே தொழாதவரே தொழுவிக்கின்ற நடைமுறைகளுக்கு ஆதாரம் எடுப்பது மிக மிகத் தவறாகும். என்று கூறுவது மடமையிலும் மடமையாகும். நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.
ஒரு தனியாகத் தொழுவதை விட மற்றொருவருடன் சேர்ந்து தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் எனவரும் நபிமொழியில் சேர்ந்து தொழும் இருவரில் ஒருவர் ஏற்கனவே தொழுதவராக இருக்க வேண்டும் என நபியவர்கள் கட்டளையிடவில்லை.
இந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே தொழுதவராகத்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவார்களா?
தர்மம் செய்வதாக வரும்  ஹதீஸில் தாமதமாக வந்த ஒருவருக்குத்தான் நபியவர்கள் ஏற்கனவே தொழுத ஒருவரை இமாமத் நடத்துமாறு கூறியுள்ளார்கள்.
இதிலிருந்து ஏற்கனவே தொழுத ஒருவர் தாமதமாக வந்த இருவருக்கோ அல்லது பலருக்கோ தொழுகை நடத்தக்கூடாது . ஹதீஸில் நபியவர்கள் ஒருவருக்குத்தான் தொழுகை நடத்துமாறு கூறியுள்ளார்கள். இவ்வாறுதான் ஹதீஸை விளங்க வேண்டும் என்று இவர்கள் கூறுவார்களா?
ஏற்கனவே தொழுத ஒருவர் மட்டும்தான் தாமதமாக வந்தவருக்கு தொழுகை நடத்த வேண்டும். இதற்குப் பிறகு ஏற்கனவே தொழுத மற்றொருவர் தாமதமாக வந்த மற்றொருவருக்கு தொழுகை நடத்தக்கூடாது. ஏற்கனவே தொழுத ஒருவர் தாமதாக வந்த ஒருவருக்குத்தான் தொழுகை நடத்தியுள்ளார். இவ்வாறுதான் ஹதீஸிலிருந்து விளங்க வேண்டும் என்று இவர்கள் கூறுவார்களா?
ஒரு ஹதீஸை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த மேதாவிகளுக்குத் தெரியவில்லை. அல்லது நான் பிடித்த முயலுக்கு கால் என்று அடம்பிடிக்கின்றனர் என்றுதான் பொருள்.
நபியவர்கள் ஏற்கனவே தொழுத ஒருவர் மட்டும்தான் தாமதமாக வந்தவருக்கு தொழுகை நடத்த வேண்டும் என்ற கருத்தில் நிச்சயமாக கூறியிருக்கவே மாட்டார்கள். நபியவர்களின் அனைத்தும் போதனைகளின் அடிப்படையில்  தாமதாக வந்தாலும் யாராவது ஒருவருடன் ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதைத்தான் மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது என்பதை உண்மையான ஆய்வாளர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்பதின் அவசியத்தை உணர்த்துகின்ற பொதுவான செய்திதானே தவிர விதிவிலக்கானது அல்ல..
இவ்வாறு விளங்கும் இவர்களின் கருத்துதான் விலக்கப்படவேண்டியதாகும்.
இப்படி சட்டம் சொல்லும் இவர்களைத்தான்
ஸலபி வகையராக்களைவிட ஆபத்தானவர்கள்   என்றும்
மனோ இச்சைப்படி ஹதீத்களை மறுக்குகின்ற முஃதஸிலா வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று நாம் சொல்வது மிக மிக சுலபமாகும்.

அபத்த வாதம்

ஒருவருக்கு (இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்கா) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட
 ‘யார் அழகிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்’.
 என்ற ஹதீஸின் படி தனியாக தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தை தவறவிடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூண்றாம் ஜமாஅத்தும் அதைத் தவறவிடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற………………….. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!

அழகிய பதில்

நபியவர்கள் எந்த இடத்திலும் முதலாவது ஜமாஅத் மட்டும் தான் கட்டாயம். அதன் பிறகு ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்று கூறவேயில்லை. இவ்வாறு கூறுவது இவர்களின் மனோ இச்சைதான். நபியவர்கள் பொதுவாக ஜமாஅத்தாகத் தொழுவதைத்தான் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
இதிலிருந்து எத்தனை ஜமாஅத் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்கு நபியவர்கள் வழிகாட்டியுள்ளாரகள் என்பதை நாம் ஏற்கனவே ஆணித்தரமாக விளக்கி விட்டோம்.
மேலும்
 ‘யார் அழகிய முறையில் வுழூ செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அழ்ழாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்’.
 என்ற ஹதீஸின் படி தனியாக தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார்.
என்று கூறுவது இவர்களின் மார்க்க அறிவின்மையையே காட்டுகிறது.
ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு சிறந்தது என்பது வேறு .
ஒருவருக்கு ஜமாஅத்தை நாடிவந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு யாருமே இல்லாவிட்டாலும் அவர் ஜமாஅத்தை நாடி வந்த காரணத்தினால் அவருடைய எண்ணத்திற்கு ஜமாஅத்துடன் தொழுத கூலியை அல்லாஹ் வழங்குகிறான். என்பது வேறு
ஜமாஅத்தாகத் தொழுவது அவசியம். ஜமாஅத்தாகத் தொழுவதற்கு வாய்ப்பில்லாவிட்டால் அவருடைய எண்ணத்திற்காக அல்லாஹ் முழுமையான கூலியை வழங்குகிறான் என்பதைத்தானே மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகிறது.
தொழுவதற்கு ஆளிலிருந்தாலும் தொழக்கூடாது என்கின்ற சட்டத்தை நபியவர்கள் எங்கே கூறியுள்ளார்கள்.
மேலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக மிஹ்சன் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரின் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படவில்லை.
96 - "د س - محصن1" بن علي الفهري المدني روى عن عوف بن الحارث وعون بن عبد الله بن عتبة وعنه عمرو بن أبي عمرو وسعيد بن أبي أيوب ومحمد بن طحلاء ذكره بن حبان في الثقات قلت وقال يروي المراسيل وقال أبو الحسن بن القطان الفاسي مجهول الحال. (تهذيب التهذيب - (32 / 59)
இவரை இப்னு ஹிப்பான் உறுதியானவர் எனக் கூறியுள்ளார். மேலும் இவர் முர்ஸலான செய்திகளை அறிவிப்பவராவார். மேலும் இப்னுல் கத்தான் அவர்கள் இவரின் நம்பகத்தன்மை அறியப்படாதவராவார் என்று கூறியுள்ளார். (தஹ்தீப் பாகம் 32 பக்கம் : 59)
இப்னு ஹிப்பான் யாரென்றே அறியப்படாதவர்களைக் கூட உறுதியானவர் எனக் கூறிவிடுவார். எனவே இப்னு ஹிப்பானின் கூற்றை வைத்து நாம் முடிவு செய்ய இயலாது. எனவே இப்னுல் கத்தான் அவர்களின் கூற்றுப் படி இவர் நம்பகத் தன்மை அறியப்படாதவர் என்பது தெளிவாகிறது.
6506- محصن بضم أوله وسكون ثانيه وكسر الصاد المهملة ابن علي الفهري المدني مستور من السادسة د س (تقريب التهذيب - (2 / 522)
இவர் திரையிடப்பட்டவராவார் (தக்ரீப் பாகம் : பக்கம் : 522)
நம்பகத் தன்மை நிருபிக்கப்படாத ஒருவர் அறிவிக்கின்ற காரணத்தினால் இது பலவீனமானதாகும்.
மேலும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ள அபூதாவூத் 476 செய்தியும் பலவீனமானதாகும்.
அதில் மஃபத் பின் ஹ‚ர்முஸ் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.
இவரும் யாரென்றே அறியப்படாதவராவார்.
411      - "د - معبد" بن هرمز حجازي روى عن سعيد بن المسيب عن رجل من الأنصار في فضل الوضوء وصلاة الجماعة في لمسجد وعنه يعلى بن عطاء ذكره بن حبان في الثقات قلت وقال بن القطان لا يعرف حاله. (تهذيب التهذيب - (32 / 226)
            معبد بن هرمز  د .عن سعيد بن المسيب.لا يعرف.ذكره ابن حبان في ثقاته.تفرد عنه يعلى بن عطاء.حديثه في فضل الوضوء. (ميزان الاعتدال - (4 / 141)
6331 - د / معبد بن هرمز عن سعيد المسب لا يعرف  (المغني في الضعفاء للذهبي - (1 / 64)
 ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தி ஸஹீஹானதாகவே இருந்தாலும் இதில் இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவுபடுத்தி விட்டோம்.

அபத்த வாதம்

நாம் சுட்டிக்காட்டிய ஹதீத் பலவீனமானது என்று கூறியுள்ளார். அது எந்த அடிப்படையில் பலவீனமானது என்று சுட்டிக்காட்டும் பட்சத்தில் அது எந்தளவுக்கு ஆதாரபூர்வமான செய்தி என்பதை மிக அழகாக விளக்க முடியும். ஒரு கருத்துக்கு மிக பலமாக ஒரு ஆதாரத்தை முன்வைக்கின்ற போது அந்த ஆதாரம் பலவீனமானது என்று மொட்டையாகச் சொன்னால் அது ஆய்வாளர்களுக்கு அழகல்ல என்பதை நமது கொள்கைச் சகோதரர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அழகிய விளக்கம்

ஹதீஸ்களை குறிப்பிடும் போதே அதில் சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அதைக் கூறி தெளிவு படுத்துவதே ஆய்வாளருக்கு அழகாகும்.
பலவீனமான செய்தியைத்தான் இவர்கள் ஒரு அறிஞரை தக்லீத் செய்து ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். ஆனால் ஏதோ தெரியாதைப் போன்று பலவீனமானது என்று சுட்டிக்காட்டும் பட்சத்தில் அது எந்தளவுக்கு ஆதாரபூர்வமான செய்தி என்பதை மிக அழகாக விளக்க முடியும். ஒரு கருத்துக்கு மிக பலமாக ஒரு ஆதாரத்தை முன்வைக்கின்ற போது அந்த ஆதாரம் பலவீனமானது என்று மொட்டையாகச் சொன்னால் அது ஆய்வாளர்களுக்கு அழகல்ல என்பதை நமது கொள்கைச் சகோதரர் விளங்கிக்கொள்ள வேண்டும்.  என்று கூறுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண்ஒட்டவில்லை என்ற கதைதான்.
நாம் பலவீனத்தை பெரிது படுத்தாதற்குக் காரணம் அதை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் கருத்திற்கு அதில் ஆதாரம் இல்லை என்பதினால்தான்.

அபத்த வாதம் :

தர்மம் செய்ததாக வரக்கூடிய ஹதீத் குறிப்பிட்ட வரையறைக்குள்ளது என்பதைக் காட்டுவதற்காக அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்கள்.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக ‘மறைவான ஜனாஸாத் தொழுகை’யை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான ‘நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்தசம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது ‘அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம்’என்றோ அல்லது ‘குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு மட்டும்’ என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த ஹதீசையும் ‘குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவது என்ற முறையில் மாத்திரம்’ என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற கருத்துக்கே இடமில்லை.
இந்த அபத்த தத்துவத்திற்கு நாம் பின்வருமாறு பதிலளித்திருந்தோம்.
நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்குத் ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம்.. ஏனெனில்ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானதுதான். அது போல் ஏற்கனவே தொழுதவர் மட்டும்தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய விளகத்திற்கு மறுப்பாக அவர்கள் பின்வரும் அபத்தத்தைக் கூறியுள்ளனர்.
நஜ்ஜாஷி மன்னர் விடயத்தை பிரத்தியோகமானது என்று நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லிய அப்துன் நாஸர் அவர்கள் அவரே கூற்றில் உண்மையாளராக இல்லை. ஏன் தெரியுமாஏனெனில் ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடாத்தப்படவில்லை என்று நபிகளார் காரணத்தைச் சொல்லிவிட்டதால் அது பொதுவானதுதான் என்ற கருத்தை முன்வைத்துத்தான் தனது வாதத்தையே ஆரம்பிக்கிறார். இது அழ்ழாஹ்வின் தூதரின் மீது சொல்லப்படும் அப்பட்டமான பொய்யாகும். நபிகளார் அப்படி எங்குமே சொல்லவில்லை. தமது கருத்துக்கு ஏற்றவாறு ஹதீத்களை வளைக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு தமக்கு தேவை வருகின்ற போது நபிகளாரின் மீது இட்டுக்கட்டவும் இவர்கள் தயங்கவில்லை.

அழகிய பதில்

ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடாத்தப்படவில்லை என்று நபிகளார் காரணத்தைச் சொல்லிவிட்டதால் அது பொதுவானதுதான் என்ற கருத்தை முன்வைத்துத்தான் தனது வாதத்தையே ஆரம்பிக்கிறார். இது அழ்ழாஹ்வின் தூதரின் மீது சொல்லப்படும் அப்பட்டமான பொய்யாகும். நபிகளார் அப்படி எங்குமே சொல்லவில்லை. தமது கருத்துக்கு ஏற்றவாறு ஹதீத்களை வளைக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு தமக்கு தேவை வருகின்ற போது நபிகளாரின் மீது இட்டுக்கட்டவும் இவர்கள் தயங்கவில்லை.
இவ்வாறு நாம் கூறியது நபிகளார் மீது இட்டுக்கட்டுதலாம்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ بِهِمْ فَقَالَ صَلُّوا عَلَى أَخٍ لَكُمْ مَاتَ بِغَيْرِ أَرْضِكُمْ قَالُوا مَنْ هُوَ قَالَ النَّجَاشِيُّ  (ابن ماجة 1526)
‚தைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் (நபித் தோழர்களாகிய) அவர்களோடு வெளியேறினார்கள்.   உங்களுடைய நாடு அல்லாத (வேறுநாட்டிலே) இறந்து விட்ட உங்களுடைய சகோதரருக்காக தொழுது கொள்ளுங்கள். என்று கூறினார்கள். அவர்கள் யார் அவர்என்று கேட்டார்கள். அதற்கு நஜ்ஜாஷி என்று நபியவர்கள் கூறினார்கள் 
நூல் : இப்னு மாஜா (1526)
உங்களுடைய நாடு அல்லாத (வேறுநாட்டிலே) என்று நபியவர்கள் கூறியதிலிருந்து அந்த நாட்டில் முஸ்லிம்கள் வசிக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
முஸ்லிம்கள் வசித்திருந்தால் தொழுகை நடத்தியிருப்பார்கள். முஸ்லிம்கள் வசிக்காத நாட்டிலே நஜ்ஜாஷி மன்னர் மரணித்த காரணத்தினால்தான் அவருக்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
இதிலிருந்து யாரெல்லாம் தொழுகை நடத்தப்படாமல் அடக்கம் செய்யப்படுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் காயிப் ஜனாஷா தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றே நாம் கூறுகிறோம். இதுதான் நபியவர்கள் நஜ்ஜாஷி மன்னருக்கு தொழுகை நடத்தியதற்குரிய காரணம் என்று நாம் கூறியதுதான் நபியவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதாம்.
ஹதீஸிலிருந்து பெறப்படும் கருத்தைத்தான்  நபியவர்கள் காரணத்தைக் கூறிவிட்டார்கள் என்ற கருத்தில் கூறியிருந்தோம்.

 அபத்த வாதம்

அடுத்துநஜ்ஜாஷி மன்னனுக்கு ஜனாஸா தொழுவித்த ஹதீத் அவர்களுக்கு எதிரான ஒரு ஆதாரமே தவிர சாதகமான ஆதாரம் கிடையாது. எப்படி என்று பாருங்கள்! வெளிநாடுகளில் மரனிக்கின்ற எல்லோருக்கும் தொழுவிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக,எவர்களுக்கு ஏற்கனவே தொழுவிக்கப்படவில்லையோ அவர்களுக்குத்தான் தொழுவிக்க வேண்டுமென்று குறிப்பாக அவர்கள் ஆக்கிக்கொள்கின்றனர். அதே போன்றுதான்நாமும் முதலாம் ஜமாஅத் தவறுகின்ற எல்லோரும் இரண்டுமூன்று ஜமாஅத்கள் என்று நடாத்த முடியாது. மாறாக, (ஹதீதிலே இடம்பெற்றிருப்பதைப் போன்று) ஏற்கனவே தொழுத ஒருவர்தான் அப்படி ஜமாஅத்கள் நடாத்தலாம் என்று குறிப்பாக ஆக்கிக்கொள்கின்றோம்.

 அழகிய விளக்கம்

ஜனாஷா தொழுகை நடத்தப்படாதவர்களுக்கு நாம் எப்படி ஜனாஷா தொழுவது கூடுமோ அதன் அடிப்படையிலேயே தாமதாக வரும் அனைவரும் ஜமாஅத்தாக தொழுது கொள்ளலாம் என்றே நாம் கூறுகிறோம்.  மாறாக ஏற்கனவே தொழுத ஒருவர்தான் தொழுவிக்க வேண்டும். அவர் இல்லையேல் தாமதமாக வந்தவர்கள் அனைவரும் தனியாகத்தான் தொழுவேண்டும் என்ற பித்அத்தை திணிப்பதைத்தான் மார்க்கத்திற்கு எதிரானது என்கின்றோம்.

அபத்த வாதம்

இவர்கள் கூறுவதானது பொய்க்கு மேல் பொய்யைச் சொல்லி உண்மையாக்களாம் என்ற கோயபல்சுடைய தத்துவத்தை அச்சொட்டாக பின்பற்றுகிறார்கள் என்பதைத்தான் எம்மால் அவதானிக்க முடிகின்றது. ஏனென்றால் மனோ இச்சைப்படி ஹதீத்களை வளைப்பவர்கள் யாரென்பதை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவேஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதனை உண்மையாக்க முனையாதீர்கள் என்பதை மிக மிகத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் இதில் மனோ இச்சைக்கு எங்கே இடமிருக்கிறதுஇரு ஜமாஅத்கள் நடந்தால்தான் என்னநடக்காமல் விட்டால்தான் எமக்கென்னஇதில் எந்த மனோ இச்சையும் இல்லை என்பதை அறிவுடைய மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.

அழகிய பதில்

இருவர் சேர்ந்து தொழுவது ஒருவர் தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு சிறந்தது. பரிசுத்தமானது. இறை விருப்பத்திற்குரியது என்றெல்லாம் நபியவர்கள் ஜமாஅத்தின் அவசியத்தைக் கூறியிருக்கும்போது தாமதமாகத் வந்தவரைக் கூட ஏற்கனவே தொழுத ஒருவருடன் ஜமாஅத்தாகத் தொழச்செய்து வழிகாட்டிய பிறகும்
முதல் ஜமாஅத்திற்குப் பிறகு ஜமாஅத் நடத்துவதற்கு ஆதாரமில்லை என்றும் ஏற்கனவே தொழுதவர்தான் தாமதமாக வருபவருக்கு தொழுகை நடத்த வேண்டும் என்றும் இல்லாத கருத்தை பித்அத்தை திரும்பத்திரும்ப கூறுவதுதான் கோயபல்ஸ் தத்துவமாகும். இதுதான் மனோ இச்சைக்கு அடையாளமாகும். தெளிவாக விளக்கிய பிறகும் அடம்பிடிப்பதை மக்கள் நன்றாகவே விளங்கியுள்ளார்கள்.

அபத்த வாதம்

இவர்களின் அபூர்வ பத்வாவைப் பாரத்தீர்களாஎத்தனை ஜும்ஆக்கள் வேண்டுமானாலும் நடாத்திக்கொள்ளலாமாம்! எத்தனை பெருநாள் தொழுகைகள் வேண்டுமானாலும் நடாத்திக்கொள்ளலாமாம்! இதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரம்தான் வேடிக்கையானதும் வினோதமானதுமாகும். ஜமாஅத் தொழுகைக்கு இவர்கள் எதை ஆதாரமாக எடுக்கின்றார்களோ அதே ஹதீதைத்தான் ஜும்ஆத் தொழுகைக்கும் பெருநாள் தொழுகைக்கும் ஆதாரமாக காட்டுகின்றனர். இது தெளிவான கியாஸ் இல்லையாஅதுவும் மத்ஹப் சார்ந்த கிதாபுகளில் கூட இபாதத்களில் கியாஸ் எடுக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தும் குர்ஆன் ஸுன்னா மட்டும்தான் இஸ்லாமிய சட்ட மூலாதாரம்இஜ்மா,கியாஸ்ஸலபு அறிஞர்களின் கூற்று போன்றவையெல்லாம் எந்த வகையிலும் மார்க்க ஆதாரமாக அமையாது என்ற சத்தியக் கொள்கையோடு களமிறங்கிய பசபஓ யினது கொள்கை ஏன் இப்படி திசை மாறிப்போனதுஒரு வாதத்திற்கு ஸதகா பற்றிய ஹதீத் இவர்களுக்கு சாதகமான ஆதாரமாக வைத்துக்கொண்டாலும் (இல்லை என்பதை முன்னர் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டோம்) அதனை பெருநாள்ஜும்ஆத் தொழுகைகளுக்கு எப்படி கியாஸ் மூலம் வேலி பாய்ந்து ஆதாரத்தை எடுத்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. அழ்ழாஹ்வே நம் அனைவரையும் கொள்கையிலிருந்து தடம்பிரழச் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடாத்துவது கூடும் என்ற கருத்தினுடைய தௌஹீத் அறிஞர்களில் பலர்கள் கூட இவ்வாறு சொன்னதில்லை. அப்படியிருக்க பசபஓ இந்த இடத்தில் தனது ஸ்தீரமான காலைச் சறுக்கிவிட்டதுதான் அதிர்ச்சியான உண்மையாகும்.

அழகிய பதில்

இருவர் சேர்ந்து தொழுவது ஒருவர் தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு சிறந்தது. பரிசுத்தமானது. இறை விருப்பத்திற்குரியது என்றெல்லாம் நபியவர்கள் கூறியிருப்பது ஜமாஅத்தாகத் தொழுகின்ற அனைத்து தொழுகைகளுக்கும்தான். இதில் ஜும்ஆவும் பெருநாளும் உள்ளடங்கும். இதைத்தான் நபியவர்கள் தமது வாழ்நாளிலும் தாமதாக வந்த ஒருவரை ஜமாஅத்தாக தொழச்சொல்லி நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள். நபியவர்களின் வாழ்விலிருந்து ஆதாரத்தைக் கூறினால் கியாஸ் என்று கூறுவதுதான் வேடிக்கையிலும் வினோதமானதாகும். தங்களுடைய மனோ இச்சைக்கு மாற்றமாக நபியவர்களின் வழிமுறையைக் கூறினால் கியாஸ் என்று கூறும் வழிகேட்டை விட்டும் அல்லாஹ் டிஎன்டிஜே யை காப்பாற்றியே வருகின்றான்.
மனோ இச்சையை மார்க்கமாக்கியவர்கள்தான் நபியவர்களின் தீர்ப்பை கூறுவதற்கு அஞ்ச வேண்டும். அவர்கள்தான் முன்னால் வாழ்ந்தவர்கள் இப்படிக் கூறியுள்ளார்களா ? என்றெல்லாம் கேட்டு நபிவழியை புறந்தள்ளுவார்கள்.
 நபிவழியில் இல்லாத கருத்தை நிருபிப்பதற்காக அனைவருக்கும் சாதரணமாக விளங்கக்கூடிய ஒன்றில் கூட இல்லாத கருத்தை திணிக்கும் இப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

அபத்த வாதம்

அடுத்துஒன்றிற்கு மேற்பட்ட ஜமாஅத்கள் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கு மிகப்பெரிய ஆதாரங்களாக இரண்டு விடயங்களைக் கூற முடியும்.
01: நபியவர்களின் மனம் ஜமாஅதிற்கு பிந்தியவர்களின் வீடுகளை எரிப்பதற்கு விரும்பியமை. இரண்டாம் ஜமாஅத் என்ற ஒன்று இருந்திருந்தால் நபியவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கமாட்டார்களல்லவா?
02: ‘ஸலாதுல் ஹெளப்’ என்று அழைக்கப்படக்கூடிய யுத்த களத்தில் தொழுவிக்கப்படக்கூடிய தொழுகை கூட இரண்டு ஜமாஅத்களாக நடாத்தப்பட வேண்டிய அத்தியாவசியம் இருந்தும் கூட ஒரு ஜமாஅதாகவே நடைபெற்றிருக்கின்றது. இரண்டு ரகஅத்களாக தொழுவிக்கப்படக் கூடிய தொழுகையில் இரண்டு சாரார்கள் ஒவ்வொரு ரகஅதாக தொழுமாறு நபிகளார் பணிக்கிறார்களே! ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்கள் நடாத்துவது கூடும் என்று கருதும் சகோதரர்கள் இந்த இடத்தில் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலனாகி விடும்.

அழகிய பதில்

இவர்கள் தங்களின் மனோ இச்சைப் பிரகாரம் ஒரு முடிவினை எடுத்து விட்டு அதற்கேற்ப ஹதீஸ்களை திரிக்கக் கூடியவர்கள் என்பது மேலே அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஆதாரங்களிலிருந்தே தெளிவாகிறது.
இவர்கள் தங்களின் அரைகுறை ஆய்வால் மார்க்கத்தில் பல விபரீதங்களை ஏற்படுத்திவிடுவார்களோ என்றே நாம் அஞ்சுகின்றோம்.
இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ் என்று கூறினால் மட்டும் போதாது. குர்ஆன் ஹதீஸை முறையாக அணுகவும் தெரிந்திருக்க வேண்டும்.
இவர்கள் முதல் ஜமாஅத்தை தவிர மற்றொரு ஜமாஅத் பள்ளியில் நடத்தக்கூடாது என்ற அடிப்படையான சட்டத்தை எந்த ஹதீஸிலிருந்து எடுத்தார்களோ அந்த ஹதீஸை முழுமையாக வெளியிட்டு அதனை தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா?
எது அடிப்படையான ஆதாரமோ அதன் முழுமையான மொழிபெயர்ப்பைக் கூட வெளியிடாமல் போகிற போக்கில் கருத்தாக ஒரிரு வரிகளில் கூறுவதுதான் ஆய்வாளர்களின் நடைமுறையா?
நபியவர்கள் ஜமாஅத்திற்கு பிந்தியவர்களின் வீடுகளை எரிக்க விரும்பியது இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாது என்பதற்காகவா?
இவர்கள் ஞான சூன்யங்கள் என்பதைத்தான் இவர்களின் வாதங்கள் காட்டுகிறது.
நபியவர்களின் மேற்கண்ட எச்சரிக்கை பள்ளிக்கு ஜமாஅத்திற்கு வராமல் எவ்வித காரணமுமின்றி வீட்டில் தொழுபவர்களுக்குத்தானே தவிர தாமதமாகிவிட்டாலும் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என ஜமாஅத்தை நாடி வருகின்றார்களே அவர்களுக்குரியதல்ல.
2420 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ أُخَالِفَ إِلَى مَنَازِلِ قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ  رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (நிலை நிறுத்தும்படி) கட்டளையிட்டு விட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது (கூட்டுத்) தொழுகைக்கு வருகை தராத மக்கüன் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி (2410)
தொழுகைக்கு வருகை தராத மக்கள் என்ற நபியவர்கள் கூறுவதிலிருந்தே இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என்பது தெளிவாக விளங்குவது. இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது பள்ளிக் வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைப் பற்றித்தான். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடக் கூடாது.
462 حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْأَصَمِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقَهَا عَلَيْهِمْ قُلْتُ لِيَزِيدَ بْنِ الْأَصَمِّ يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا قَالَ صُمَّتَا أُذُنَايَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذَكَرَ جُمُعَةً وَلَا غَيْرَهَا  رواه أبوداود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னுடைய இளைஞர்களை ஒரு கட்டு விறகை சேகரிக்குமாறு கூறி பிறகு காரணமில்லாமல் வீட்டில் தொழுகிறார்களே அப்படிப்பட்ட கூட்டத்தாரிடம் வந்து வீட்டோடு அவர்களை எரித்து விடுவதற்கு என் மனம் நாடுகிறது.
அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி) நூல் : அபூ தாவூத் (462)
தாமதமானலும் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தாகத் தொழுபவர்களைப் பற்றி நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் கூறிவில்லை.
மாறாக காரணமில்லாமல் வீட்டில் தொழுகிறார்களே அவர்களைத்தான் நபியவர்கள் வீட்டோடு எரிப்பதற்கு நாடியுள்ளார்கள்
சரியான காரணத்துடன் ஒருவன் வீட்டில் தொழுதால் கூட அவனுக்கு நபியவர்களின் இந்த எச்சரிக்கை பொருந்தாது.
மேலும் இந்த ஹதீஸிலிருந்து முதல் ஜமாஅத் மட்டும்தான் பள்ளியில் நடத்த வேண்டும் என்பதை இவர்கள் எப்படி விளங்கிக் கொண்டார்கள்.?
பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதின் அவசியத்தைத் தானே நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஜமாஅத்தாகத் தொழும் அவசியம் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் தாமதமாக வந்தவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து எப்படி எடுத்தார்கள்?
அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் இவர்கள் தவறான முடிவை எடுத்துவிட்டு அதற்கேற்ப பார்க்கின்ற ஹதீஸ்களையெல்லாம் திரிக்க நினைக்கின்றார்கள்.
போர்க்களத்தில் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு தொழுவித்தது பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்த பிறகு மீண்டும் ஜமாஅத்தாகத் தொழக்கூடாது என்பதற்கு ஆதாரமாம்.
இவர்கள் ஏறுக்குமாறான ஆய்வின் மூலம் பள்ளிவாசலை போர்க்களமாக்கி விட்டார்கள்.
ஜமஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட 27 மடங்கு சிறந்தது என்பதின் அடிப்படையிலும் நபியவர்கள் தாமதமாக வந்தவரைக்கூட ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுமாறு கூறி வழிகாட்டியதின் அடிப்படையிலும் ஜ‚ம்ஆ மற்றும் பெருநாள் தொழுகைக்கு தாமதமாக வந்தாலும் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதுதான் சிறந்தது என்று கூறுவது கியாஸாம்.
ஆனால் இவர்கள் மட்டும் போர்க்களத்தில் தொழுததை வைத்து பள்ளியில் தொழுவதற்கு ஆதாரம் எடுப்பார்களாம்.?
அப்படியானால் பள்ளியில் மட்டுமல்ல. பள்ளிக்கு வெளியிலும் இவர்கள் ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை ஜமாஅத்தாகத் தொழக்கூடாது என்று கூறுவார்களா?
போர்க்களத்தின் தொழுகையின் உண்மை விளக்கத்தைக் காண்போம்.
(முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும்தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவன மற்று இருப்பதையும்திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறை வனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழை யின் காரணமாகவோநீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4 : 102)
இவ்வசனத்தின் துவக்கத்தில் "நீர் அவர்களுடன் இருந்து'' "நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்'' என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதி-லிருந்து விளங்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாது விட்டால் அவர்கள் வருத்தம் அடைவார்கள்.
நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும் போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும்.
இந்த அத்தியாயத்தைக் கவனமாகப் பார்க்கும் எவரும் இது நபிகள் நாயகத்திற்கு உள்ள சிறப்புச் சலுகை என்பதை அறிந்து கொள்வார்கள்.

அபத்த வாதம்

உதாரணத்திற்குபெண்களின் மாதவிடாயை கருப்பு இரத்தத்தை வைத்துத்தான் அடையாளம் காண வேண்டும் என நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள். அதே நேரம்,கியாஸை மார்க்க ஆதாரமாகக்கொள்வோர் சிவப்புமஞ்சல்செம் மஞ்சல் போன்ற நிரங்களையும் ஹைழு என்று வாதிடுகின்றனர். இது குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இல்லாத கருத்து என்பதற்காக அதனை அவர்கள் பாணியிலேயே மறுத்துரைக்க முடியும். (கருப்பின் சாயல் சிவப்புசிவப்பின் சாயல் மஞ்சல்மஞ்சலின் சாயல் செம் மஞ்சல்) எனவேஅவை அனைத்துமே ஹைழாகும் என்பதுதான் மத்ஹபுவாதிகளின் வாதமாகும். எனினும் செம் மஞசலின் சாயல் வெள்ளையில் இருக்கிறதல்லவாஆனால் வெள்ளையை ஹைழ் என்று வாதிட மாட்டார்கள் இப்போது அவர்களின் பானிக்கே போவோம். வெள்ளையின் சாயல் செம் மஞ்சலிலே இருக்கிறதுசெம் மஞ்சலின் சாயல் மஞ்சலில் இருக்கிறதுமஞ்சலின் சாயல் சிவப்பில் இருக்கிறது எனவேஅவை அனைத்தும் ஹைழுடைய இரத்தம் கிடையவே கிடையாது.)

அழகிய பதில்

இங்கே நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது ஜமாஅத்தைப் பற்றித்தான் . மாதவிடாய் இரத்தத்தைப் பற்றியதல்ல. நீ பத்தாம் வகுப்பில் பெயிலாகி விட்டாய் எனக் கூறும் போது நாம் எட்டாம் வகுப்பில் பாஸாகி விட்டேனே எனக் கூறுவது எப்படி அபத்தமோ அது போன்று தான் இரண்டாவது ஜமாஅத்தைப் பற்றி பேசும் போது சம்பந்த மில்லாத மாதவிடாய் இரத்தத்தைப் பற்றி பேசுவது.
வேண்டுமானால் நபியவர்கள் கூறிய ஹதீஸ் என்ன?
தற்போது என்ன பிரச்சினை?
யார் இதில் கியாஸ் எடுக்கிறார்கள்?
மத்ஹபு வாதிகள் எதனடிப்படையில் ஆதாரம் எடுக்கிறார்கள்அவர்கள் எடுப்பது எப்படி தவறானது?
சிவப்புமஞ்சள்செம்மஞ்சள் போன்ற நிரங்களில் இரத்தம் வருமா?
அதை ஏன் மாதவிடாய் இரத்தம் எனக்கூறக் கூடாது. அதற்கான மருத்து காரணம் என்ன?மார்க்கம் அதைப் பற்றி என்ன கூறுகிறதுஎன்பதைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதுங்கள்.
அதன் பிறகு நீங்கள் எழுதியதற்கும்இரண்டாம் ஜமாஅத்திற்கும் தொடர்பிருக்கிறதா ?என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.
நீங்கள் எழுதியது சரியாக இருந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய பார்வையில் தவறுகள் தென்படுமானால் சுட்டிக் காட்டுகிறோம்.
பொத்தாம் பொதுவாக மேலோட்டமாகக் கூறுவதை விட்டுவிடுங்கள்.

அபத்த வாதம்

ஹதீத்களில் இல்லாத கருத்துக்களில் உள்ளது போன்று காட்டுவதில் கைதேர்ந்தவர்தான் நௌபர் என்பவர் என்பது ஆதாரமில்லாதஅடிப்படை இல்லாத ஒரு குற்றச்சாட்டாகும். பி.ஜே அவர்கள் கூற்றில் உண்மையானவர்களாக இருந்தால் நௌபர் மௌலவி அவர்கள் ஹதீத்களில் இல்லாத கருத்துக்களை ஹதீத்களில் உள்ளது போன்று மொழிபெயர்த்த வாசகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டவில்லை என்றால் கூற்றில் உண்மையாளர் அல்ல என்பது வெட்டவெளிச்சத்திற்கு வந்து விடும். ஆனால் மௌலவி பி.ஜே அவர்கள்தான் அதில் கைதேர்ந்தவர்கள் என்பது எம்மாலும் ஆதாரங்களுடன் கூற முடியும். மருத்தால் இன்ஷா அழ்ழாஹ் அதனை எடுத்துக்காட்டுவோம்.

அழகிய பதில்

ஹதீத்களில் இல்லாத கருத்துக்களில் உள்ளது போன்று காட்டுவதில் கைதேர்ந்தவர்தான் நௌபர் என்பவர் என்பதுதான் எங்கள் குற்றச் சாட்டே தவிர அதை மொழிபெயர்ப்பின் மூலம் செய்தார் என்று நாங்கள் கூறவில்லை.
தங்க நகை விசயத்தில் நம்முடைய மறுப்புக் கட்டுரைகளை படிப்பவர்களும்இந்த இரண்டாம் ஜமாஅத் விஷயத்தில் நம்முடைய மறுப்புக் கட்டுரைகளை படிப்பவர்களும் இவர்கள் ஹதீதில் இல்லாத கருத்துகளை ள்ளது போன்று காட்டுவதிலும் காட்டிவிட்டு அடம்பிடிப்பதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை நன்றாக விளங்கிக் கொள்வார்கள். 
பிஜே அவ்வாறு செய்திருந்தால் அதைத் சுட்டிக் காட்டுவது உங்கள் மீது கடமை . மறுத்தால்தான் சுட்டிக் காட்டுவேன் என்பது உண்மையான மார்க்கப்பற்றாளர்களுக்கு அழகில்லை.
நீங்கள் மார்க்கத்தின் மீது உண்மையான பற்றிருந்தால் அதைத் சுட்டிக்காட்டுங்கள். பிறகு நீங்கள் கூறியது சரியாதவறாஎன்று பார்ப்போம்.

அபத்த வாதம்

சகோதரர் எம். எஸ். அப்பாஸ் அவர்கள் தனது ‘இரண்டாம் ஜமாஅத் கூடும்’என்ற கருத்துக்கு ஆதாரங்களாக ‘ஆதாரம்:1, ஆதாரம்:2, ஆதாரம்:என மூண்று!! ஹதீஸ்களைக் குறிப்பிட்ட பின் ‘மேற்கண்ட ஹதீஸ்களில் ஒரு…….’என்று பண்மையிலும் குறிப்பிடுகிறார்.!!!
ஆனால் உன்மையில் அவர் இங்கே குறிப்பிட்டிருப்பதோ ஸுலைமான் என்பவர் ஊடாக அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் வாயிலாக மேற்படி அவர் சுட்டிக்காட்டிய கிரந்தங்களில் அறிவிக்கப்படும் ஒரே ஒர் ஹதீஸைத்தான். எனவே ஒர் ஹதீஸ் எவ்வாறு சில அல்லது பல வழிகளில் அறிவிக்கப்படுகிறது என்ற ஹதீஸ் (அறிவிப்பாளர்) கலையின் அடிப்படைகூடத் தெரியாமல் சகோதரர் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளாரா அல்லது தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டி எண்ணிக்கையைக் கூட்ட வேண்டி 1,2,3 என அடுக்கிக் கொண்டு சென்றாரா என்பது புரியவில்லை.

அழகிய பதில்

ஒருவர் தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு உயர்ந்தது. பரிசுத்தமானது. இறை விருப்பத்திற்குரியது என்றெல்லாம் நபியவர்கள் கூறிய பிறகும் முதல் ஜமாஅத் மட்டும் தான் கடமை. அடுத்து தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழக்கூடாது. ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் தாமதமாக வருபவருக்கு தொழுகை நடத்த வேண்டும் என்றெல்லாம் கூறி புதிய பித்அத்தை உருவாக்கி நன்மைகளை நாசப்படுத்துவதற்கு நீங்கள் காட்டிய வழிமுறையை விட ஒன்றும் பெரிய தவறை அப்பாஸ் செய்து விடவில்லை.
நபி வழியை நிருபிப்பதற்கு காட்டிய ஆதாரத்தை 1, 2, 3 என காட்டியது மிகச் சிறிய தவறு என்றாலும் புதிய பித்அத்தை உருவாக்கும் இவர்களோடு ஒப்பிடும் போது அது ஒரு தவறே அல்ல.
ஒன்றுமில்லாத கேள்வியைத்தான் இவர்கள் மிகப் பெரிதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாஸ் 1, 2 3 ,என  கூறியிருந்தாலும் அவர் கூறிது ஹதீஸ் ரூட்டுகளைத்தான். மாறாத பித்அத்தை அல்ல.

அபத்த வாதம்

அழ்ழாஹ் பற்றிய மறுமை நம்பிக்கைகளில் கூட தனது பகுத்தரிவு வாத்தை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விட்டுவைக்கவில்லையேஅழ்ழாஹ் இரவின் இறுதிப்பகுதியில் இறங்கி வருவதை மனிதன் இறங்குவதற்கு ஒப்பாக்கியதால்தானே அந்தப் பன்பை (மாத்திரம்) வலிந்துரை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இப்படியான மனோ இச்சை அடிப்படையிலான கருத்துக்களை தன்னகத்தே வைத்துக்கொண்ட இவர்கள் எப்படி மேற்படி வாதத்தினை எடுத்துவைக்க முடியும்?

அழகிய பதில்

அல்லாஹ் இறங்குவதை மனிதர்கள் இறங்குவதற்கு பிஜே எங்கே ஒப்பாக்கினார். என்பதை இந்த பொய்யர்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.
மேலும் மேற்கண்ட ஹதீஸிற்கு நாம் கூறிய விளக்கங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி அது எந்த அடிப்படையில் தவறு என்பதையும் அதில் எங்கே மனோ இச்சை நுழைந்து விட்டது என்பதையும் இவர்கள் தைரியம் இருந்தால் விளக்கட்டும்.
அஹ்லுஸ் சுன்னா என்று பெயர் வைத்தவர்கள் எதைச் சொன்னாலும் மார்க்கம் என்பது. இவர்களால் வழிகெட்டவர்கள் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டவர்கள் நல்லதையே சொன்னாலும் வழிகேடு என்பது இதுதான் இவர்களுடைய போங்கு போல் தெரிகிறது.
யார் எதைச் சொன்னாலும் ஷைத்தானே நல்லதைச் சொன்னாலும் குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்திருந்தால் ஏற்றுக் கொள்வதும் மாற்றமாக இருந்தால் தூக்கி எறிவதும் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்பதை இவ்விடத்திலும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

அபத்த வாதம்

தௌஹீத் கருத்தில் இருந்தும் பசபஓயோடு சேராத ஒரே காரணத்தினால் எங்களை பாமர மக்கள் மத்தியில் இவ்வாறு சித்தரித்து எங்களது கருத்துக்களில் நியாயம் இருக்கின்றதா என்று சிந்திப்பதை தடுக்கும் முகமாக எங்களது கருத்துக்களை ஏரெடுத்தும் பாரக்கக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட விமர்சனமாகத்தான் நாம் இதனை பாரக்கின்றோம்.

அழகிய பதில்

மக்கள் உங்களை ஏறெடுத்துப் பார்க்காவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. யார் எப்படிக் கருதினாலும் தவறை தவறு என்று கூறுவதுதான் தவ்ஹீத் ஜமாஅத். மக்கள் எங்களோடு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினால் மக்கள் விரும்பும் பல விசயங்களில் அவர்களுக்குத் தோதுவாகவே நாங்கள் சட்டம் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் மக்களின் விருப்பத்தை புறக்கணித்து இறைவனின் கட்டளைகளை மட்டுமே எடுத்துக் கூறி மக்களுக்கு நல்வழியைக் காட்டுவதுதான் தவ்ஹீத் ஜமாஅத்.
சத்தியத்தை விளக்குவதற்காக நாங்கள் எழுதும் விசயங்கள் உங்கள் அமைப்புக்கு எதிரானது என நீங்கள் எண்ணிக்கொண்டால் அது உங்களுடைய யூகம்தான். யூகம் ஒருபோதும் உண்மைக்குச் சான்றாகாது.

அபத்த வாதம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தங்களது தஃவாவை இப்படிக்கொண்டு சென்றால்தான் அதை ரசிக்கின்ற பிரியர்கள் தங்களோடு தொடர்ந்தும் இருப்பார்கள் என்பதற்காக கண்டுபிடித்த அழகியமுன்மாதிரியாஸலபு வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று எம்மை தூசித்து எம்மை சமூகத்திலிருந்து ஓரங்கட்ட முனைந்ததின் நோக்கமும் பின்னனியும் என்ன என்பதை தாழ்மையோடு கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அழகிய பதில்

யாரையும் ஓரங்கட்ட் யாராலும் முடியாது. இறைவன் நாடியதுதான் நடக்கும். சத்தியத்தை நேசிப்பவர்களை தவறாகச் சித்தரிக்க வேண்டுமானால் சித்தரித்துக் கொள்ளுங்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை ஓரங்கட்ட நீங்கள் நாடினால் அது உங்களால் முடியாது. இறைவனின் நாட்டப்படிதான் நடக்கும். உங்களை இறைவன் ஓரம் கட்ட நாடிவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாதுஎன்பதை தெளிவாகவே கூறிக் கொள்கிறோம்.

அபத்த வாதம்

இன்னும் சொல்லப்போனால் இவர்கள் தமிழ் பேசும் உலகில் ஸலபுகளைப்பற்றி கொடுத்திருக்கின்ற அறிமுகங்களில் நிறையவே உண்மைக்கு புரம்பானவைகள்தான் இருக்கிறது என்பது தனியான விடயமாகும்.

அழகிய பதில்

நாங்கள் ஸஃபுகளை எப்படி அறிமுகப் படுத்தியிருக்கின்றோம். அதில் உண்மைக்கு புறம்பானவைகள் என்ன என்பதை பற்றி தெளிவாக விளக்குங்கள். உங்கள் இன்னும் தெளிவாக அடையாளம் காட்ட அது எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். எங்கே தயவு செய்து தனியாக விளக்கித்தான் காட்டுங்களேன்.
ஏற்கனவே ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்பதற்கு இவர்கள் எடுத்த வைத்த கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை என்பதை ஒன்று கூட விடாமல் தெளிவு படுத்தி விட்டோம். இறுதியில் இத்தலைப்பிற்கு தொடர்பில்லாவிட்டாலும் சில விசயங்களை நாம் கூறவேண்டியுள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவை யாரையும் தேவையின்றி விமர்சனம் செய்யாது. நமக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் முதலில் நம்மை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யும் போதுதான் நாமும் அவர்களை விமர்சனம் செய்யத் துவங்குகின்றோம். நாமாக முதலில் யாரையும் விமர்சனம் செய்வதில்லை. அது நமது நோக்கமும் அல்ல.
ஒருவனை பன்றிநாய் என்று கூறுவதும் அவனைத் திட்டுவதுதான்.
உன்னை பன்றி என்று கூறலாம். ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன்.
உன்னை நாய் என்று கூறலாம் ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன்.
என்று கூறுவதும் அவனை திட்டுவதுதான்.
இரண்டிற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் நம்மிடம் இல்லை.
இந்த இலங்கைச் சகோதரர் இரண்டாவது பாணியில் நம்மை விமர்சனம் செய்திருக்கிறார்.
இவர் தங்களை நல்லவர்கள் என்று காட்டுவதைப் பாருங்கள் :
அவ்வப்போது மனிதன் என்ற ரீதியில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கையானதே. அதற்காக கொள்கையில் தடம்பிரண்டு போன தப்லீக் ஜமாஅத்ஜமாஅதே இஸ்லாமி போன்றோரை சாடுவது போன்று சாடுவது நேர்மையான ஒரு தஃவாவாக இருக்க முடியாது. கொள்கையளவில் பெரும்பாலான விடயங்களில் நாம் அனைவரும் உடன்பட்டிருக்கிறோம் என்பதை கருத்திற்கொண்டு நம் அனைவருக்கும் பொது எதிரிகளாக இருக்கின்ற தரீகாவாதிகளும்இஹ்வான்களும்கைகொட்டிச் சிரிக்குமளவுக்கு நமது தஃவாக் களத்தை கொண்டு செல்வது ஒரு ஆரோக்கியமான நடைமுறையல்ல.
இஸ்லாத்தை படிப்பதற்காக இணையதளங்களில் உற்பிரவேசிக்கும் பன்பாடுள்ள தௌஹீத் சகோதரர்கள் இவ்வாரான ஆரோக்கியமற்ற விமர்சனங்ளைகண்டு தௌஹீதையே வெறுக்கின்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பாவங்ளையும் நாமே சுமக்க வேண்டிவரும் என்பதனை கருத்திற்கொண்டு அறிவுபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் நமது கருத்ததாடல்கலை அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமென்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
எது எப்படி இருந்திட்ட போதிலும் இனிமேலாவது காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் நின்று கொண்டு நமது கருத்தாடல்களைத் தொடர்ந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
என்று கூறிவிட்டு இவர்கள் நம்மை தரம் தாழ்ந்து விமர்சிப்பதைப் பாருங்கள்
அதற்காக பி.ஜே அவர்களை மொத்தமாக சிலர்கள் சொல்வதைப்போல் முஃதஸிலாக் கருத்திலுள்ள பகுத்தரிவுவாதி என்று நாம் சொல்ல வரவில்லை
சொல்லி விட்டு அவ்வாறு சொல்ல வரவில்லை என்கிறார்கள்.
இஸ்லாமிய சட் டவிதிமுறைகளோடு விளக்கம் சொல்கின்ற எங்களை ஸலபி வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று சீல் குத்துகின்ற இவர்களை மனோ இச்சைப்படி ஹதீத்களை மறுக்குகின்ற முஃதஸிலா வகையராக்களைவிட ஆபத்தானவர்கள் என்று நாம் சொல்வது மிக மிக சுலபமாகும். உங்களை விட பல மடங்கு எம்மாலும் எழுத முடியும். ஆனால் அவ்வாறு எழுதவுமாட்டோம்பேசவுமாட்டோம்.
எழுதிவிட்டு. பேசிவிட்டு எழுதவுமாட்டோம் பேசவுமாட்டோம் என்கிறார்.
நம்மை மனோ இச்சை வாதி என்று விமர்சனம் செய்துள்ளார்
நமக்கென்று ஒரு நிலைப்பாட்டை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ற ஆதாரங்களை குர்ஆன் ஸுன்னாவிலிருந்து தேடுவது மனோ இச்சைவாதிகளின் கொள்கையாகும். சத்தியம் எதுவோ அதற்கு முற்றிலுமாக அடிபனிவேன் என்ற நோக்கோடு குர்ஆனிலிருந்தும் ஹதீத்களிலிருந்தும் ஆதாரங்களை தேடுவது இறை விசுவாசிகளின் போக்காகும். எனினும்இப்போக்கை சகோதர அறிஞர் அப்துன் நாஸர் என்பவரிடம் காணமுடியாமலிருக்கிறது.
அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் போன்றவர்களிடத்திலும் இப்படியான மனோ இச்சையைப் பின்பற்றும் போக்குகள் அவ்வப்போது எற்பட்டுவிடுகின்றன.
நாம் கூற வருவது எங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளுங்கள் . ஆனால் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் வழிமுறையைக் கையாளாதீர்கள் என்பதை மட்டும் வேண்டிக் கொள்கிறோம்.

POSTED BY S.SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .