Breaking News

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா
பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா?
இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளதாக மிஷ்காத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னுமாஜாவில் இடம் பெறும் ஹதீஸ் இது தான்.


حدثنا العباس بن عثمان الدمشقي حدثناالوليد بن مسلمحدثنا معان بن رفاعة السلامي حدثنيأبو خلف الأعمىقال سمعت أنس بن مالك يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي لا تجتمع على ضلالة فإذا رأيتم اختلافا فعليكم بالسواد الأعظم
என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: இப்னு மாஜா3940
(9582)ـ أَبُو خَلَف الأَعْمَى البَصْرِي، خَادمُ أَنَس، نزل المَوْصِل (ق).قيل: اسمه حازم بن عطاء.روى عن: أنس حديث: إن أمتي لا تجتمع على ضلالة الحديث.وعنه: سابق البربري، ومعان بن رفاعة السلمي، ويمان، وأبو عبد اللَّه البكاء.قال أبو حاتم: منكر الحديث،ليس بالقوي.وقال غيره: هو مروان الأصفر كذا كناه عوف الأعرابـي.وقال صاحب تاريخ الموصل: أبو خلف الأعمى كان بصرياً توطن الموصل، ومات بها. قيل: إنه رأى عثمان بن عفان.قلت: فرق مسلم وغيره بـين الترجمتين فقال أبو خلف حازم بن عطاء مروان الأصفر. وعلى هذا جرى المزي في الأطراف.ونقل ابن الجوزي عن ابن معين أنه قال في الأعمى الراوي عن أنس: كذاب. وجزم الدارقطني في الأفراد بأن اسم أبـي خلف الراوي عن أنس حازم بن عطاء، وأنه تفرد بالحديث الذي أخرجه ابن ماجة.
اسم الكتاب: تهذيب التهذيب
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூகலஃப் அல் அஃமா என்பவர் பலவீனமானவர். இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார். இவரது ஹதீஸ் நிகாகரிக்கப்படும் என்று அபூஹாத்தம் கூறுகிறார்.
எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இதே கருத்தில் திர்மிதீயிலும் ஒரு ஹதீஸ் உள்ளது. அதுவும் பலவீனமானதாகும்.
 
حدثنا أبو بكر بن نافع البصري حدثني المعتمر بن سليمان حدثناسليمان المدنيعن عبد الله بن دينار عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة ويد الله مع الجماعة ومن شذ شذ إلى النار قال أبو عيسى هذا حديث غريب من هذا الوجهوسليمان المدني هو عندي سليمان بن سفيانوقد روى عنه أبو داود الطيالسي وأبو عامر العقدي وغير واحد من أهل العلم قال أبو عيسى وتفسير الجماعة عند أهل العلم هم أهل الفقه والعلم والحديث قال و سمعت الجارود بن معاذ يقول سمعت علي بن الحسن يقول سألت عبد الله بن المبارك من الجماعة فقال أبو بكر وعمر قيل له قد مات أبو بكر وعمر قال فلان وفلان قيل له قد مات فلان وفلان فقال عبد الله بن المبارك وأبو حمزة السكري جماعة قال أبو عيسى وأبو حمزة هو محمد بن ميمون وكان شيخا صالحا وإنما قال هذا في حياته عندنا
என்னுடைய சமுதாயத்தை அல்லாஹ் வழிகேட்டில் ஒன்று சேர்த்து விட மாட்டான். அல்லாஹ்வுடைய அருள் ஜமாஅத்துடன் தான் இருக்கிறது. யார் தனித்து இருக்கிறானோ அவன் தனித்து நரகத்தில் இருப்பான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ2093
(2980)ـ سُلَيْمَانُ بنُ سفيان التَّيْمِي ، أبو سُفْيَان المَدَنِي، مولَى آلِ طَلْحَة بن عُبَـيْدِ اللِّه (ت).روى عن: بلال بن يحيـى بن طلحة بن عبـيد اللَّه، وعبد اللَّه بن دينار.وعنه: سليمان التيمي، وابنه معتمر بن سليمان، وأبو داود الطيالسي.قال الدوري عن ابن معين: روى عنه أبو عامر العقدي حديث الهلال، و ليس بثقة.وقال ابن أبـي خيثمة عن ابن معين: ليس بشيء.وقال ابن المديني :روى أحاديث منكرة.وقال أبو حاتم : ضعيف الحديث،يروي عنالثقات أحاديث مناكير.وقال أبو زرعة :منكر الحديث، روى عن عبد اللَّه بن دينار ثلاث أحاديث كلهاـ يعني مناكير ـ، قال وإذا روى المجهول المنكر عن المعروفين فهو كذا ـ كلمة ذكرها ـ.وقال الدولابـي : ليس بثقة.وذكره ابن حبان في الثقات وقال: كان يخطىء.قلت: وقال يعقوب بن شيبة:له أحاديث مناكير. وقال الترمذي في العلل المفردعن البخاري: منكر الحديث. وقالالنسائي: ليس بثقة.وقال الدارقطني: ضعيف.
اسم الكتاب: تهذيب التهذيب
இந்த ஹதீஸில் இடம் பெறும் சுலைமான் அல் மதனீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீசும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
تلخيص الحبير - ابن حجر - (ج 3 / ص 141)
وأمته معصومة لا تجتمع على الضلالة هذا في حديث مشهور له طرق كثيرة لا يخلو واحد منها من مقال منها لأبي داود عن أبي مالك الأشعري مرفوعا إن الله أجاركم من ثلاث خلال أن لا يدعو عليكم نبيكم لتهلكوا جميعا وألا يظهر أهل الباطل على أهل الحق وأن لا يجتمعوا على ضلالة وفي إسناده انقطاع وللترمذي والحاكم عن بن عمر مرفوعا لا تجتمع هذه الأمة على ضلال أبدا وفيه سليمان بن شعبان المدني وهو ضعيف
இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த ஹதீசுமே விமர்சனத்திலிருந்து தப்பவில்லைஎன்று இப்னு ஹஜர் கூறுகின்றார்கள்.
நூல்: தல்கீஸ்3/141
பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன. மேலும் இது திருக்குர்ஆன் வசனத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
அல்குர்ஆன்6:116
இந்த வசனம்,பெரும்பான்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அறிவிக்கின்றது. இதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ்கள் மேலும் பலவீனம் அடைகின்றன.
மேலும் இந்த ஹதீஸ்கள் சரியானவை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் பெரும் கூட்டம் என்பதற்கு அளவு கோல் என்ன?என்ற கேள்வி எழுகின்றது.
இன்று பெரும்பான்மையானவர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள்;சினிமா பார்க்கிறார்கள்;பல்வேறு தீமைகளைச் செய்கிறார்கள். இவர்களைப் பின்பற்ற வேண்டுமா?என்ற கேள்வி எழுகின்றது. எனவே கருத்து அடிப்படையிலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமடைகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹதீஸ்களில் மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. காரணம்,இந்த ஹதீஸ் பெரும் கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றது. மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் கூட ஒரே மத்ஹபைப் பின்பற்றுவதில்லை. நான்கு மத்ஹபுகள் என்று கூறுகின்றார்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது;ஒரே மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும். எனவே மத்ஹபுகளுக்கு இந்த ஹதீஸ் எதிரானது என்று தான் கூற வேண்டும்.

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .