Breaking News

பெண்கள் தங்க நகை அணியலாமா? தொடர்-3

தொடர்-3

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் தவறான வாதங்களை எடுத்து வைப்பது குறித்து நாம் இரண்டு தொடர்களை வெளியிட்டோம்.
அதற்கு இரண்டு மறுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் மறுப்பு தாருல் அதர் எனும் அமைப்பின் சார்பில் நவ்பர் என்பார் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக்குரிய நமது விளக்கத்தை முன் வைக்கிறோம்.
நவ்பர் வெளியிட்ட மறுப்பில் பெண்கள் தங்க நகை அணிவது தொடர்பாக நாம் கேட்டஎந்தக் கேள்விக்கும் பதில் இடம் பெறவில்லை. தொடரும் என்று போட்டிருப்பதால்அடுத்தடுத்த தொடரில் தான் வெளியிடுவார் என்று நினைக்கிறோம்.
முதல் தொடரில் அவர் எடுத்து வைத்த தலைப்புடன் தொடர்பில்லாத வாதங்களூக்கு இங்கே பதில் தருகிறோம்.
முதல் வாதம்
அன்புச் சகோதரர் பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?என்ற தலைப்பில் தாங்களது பிரேத்தியேகஇணைய தளத்தில் வெளியான இரு தொடர்களையும் கண்டோம்.அது தொடர்பான எமதுமாற்றுக் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் ஏன் சிலஆலோசனைகளையுங் கூடஇந்த பதிலினூடாக உங்கள் முன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.
முதலில்இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்_பீ ஜைனுல் ஆபிதீன்என உங்கள் மறுப்பை தொடக்கியுள்ளீர்கள்.
உங்களது பிரேத்தியேகஇணைய தளத்தில் குறித்த பிரச்சனை தொடர்பாக உங்களது ஆய்வை (நீங்கள் இது குறித்து ஆய்வு செய்திருந்தால்) வெளியிடாமல் அப்பாஸ் அலி அவர்களது ஆய்வை வெளியிட்டிருக்கிறீர்கள். விவாதங்கள்,நிகழ்வுடன் சம்ப்ந்தப்பட்டவர்களது நேரடித் தகவல்கள் (உதாரனம் தமுமுக விவகாரம்) போண்றவை அல்லாமல் உங்களோடு மாற்றுக் கருத்துள்ளவர்களுக்குநீங்களே பதில் எழுதும் உங்கள் வழமைக்கு மாற்றமாகஅதுவும் உங்கள் தனிப்பட்ட இணைய தளத்தில் முதன் முறையாக எமக்கு பதில் எழுதும் போது மாத்திரம் அப்பாஸ் அலி என்பவரது ஆய்வை தேவையான மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.அவர் குறித்த விடயத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.நாம் இது தொடர்பான எமது வாதங்களை முன்வைத்தபின் அவரது ஆய்வில் செய்யப்பட்டதேவையான மாற்றம்என்ன என்பது ஒரு புறமிருக்கஅவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும்நபர்களை எதிர் கொள்வது முக்கியமில்லை கருத்தை எதிர்கொள்வதே முக்கியம்என்ற எமது நடைமுறைக்கேற்பவும் இப்பதிலை உங்கள் முன்னிலையில் பதிவு செய்கிறோம்.
இந்த வாதத்தில் உருப்படியான ஒரு விஷயமும் இல்லை. தவறான கருத்துக்களுக்கு நாமே பதில் எழுதும் எந்த வழிமுறையயும் நாம் அறிவிக்கவில்லை. தகுதியானவர்களை ஊக்குவிப்பதும் அவர்களை முன்னிலைப் படுத்துவதும் தான் நமது வழிமுறை. களியக்காவிளை விவாதத்தில் மற்ற அறிஞர்கள் வாதிட்டனர். ரசாத் கலீபா கூட்டத்துடனும் இளம் மவ்லவிகள் தான் வாதிட்டனர். நாத்திகருடன் நடந்த விவாதத்தில் கூட நானே ஆக்ரமித்துக் கொள்ளவில்லை. மற்றவர்களை விட என் பங்கு குறைவாகவே இருந்தது. நான் மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த போது மட்டும் (உதாரணம் ஜகாத் விவாதம் , முஜீப் விவாதம்) தான் நான் மட்டும் களம் இறங்கினேன். மற்றபடி அனைவருக்கும் நானே பதில் சொல்வது என்று எந்தக் கொள்கை முடிவும் எம்மிடம் இல்லை.
அடுத்து அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது நமது இணையடளத்தில் வெளியிட்டுள்ளதால் நான் அந்த ஆய்வுக்குப் பொறுப்பு என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆன்லைன் பீஜே இனையதளம் ஆகஸ்ட் மாதத்துக்கு முன் எனது பொறுப்பில் நடக்கவில்லை. அதில் இடம்பெறும் ஆக்கங்கள் செய்திகள் அனைத்தும் வெப்மாஸ்டர் பொறுப்பில் தான் நடந்தது. ஆகஸ்ட் முதல் டைனமிக வடிவில் இணையதளம் இயங்கிய போது தான் அதன் ஒவ்வொரு செய்திக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
நமது இணையதளம் புது வடிவில் இயங்க ஆரம்பித்தபோது முதல் நாளே ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். அந்த அறிவிப்பு ஆன்லைன் பீஜே பற்றி என்ற தலைப்பில் இன்றும் உள்ளது.
அதில் நாம் குறிப்ப்ட்ட விஷயம் இது தான்
இந்த இணைய தளம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பல இணையதளங்களில் இருந்து பல விதங்களில் மாறுபட்டுள்ளதை நீங்கள் காணலாம். அதில் முக்கியமான் வேறுபாடு இதில் வெளியாகும் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.
எந்தக் கருத்து சரியானது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதைத் தான் மக்களிடம் நாம் வைக்க வேண்டும். தவறானது என்று நமக்குத் தோன்றுவதையும்சரியா தவறா என்று நமக்கே சந்தேகமானதையும் நாம் மக்களிடம் வைக்கக் கூடாது.
ஆனால் பெரும்பாலான இணைய தளங்கள் யாருடைய எந்தக் கருத்தையும் வெளியிடுவதுடன் இதில் வெளியிடப்படுவதற்கு நாம் பொறுப்பல்ல என்று பொறுப்பற்று நடப்பதைக் காண்கிறோம்.
நாங்கள் பொறுப்பல்ல என்று மக்கள் மத்த்யில் இவர்கள் அறிவித்தாலும் அல்லாஹ்விடம் இவர்கள் தான் அதற்குப் பொறுப்பாளர்கள். இவர்கள் வெளியிட்டதை நம்பி தவறாதைப் பின்பற்றியவர்களின் பாவமூட்டைகளை இவர்கள் சுமப்பார்கள்.
அது போல் தனி நபர்களைப் பற்றி எழுதப்படும் தரக் குறைவான விமர்சனங்களையும் வெளியிட்டு இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அறிவிப்புச் செய்கின்றனர்.
அனைத்து வகையான உணவுகளையும் பரிமாறும் உணவு விடுதியில் இங்கே பரிமாறப்படும் பன்றி இறைச்சிக்கு நாங்கள் பொறுப்பல்லஅதைச் சமைத்தவர் தான் பொறுப்பு என்று அறிவிப்பு பலகை தொங்க விடுவது போல் இவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.
பொறுப்பற்ற கேவலமான இந்த இழி செயலை இந்த இணைய தளம் செய்யாது. தனக்குச் சரி என்று பட்டதை மட்டுமே வெளியிடும். இதில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.
قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع
கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.
நூல் : முஸ்லிம் 6
இது எனது சொந்தப் பொறுப்பிலும் சொந்தச் செலவிலும் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த இணைய தளத்தின் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
இவ்வளவு தெளிவாக நான் அறிவித்துள்ள பின் இதை இவர்கள் புதிதாகக் கண்டு பிடித்துள்ளனர். இப்போதும் நான் சொல்கிறேன். இந்த இணைய தளத்த்தில் யாருடைய ஆக்கமும் இடம் பெறும். யாருடைய ஆக்கம் இடம் பெற்ற்றாலும் அதை நானும் வாசித்து அதன் அனைத்து விஷயங்களிலும் முழு திருப்தி அடைந்த பிறகு தான் வெளியிடுவேன். ஒரு வேளை அந்த ஆக்கம் தவறு என்றால அது கட்டுரையாளர் தவறு என்று நான் கூற மாட்டேன். அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று திட்டவட்டமாக நான் அறிவித்த பின் யார் பெயரில் மறுப்பு வெளியானால் என்ன?
நான் பொறுப்பேற்பதற்கு முன் மற்றவரின் பொறுப்பில் வெளியான விஷ்யங்களுத் தான் நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஆகஸ்டுக்குப் பின் வெளியிடப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் நானே பொறுப்பாளி என்று நானே அறிவித்த விஷயத்தைத் தான் புதிதாகக் கண்டு பிடித்து கூறுகின்றனர்.
அப்பாஸ் என்றதும் தான் இந்த இடத்தில் எமக்கு இன்னுமொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஏற்கனெவே உங்கள் அமைப்பின் இணையத்தள நிர்வாகி எஸ் எம் அப்பாஸ் என்பவர் இரண்டாம் ஜமாஅத் தொடர்பாக சகோதரர் அலி ********* என்பவருக்கு வழங்கிய தவறான பத்வாவும் அது தொடர்பாக அவர் எம்மிடம் விளக்கம் கேட்ட போது நாம் எழுதிய மறுப்புக்கு இன்று வரை அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது உரிய பதிலோ எழுதாமல் மௌனம் சாதிக்கும் தாங்கள் (பார்க்க :ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா?)
குறித்த தங்க நகை விடயத்தில் இன்னுமொரு அப்பாஸை களமிறக்கியிருப்பத்பதற்கும்மாற்றுக் கருத்துடையவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்போம்எனக் கூறும் உங்கள் நிலைப்பாட்டுக்கும் தெளிவான முரண்பாடாகத் தென்படவில்லையா அல்லது எதற்கு உங்களிடம் பதில் இல்லையோ அதை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதற்கு பதில் சொல்லமுடியுமோ அல்லது பதில் என்றுஎதையாவது சொல்ல முடியுமோ அதற்கு மாத்திரம் பதில் அளிப்பதுதான் உங்களது நிலைப்பாடா என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.
அடுத்து இவர்கள் குறிப்பிடும் வாதமும் அபத்தமானது. நமது இணையதளத்தின் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டது புதிய வடிவத்தில் வந்த பிறகு தான். அதன் பிறகு நம்முடைய கவனத்துக்கு வரும் ஒவ்வொரு தவறான வாதங்களுக்கும் மறுப்பு எழுதி வருகிறோம்.
(ஒரே நேரத்தில் அனைத்துக்கும் பதில் எழுத இயலாது. ஒவ்வொன்றாகத் தான் பதில் எழுத முடியும். இவர் அவசரப்படுவதால் இரண்டாம் ஜமாஅத் குறித்து இவரது அபத்தமான ஆய்வுக்கும் மறுப்பு வெளியிடப்பட்டு விட்டது. அதன் பிறகு இன்று வரை மவுனம் சாதிக்கிறார்.)
அது சரி இதற்கும் பெண்கள் தஙக் நகை அணியக் கூடாது என்ற வாதத்துக்கும் என்ன தொடர்பு?
பதில் எழுதப்படாத பல வாதங்கள் இன்னும் உள்ளன.. இவர்களைப் போல் தான் இஸ்மாயீல் சஃலபியும் சொன்னார். எதற்கு பதில் உள்ளத்கோ அதை மட்டும் எழுதுகிறார்கள் என்று கூறிய அவர் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார். இன்ஷா அல்லாஹ் அது போல் உங்கள் வாதஙகள் ஒவ்வொன்றும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்களிடம் ஒரு விஷ்யம எந்த அளவுக்குப் பரவியுள்ளதோ அந்த வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அடுத்துபெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இண்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன.என்று 02/11/2009 அன்று தாங்கள் வெளியிட்ட முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதோ இக்கட்டுரை வெளியிடப்படும் காலப் பகுதியில்தான் நாம் இக்கருத்தை முன்வைத்தது போலும் அது குறித்த வாதப் பிரதி வாதங்கள் இலங்கயில் பரவலாக நடந்து வருகிறது போலும் அது பற்றிய தெளிவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்ற காரனத்தால் சுடச் சுட தாங்கள் பதிலளிப்பது போண்ற ஒரு பிரம்மையை தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் குறிப்பாக அல் குர் ஆனும் ஆதார பூர்வமான நபி மொழியும் மாத்திரம்தான் இஸ்ஸாலாத்தின் மூலாதாரங்கள் என்ற உறுதியன நம்பிக்கையுடன் வாழும் கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.
ஆனால் உன்மை நீங்கள் குறிப்பிட்டதற்கு மாற்றமாக அல்லவா அமைந்துள்ளது.!! நாம் குறித்த தங்க வளையல் நகை தொடர்பான கருத்தை முன்வைத்தது27/05/2009அன்றாகும்.
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?Posted on மே 27, 2009 by darulathar(பார்க்க எமது இணையதளம்)என்ற கட்டுரை மூலமாக ஐந்தாம் மாத இறுதியில் எமது கருத்தை வெளியிடுகிறோம். வழமையாக நாம் அல் குர் ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் ஒரு கருத்தை வெளியிடும் போது ஏற்படுவது போண்ற சிறு சலசலப்பு ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் இஸ்மாயில் மதனி என்ற சகோதரர் ஒரு மஸ்அலா இஜ்திஹாத் என்ற வகையில் பதில் பேச அதற்கான எமது தரப்பு பதில்களும் அளிக்கப்பட்டதே அன்றிநீங்கள்அது குறித்த வாதங்கள் நடந்துவருகின்றனஎன்று எழுதியுள்ளது போல் எந்த வாதங்களும் நடக்க வில்லை
இவர்களின் புரிந்து கொள்ளும் திறன் பற்றி நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுக்கு எதிர் கருத்து கொண்ட உலமாக்களூக்கும் மத்தியில் விவாதம் நட்ந்தது என்று நாம் குறிப்பட்டது போல் சித்தரித்து அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். நாம் எழுதிய வாசகம் என்ன? இது குறித்து இலங்கை முஸ்லிம்க்ள் மத்தியில் விவாதங்கள் நடக்கின்றன என்று தான் எழுதினோம். இலங்கை முஸ்லிம்கள் இது குறித்து தமக்கிடையே விவாதிக்கிறார்கள் என்று நாம் எழுதியதை இஸ்மாயில் ஸலஃபியைப் போல் புரிந்து கொண்டு எழுதியுள்ளனர்.
மே மாதத்தின் இறுதி நான்கு நாட்களையும் கழித்து விட்டுப் பார்த்தால் கூட ஜூன்,ஜூலைஓகெஸ்ட்,செப்டம்பர்ஒக்டோபர் என முழுமையாக ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் நீங்களோ அல்லது உங்களுக்கென்று இலங்கையில் இருக்கும் அமைப்போ அல்லது அதன் பிரச்சாரகர்களோ வாய் திறக்கவுமில்லை,கருத்து வெளியிடவுமில்லை. ஒரு வேளை இவ்வாறான ஆய்வியல் விடயங்களில் அபிப்பிராயம் வெளியிடும் தகுதியோ திறனோ வாய்ந்த உலமாக்கள் இலங்கையில் உங்கள் அமைப்பில் இல்லை என்ற ஒரு நியாயமான காரனம் இருந்தாலும் குறைந்த பட்சம் நீங்களாவது இந்த நீன்ட காலப் பகுதியில் உங்கள் கருத்தை வெளியிட்டு இருக்கலாம் அல்லவா?
இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்புமுஜீபு,அப்துர் ரஹ்மான்களுக்கு மறுப்பு என நீங்கள் வேலைப் பழுக்களுடன் இருந்தாலும் ஏற்கனவே செய்யப்பட்ட அப்பாஸ் அவர்களது ஆய்வை வெளியிடவா உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டது என்ற ஒரு நியாயமான கேள்விக்கு நீங்கள் பதில் கூறக் கடமைப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?மேலும்,வழமையாகஆளை,அவர் சார்ந்திருக்கும் அமைப்பை அடையாளப் படுத்தி எழுதும் நீங்கள்பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு.. என்றும் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா?என்றும் செயெற்பாட்டு விணையிலும் யாரோ முகவரியும் அடையாளமும் இல்லாத சிலர் மேற்படி கருத்தை முன்வைப்பது போலவும்எழுதியுள்ளதற்கான காரணம் என்ன?! நாம் யார் எமது அமைப்பு என்னஎமது அழைப்பு என்ன என்பதை அடையாளப் படுத்தினால் அல்குஆன் அஸ்ஸுன்னாவை யார் சொன்னாலும் அதைப் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழும் சகோதரர்கள் குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில்வாதங்களில்நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது மக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.
இதுவும் அர்த்தமற்ற வாதமே. எங்கள் வேலைப்பளுவுக்கு இடையில் எப்போது இயலுமோ அப்போது தான் வெளியிடுவோம். பிறருடைய ஆய்வு என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு வெளியிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு எத்தனை மறுப்பு வேண்டுமானாலும் வெளியிட முடியும். நாம் பரிசீலித்து சிந்தித்து வெளியிடுவதால் கிடைக்கும் நேரத்துக்கு ஏற்பவே வெளியிட முடியும்.
குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில்வாதங்களில்,நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது மக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.
என்று எழுதியது இவ்பர்களின் கோபத்துக்குரிய காரணம் என்ன என்பதை விளக்குகிறது. தங்க நகை ககட்டுரைக்கு நாம் எழுதிய மறுப்பு இவ்ர்களின் அறியாமையை மக்கள் புரிந்து கொள்ள காரணமாகியுள்ளது. ஆளாளுக்கு பதில் சொல்ல முடியாத கேள்விகளை இவர்களிட,ம் கேட்க ஆரம்பித்துள்ளனர். அதைத்தான் மேற்கண்ட வாசகம் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
சரியான கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்,. ஆட்கள் சேர்ப்பது நோக்கம் இல்லை. ஆட்கள் சேரப்பதை நோக்கமாகக் கொண்டு தவறான கருத்தைச் சொன்னவர்கள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
இஸ்மாயீல் ஸலபி வைத்த வாதம் போல் வாத்ததை வைக்காமல் பெண்கள் வளைந்த தஙக நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கும் வழியைப் பாருங்கள். நீங்கள் அர்த்தமற்ற கருத்தை மக்கள் மத்தியில் வைத்து பின்னர் அது தவறு என்பது நிரூபணமானால் மக்கள் உங்களை விட்டுப் போகத் தான் செய்வார்கள். எதிர்க் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள். மக்கள் நம்மை விட்டு போகிறார்களே என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் இல்லை.
இதன் பின்னர் தங்களைப் பற்றி பெருமை அடிக்கும் வகையில் விரிவாக எழுதியுள்ளனர். அது பதில் சொல்லத் தேவையற்றது.
தங்க நகை அணிவது பற்றி இவர்கள் எடுத்து வைக்கும் ஆய்வுக்காகக் காத்திருக்கிறோம். பொதுவாக இவர்களுக்கு ஒரு அறிவுரையைக் கூறுகிறோம். வாதம் செய்யும் போது முக்கிய தலைப்பு குறித்த விஷயங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற வேண்டும். மிகக் குறைந்த அளவில் இடையிடையே தலைப்புடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத விஷயங்களை குறிப்பிடுவது தவறல்ல. தலைப்புக்கே வராமல் முழுக்கட்டுரையையும் சுய தம்பட்டம் அடிக்க பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவுரை

POSTED BY S.SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .