Breaking News

தப்லீகின் தஃலீம் தொகுப்பு -மே 1993

தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே&  ;

1993 மே அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்ட ஒரு தொடர் - தேவையான திருத்தங்களுடன்
ஒரு ஹதீதுக் கலை நிபுணர் குர்ஆன் வசனங்களுக்கோ நபிமொழிகளுக்கோ தவறான விளக்கம் கொடுப்பவராக அல்லது கொடுக்கப்பட்ட தவறான விளக்கங்களை பாராட்டுபவராக இருக்க மாட்டார். ஸகரிய்யா சாகிப் தன் தஃலீம் தொகுப்பு நூலில் பல இடங்களில் தவறான விளக்கங்களைக் கொடுத்திருப்பதுடன் வேறு பலர் கொடுத்த தவறான விளங்கங்களைப் பாராட்டவும் செய்கிறார். தெளிவான சான்றுகளையும் சிக்கலானவைகளாக சித்தரிக்கின்றார்.
தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் அத்தியாயம் பக்கம் 783 ஐப் புரட்டுங்கள்.
ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள் என்ற (9:119) இறை வசனத்தை எழுதிவிட்டு அடுத்து தொடர்கிறார்.
நீங்கள் அல்லாஹ்வுடன் இருங்கள். அது உங்களுக்கு முடியவில்லையானால் அல்லாஹ்வுடன் இருப்பவர்களுடன் இருங்கள் என்று சூஃபியாக்கள் கூறுகின்றனர்.
இந்த விபரீதமான பொருளை இவர்  கொடுக்கும் இவரது அசட்டுத் துணிச்சலை என்னவென்று கூறுவதுஇவர் விளங்கியிருக்கின்ற விளக்கம் தவறானது மட்டுமல்ல. வழிகேட்டுக்கு நேராக இட்டுச் செல்லும் பொருளாகும் என்பதை இங்கு காண்போம்.
இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தைப் படியுங்கள். தபூக் யுத்தத்தில் பங்கு கொள்ள நபித் தோழர்கள் திரளாகப் புறப்பட்டார்கள். நயவஞ்சகர்கள் வழமை போல் இந்த யுத்தத்திற்குப் புறப்படவில்லை . திரும்பி வந்த நபி ஸல் அவர்களிடம் நயவஞ்சகர்கள் நல்லவர்களைப் போல் பாசாங்கு செய்து பொய்க் காரணம் கூறி நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள். அந்த யுத்தத்திற்கு மூன்று உண்மைத் தோழர்கள்  புறப்படவில்லை. கலந்து கொள்ளாமைக்குத் தகுந்த காரணமும் இல்லை. திரும்பி வந்த நபியவர்களிடம் இம்மூவரும் உண்மையைச் சொல்லி விட்டார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். இம்மூவரும் நபியவர்களால் தண்டிக்கப்பட்டார்கள். ஐம்பது தினங்களுக்குப் பின்னர் இவர்களை மன்னித்து விட்டதாக இறைவன் (9:118) வசனத்தை இறக்கினான்.  உண்மையே உரைத்த இத்தோழர்கள் இறை மன்னிப்பை அடைந்தார்கள். பொய்க் காரணம் கூறிய நயவஞ்சகர்கள் இறை மன்னிப்பென்ற பாக்கியத்தை இழந்தார்கள் (இச்சம்பவத்தை விரிவாக புகாரி உள்பட பல்வேறு ஹதீது நூல்களில் காணலாம். ஸகரிய்யா ஸாகிபும் இந்த முழு சம்பவத்தை தனது தஃலீம் தொகுப்பில் ஸஹாபாக்களின் வரலாறுகள் என்ற தலைப்பில் ஒன்பதாவது சம்பவமாக  இடம் பெறச் செய்திருக்கிறார்) இம்மூவருக்கும் வழங்கப்பட்ட இறை மன்னிப்பு தொடர்பான வசனத்திற்கு பின்னரே 9:119 வசனம் அமைந்துள்ளது.
இதிலிருந்து நாம் விளங்குவது என்ன?
இந்த மூவரைப் போல் நாமும் இறைவனை அஞ்ச வேண்டும். அவர்கள் உண்மை பேசி இறையருளுக்குரியவர்களாக திகழ்ந்ததைப்  போல் நாமும் வாழ வேண்டும். இதுவே இந்த வசனம் நமக்குத் தரும் போதனையாகும். ஆனால் இந்த வசனத்தின் கருத்தை வேறு எங்கோ இவர் கொண்டு சொல்கிறார் திசை திருப்புகிறார்.
இறைவனை அஞ்சுங்கள் என்றால் இறைவனுடன் இருங்கள் என்று பொருளாம். உண்மையாளர்களுடன் இருங்கள் என்றால் இறைவனுடன் இருக்க முடியாத நிலையில் இறைவனுடன் இருப்பவர்களுடனாவது இருங்கள் என்று பொருளாம்.
நபித் தோழரோநபித்தோழர்களிடம் பாடம் பெற்ற மேதைகளோ ,நபிமொழித் தொகுப்புகளைத் தந்த மூதறிஞர்களோ இந்த வினோத விளக்கத்தைத் தந்ததாக இவர் குறிப்பிடவும் இல்லை. எந்த நூலையும் இவர் மேற்கோள் காட்டவும் இல்லை. மாறாக சூஃபியாக்கள் என்போர் தாம் இவ்வாறு விளக்கம் சொன்னதாக கூறுகிறார்.
முறைகேடான விளக்கங்களை சூஃபியாக்கள் என்போர் தலைகளில் கட்டிவிடுவது இவரது வாடிக்கை.
அத்தோடு விட்டாரா482 ஆம் பக்கத்தில் இதே 9:119 வசனத்தை எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகிறார்.
இவ்விடத்தில் உண்மையாளர்கள் என்பது ஞானிகளாகிய சூஃபியாக்களையே குறிக்கின்றது.
இவர்களுக்கு ஸஹாபாக்களின் மீது என்ன கோபம்?
தாபியீன்கள், தபாஉத்தாபிஈன்கள் மீது என்ன வெறுப்பு?
இவர்களையெல்லாம் இந்த வசனத்தின் உண்மையாளர்கள் என்பது குறிக்காதாம்.
இவர் போற்றும் சூஃபியாக்களைத் தான் குறிக்குமாம். இந்த சூஃபியாக்களின் மாண்புகளை (?) இவர் விவரிக்கும் வாசகங்களைப் படியுங்கள் (பக்கம் 482
கண்ணியம் வாய்ந்தவரென்று  நீ கருதும் ஒரு பெரியவரைச் சந்தித்தால் அவருக்கு ஊழியம் செய்வாயாக. அவரிடம் இறந்த மனிதனைப்  போன்று ஆகிவிடு. அவர், தான் விரும்பியபடி உன்னைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். உன்னுடைய  விருப்பப்படி நீ செயல்படாதே. அவர் இடும் உத்தரவுகளை உடனே நிறைவேற்று . அவர் தடுப்பதை விட்டும் விலகிக் கொள். அவர் தொழில் செய்யும் படி கூறினால் தொழில் செய். அவர் உட்காரும்படிக் கூறினால் உட்காருவாயாக ..
இவை இவரது மணிவாசகங்கள் (?)
நமக்கென்று சுயவிருப்பம் ஏதும் கூடாதாம். தொழில் செய்யலாகாதாம். அவர் விருப்பத்திற்கு நம்மைப் பயன்படுத்துவாராம். அந்த பெரியாருக்கு இவ்வாறு பணிவதால் தான். பிணம் போல் ஆவதால் தான் இறைவனது தொடர்பை நாம் அடைய முடியுமாம். இவர் தான் ஞானியாம். பூரண குருவாம்.
ஆனால் தனக்குப் பிடித்தமில்லாதவருடன் வாழுமாறு நபியவர்கள் ஒரு பெண்ணிடம் கூறிய போது இது உங்கள் கட்டளையாஎன்று அப்பெண் மணி நபி ஸல் அவர்களிடம் வினவினார். (இல்லை அவருக்காக) நான் சிபாரிசு தான் செய்கிறேன் என்று நபி ஸல் கூறவும் அல்லாஹ்வின் தூதரே அவர் எனக்குத் தேவையில்லை என்று அப்பெண் மறுத்து விட்டார். இச்செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது. இச்செய்தி இவருக்குத் தெரியாதா?
நபி ஸல் அவர்களே ஒரு பெண்ணின் சுயவிருப்பத்திற்கு வழிவிட்டிருக்கிறார்கள். நபியவர்களின் கால்தூசிக் கூட தகுதியுற்றவர்களின் சுயவிருப்பத்திற்கு நாம் பலியாக வேண்டும் என்று கூறும் இவரது தப்லீக் எத்திவைப்பது எதனை? நபிவழியையாமனிதர்களை அடிமைப்படுத்தத் துடிக்கும் கும்பல்களின் தீயவழியையா?
இறைவனுடன் நமக்குத் தொடர்பை ஏற்படுத்தும் அதி அற்புத ஞானிகளாம் சூஃபியாக்கள்.
எந்த சூஃபியாக்கள்?
1.)மிம்பரில் ஏறி நிர்வாண கோலத்தில் சொற்பொழிவுவாற்றிய சூபிகளையா
2.பலபெரியார்கள் முன்பு காற்று விட்டுவிட்டு இன்னொரு வரைக் ட்டி இவர்தான் காற்று ட்டார் என்று பழிசொல்லி தலைகுனியச் செய்வார்களே அந்த சூபியாக்களையா
3.பெண்களையும்சிறுவர்களையும் தகாத செயல்களுக்கு அழைத்தார்களே அந்த சூபியாக்களையா
4.முக்கடவுள் நம்பிக்கையுடையோரும் சத்தியவான்களே என்று கூறிய இப்னு அரபி போன்ற சூபியாக்களையா
5.இறைவன் என்னை உருவாக்க நான் அவனை உருவாக்கினேன் என்று கூறுவார்கள் என்று கூறிய அப்துல் கரீம் அல்ஜியலீ என்பவனையா?
6.காளைக் கன்றை வணங்கிய கூட்டத்தார் அல்லாஹ்வைத் தான் வணங்கினார்கள். ஏனெனில் எல்லாம் அல்லாஹ் தான் என்று கூறிய இப்னு அரபி கும்பலையா?.
7.மகனை அறுப்பதாக கனவு கண்ட இப்ராஹீம் நபி அலை ஆட்டை அறுக்காமல் மகனையே அறுக்க ஆயத்தமானது தவறு என்று கூறிய இப்னு அரபீ என்பவனையா?
8.நாங்கள் கடலில் மூழ்கி விட்டோம் ஆனால் இறைத் தூதர்கள் கரைகளில் தான் நிற்கிறார்கள் என்று கூறினார்களே அந்த சூபிக்களையா?
யூசுப் நபி அலை அவர்களை கிணற்றில் வீசி தந்தையிடமிருந்து பிரித்த சகோதார்கள் இந்த மாபாதகச் செயல்களை இறைவனின் கட்டளைப் படி வஹீயின் அடிப்படையில் தான் செய்தனர் என்று இட்டுக்கட்டிய கேடுகெட்ட சூபிகளையா?.
10.அய்யூப் நபி அலை அகநோயில் சிக்கினார்கள். இறைத் தொடர்பிலிருந்து விலகினார்கள். இறைவனல்லாதாருடன் தொடர்பு வைத்தார்கள் என்று கூறிய  அப்துல் அஸீஸ் தப்பாக் என்ற சூஃபியையா?
சூஃபியாக்கள் என்பர் நபிமார்களேயல்லர். சஹாபாக்களுமல்லர் தாபியீன்களுமல்லர்இமாம்களுமல்லர்இறைநேசச் செல்வர்களுமல்லர் . மாறாக நபிமார்களையும் நல்லடியார்களையும் மட்டம் தட்டி கேடு கெட்டவர்களை நல்லடியார்கள் என்று காட்டியவர்கள் தான் சூபியாக்கள்.
அந்த வழிகேடர்களுடன் நாமும் இணைய வேண்டும் என்று ஜகரிய்யா சாகிப் கட்டளையிடுகிறார்.
இனியேனும் இவரது தஃலீம் நூலைப் பள்ளிகளில் படிப்பதை இந்தச் சமுதாயம் நிறுத்துமா?

POSTED BY S.SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .