ஸுனன் திர்மிதி அத்தியாயம் 01 தூய்மை
திர்மிதி - ஹதீஸ் எண்: 1
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ح وَحَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِسْرَائِيلَ عَنْ سِمَاكٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ ». قَالَ هَنَّادٌ فِى حَدِيثِهِ « إِلاَّ بِطُهُورٍ ». قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَفِى الْبَابِ عَنْ أَبِى الْمَلِيحِ عَنْ أَبِيهِ وَأَبِى هُرَيْرَةَ وَأَنَسٍ.
தூய்மையின்றி தொழுகையும், மோசடி பொருட்களில் இருந்து (செய்யப்படும்) தர்மமும் (இறைவனால்) ஏற்கப்பாடாது என நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரலி) என்ற நபித்தோழர் கூறுகிறார். ஹன்னாத் என்பவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸில் “தூய்மை மூலம் தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று உள்ளது. இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இதுமிகச் சரியானதும், அழகானதுமாகும். மேலும் அபூஹுரைரா, அனஸ், ஆமிர் என்றும், ஸைத் என்றும் கூறப்படும் அபுல் மலீஹ் ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது என அபூஈஸா (என்ற திர்மிதி) கூறுகிறேன். (குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா அஹ்மத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 2
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوِ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ أَوْ نَحْوِ هَذَا وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ حَدِيثُ مَالِكٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ. وَأَبُو صَالِحٍ وَالِدُ سُهَيْلٍ هُوَ أَبُو صَالِحٍ السَّمَّانُ وَاسْمُهُ ذَكْوَانُ. وَأَبُو هُرَيْرَةَ اخْتُلِفَ فِى اسْمِهِ فَقَالُوا عَبْدُ شَمْسٍ وَقَالُوا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو وَهَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ وَهُوَ الأَصَحُّ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَثَوْبَانَ وَالصُّنَابِحِىِّ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَسَلْمَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو. وَالصُّنَابِحِىُّ الَّذِى رَوَى عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ لَيْسَ لَهُ سَمَاعٌ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَاسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُسَيْلَةَ وَيُكْنَى أَبَا عَبْدِ اللَّهِ رَحَلَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقُبِضَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَهُوَ فِى الطَّرِيقِ وَقَدْ رَوَى عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَحَادِيثَ. وَالصُّنَابِحُ بْنُ الأَعْسَرِ الأَحْمَسِىُّ صَاحِبُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يُقَالُ لَهُ الصُّنَابِحِىُّ أَيْضًا وَإِنَّمَا حَدِيثُهُ قَالَ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنِّى مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ فَلاَ تَقْتَتِلُنَّ بَعْدِى ».
ஒரு முஸ்லிமான அடியான் ஒளூ செய்யும் போது தன்முகத்தைக் கழுவினால் தன் கண்களால் அவன் நோக்கிய (தன்மூலம் நிகழ்ந்த) அனைத்துத் தவறுகளும் தண்ணீருடன் அவன் முகத்தில் இருந்து வெளியேறிவிடுகின்றது. தன் இரு கைகளையும் கழுவும்போது அவனது இரு கைகளும் பற்றிய (தன் மூலம் நிகழ்ந்த) அனைத்துத் தவறுகளும் தண்ணீருடன் வெளியேறிவிடுகின்றது. முடிவில் பாவங்களிலிருந்து தூய்மை பெற்றவனாக அவன் புறப்படுகிறான் என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரரா(ரலி) அறிவிக்கிறார். இந்த ஹதீஸில் ‘முஸ்லிமான அடியான்’ என்ற வார்த்தையை நபி(ஸல்) பயன்படுத்தினார்களா? அல்லது ‘மூமினான அடியான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்களா? என்று அறிவிப்பாளர் ஐயம் தெரிவிக்கிறார். மேலும் ‘தண்ணீருடன் என்று கூறினார்களா? அல்லது “தண்ணீரின் இறுதித்துளியுடன்’ என்று சொன்னார்களா? அல்லது இந்தக் கருத்துள்ள வேறு வார்த்தைகளைச் சொன்னார்களா? என்றும் அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார். அந்த ஹதீஸ் ஸஹீஹ் என்ற அந்தஸ்து பெற்றதாகும். இதன் அறிவிப்பாளராகிய அபூஹுரைரா அவர்களின் இயற்பெயர் எதுவென்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் ‘அப்து ஷம்ஸ்’ என்றும் வேறு சிலர் ‘அப்துல்லாஹ் இப்னு அம்ரு’ என்றும் கூறுகின்றனர். இந்த (இரண்டாம்) கருத்தை முஹம்மது இப்னு இஸ்மாயீல் (என்ற புகாரி இமாம்) அவர்கள் கூறுகிறார்கள். இதுவே மிகச்சரியானது என்று அபூஈஸா(வாகிய நான்) கூறுகிறேன். இந்த ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து ஸுஹைல் என்பவர் கேட்டதாக உள்ளது. இதே ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து ‘ஸஹ்ல்’ என்பவரின் தந்தை செவியுற்று அவரிடமிருந்து ‘ஸஹ்ல்’ கேட்டதாகவும் (அறிவிப்புகள்) உள்ளன. இந்த ‘அபூஸாலிஹ், அஸ்ஸம்மான்’ என்பவரின் இயற்பெயர் ‘தக்வான்’ என்பதாகும். இந்த ஹதீஸை உஸ்மான் இப்னு அப்பான், ஸவ்பான், ஸுனாபிஹி அம்ரு இப்னு அபஸா, ஸல்மான், அப்துல்லாஹ் இப்னு அம்ரு ஆகிய, நபித்தோழர்களும் அறிவித்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஸுனாபிஹி என்பவர் தான் அபூபக்ரு ஸித்தீக் வழியாக அறிவிப்பவர் அப்துர்ரஹ்மான் இப்னு உஸைலா என்பது இவரது இயற்பெயர் அபூ அப்துல்லாஹ் என்றும் கூறப்படுவர். இவர் நபி(ஸல்) அவர்களைக் காண்பதற்காக வழியில் சென்று கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்து விடுகிறார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் வாயிலாக எந்த ஒன்றையும் அவர் நேரடியாகச் செவியுற்றதில்லை. எனினும் இவர் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக ஏராளமான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். தனக்கு எந்த நபித்தோழர் அறிவித்தார் என்பதைப் பெரும்பாலும் கூறமாட்டார்) ஸுனாபிஹி என்ற பெயரில் இன்னொருவரும் இருக்கிறார். ஸுனாபிஹி இப்னுல் அஃஸர் அல் அஹ்மஸீ என்பது இவரது இயற்பெயர். இவர் நபித்தோழராகத் திகழ்ந்தவர். “எனக்குப் பின்னால் நீங்கள் உங்களுக்குள் போர் புரிந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்கள் மூலம் ஏனைய சமுதாயங்களைவிட நான் அதிக எண்ணிக்கை உடையவன்” என்று பெருமை பாராட்டுவேன் என்ற ஹதீஸை நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதாக அறிவிப்பவர் இந்த (இரண்டாம்) ஸுனாபிஹி என்பவர் தான் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : மேற்கூரிய ஹதீஸ் முஸ்லிம், முஅத்தாவிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 3
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِىٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ هُوَ صَدُوقٌ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ كَانَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَالْحُمَيْدِىُّ يَحْتَجُّونَ بِحَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ. قَالَ مُحَمَّدٌ وَهُوَ مُقَارِبُ الْحَدِيثِ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِى سَعِيدٍ.
தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்கும் (ஆரம்பம்) தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும் என நபி(ஸல்) கூறினார்கள் என்று அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகச் சரியானதும் அழகியதுமாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ‘அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அகீல்’ என்பவர் ‘உண்மையாளர்’ எனினும் இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்களில் சிலர் இவரைக் குறை கூறியுள்ளனர். இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம், ஹுமைதீ ஆகியோர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அகீல் என்பவரின் ஹதீஸை ஆதாரமாக ஏற்றுள்ளனர். இவர் ஹதீஸ் துறையில் நடுத்தரமானவர்’ என்று முஹம்மது இப்னு இஸ்மாயில் (என்ற புகாரி இமாம்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். இந்த ஹதீஸை ஜாபிர், அபூஸயீத் ஆகிய நபித்தோழர்களும் அறிவித்துள்ளனர் என அபூ ஈஸாவாகிய (நான்) கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அபூதாவூத், அஹ்மத், இப்னு மாஜா, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 4
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِىُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنْ أَبِى يَحْيَى الْقَتَّاتِ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الْوُضُوءُ ».
தொழுகையின் திறவுகோல் ‘ஒளூ’வாகும் என நபி(ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். (குறிப்பு : இந்த ஹதீஸ் பற்றி இமாம் திர்மிதி அவர்கள் விமர்சனம் எதுவும் செய்யவில்லை. அஹ்மத், தப்ரானி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ‘அபூ எஹ்யா அல்கத்தாத்’ என்ற நம்பகமில்லாத ஒருவர் இடம்பெறுகிறார். இதனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 5
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ قَالَ شُعْبَةُ وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَزَيْدِ بْنِ أَرْقَمَ وَجَابِرٍ وَابْنِ مَسْعُودٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَحَدِيثُ زَيْدِ بْنِ أَرْقَمَ فِى إِسْنَادِهِ اضْطِرَابٌ رَوَى هِشَامٌ الدَّسْتَوَائِىُّ وَسَعِيدُ بْنُ أَبِى عَرُوبَةَ عَنْ قَتَادَةَ فَقَالَ سَعِيدٌ عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفٍ الشَّيْبَانِىِّ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَقَالَ هِشَامٌ الدَّسْتَوَائِىُّ عَنْ قَتَادَةَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَرَوَاهُ شُعْبَةُ وَمَعْمَرٌ عَنْ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ فَقَالَ شُعْبَةُ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَقَالَ مَعْمَرٌ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَقَالَ يُحْتَمَلُ أَنْ يَكُونَ قَتَادَةُ رَوَى عَنْهُمَا جَمِيعًا.
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது “அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க” (இறைவா! உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.) என்று கூறுவார்கள் என மாலிக்(ரலி) அறிவிக்கிறார். சில வேளை “அவூது பிக் மினல் குபுஸி வல்கபாயிஸி” (ஆன், பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என நபி(ஸல்)கூறுவார்கள் என ‘ஷுஃபா’ அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அலீ(ரலி), ஸைத் இப்னு அர்கம் ஜாபிர் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். (அடுத்து வருகின்ற) அனஸ்(ரலி) மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ்தான் இந்த ஹதீஸில் மிகவும் ஆதாரப்பூர்வமானதும் அழகியதுமாகும் என அபூஈஸா கூறுகிறேன். ஸைது இப்னு அர்கம்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குழப்பம் தெரிகின்றது. (எவ்வாறெனில்) அந்த ஹதீஸை (ஸைத் இப்னு அர்கம் வழியாக) ‘ஹிஷாம் அத்தஸ் தவாயி’ என்பவரும். ‘ஸயீத் இப்னு அபீ அரூபா’ என்பவரும் அறிவிக்கின்றனர். ஸைது இப்னு அர்கம்(ரலி) அவர்களிடம் ‘காஸிம் இப்னு அவ்பு’ என்பவர் செவுயுற்று அவரிடமிருந்து ‘கதாதா’ என்பவர் கேட்டுத் தமக்குத் தெரிவித்ததாக ஸயீத் (இப்னு அபீ அருபா) கூறுகிறார். ஆனால் ஸைத் இப்னு அர்கம்(ரலி)யிடமிருந்து ‘கதாதா’ நேரடியாக செவியுற்றுத் தமக்குக் கூறியதாக ‘ஹிஷாம் கூறுகிறார்க். (அதாவது) ஹிஷாம் என்பவர் கூற்றுப்படி ‘கதாதா’ நேரடியாக ‘ஸைத்’ இப்னு அர்கமிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. ‘ஸயீத்’ என்பவர் கூற்றுப்படி ‘கதாதா’ நேரடியாக கேட்காமல் இன்னொரு வழியாக அறிவிப்பதாக உள்ளது.) மேலும் ‘ஷுஃபா’ என்பவரும் ’மஃமர்’ என்பவரும் இதை அறிவிக்கின்றனர். ஸைது இப்னு அர்கம்(ரலி) வழியாக ‘கதாதா’ அறிந்து தமக்கு கூறியதாக ‘ஷுஃபா’ குறிப்பிடுகிறார்கள். ‘நள்ரு இப்னு அனஸ்’ தன் தந்தை வழியாக கேட்டு அவரிடம் ‘கதாதா’ என்பவர் செவியுற்று தமக்கு கூறியதாக ‘மஃமர்’ குறிப்பிடுகிறார். இந்தக் குழப்பம் பற்றி இமாம் புகாரி அவர்களிடம் நான் கேட்டபோது “இருவரிடமிருந்து ‘கதாதா’ செவியுற்று அறிவித்திருக்க சாத்தியம் உள்ளது” என்று அவர்கள் விளக்கம் கூறினார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 6
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّىُّ الْبَصْرِىُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ « اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது “அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மினல் குபுஸி வல்கபாயிஸீ” என கூறுபவர்களாக இருந்தனர் என அன்ஸ் இப்னு மாலிக் (ரலி) குறிப்பிடுகிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற அந்தஸ்து பெற்ற ஹதீஸ் ஆகும் என அபூஈஸாவாகிய நான் குறிப்பிடுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரீ, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூத், நஸாயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 7
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ إِسْرَائِيلَ بْنِ يُونُسَ عَنْ يُوسُفَ بْنِ أَبِى بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مِنَ الْخَلاَءِ قَالَ « غُفْرَانَكَ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ عَنْ يُوسُفَ بْنِ أَبِى بُرْدَةَ. وَأَبُو بُرْدَةَ بْنُ أَبِى مُوسَى اسْمُهُ عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الأَشْعَرِىُّ. وَلاَ نَعْرِفُ فِى هَذَا الْبَابِ إِلاَّ حَدِيثَ عَائِشَةَ رضى الله عنها عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-.
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிப்படும்போது “குஃப்ரானக” (இறைவா! உனது மன்னிப்பை தேடுகிறேன்) என்று கூறுவார்கள் என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ’கரீப்’ எனும் வகையைச் சேர்ந்ததாகும். ’இஸ்ராயீல்’ என்பவர் ’யூஸுஃப்’ வழியாகவும், அவர் தனது தந்தை ’அபூபுர்தா’ வழியாகவும் அறிவித்துள்ள (மேற்கூறிய) ஆயிஷா(ரலி)யின் ஹதீஸை வேறு எவரும் அறிவித்ததாக நாம் அறியவில்லை என்று அபூஈஸாவாகிய நான் கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மது, அபூதாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு அறிவிப்பாளர் மூலம் மட்டும் அறிவிக்கப்படும் ஹதீஸ்களை இமாம் திர்மிதி அவர்கள் ‘கரீப்’ என்று குறிப்பிடுவார்கள்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 8
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِىُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِىِّ عَنْ أَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلاَ بَوْلٍ وَلاَ تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا ». فَقَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ مُسْتَقْبَلَ الْقِبْلَةِ فَنَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِىِّ وَمَعْقِلِ بْنِ أَبِى الْهَيْثَمِ وَيُقَالُ مَعْقِلُ بْنُ أَبِى مَعْقِلٍ وَأَبِى أُمَامَةَ وَأَبِى هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى أَيُّوبَ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَصَحُّ. وَأَبُو أَيُّوبَ اسْمُهُ خَالِدُ بْنُ زَيْدٍ. وَالزُّهْرِىُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ شِهَابٍ الزُّهْرِىُّ وَكُنْيَتُهُ أَبُو بَكْرٍ. قَالَ أَبُو الْوَلِيدِ الْمَكِّىُّ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِىُّ إِنَّمَا مَعْنَى قَوْلِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- « لاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلاَ بِبَوْلٍ وَلاَ تَسْتَدْبِرُوهَا ». إِنَّمَا هَذَا فِى الْفَيَافِى وَأَمَّا فِى الْكُنُفِ الْمَبْنِيَّةِ لَهُ رُخْصَةٌ فِى أَنْ يَسْتَقْبِلَهَا. وَهَكَذَا قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ. وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ رَحِمَهُ اللَّهُ إِنَّمَا الرُّخْصَةُ مِنَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى اسْتِدْبَارِ الْقِبْلَةِ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَمَّا اسْتِقْبَالُ الْقِبْلَةِ فَلاَ يَسْتَقْبِلُهَا. كَأَنَّهُ لَمْ يَرَ فِى الصَّحْرَاءِ وَلاَ فِى الْكُنُفِ أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ.
நீங்கள் கழிப்பிடம் சென்றால் மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கக் கூடாது. பின்னோக்கவும் கூடாது. மாறாக கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ அமர்ந்து கொள்ளுங்கள்! என நபி(ஸல்) கூறி இருந்தார்கள். நாங்கள் ‘சிரியா’ நாட்டுக்கு வந்தபோது கிப்லாவை நோக்கிக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை கண்டோம். எனவே நாங்கள் ‘கிப்லா’வை விட்டும் திரும்பிக்கொள்ளலானோம். அல்லாஹ்விடம் மன்னிப்பும் தேடிக் கொள்வோம் என அபூஅய்யூப் அல்அன்ஸாரி(ரலி) என்ற நபித்தோழர் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸை ‘அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் இப்னு ஜஸ்வு அஸ்ஸுபைத்(ரலி) மஃகல் இப்னு மஃகல் என்று கூறப்படும் மஃகல் இப்னு அபில்ஹைஸம்(ரலி) அபூ உமாமா(ரலி), அபூஹுரைரா(ரலி) ஸஹல் இப்னு ஹுனைப்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். (ஆனாலும் மேற்கூறிய) அபூஅய்யூப்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் தான் மிகவும் ஆதாரப்பூர்வமானதும், அழியதுமாகும். மேற்கூறிய ‘அபூஅய்யூப்’ அவர்களின் இயற்பெயர் ‘காலித் இப்னு ஸைத்’ என்பதாகும். நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது! பின்னோக்கவும் கூடாது என்று கூறியதன் பொருள், திறந்தவெளியில் அவ்வாறு செய்யலாகாது என்பதே; கட்டப்பட்ட கழிவறைகளில் கிப்லாவை முன்னோக்க அனுமதியுண்டு என்று இமாம் ஷாபி அவர்கள் தெரிவிக்கிறார்கள் என அபுல்வலீத் அல்மக்கீ கூறுகிறார். இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் என்ற அறிஞரும் இதே கருத்தையே கூறியுள்ளார்கள் என அபூஈஸாவாகிய நான் கூறுகிறேன். (கட்டிங்களில் அவ்வாறு செய்யலாம் என்று வந்துள்ள) அனுமதி மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை பின்னோக்கலாம் என்பதற்கு மட்டும்தான். கட்டிடமாக இருந்தாலும் கிப்லாவை முன்னோக்குவது கூடாது தான் என (இமாம்) அஹ்மது இப்னு ஹன்பல் கூறுகிறார்கள். திறந்தவெளியிலோ, கழிப்பறைகளிலோ கிப்லாவை முன்னோக்குவதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர் கருதவில்லை போலும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : மேற்கூறிய ஹதீஸை புகாரி, முஸ்லிம், அஹ்மது ஆகியோரும் பதிவு செய்துள்ளனர். கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ மலஜலம் கழிக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது மதீனாவை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். நமது நாட்டைப் பொறுத்தவரை ஏறத்தாழ மேற்குத் திசையில் கிப்லாவுள்ளதால் கிழக்கு மேற்காக அமராமல் வடக்குத் தெற்காக அமர வேண்டும்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 9
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ نَهَى النَّبِىُّ -صلى الله عليه وسلم- أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا. وَفِى الْبَابِ عَنْ أَبِى قَتَادَةَ وَعَائِشَةَ وَعَمَّارِ بْنِ يَاسِرٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ فِى هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
சிறுநீர் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க நபி(ஸல்) அவர்கள் தடுத்திருந்தார்கள். (எனினும்) அவர்கள் மரணமடைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் கிப்லாவை முன்னோக்கி (சிறுநீர் கழிக்க) நான் பார்த்திருக்கிறேன் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கிறார். அபூகதாதா(ரலி) ஆயிஷா(ரலி) அம்மார் இப்னு யாஸிர்(ரலி) ஆகியோரும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர். (மேற்கூறிய) ஜாபிர் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ‘ஹஸன், கரீப்’ எனும் வகையைச் சேர்ந்தாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மது, இப்னு குஸைமா இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 10
وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ ابْنُ لَهِيعَةَ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ أَبِى قَتَادَةَ أَنَّهُ رَأَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ. حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ. وَحَدِيثُ جَابِرٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ. وَابْنُ لَهِيعَةَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ مِنْ قِبَلِ حِفْظِهِ.
நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி சிறுநீர் கழிப்பதைத் தான் கண்டதாக அபூகதாதா என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்கள். ‘இப்னு லஹ்யஆ’ என்பவர் தனக்கு இதைக்கூறியதாக ‘குதைபா’ அவர்கள் நம்மிடம் கூறினார்கள். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் மூலம் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ‘இப்னுலஹ்யஆ’ இடம் பெறும் இந்த ஹதீஸை விட மிகவும் ஆதாரப்பூர்வமானது. (ஏனெனில்) ’இப்னுலஹ்யஆ’ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் பலவீனமானவர். எஹ்யா இப்னுஸயீத் அல்கத்தான் அவர்களும், மற்றும் பலரும் இவரது நினைவாற்றல்’ அடிப்படையில் இவரை பலவீனமானவர் என்று முடிவு செய்துள்ளனர். (இமாம் திர்மிதீ அவர்கள் குறிப்பிடும் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 9வது ஹதீஸ் ஆகும்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 11
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ رَقِيتُ يَوْمًا عَلَى بَيْتِ حَفْصَةَ فَرَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- عَلَى حَاجَتِهِ مُسْتَقْبِلَ الشَّأْمِ مُسْتَدْبِرَ الْكَعْبَةِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
ஒருநாள் நான் (என் சகோதரி) ‘ஹப்ஸா’வுடைய வீட்டின் மேல் ஏறினேன். நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி (ஷாம்) சிரியாவைப் பின்னோக்கி தன் (மலஜலம் கழிக்கும்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற அந்தஸ்துள்ள (ஆதாரப்பூர்வமான) ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 12
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَبُولُ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ قَاعِدًا. قَالَ وَفِى الْبَابِ عَنْ عُمَرَ وَبُرَيْدَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَنَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَصَحُّ. وَحَدِيثُ عُمَرَ إِنَّمَا رُوِىَ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِى الْمُخَارِقِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ قَالَ رَآنِى النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَأَنَا أَبُولُ قَائِمًا فَقَالَ « يَا عُمَرُ لاَ تَبُلْ قَائِمًا ». فَمَا بُلْتُ قَائِمًا بَعْدُ. قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا رَفَعَ هَذَا الْحَدِيثَ عَبْدُ الْكَرِيمِ بْنُ أَبِى الْمُخَارِقِ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ أَيُّوبُ السَّخْتِيَانِىُّ وَتَكَلَّمَ فِيهِ. وَرَوَى عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ رضى الله عنه مَا بُلْتُ قَائِمًا مُنْذُ أَسْلَمْتُ. وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ وَحَدِيثُ بُرَيْدَةَ فِى هَذَا غَيْرُ مَحْفُوظٍ. وَمَعْنَى النَّهْىِ عَنِ الْبَوْلِ قَائِمًا عَلَى التَّأْدِيبِ لاَ عَلَى التَّحْرِيمِ. وَقَدْ رُوِىَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ تَبُولَ وَأَنْتَ قَائِمٌ.
“நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்! அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறுநீர் கழித்ததில்லை” என்று அன்னை ஆயிஷா(ரலி) கூறினார்கள். உமர்(ரலி), புரைதா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸனா(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து வந்துள்ளது. எனினும் ஆயிஷா(ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் தான் அவற்றில் மிகவும் ஆதாரப்பூர்வமானதாகவும், (மற்ற ஹதீஸ்களால் பலப்படுத்தப்பட்ட) மிக அழகியதாகவும் உள்ளது! என்று அபூஈஸா கூறுகிறேன். உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எதுவெனில் “நான் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ‘உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பின் நான் நின்று சிறுநீர்கழித்ததே இல்லை” என்று உமர்(ரலி) கூறியதாக அவர்களின் மகன் இப்னு உமரும், அவர் கூறியதாக நாபிவு, அவர்களும் அவர் கூறியதாக, அப்துல் கரீம் இப்னு அபி மகாரிக் என்பவர் அறிவிப்பதே அந்த ஹதீஸாகும். இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களுடன் சம்மந்தப்படுத்தி அப்துல் கரீம் இப்னு அபில் மகாரிக் என்பவர் மட்டுமே குறிப்பிடுகிறார். ஹதீஸ் கலை மேதைகளிடம் இவர் பலவீனமானவராவார். இவரை அய்யூப் அஸ்ஸக்தியானி அவர்கள் ‘பலவீனமானவர்’ என்று கூறி அவரை குறை கூறியும் உள்ளனர். (மேலும் இந்த ஹதீஸை மறுக்கும் விதமாக) “நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து நின்று கொண்டு சிறுநீர் கழித்ததில்லை” என்று உமர்(ரலி) அவர்கள் கூறியதாக ‘நாபிவு’ அவர்களும் அவர் கூறியதாக உபைதுல்லாஹ் என்பவரும் அறிவித்துள்ளனர். (மேற்கூரிய) அப்துல் கரீம் என்பவரின் ஹதீஸைவிட இந்த ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது. இந்தக் கருத்தில் புரைதா(ரலி) அவர்கள் (மூலம் அறிவிக்கப்படும்) ஹதீஸ் ஒப்புக் கொள்ளப்பட்டதால், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை தடை செய்திருப்பதன் பொருள் ‘ஹராம்’ என்ற அடிப்படையிலானது அல்ல. ஒழுக்கப் பண்பாட்டின் அடிப்படையில் உள்ளதாகும். ‘நீ நின்று கொண்டே சிறுநீர் கழிப்பது ஒழுக்கம்கெட்ட செயலாகும்’ என்று இப்னுமஸ்வூது(ரலி) கூறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் 12வது ஹதீஸ், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 13
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ عَلَيْهَا قَائِمًا فَأَتَيْتُهُ بِوَضُوءٍ فَذَهَبْتُ لأَتَأَخَّرَ عَنْهُ فَدَعَانِى حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبَيْهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنِ الأَعْمَشِ. ثُمَّ قَالَ وَكِيعٌ هَذَا أَصَحُّ حَدِيثٍ رُوِىَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى الْمَسْحِ. وَسَمِعْتُ أَبَا عَمَّارٍ الْحُسَيْنَ بْنَ حُرَيْثٍ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا فَذَكَرَ نَحْوَهُ. قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى مَنْصُورٌ وَعُبَيْدَةُ الضَّبِّىُّ عَنْ أَبِى وَائِلٍ عَنْ حُذَيْفَةَ مِثْلَ رِوَايَةِ الأَعْمَشِ. وَرَوَى حَمَّادُ بْنُ أَبِى سُلَيْمَانَ وَعَاصِمُ بْنُ بَهْدَلَةَ عَنْ أَبِى وَائِلٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَحَدِيثُ أَبِى وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَصَحُّ. وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِى الْبَوْلِ قَائِمًا. قَالَ أَبُو عِيسَى وَعَبِيدَةُ بْنُ عَمْرٍو السَّلْمَانِىُّ رَوَى عَنْهُ إِبْرَاهِيمُ النَّخَعِىُّ. وَعَبِيدَةُ مِنْ كِبَارِ التَّابِعِينَ يُرْوَى عَنْ عَبِيدَةَ أَنَّهُ قَالَ أَسْلَمْتُ قَبْلَ وَفَاةِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- بِسَنَتَيْنِ. وَعُبَيْدَةُ الضَّبِّىُّ صَاحِبُ إِبْرَاهِيمَ هُوَ عُبَيْدَةُ بْنُ مُعَتِّبٍ الضَّبِّىُّ وَيُكْنَى أَبَا عَبْدِ الْكَرِيمِ.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தினரின் குப்பை மேட்டுக்கு வந்தார்கள்! அதன் மேல் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ஒளூ செய்வதற்கான தண்ணீரை நான் அவர்களிடம் கொண்டு வந்தேன். நான் (சிறுநீர் கழிப்பதைக் கண்டதும்) அவர்களை விட்டும் பின்வாங்கலானேன். அப்போது அவர்களின் குதிகாலுக்கு அருகே நான் நிற்பதற்காக என்னை அழைத்தார்கள். பின்னர் ஒளூ செய்தார்கள். (கால்களைக் கழுவதற்குப் பதில்) தங்களின் இரண்டு காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள் “என்று ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள். ‘வகீஃ’ அவர்கள் இந்த செய்தியை ‘அஃமஷ்’ வழியாக அறிவித்துவிட்டு “காலுறைகள் மேல் மஸஹ் செய்வது பற்றி’ நபி(ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் இது தான் மிகவும் ஆதாரப்பூர்வமானதாகும் என்று அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று ‘ஜாரூத் அவர்கள் சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூஈஸா கூறுகிறேன். இதே செய்தியை, ‘வகீஃ அவர்கள் கூறியதாக அபூஅம்மார் ஹுஸைன் இப்னுல் ஹர்ஸ்’ அவர்கள் கூறவும் நான் செவியுற்றிருக்கிறேன். ஹுதைபா(ரலி) வாயிலாக அபூவாயில் அவர்களும், அவர்கள் வழியாக உபைதுள்ளபீ அவர்களும், மன்ஸுர் அவர்களும், அஃமஷ் அவர்கள் அறிவித்தது போல் அறிவித்துள்ளனர். நபி(ஸல்) அவர்கள் வழியாக முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அவர்களும், அவர்கள் வழியாக ‘அபூவாயில்’ அவர்களும், அவர்கள் வழியாக ஹம்மாத் இப்னு ஸுலைமானும், ஆஸிம் இப்னு பஹ்தலா அவர்களும் அறிவித்துள்ளனர். நபி(ஸல்) அவர்கள் வழியாக ஹுதைபா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் தான் மிகவும் ஆதாரப்பூர்வமானதாகும். அறிஞர்களில் ஒரு கூட்டத்தினர் (இந்த ஹதீஸின் அடிப்படையில்) நின்று கொண்டு சிறுநீர் கழிக்க அனுமத்தித்துள்ளனர்; என்றும் அபூஈஸா கூறுகிறேன். உபைதா இப்னு அம்ருஸ்ஸல்மானி வழியாக இப்ராஹீம் நகயீ அவர்கள் அறிவித்துள்ளனர். உபைதா அவர்கல் முதிய தாபியீன்களில் ஒருவராவார். நபி(ஸல்) அவர்கள் மரணமடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டேன் என்று உபைதா கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உபைததுள்ளபீ என்பவர் இப்ராஹீம் (நகயீ) அவர்களின் மாணவராவார். (இந்த உபைதா) முஅத்திப் என்பவரின் மகனான அபூ அப்துல் கரீம் என்று குறிப்பிடப்படுபவராவார் என்று அபூஈஸா கூறுகிறேன். (அதாவது மேற்கூறிய ஹதீஸில் இடம்பெறும் உபைதா என்பவர் தாபியீன்களில் ஒருவரான இப்ராஹிம் நகயீ அவர்களின் ஆசிரியான உபைதா அல்ல. மாறாக இப்ராஹீம் நகயீ அவர்களின் மாணவரான உபைதா தான்; என்று இமாம் திர்மிதி அவக்ரல் குறிப்பிடுகிறார்கள். (குறிப்பு : மேற்கூரிய 13வது ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 14
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ الْمُلاَئِىُّ عَنِ الأَعْمَشِ عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الأَرْضِ. قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَنَسٍ هَذَا الْحَدِيثَ. وَرَوَى وَكِيعٌ وَأَبُو يَحْيَى الْحِمَّانِىُّ عَنِ الأَعْمَشِ قَالَ قَالَ ابْنُ عُمَرَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الأَرْضِ. وَكِلاَ الْحَدِيثَيْنِ مُرْسَلٌ. وَيُقَالُ لَمْ يَسْمَعِ الأَعْمَشُ مِنْ أَنَسٍ وَلاَ مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَقَدْ نَظَرَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ رَأَيْتُهُ يُصَلِّى. فَذَكَرَ عَنْهُ حِكَايَةً فِى الصَّلاَةِ. وَالأَعْمَشُ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ مِهْرَانَ أَبُو مُحَمَّدٍ الْكَاهِلِىُّ وَهُوَ مَوْلًى لَهُمْ. قَالَ الأَعْمَشُ كَانَ أَبِى حَمِيلاً فَوَرَّثَهُ مَسْرُوقٌ.
நபி(ஸல்) அவர்கள் (மலஜலம் கழிக்கும்) தேவையை நாடும்போது பூமிக்கு (உட்கார) நெருங்கும் வரை தங்களின் ஆடையை உயர்த்தாதவர்களாக இருந்தனர்; என்று அனஸ்(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதே ஹதீஸை அனஸ் வழியாக அஃமஷ், அஃமஷ் வழியாக முஹம்மத் இப்னு ரபீஆவும் அறிவித்துள்ளனர். ‘நபி(ஸல்) அவர்கள் (மலஜலம் கழிக்கும்) தேவையை நாடும்போது பூமிக்கு நெருக்கமாகும் வரை தங்களின் ஆடையை உயர்த்த மாட்டார்கள் என்று இப்னு உமர்(ரலி) கூறுவதாக அஃமஷ் அவர்களும், அஃமஷ் வழியாக அபூ எஹ்யல் ஹுமானி, ‘வகீஃ’ ஆகியோரும் அறிவித்துள்ளனர். இவ்விரு ஹதீஸ்களும் ‘முர்ஸல்’ எனும் வகையின் பாற்பட்டதாகும். (அதாவது அனஸ்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகிய இருவர் மூலமாகவும் அறிவிப்பவர் அவ்விருவர் வாயிலாக நேரடியாக அறிவித்திருக்க முடியாது. இடையில் யாரோ விடுபட்டிருக்கின்றனர் என்பது இதன் கருத்து) அஃமஷ் அவர்கள் அனஸ்(ரலி)யிடமிருந்தோ, நபித்தோழர்களில் வேறு எவரிடமிருந்தோ எதனையும் செவுயுற்றதில்லை என்று கூறப்படுகிறது. எனினும் நிச்சயமாக அஃமஷ் அவர்கள் அனஸ்(ரலி) அவர்களைப் பார்த்திருக்கிறார். “நான் அனஸ்(ரலி) அவர்களைத் தொழும்போது பார்த்திருக்கிறேன்; என்று கூறி அவரது தொழுகைப்பற்றி வர்ணித்துள்ளார். அஃமஷ் அவர்களின் இயற்பெயர் ஸுலைமான் என்பதாகும். அவரது தந்தை ‘மஹ்ரான்’ என்பவர் அஃமஷ் அவர்கள் அபூமுஹம்மது என்றும் குறிப்பிடப்படுவார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 15
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِى عُمَرَ الْمَكِّىُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مَعْمَرٍ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى قَتَادَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- نَهَى أَنْ يَمَسَّ الرَّجُلُ ذَكَرَهُ بِيَمِينِهِ. وَفِى هَذَا الْبَابِ عَنْ عَائِشَةَ وَسَلْمَانَ وَأَبِى هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَأَبُو قَتَادَةَ الأَنْصَارِىُّ اسْمُهُ الْحَارِثُ بْنُ رِبْعِىٍّ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا الاِسْتِنْجَاءَ بِالْيَمِينِ.
‘ஒரு மனிதன் தன்னுடைய வலக்கரத்தால் தனது மர்ம உறுப்பைத் தொடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூகதாதா(ரலி) அவர்கள் தெரித்திக்கிறார்கள். இதே கருத்து ஆயிஷா(ரலி), ஸல்மான்(ரலி), அபூஹுரைரை(ரலி), ஸஹ்ல் இப்னு ஹுனைப்(ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த ஹதீஸ் ஸஹீஹ், என்ற தரத்திலுள்ளதாகும். அபூகதாதா(ரலி) அவர்கள் (மதீனாவைச் சேர்ந்த) அன்ஸாரிகளில் ஒருவராவார். இயற்பெயர் ‘அல் ஹாரிஸ்’ தந்தை பெயர் ‘ரிப்யீ’. பெரும்பாலான அறிஞர்கள் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கிறார்கள். வலது கையால் சுத்தம் செய்வதை அவர்கள் வெறுத்துள்ளனர், என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 16
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ قِيلَ لِسَلْمَانَ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ -صلى الله عليه وسلم- كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةَ فَقَالَ سَلْمَانُ أَجَلْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ وَأَنْ نَسْتَنْجِىَ بِالْيَمِينِ أَوْ أَنْ يَسْتَنْجِىَ أَحَدُنَا بِأَقَلَّ مِنْ ثَلاَثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِىَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَخَلاَّدِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ سَلْمَانَ فِى هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ رَأَوْا أَنَّ الاِسْتِنْجَاءَ بِالْحِجَارَةِ يُجْزِئُ وَإِنْ لَمْ يَسْتَنْجِ بِالْمَاءِ إِذَا أَنْقَى أَثَرَ الْغَائِطِ وَالْبَوْلِ وَبِهِ يَقُولُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
”மலம் (கழிப்பது) உட்பட அனைத்தையும் உங்கள் நபி கற்றுத் தருகிறாரே!” என்று ஸல்மான்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. “ஆம்! மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை நாங்கள் முன்னோக்குவதையும் வலக்கரத்தால் தூய்மை செய்வதையும் மூன்று கற்களுக்கும் குறைந்த வளவுகொண்டு நாங்கள் தூய்மை செய்வதையும், விட்டை எலும்பு ஆகியவற்றால் சுத்தம் செய்வதையும், நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடைசெய்தார்கள்” என ஸல்மான்(ரலி) பதில் கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா(ரலி), குஸைமா இப்னு ஸாபித்(ரலி), ஜாபிர்(ரலி), ஸாயிப்(ரலி) வாயிலாக அவரது மகன் கல்லாத், ஆகியோர் மூலமாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது. ஸல்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்ற (மேற்கூறிய) ஹதீஸ் ‘ஹஸன்’ ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும். நபித்தோழர்களிலும், அவர்களுக்கு பின் வந்தவர்களிலும் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தும் இதுதான். கற்களால் சுத்தம் செய்வதன் மூலம் மலஜலத்தின் சுவடுகள் நீங்கி விட்டால் தண்ணீரைக்கொண்டு சுத்தம் செய்யாவிட்டாலும் போதுமானதாகும் என அவர்கள் கருதுகின்றனர். ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபியீ, அஹ்மது, இஸ்ஹாக் ஆகிய அறிஞர்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றனர்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 17
حَدَّثَنَا هَنَّادٌ وَقُتَيْبَةُ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ خَرَجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- لِحَاجَتِهِ فَقَالَ « الْتَمِسْ لِى ثَلاَثَةَ أَحْجَارٍ ». قَالَ فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وَقَالَ « إِنَّهَا رِكْسٌ ». قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى قَيْسُ بْنُ الرَّبِيعِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ إِسْرَائِيلَ. وَرَوَى مَعْمَرٌ وَعَمَّارُ بْنُ رُزَيْقٍ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ. وَرَوَى زُهَيْرٌ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ عَنْ أَبِيهِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ. وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِى زَائِدَةَ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ. وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَأَلْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ هَلْ تَذْكُرُ مِنْ عَبْدِ اللَّهِ شَيْئًا قَالَ لاَ.
நபி(ஸல்) அவர்கல் தன் தேவையை நிறைவேற்றப் புறப்பட்டனர். ‘மூன்று கற்களை எனக்காகத் தேடி எடுத்துவா’ என்று (என்னிடம்) கூறினார்கள். இரண்டு கற்களையும், ஒரு விட்டையையும், அவர்களிடம் கொண்டு வந்தேன். இரண்டு கற்களை (மட்டும்) எடுத்துக்கொண்டு விட்டையை எறிந்து விட்டார்கள். மேலும் இந்த விட்டை ‘ரிக்ஸ்’ என்றும் குறிப்பிட்டார்கள்; என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கிறனர். (குறிப்பு : நாம் நமது மொழிபெயர்ப்பின்போது எல்லா அறிவிப்பாளர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதில்லை. முதல் அறிவிப்பாளராகிய நபித்தோழரை மட்டுமே குறிப்பிட்டு வருகிறோம். ஒவ்வொரு ஹதீஸ்லிலும் நபித்தோழரில் துவங்கி இமாம் திமிதி அவர்கள் எத்தனை அறிவிப்பாளர்கள் இடம் பெறுகிறார்களோ அத்தனை பேரையும் இமாம் திர்மிதி அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள். மற்ற ஹதீஸ் நூல்களிலும் இவ்வாறே எல்லா அறிவிப்பாளரின் பெயர்களும் குறிப்பிடப்படும். இந்த 17வது ஹதீஸில் இடம்பெறும் எல்லா அறிவிப்பாளர்கள் பற்றியும் இமாம் திர்மிதி அவர்கள் சுமார் ஒரு பக்கத்திற்கு விமர்சனம் செய்கிறார்கள். அறிவிப்பாளர்களின் பெயர்களை நாம் குறிப்பிடாதபோது அந்த விமர்சனத்தால் பயனில்லை என்று கருதி அதை நாம் மொழியாக்கம் செய்யவில்லை.) அடுத்து இந்த ஹதீஸ்லி ‘ரிக்ஸ்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. ஏற்கன்வே நஸயியில் இடம்பெற்ற இதே வார்த்தைக்கு ‘ஜின்களின் உணவு’ என்று இமாம் நஸயீ அவர்கள் விளக்கம் கூறியதையும் கண்டோம். ‘ரிக்ஸ்’ என்ற வார்த்தைக்கு ‘ஜின்களின் உணவு’ என நஸயீ அவர்களைத் தவிர வேறு எவரும் பொருள் கூறவில்லை. அகராதி நூல்களிலும் அவ்வாறு விளங்க இடமில்லை ‘ரிக்ஸ்’ என்றால் ‘அசுத்தம்’ என்றே அகராதி நூல்களும் ஏனைய அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் ‘ரிஜிஸ்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அதற்கு அசுத்தம் என்பதே பொருள், நஸயீ இமாம் செய்த பொருள் சரியானதல்ல என்பதை நினைவில் கொள்க! (குறிப்பு : புகாரி, அஹ்மது, நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 18
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ الشَّعْبِىِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَسْتَنْجُوا بِالرَّوْثِ وَلاَ بِالْعِظَامِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ ». وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَسَلْمَانَ وَجَابِرٍ وَابْنِ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ وَغَيْرُهُ عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ الشَّعْبِىِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ كَانَ مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- لَيْلَةَ الْجِنِّ - الْحَدِيثَ بِطُولِهِ - فَقَالَ الشَّعْبِىُّ إِنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَسْتَنْجُوا بِالرَّوْثِ وَلاَ بِالْعِظَامِ فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ ». وَكَأَنَّ رِوَايَةَ إِسْمَاعِيلَ أَصَحُّ مِنْ رِوَايَةِ حَفْصِ بْنِ غِيَاثٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ. وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ رضى الله عنهما.
விட்டை எலும்புகளால் சுத்தம் செய்யாதீர்கள்! ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கின்றனர். இந்தக் கருத்தை அபூஹுரைரா(ரலி), ஸல்மான்(ரலி), ஜாபிர்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். ஜின்கள் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்த இரவில் தானும் உடனிருந்ததாகக் கூறும் நீண்ட ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் மேற்கூறிய வாசகத்தை கூறியதாகவும் இப்னு மஸ்வூது(ரலி) அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே அறிஞர்கள் செயல்பட்டுள்ளனர் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 19
حَدَّثَنَا قُتَيْبَةُ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِى الشَّوَارِبِ الْبَصْرِىُّ قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ مُعَاذَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالْمَاءِ فَإِنِّى أَسْتَحْيِيهِمْ فَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ يَفْعَلُهُ ». وَفِى الْبَابِ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِىِّ وَأَنَسٍ وَأَبِى هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الاِسْتِنْجَاءَ بِالْمَاءِ وَإِنْ كَانَ الاِسْتِنْجَاءُ بِالْحِجَارَةِ يُجْزِئُ عِنْدَهُمْ فَإِنَّهُمُ اسْتَحَبُّوا الاِسْتِنْجَاءَ بِالْمَاءِ وَرَأَوْهُ أَفْضَلَ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
உங்கள் கணவர்களைத் தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறுங்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே சுத்தம் செய்துள்ளனர். நான் அவர்களிடம் (இதைக் கூற) வெட்கப்படுகிறேன் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக முஆதா(ரலி) என்ற பெண்மணி குறிப்பிடுகிறார்கள். இந்தக் கருத்து ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலீ(ரலி), அனஸ்(ரலி), அபூஹுரைரா(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலுள்ளதாகும். இதன் அடிப்படையிலேயே அறிஞர்களின் செயல்பாடு அமைந்துள்ளது. அவர்கள் கற்களால் சுத்தம் செய்வது போதுமானது; என்றாலும் தண்ணீரால் சுத்தம் செய்வதையே சிறந்ததாகக் கருதுகின்றனர். சுப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபியீ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றனர் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 20
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِىُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كُنْتُ مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى سَفَرٍ فَأَتَى النَّبِىُّ -صلى الله عليه وسلم- حَاجَتَهُ فَأَبْعَدَ فِى الْمَذْهَبِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى قُرَادٍ وَأَبِى قَتَادَةَ وَجَابِرٍ وَيَحْيَى بْنِ عُبَيْدٍ عَنْ أَبِيهِ وَأَبِى مُوسَى وَابْنِ عَبَّاسٍ وَبِلاَلِ بْنِ الْحَارِثِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَيُرْوَى عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ كَانَ يَرْتَادُ لِبَوْلِهِ مَكَانًا كَمَا يَرْتَادُ مَنْزِلاً. وَأَبُو سَلَمَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِىُّ.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் தேவைக்காக (மலஜலம் கழிக்க) வெகு தொலைவு சென்றார்கள் என முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்தை அப்துர் ரஹ்மான் இப்னு அபீகுராத்(ரலி), அபூகதாதா(ரலி), ஜாபீர்(ரலி), உபைத்(ரலி) வாயிலாக அவரது மகன் யஹ்யா, அபூமூஸா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), பிலால் இப்னுல் ஹார்ஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். நபி(ஸல்) அவர்கள் தங்குமிடத்தை மென்மைப்படுத்துவது போல் சிறுநீர் கழிப்பதற்காகவும் மென்மையான இடத்தை தேர்வு செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 21
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى مَرْدَوَيْهِ قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- نَهَى أَنْ يَبُولَ الرَّجُلُ فِى مُسْتَحَمِّهِ. وَقَالَ « إِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ وَيُقَالُ لَهُ أَشْعَثُ الأَعْمَى. وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبَوْلَ فِى الْمُغْتَسَلِ وَقَالُوا عَامَّةُ الْوَسْوَاسِ مِنْهُ. وَرَخَّصَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ ابْنُ سِيرِينَ وَقِيلَ لَهُ إِنَّهُ يُقَالُ إِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ فَقَالَ رَبُّنَا اللَّهُ لاَ شَرِيكَ لَهُ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ قَدْ وُسِّعَ فِى الْبَوْلِ فِى الْمُغْتَسَلِ إِذَا جَرَى فِيهِ الْمَاءُ. قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا بِذَلِكَ أَحْمَدُ بْنُ عَبْدَةَ الآمُلِىُّ عَنْ حِبَّانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ.
ஒரு மனிதன் அவனுடைய குளிக்குமிடத்தில் சிறுநீர் கழித்திட நபி(ஸல்) அவர்கள் தடைசெய்தனர். வஸ்வாஸ் (எனும் மன ஊசலாட்டம்) பெரும்பாலும் இதனால் தான் ஏற்படுகின்றது என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவிக்கின்றனர். நபித்தோழர்களில் இன்னொருவர் மூலமாகவும் இது அறிவிக்கப்படுகின்றது. இந்த ஹதீஸ் ‘கரீப்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். (அதாவதுஇதை வலுப்படுத்திட வேறுவழிகளில் ஹதீஸ்கள் இல்லை) அறிஞர்களில் ஒருசாரார் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதை வேறுகின்றனர். ‘வஸ்வாஸ்’ இதனால் தான் ஏற்படுகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். அறிஞர்களில் வேறு சிலர் இதை அனுமதிக்கின்றனர். இப்னுஸீரின் என்ற அறிஞரும் அவர்களில் ஒருவராவார். அவரிடம் வஸ்வாஸ் இதனால் தானே ஏற்படுகிறது என்று கேட்டபோது ‘அல்லாஹ் நம் இறைவன். அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்று கூறினார்கள். குளிக்குமிடத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்குமானால், சிறுநீர் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இப்னுல் முபாரக் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் செய்தியை ஹிப்பான் என்பவர் வழியாக அஹமத் இப்னு அப்தா அவர்கள் நமக்கு அறித்தனர் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், இப்னு மாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 22
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ». قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. وَحَدِيثُ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- كِلاَهُمَا عِنْدِى صَحِيحٌ لأَنَّهُ قَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- هَذَا الْحَدِيثُ. وَحَدِيثُ أَبِى هُرَيْرَةَ إِنَّمَا صَحَّ لأَنَّهُ قَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ. وَأَمَّا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ فَزَعَمَ أَنَّ حَدِيثَ أَبِى سَلَمَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ أَصَحُّ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ وَعَلِىٍّ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَحُذَيْفَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عُمَرَ وَأُمِّ حَبِيبَةَ وَأَبِى أُمَامَةَ وَأَبِى أَيُّوبَ وَتَمَّامِ بْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ وَأُمِّ سَلَمَةَ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ وَأَبِى مُوسَى.
”என் சமுதாயத்திற்கு சிரமமாகி விடும் என்று இல்லையானால் ஒவ்வொரு தொழுகையின்போது பல் துலக்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றனர். இதே ஹதீஸ் ஸைத் இப்னு காலித்(ரலி) வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்விரண்டு ஹதீஸ்களும் என்னிடத்தில் ஆதாரப்பூர்வமானதுதான். அபூஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுவதால் தான் ஆதாரப்பூர்வமானதாக ஆகின்றது. ஆனால் ஸைத் இப்னு காலித்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தான் மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று முஹம்மது இப்னு இஸ்மாயில் (என்ற புகாரி இமாம்) கருதுகின்றார்கள். இந்தக் கருத்து அபூபக்ருஸ் ஸித்தீக்(ரலி), அலீ(ரலி), ஆயிஷா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஹுதைபா(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி), அனஸ்(ரலி), அப்துல்லாஹ்(ரலி), இப்னு அம்ரு(ரலி), இப்னு உமர்(ரலி), உம்மு ஹபீபா(ரலி), அபூ உமாமா(ரலி), அபூ அய்யூப்(ரலி), தம்மாம் இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹன்ழளா(ரலி), உம்மு ஸலமா(ரலி), வாஸிலா இப்னுல் அஸ்கஃ(ரலி), அபூமூஸா(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது, என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதி அவர்கள் குறிப்பிடுவதுபோல் இமாம் புஹாரி அவர்கள் அபூஹுரைரா(ரலி) அவர்களின் ததீஸைவிட ஸைத் இப்னு காலித் அவர்களின் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று கருதிடவில்லை. அவர்களே அபூஹுரைரா(ரலி)அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸை தனது புகாரி என்ற நபிவழித் தொகுப்பில் பதிவு செய்துள்ளனர், என இமாம் நவவீ அவர்கள் குறிப்பிடுகின்றனர்)
திர்மிதி - ஹதீஸ் எண்: 23
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِى سَلَمَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِىِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ وَلأَخَّرْتُ صَلاَةَ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ ». قَالَ فَكَانَ زَيْدُ بْنُ خَالِدٍ يَشْهَدُ الصَّلَوَاتِ فِى الْمَسْجِدِ وَسِوَاكُهُ عَلَى أُذُنِهِ مَوْضِعَ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ لاَ يَقُومُ إِلَى الصَّلاَةِ إِلاَّ اسْتَنَّ ثُمَّ رَدَّهُ إِلَى مَوْضِعِهِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
”என் சமுதாயத்திற்கு சிரமம் கொடுத்தவனாவேன் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகையின் போதும், பல் துலக்குவதைக் கட்டாயமாக்கி இருப்பேன். இஷாத் தொழுகையை மூன்றாம் ஜாமாம் வரை பிற்படுத்தி இருப்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவிக்கிறார்கள். ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்கள் தொழுவதற்காக பள்ளிவாசல் வரும்போது எழுதக்கூடியவர் தன் எழுதுகோலைக் காதின் எந்த இடத்தில் வைத்திருப்பாரோ அந்த இடத்தில் பல்துலக்கும் குச்சியை அதற்கான இடத்தில் வைத்து விட்டு தொழுவார்கள் என அபூஸலமா குறிப்பிடுகிறார். இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலுள்ள ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. மூன்றாம் ஜாமம் என்று நாம் மொழிபெயர்த்தது இரவை மூன்று பாகங்களாக ஆக்கி, அதில் கடைசி பாகத்தையே.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 24
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ أَحْمَدُ بْنُ بَكَّارٍ الدِّمَشْقِىُّ - يُقَالُ هُوَ مِنْ وَلَدِ بُسْرِ بْنِ أَرْطَاةَ صَاحِبِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الأَوْزَاعِىِّ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِى الإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَإِنَّهُ لاَ يَدْرِى أَيْنَ بَاتَتْ يَدُهُ ». وَفِى الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَعَائِشَةَ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ الشَّافِعِىُّ وَأُحِبُّ لِكُلِّ مَنِ اسْتَيْقَظَ مِنَ النَّوْمِ قَائِلَةً كَانَتْ أَوْ غَيْرَهَا أَنْ لاَ يُدْخِلَ يَدَهُ فِى وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا فَإِنْ أَدْخَلَ يَدَهُ قَبْلَ أَنْ يَغْسِلَهَا كَرِهْتُ ذَلِكَ لَهُ وَلَمْ يُفْسِدْ ذَلِكَ الْمَاءَ إِذَا لَمْ يَكُنْ عَلَى يَدِهِ نَجَاسَةٌ. وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ إِذَا اسْتَيْقَظَ مِنَ النَّوْمِ مِنَ اللَّيْلِ فَأَدْخَلَ يَدَهُ فِى وَضُوئِهِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا فَأَعْجَبُ إِلَىَّ أَنْ يُهَرِيقَ الْمَاءَ. وَقَالَ إِسْحَاقُ إِذَا اسْتَيْقَظَ مِنَ النَّوْمِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِى وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا.
’இரவில் உங்களில் ஒருவர் உறங்கி விழித்தால் இரண்டு அல்லது மூன்று முறை கையில் தண்ணீர் ஊற்றி (கழுகாமல்) தன் கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் அவனது கை எங்கே அலைந்தது என்று அவன் அறியமாட்டான்’ என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற அந்தஸ்தில் அமைந்த (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ், இந்த கருத்தை இப்னு உமர்(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர். “பகல் தூக்கமோ, இரவௌத் தூக்கமோ எதுவாயினும் உறங்கி விழித்தால் ஒளூ செய்யும் தண்ணீரில் கையைக் கழுகுவதற்கு முன் விடாமல் இருப்பதை நான் விரும்புகிறேன். கையைக் கழுகுமுன் பாத்திரத்தில் கையை விடுவதை நான் வெறுக்கிறேன். ஆனால் அவனது கையில் அசுத்தம் ஏதும் இல்லையானால் இவ்வாறு கையை விடுவதனால் அந்தத் தண்ணீர் அசுத்தமாகாது என்று (இமாம்) ஷாபி குறிப்பிட்டுள்ளார்கள். ’ஒருவன் இரவில் உறங்கி எழுந்து, தன் கையைக் கழுகாமல் பாத்திரத்தில் கையைவிட்டால் அந்தத் தண்ணீரைக் (கீழே) கொட்டிவிடுவது எனக்கு விருப்பமானது’ என்று அஹ்மது இப்னு ஹம்பல் குறிப்பிட்டுள்ளார்கள். ’இரவிலோ, பகலிலோ உறங்கி எழுந்ததும்தான் ஒளூச் செய்யும் நீரில் கையை விடக்கூடாது என்று இஸ்ஹாக் அவர்கள் குறிப்பிட்டார்கள்’ என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது. எனினும் புகாரியில் ‘இரண்டு அல்லது மூன்று முறை’ என்ற வார்த்தை இல்லை.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 25
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ الْجَهْضَمِىُّ وَبِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِىُّ قَالاَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ أَبِى ثِفَالٍ الْمُرِّىِّ عَنْ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى سُفْيَانَ بْنِ حُوَيْطِبٍ عَنْ جَدَّتِهِ عَنْ أَبِيهَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِى سَعِيدٍ وَأَبِى هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لاَ أَعْلَمُ فِى هَذَا الْبَابِ حَدِيثًا لَهُ إِسْنَادٌ جَيِّدٌ. وَقَالَ إِسْحَاقُ إِنْ تَرَكَ التَّسْمِيَةَ عَامِدًا أَعَادَ الْوُضُوءَ وَإِنْ كَانَ نَاسِيًا أَوْ مُتَأَوِّلاً أَجْزَأَهُ. قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ. قَالَ أَبُو عِيسَى وَرَبَاحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ جَدَّتِهِ عَنْ أَبِيهَا. وَأَبُوهَا سَعِيدُ بْنُ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ. وَأَبُو ثِفَالٍ الْمُرِّىُّ اسْمُهُ ثُمَامَةُ بْنُ حُصَيْنٍ. وَرَبَاحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ أَبُو بَكْرِ بْنُ حُوَيْطِبٍ. مِنْهُمْ مَنْ رَوَى هَذَا الْحَدِيثَ فَقَالَ عَنْ أَبِى بَكْرِ بْنِ حُوَيْطِبٍ فَنَسَبَهُ إِلَى جَدِّهِ.
’ஒளூவின்போது அல்லாஹ்வின் பெயர் கூறாதவனுக்கு ஒளூ இல்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ரு(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ஆயிஷா(ரலி), அபூஸயீத்(ரலி), அபூஹுரைரா(ரலி), ஸஹல் இப்னு ஸஃது(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. இந்தக் கருத்தில் பலமான் அறிவிப்பாளர் வரிசையில் அமைந்த ஒரு ஹதீஸையும் நான் அறியவில்லை என்று அஹ்மது இப்னு ஹம்பல் குறிப்பிட்டார்கள். ’பிஸ்மில்லா’ சொல்வதை வேண்டுமென்றே ஒருவன் விட்டுவிட்டால், அவன் திரும்பவும் ஒளூ செய்ய வேண்டும் என்று இஸ்ஹாக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் க்ருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் சரியானது ‘ரபாஹ் இப்னு அப்துர் ரஹ்மான்’ அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தான் என்று முஹம்மது இப்னு இஸ்மாயில் (என்ற புகாரி இமாம்) குறிப்பிட்டார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி இமாம் குறிப்பிட்ட அந்த ஹதீஸைத் தான் திர்மிதீ அவர்கள் இடம்பெறச் செய்துள்ளனர். அஹ்மத், இப்னுமாஜா, தாரமீ, பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூதிபால், ரபாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் இருவருமே யாரென்றே தெரியாதவர்கள். ஹதீஸ்களை மேதைகள் அபூஹாதம், அபூஸர்ஆ ஆகியோர் இதைக் குறிப்பிடுகிறார்கள். எனினும் பொதுவாக எல்லா காரியங்களையும் ‘பிஸ்மில்லாஹ்’ கூறியே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் ஒளூவுக்கும் ‘பிஸ்மில்லாஹ்’ கூறவேண்டும் என்று கருதலாம்)
திர்மிதி - ஹதீஸ் எண்: 26
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْحُلْوَانِىُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ يَزِيدَ بْنِ عِيَاضٍ عَنْ أَبِى ثِفَالٍ الْمُرِّىِّ عَنْ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى سُفْيَانَ بْنِ حُوَيْطِبٍ عَنْ جَدَّتِهِ بِنْتِ سَعِيدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهَا عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِثْلَهُ.
இருபத்தி ஐந்தாவது ஹதீஸே வேறு அறிவிப்பாளர் வரிசையில் 26வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
திர்மிதி - ஹதீஸ் எண்: 27
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ وَجَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا تَوَضَّأْتَ فَانْتَثِرْ وَإِذَا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ وَلَقِيطِ بْنِ صَبِرَةَ وَابْنِ عَبَّاسٍ وَالْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِى هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَلَمَةَ بْنِ قَيْسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِيمَنْ تَرَكَ الْمَضْمَضَةَ وَالاِسْتِنْشَاقَ فَقَالَتْ طَائِفَةٌ مِنْهُمْ إِذَا تَرَكَهُمَا فِى الْوُضُوءِ حَتَّى صَلَّى أَعَادَ الصَّلاَةَ وَرَأَوْا ذَلِكَ فِى الْوُضُوءِ وَالْجَنَابَةِ سَوَاءً. وَبِهِ يَقُولُ ابْنُ أَبِى لَيْلَى وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ أَحْمَدُ الاِسْتِنْشَاقُ أَوْكَدُ مِنَ الْمَضْمَضَةِ. قَالَ أَبُو عِيسَى وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ يُعِيدُ فِى الْجَنَابَةِ وَلاَ يُعِيدُ فِى الْوُضُوءِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَبَعْضِ أَهْلِ الْكُوفَةِ. وَقَالَتْ طَائِفَةٌ لاَ يُعِيدُ فِى الْوُضُوءِ وَلاَ فِى الْجَنَابَةِ لأَنَّهُمَا سُنَّةٌ مِنَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَلاَ تَجِبُ الإِعَادَةُ عَلَى مَنْ تَرَكَهُمَا فِى الْوُضُوءِ وَلاَ فِى الْجَنَابَةِ. وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِىِّ فِى آخِرَةٍ.
நீ ஒளூ செய்யும்போது நாசிக்குத் தண்ணீர் செலுத்து! (கற்களால்) சுத்தம் செய்தால் ஒற்றைப்படையாகச் செய்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸலமா இப்னு கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். உஸ்மான்(ரலி), லகீத் இப்னு ஸபீரா(ரலி), அப்பாஸ்(ரலி),மிக்தாம் இப்னு மஃதீ கரீப்(ரலி), வாயில் இப்னு ஹுஜ்ரு(ரலி), அபூஹுரைரா(ரலி) ஆகியோர் மூலமும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகிறது. ஸலமா இப்னு கைஸ்(ரலி) வழியாக வரும் இந்தஹதீஸ் ஹஸன், ஹதீஸ் என்ற தரத்தில் அமைந்த (ஆதாரப்பூர்வமான) ஹதீஸ் ஆகும் என்று அபூஈஸா கூறுகிறேன். வாய் கொப்பளித்தல், மூக்கில் நீர் செலுத்தி சிந்துதல் இரண்டையும் விட்டுவிடுபவர் விஷயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். இவ்விரண்டு காரியங்களையும் விட்டுவிட்டு ஒளூ செய்து தொழுதால் அந்தத் தொழுகையைத் திரும்பத்தொழ வேண்டும். ஒளூ கடமையான குளிப்பு இவ்விரண்டுக்கும் இதுவே சட்டம் என்று அறிஞர்களில் ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். இப்னு அபீலைலா, அப்துல்லாஹ் இப்னுல் முபாரக், அஹ்மத் இஸ்ஹாக் ஆகொயோர் இந்தக் கருத்து உடையோராவர். ‘வாய் கொப்புளிப்பதைவிட மூக்கில் நீர் செலுத்தி சிந்துதல் முக்கியம்’ என்று அஹ்மத் (இப்னு ஹம்பல்) குறிப்பிடுகிறார்கள். கடமையான குளிப்பின் போது இவ்விரண்டையும் விட்டு விட்டால் திரும்பவும் குளிக்க வேண்டும். ஒளூவின் போது விட்டு விட்டால் திரும்பவும் செய்ய வேண்டியதில்லை என்று அறிஞர்களில் இன்னொரு சாரார் கூறுகிறார்கள். ஸுப்பான் ஸவ்ரீ, கூபா வாசிகளில் சிலர் இந்தக்கருத்துக் கொண்டவர்கள்தான். ஒளூவின் போதும், ஜனாபத்தின் போதும் இவ்விரண்டையும் விட்டுவிட்டால் திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்று மற்றொரு சாரார் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் சுன்னத் ஆகும் (கட்டாயக் கடமை அல்ல) எனவே திரும்பச் செய்ய வேண்டியதில்லை என்கிரார்கள். மாலிக் அவர்களின் கூற்று இது. ஷாபி அவர்களின் கடைசி கூற்றும் இதுதான் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 28
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ فَعَلَ ذَلِكَ ثَلاَثًا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى مَالِكٌ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى وَلَمْ يَذْكُرُوا هَذَا الْحَرْفَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ. وَإِنَّمَا ذَكَرَهُ خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ. وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ثِقَةٌ حَافِظٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمَضْمَضَةُ وَالاِسْتِنْشَاقُ مِنْ كَفٍّ وَاحِدٍ يُجْزِئُ وَقَالَ بَعْضُهُمْ تَفْرِيقُهُمَا أَحَبُّ إِلَيْنَا. وَقَالَ الشَّافِعِىُّ إِنْ جَمَعَهُمَا فِى كَفٍّ وَاحِدٍ فَهُوَ جَائِزٌ وَإِنْ فَرَّقَهُمَا فَهُوَ أَحَبُّ إِلَيْنَا.
நபி(ஸல்) அவர்கள் ஒருகை நீரால் வாய் கொப்பளித்து நாசிக்கும் நீர் செலுத்தியதை நான் பார்த்திருக்கிறேன். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள், என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் இன்பு அப்பாஸ்(ரலி) வழியாகவும் இந்த கருத்து வந்துள்ளது. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கும் மேற்கூறிய ஹதீஸ் ஹஸன், கரீப் என்ற தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸை அம்ரு இன்பு எஹ்யா வழியாக பலர் அறிவிக்கின்றனர். எவரும் ஒருகை நீரால் இரண்டையும் செய்ததாகக் கூறவில்லை. காலித் இப்னு அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே இதை கூறுகிறார். காலித் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் நம்பகமானவரும் ஏராளமான ஹதீஸ்களை மன்னம் செய்தவருமாவார். வாய்கொப்பளித்தல், நாசிக்கு தண்ணீர் செலுத்துதல் இரண்டையும் ஒருகை நீரால் செய்வது போதுமானது என்று அரிஞர்களில் சிலர் கூறுகின்றனர். தனித் தனியாகத் தண்ணீர் எடுத்து இரண்டையும் செய்ய வேண்டும் என்று வேறுசிலர் கூறுகிறார்கள். ஒருகை நீரால் இரண்டையும் சேர்த்துச் செய்தால் அதுகூடும். தனித்தனியாகச் செய்வது நமக்குரொம்பவும் விருப்பமானது என்று ஷாபி இமாம் குறிப்பிடுகிறார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 29
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِى الْمُخَارِقِ أَبِى أُمَيَّةَ عَنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ قَالَ رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ أَوْ قَالَ فَقُلْتُ لَهُ أَتُخَلِّلُ لِحْيَتَكَ قَالَ وَمَا يَمْنَعُنِى وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يُخَلِّلُ لِحْيَتَهُ.
அம்மார் இப்னு யாஸிர்(ரலி)அவர்கள் ஒளூச் செய்யும்போது தன் தாடியைக் கோதினார்கள். தாடியைக் கோதிக் கழுவுகின்றீர்களா? என்று நான் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் தாடியைக் கோதிக் கழுவ நான் பார்த்திருக்கும்போது, அதை எப்படித் தடுக்க முடியும்? என்று கேட்டார்கள், என ஹஸ்ஸன் இப்னு பிலால்(ரலி) அரிவிக்கிறார்கள். (குறிப்பு : இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 30
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ عَنْ عَمَّارٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِثْلَهُ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ وَأَنَسٍ وَابْنِ أَبِى أَوْفَى وَأَبِى أَيُّوبَ. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ ابْنُ عُيَيْنَةَ لَمْ يَسْمَعْ عَبْدُ الْكَرِيمِ مِنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ حَدِيثَ التَّخْلِيلِ. وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ عَامِرِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ عُثْمَانَ. قَالَ أَبُو عِيسَى وَقَالَ بِهَذَا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ رَأَوْا تَخْلِيلَ اللِّحْيَةِ. وَبِهِ يَقُولُ الشَّافِعِىُّ. وَقَالَ أَحْمَدُ إِنْ سَهَا عَنْ تَخْلِيلِ اللِّحْيَةِ فَهُوَ جَائِزٌ. وَقَالَ إِسْحَاقُ إِنْ تَرَكَهُ نَاسِيًا أَوْ مُتَأَوِّلاً أَجْزَأَهُ وَإِنْ تَرَكَهُ عَامِدًا أَعَادَ.
29வது ஹதீஸே வேறு அறிவிப்பாளர் வரிசையில் இங்கே இடம் பெற்றுள்ளது. உஸ்மான்(ரலி), ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி), அனஸ்(ரலி), இப்னு அபீ அவ்பா(ரலி), அபூ அய்யூப்(ரலி) வாயிலாகவும் இந்த கருத்து அறிவிக்கப்படுகின்றது. ஹஸ்ஸான் இப்னு பிலால் வாயிலாக இதை அறிவிக்கும் அப்துல் கரீம் என்பவர் அவரிடமிருந்து இதைச் செவியுற்றதில்லை என்று இப்னு உயைனா அவர்கள் கூறியதாக அஹ்மத் இப்னு ஹம்பல் குறிப்பிட்டார்கள். இந்தத் தகவலை இஸ்ஹாக் இப்னு மன்ஸுரிடம் நான் செவியுற்றேன் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : 29வது ஹதீஸில் அப்துல் கரீம் என்பவர் ஹஸ்ஸான் வழியாகக் கேட்டதாக உள்ளது. அது சரியில்லை என்பதால் 30வது ஹதீஸை திர்மிதி இமாம் குறிப்பிடுகிறார்கள். அதில் ஹஸ்ஸானிடம் கதாதா என்பவர் செவியுற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் உஸ்மான்(ரலி) வாயிலாக அபூவாயில் அறிவிக்கும் ஹதீஸே மிகவும் சரியானது என்று முஹம்மது இப்னு இஸ்மாயீல் (புகாரி இமாம்) கூறினார்கள். (அந்த ஹதீஸ் கீழே 31வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது) நபித்தோழர்களில் பெரும்பாலான அறிஞர்கள் தாடியை கோதுவதை (அவசியமென) கருதுகின்றனர். ஷாபி அவர்களும் இதையே குறிப்பிடுகிறாக்ரள். தாடி கோத மறந்துவிட்டால் (ஒளூ) நிறைவேறும் என்று அஹ்மத் இப்னு ஹம்மல் குறிப்பிடுகிறார்கள். மறந்தவனாகவோ, (அல்லது வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தன்செயலை நியாயப்படுத்தியவனாகவோ இதை விட்டுவிட்டால் அந்த ஒளூ அவனுக்குக் கூடும். வேண்டுமென்றே விட்டுவிட்டால் திரும்பவும் ஒளூ செய்ய வேண்டும் என்று இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 28
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ فَعَلَ ذَلِكَ ثَلاَثًا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ حَسَنٌ غَرِيبٌ. وَقَدْ رَوَى مَالِكٌ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى وَلَمْ يَذْكُرُوا هَذَا الْحَرْفَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ. وَإِنَّمَا ذَكَرَهُ خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ. وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ثِقَةٌ حَافِظٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمَضْمَضَةُ وَالاِسْتِنْشَاقُ مِنْ كَفٍّ وَاحِدٍ يُجْزِئُ وَقَالَ بَعْضُهُمْ تَفْرِيقُهُمَا أَحَبُّ إِلَيْنَا. وَقَالَ الشَّافِعِىُّ إِنْ جَمَعَهُمَا فِى كَفٍّ وَاحِدٍ فَهُوَ جَائِزٌ وَإِنْ فَرَّقَهُمَا فَهُوَ أَحَبُّ إِلَيْنَا.
நபி(ஸல்) அவர்கள் ஒருகை நீரால் வாய் கொப்பளித்து நாசிக்கும் நீர் செலுத்தியதை நான் பார்த்திருக்கிறேன். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள், என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் இன்பு அப்பாஸ்(ரலி) வழியாகவும் இந்த கருத்து வந்துள்ளது. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கும் மேற்கூறிய ஹதீஸ் ஹஸன், கரீப் என்ற தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸை அம்ரு இன்பு எஹ்யா வழியாக பலர் அறிவிக்கின்றனர். எவரும் ஒருகை நீரால் இரண்டையும் செய்ததாகக் கூறவில்லை. காலித் இப்னு அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே இதை கூறுகிறார். காலித் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் நம்பகமானவரும் ஏராளமான ஹதீஸ்களை மன்னம் செய்தவருமாவார். வாய்கொப்பளித்தல், நாசிக்கு தண்ணீர் செலுத்துதல் இரண்டையும் ஒருகை நீரால் செய்வது போதுமானது என்று அரிஞர்களில் சிலர் கூறுகின்றனர். தனித் தனியாகத் தண்ணீர் எடுத்து இரண்டையும் செய்ய வேண்டும் என்று வேறுசிலர் கூறுகிறார்கள். ஒருகை நீரால் இரண்டையும் சேர்த்துச் செய்தால் அதுகூடும். தனித்தனியாகச் செய்வது நமக்குரொம்பவும் விருப்பமானது என்று ஷாபி இமாம் குறிப்பிடுகிறார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 29
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِى الْمُخَارِقِ أَبِى أُمَيَّةَ عَنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ قَالَ رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ أَوْ قَالَ فَقُلْتُ لَهُ أَتُخَلِّلُ لِحْيَتَكَ قَالَ وَمَا يَمْنَعُنِى وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يُخَلِّلُ لِحْيَتَهُ.
அம்மார் இப்னு யாஸிர்(ரலி)அவர்கள் ஒளூச் செய்யும்போது தன் தாடியைக் கோதினார்கள். தாடியைக் கோதிக் கழுவுகின்றீர்களா? என்று நான் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் தாடியைக் கோதிக் கழுவ நான் பார்த்திருக்கும்போது, அதை எப்படித் தடுக்க முடியும்? என்று கேட்டார்கள், என ஹஸ்ஸன் இப்னு பிலால்(ரலி) அரிவிக்கிறார்கள். (குறிப்பு : இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 30
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ عَنْ عَمَّارٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِثْلَهُ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ وَأَنَسٍ وَابْنِ أَبِى أَوْفَى وَأَبِى أَيُّوبَ. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ يَقُولُ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ ابْنُ عُيَيْنَةَ لَمْ يَسْمَعْ عَبْدُ الْكَرِيمِ مِنْ حَسَّانَ بْنِ بِلاَلٍ حَدِيثَ التَّخْلِيلِ. وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ عَامِرِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ عُثْمَانَ. قَالَ أَبُو عِيسَى وَقَالَ بِهَذَا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ رَأَوْا تَخْلِيلَ اللِّحْيَةِ. وَبِهِ يَقُولُ الشَّافِعِىُّ. وَقَالَ أَحْمَدُ إِنْ سَهَا عَنْ تَخْلِيلِ اللِّحْيَةِ فَهُوَ جَائِزٌ. وَقَالَ إِسْحَاقُ إِنْ تَرَكَهُ نَاسِيًا أَوْ مُتَأَوِّلاً أَجْزَأَهُ وَإِنْ تَرَكَهُ عَامِدًا أَعَادَ.
29வது ஹதீஸே வேறு அறிவிப்பாளர் வரிசையில் இங்கே இடம் பெற்றுள்ளது. உஸ்மான்(ரலி), ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி), அனஸ்(ரலி), இப்னு அபீ அவ்பா(ரலி), அபூ அய்யூப்(ரலி) வாயிலாகவும் இந்த கருத்து அறிவிக்கப்படுகின்றது. ஹஸ்ஸான் இப்னு பிலால் வாயிலாக இதை அறிவிக்கும் அப்துல் கரீம் என்பவர் அவரிடமிருந்து இதைச் செவியுற்றதில்லை என்று இப்னு உயைனா அவர்கள் கூறியதாக அஹ்மத் இப்னு ஹம்பல் குறிப்பிட்டார்கள். இந்தத் தகவலை இஸ்ஹாக் இப்னு மன்ஸுரிடம் நான் செவியுற்றேன் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : 29வது ஹதீஸில் அப்துல் கரீம் என்பவர் ஹஸ்ஸான் வழியாகக் கேட்டதாக உள்ளது. அது சரியில்லை என்பதால் 30வது ஹதீஸை திர்மிதி இமாம் குறிப்பிடுகிறார்கள். அதில் ஹஸ்ஸானிடம் கதாதா என்பவர் செவியுற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் உஸ்மான்(ரலி) வாயிலாக அபூவாயில் அறிவிக்கும் ஹதீஸே மிகவும் சரியானது என்று முஹம்மது இப்னு இஸ்மாயீல் (புகாரி இமாம்) கூறினார்கள். (அந்த ஹதீஸ் கீழே 31வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது) நபித்தோழர்களில் பெரும்பாலான அறிஞர்கள் தாடியை கோதுவதை (அவசியமென) கருதுகின்றனர். ஷாபி அவர்களும் இதையே குறிப்பிடுகிறாக்ரள். தாடி கோத மறந்துவிட்டால் (ஒளூ) நிறைவேறும் என்று அஹ்மத் இப்னு ஹம்மல் குறிப்பிடுகிறார்கள். மறந்தவனாகவோ, (அல்லது வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தன்செயலை நியாயப்படுத்தியவனாகவோ இதை விட்டுவிட்டால் அந்த ஒளூ அவனுக்குக் கூடும். வேண்டுமென்றே விட்டுவிட்டால் திரும்பவும் ஒளூ செய்ய வேண்டும் என்று இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 31
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ إِسْرَائِيلَ عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
நபி(ஸல்) அவர்கள் தன் தாடியைக் கோதி கழுகுபவர்களாக இநுதனர், என்று உஸ்மான்(ரலி)அறிவிக்கின்றனர். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இப்னுமாஜா, இப்னு குஸைமா, ஹாகிம், தாரக்குத்னீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 32
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِى بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ مُعَاوِيَةَ وَالْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ وَعَائِشَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَحْسَنُ وَبِهِ يَقُولُ الشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
நபி(ஸல்) அவர்கள் தன் இரண்டு கைகளாலும் தலைக்கு மஸஹ் செய்தார்கள். முன்னும், பின்னுமாக தன்கைகளைக் கோண்டு சென்றார்கள். (அதாவது) தன் தலையின் முன்பாகத்தில் துவங்கி இரண்டு கைகளையும் பிடரி வரைக் கொண்டு சென்று பின்னர் ஆரம்பித்த இடத்திற்கே தன் கைகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர் தன் கால்களைக் கழுவினார்கள், என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி)அறிவிக்கிறார்கள். முஆவியா(ரலி), மிக்தாம் இப்னு மஃதீ கரீப்(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அரிவிக்கப்படுகிறது. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கும் (இந்த) ஹதீஸ்தான் இந்த கருத்தில் வந்த ஹதீஸ்களில் மிகவும் ஆதாரப்பூர்வமானதாகும். ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் இந்த ஹதீஸின் கருத்துப்படியே மஸஹ் செய்ய வேண்டும் என்கிறார்கள், என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 33
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ بَدَأَ بِمُؤَخَّرِ رَأْسِهِ ثُمَّ بِمُقَدَّمِهِ وَبِأُذُنَيْهِ كِلْتَيْهِمَا ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَصَحُّ مِنْ هَذَا وَأَجْوَدُ إِسْنَادًا. وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْكُوفَةِ إِلَى هَذَا الْحَدِيثِ مِنْهُمْ وَكِيعُ بْنُ الْجَرَّاحِ.
நபி(ஸல்) அவக்ரள் தன் தலைக்கு இரண்டுமுறை மஸஹ் செய்தார்கள். (அதாவது) தலையின் பின்புறம் துவங்கி பீனர் முன்புறம் கொண்டுவந்தார்கள். (இதன் மூலம்) உட்புறம், வெளிப்புறம் அனைத்திலும் மஸஹ் செய்தார்கள் என்று ருபைய்யி பின்த் முஅவ்வித்(ரலி) அறிவிக்கிறார். இது ‘ஹஸன்’ என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தான் இதைவிட ஆதாரப்பூர்வமானதும், அறிவிப்பாளர் தொடர் பலமானதுமாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். வகீவு இப்னுல் ஜர்ராஹ் உட்பட கூபாவாசிகளில் சிலர் இந்த ஹதீஸின் கருத்துப்படி செயல்பட்டிருக்கிறார்கள், என்றும் அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இது அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு உகைல் என்பவர் இடம் பெறுகிறார். அவரைப் பற்றி குறைகூறப்பட்டுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 34
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ أَنَّهَا رَأَتِ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَتَوَضَّأُ قَالَتْ مَسَحَ رَأْسَهُ وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ وَمَا أَدْبَرَ وَصُدْغَيْهِ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَجَدِّ طَلْحَةَ بْنِ مُصَرِّفِ بْنِ عَمْرٍو. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ الرُّبَيِّعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ مَسَحَ بِرَأْسِهِ مَرَّةً. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ. وَبِهِ يَقُولُ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ وَسُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ رَأَوْا مَسْحَ الرَّأْسِ مَرَّةً وَاحِدَةً. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْمَكِّىُّ قَالَ سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ سَأَلْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ عَنْ مَسْحِ الرَّأْسِ أَيُجْزِئُ مَرَّةً فَقَالَ إِى وَاللَّهِ.
நபி(ஸல்) அவர்கள் ஒளூசெய்த போது தலைக்கு மஸஹ் செய்தார்கள்; முன்புறமும் பின்புறமும் தன் நெற்றிப்பொட்டு, தாதுகளிலும் ஒடு தடவையே மஸஹ் செய்ததைப் பார்த்ததாக ரூபயீ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவிக்கிறார்கள். அலீ(ரலி), அம்ரு(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததாக பல்வேறு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. நபித் தோழர்கள் அவர்களுக்குப்பின் வந்தவர்களில் பெரும்பாலான அறிஞர்கள் இதன் அடிப்படையில்லேயே செயல்பட்டுள்ளனர். ஜஃபர் இப்னு முஹம்மது, ஸுப்யான் ஸவ்ரி, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் ஒரு தடவை மஸஹ் செய்வதையே அபிப்பிராயப்படுகின்றார்கள். (ஷாபிகள் கவனிக்க!) ஒருதடவை மஸஹ் செய்வது போதுமா? என்று ஜஃபர் இப்னு முஹம்மது அவர்களிடம் நான் கேட்டேன். ‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக போதும்’ என்று கூறினார்கள், என ஸுப்யான் இப்னு உயைனா கூறினார்கள். இதை முஹம்மது இப்னு மன்ஸுர் அவர்கள் நம்மிடம் கூறினார்கள் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. குறை கூறப்பட்ட அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு உகைல் இதில் இடம்பெற்றுள்ளார்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 35
حَدَّثَنَا عَلِىُّ بْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ حَبَّانَ بْنِ وَاسِعٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّهُ رَأَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ وَأَنَّهُ مَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَرَوَى ابْنُ لَهِيعَةَ هَذَا الْحَدِيثَ عَنْ حَبَّانَ بْنِ وَاسِعٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ وَأَنَّهُ مَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَبَرَ مِنْ فَضْلِ يَدَيْهِ ». وَرِوَايَةُ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ حَبَّانَ أَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَغَيْرِهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَخَذَ لِرَأْسِهِ مَاءً جَدِيدًا. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ رَأَوْا أَنْ يَأْخُذَ لِرَأْسِهِ مَاءً جَدِيدًا.
நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்தபோது இரண்டு கைகளையும் கழுகிய ஈரத்தில் மஸஹ் செய்யாமல் தனித் தண்ணீர் தொட்டு மஸஹ் செய்ததைத் தான் பார்த்ததாக அப்துல்லாஹ் இப்னு ஸைது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ‘ஹஸன், ஸஹீஹ்’ என்ற தரத்தில் அமைந்தது என்ரு அபூஈஸா கூறுகிறேன். இந்த ஹதீஸ் அம்ரு இப்னுல்ஹாரிஸ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) வழியாக அறிவிப்பதாக உள்ளது. இதே ஹதீஸ் அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) வழியாக இப்னு லஹ்யஆ அறிவிப்பதாகவும் உள்ளது. எனினும் அம்ரு இப்னுல் ஹாரிஸ் இடம்பெறும் ஹதீஸே ஆதாரப்பூர்வமானதாகும். நபி(ஸல்) அவர்கள் தன் தலைக்கு (மஸஹ் செய்ய) தனித்தண்ணீர் தொட்டதாக பல்வேறு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர்களில் பெரும்பாலோர் இதன் அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளனர்; தலைக்குத் தனியாகத் தண்ணீர் தொடவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அபூதாவூதிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 36
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرِهِمَا وَبَاطِنِهِمَا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنِ الرُّبَيِّعِ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَرَوْنَ مَسْحَ الأُذُنَيْنِ ظُهُورِهِمَا وَبُطُونِهِمَا.
நபி(ஸல்) அவர்கள் தனது தலைக்கு மஸஹ் செய்தார்கள். தன் இரு காதுகளின் உட்புறத்துக்கும் வெளிப்புறத்துக்கும் மஸஹ் செய்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ‘ருபைய்யி’(ரலி) அவர்கள் மூலமாகவும் அரிவிக்கப்படுகின்றது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். அறிஞர்களில் பெரும்பாலோர் இதனடிப்படையிலேயே செயல்பட்டுள்ளனர். இரு காதுகளிலும் உட்புறமும் வெளிப்புறமும் மஸஹ் செய்யவேண்டுமென அவர்கள் கருதுகிறார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இப்னுமாஜா, நஸயீ, ஹாகிம், பைஹகீ ஆகியோர் இதைப் பதிவு செய்துள்ளனர்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 37
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِى أُمَامَةَ قَالَ تَوَضَّأَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ ثَلاَثًا وَمَسَحَ بِرَأْسِهِ وَقَالَ « الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ». قَالَ أَبُو عِيسَى قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ لاَ أَدْرِى هَذَا مِنْ قَوْلِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَوْ مِنْ قَوْلِ أَبِى أُمَامَةَ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَنَسٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ الْقَائِمِ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ أَنَّ الأُذُنَيْنِ مِنَ الرَّأْسِ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مَا أَقْبَلَ مِنَ الأُذُنَيْنِ فَمِنَ الْوَجْهِ وَمَا أَدْبَرَ فَمِنَ الرَّأْسِ. قَالَ إِسْحَاقُ وَأَخْتَارُ أَنْ يَمْسَحَ مُقَدَّمَهُمَا مَعَ الْوَجْهِ وَمُؤَخَّرَهُمَا مَعَ رَأْسِهِ. وَقَالَ الشَّافِعِىُّ هُمَا سُنَّةٌ عَلَى حِيَالِهِمَا يَمْسَحُهُمَا بِمَاءٍ جَدِيدٍ.
நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்தபோது தங்களின் முகத்தையும், இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்; தலைக்கும் மஸஹ் செய்தார்கள்’ ‘இருகாதுகளும் தலையின் ஒரு பகுதிதான் என்றும் கூறினார்கள், என்று அபூஉமாமா(ரலி) அறிவிக்கிறார்கள். ’இரு காதுகளும் தலையின் ஒரு பகுதிதான் என்ற சொல் நபி(ஸல்) அவர்கள் கூறியதா? அல்லது இதன் அறிவிப்பாளர் அபூஉமாமா(ரலி) கூறியதா? என்பதை நான் அறியேன் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவாராகிய ஹம்மத் குறிப்பிட்டார். இந்தக் கருத்து அனஸ்(ரலி) வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது என்று அபூஈஸா கூறுகிறேன். இது ‘ஹஸன்’ என்ற தரத்திலுள்ள ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் வரிசை அவ்வளவு சரியானதல்லை; நபித்தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களில் பெரும்பாலோர் இதனடிப்படையிலேயே செயல்பட்டுள்ளனர். ஸுப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்களின் முடிவும் இதுவே. காதுகளின் முன்புறமாகத் தெரிபவை முகத்தின் ஒரு பகுதி என்றும், பின்புறமாக (பார்க்கும் போது) தெரியக்கூடியவை தலையின் ஒரு பகுதி என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். முகத்தைக் கழுவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். முகத்தைக் கழுவும் போது காதுகளின் உட்புறத்தை மஸஹ் செய்ய வேண்டும். தலைக்கு மஸஹ் செய்யும்போது அதன் வெளிப்புறத்தை மஸஹ் செய்ய வேண்டும், என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன் என்று இஸ்ஹாக் குறிப்பிட்டுள்ளார். காதுகள் இரண்டுக்கும் மஸஹ் செய்வது தனியான ஒரு சுன்னத்தாகும். தனித்தண்ணீர் தொட்டு இருகாதுகளையும் மஸஹ் செய்ய வேண்டும் என்று இமாம் ஷாபி குறிப்பிட்டுள்ளார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னு மாஜாவிலும் இது இடம்பெற்றுள்ளது. ஷாபி இமாம் கூறியதாக இமாம் திர்மிதீ அவர்கள் குறிப்பிடும் இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைக் கவனிக்க!)
திர்மிதி - ஹதீஸ் எண்: 38
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِى هَاشِمٍ عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « إِذَا تَوَضَّأْتَ فَخَلِّلِ الأَصَابِعَ ». قَالَ وَفِى الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَالْمُسْتَوْرِدِ وَهُوَ ابْنُ شَدَّادٍ الْفِهْرِىُّ وَأَبِى أَيُّوبَ الأَنْصَارِىِّ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُخَلِّلُ أَصَابِعَ رِجْلَيْهِ فِى الْوُضُوءِ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ إِسْحَاقُ يُخَلِّلُ أَصَابِعَ يَدَيْهِ وَرِجْلَيْهِ فِى الْوُضُوءِ. وَأَبُو هَاشِمٍ اسْمُهُ إِسْمَاعِيلُ بْنُ كَثِيرٍ الْمَكِّىُّ.
’நீ ஒளூ செய்யும்போது விரல்களைக் கோதிக்கழுகு!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக லகீத் இப்னு ஸபிரா(ரலி) அறிவிக்கின்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), முஸ்தவ்ரிக் இப்னு ஷத்தாத்(ரலி), அபூஅய்யூப் அல் அன்ஸாரி(ரலி) வழியாகவும் இந்தக்கருத்து அறிவிக்கப்படுகின்றது; இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். ஒருவன் ஒளூ செய்யும்போது தன் கால்விரல்களைக் கோதிக்கழுக வேண்டும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் கூறுகின்றனர். கால்விரல்களையும், கோதிக் கழுவ வேண்டுமென இஸ்ஹாக் அவர்கள் குறிப்பிட்டார்கள். (குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 39
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ هُوَ الْجَوْهَرِىُّ حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ صَالِحٍ مَوْلَى التَّوْأَمَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا تَوَضَّأْتَ فَخَلِّلْ بَيْنَ أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
’நீ ஒளூ செய்யும்போது உனது இரு கால்விரல்களையும், கை விரல்களையும் கோத்திக்கழுவு!’ என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இது ஹஸன், கரீப் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 40
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو عَنْ أَبِى عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ الْفِهْرِىِّ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- إِذَا تَوَضَّأَ دَلَكَ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ.
நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யும்போது தன் கால்விரல்களை தனது சுண்டு விரலால் தேய்ப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று முஸ்தவ்ரீத் இப்னு ஷத்தாத்(ரலி) அறிவிக்கின்றனர். இப்னு லஹ்யஆ என்பவர் வழியாகத் தவிர இந்த ஹதீஸை நாம் அறியவில்லை. இது ஹஸன், கரீப் என்ற தரத்திலுள்ள ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அபூதாவூதிலும், இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 41
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ هُوَ ابْنُ جَزْءٍ الزُّبَيْدِىُّ وَمُعَيْقِيبٍ وَخَالِدِ بْنِ الْوَلِيدِ وَشُرَحْبِيلَ بْنِ حَسَنَةَ وَعَمْرِو بْنِ الْعَاصِ وَيَزِيدَ بْنِ أَبِى سُفْيَانَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « وَيْلٌ لِلأَعْقَابِ وَبُطُونِ الأَقْدَامِ مِنَ النَّارِ ». قَالَ وَفِقْهُ هَذَا الْحَدِيثِ أَنَّهُ لاَ يَجُوزُ الْمَسْحُ عَلَى الْقَدَمَيْنِ إِذَا لَمْ يَكُنْ عَلَيْهِمَا خُفَّانِ أَوْ جَوْرَبَانِ.
(ஒளூவின் போது நனையாத) ‘குதிகால்களுக்கு நரகம் என்ற கேடு உண்டாகட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்ஹ்டு அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), ஆயிஷா(ரலி), ஜாபிர்(ரலி), அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்(ரலி), முஐகீப்(ரலி), ஹாலித் இப்னுல் வலீத்(ரலி) ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா(ரலி), அம்ரு இப்னு ஆஸ்(ரலி), யஸீத் இப்னு அபீஸுப்யான்(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்ததாகும்; என்று அபூஈஸா கூறுகிறேன். (ஒளூவின்போது நனையாத) குதிகால்களுக்கும், பாதங்களில் உட்புறங்களுக்கும், நரகம் எனும் கேடு உண்டாகட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கால்களில் காலுறைகள் அணிந்திருக்கவில்லையானால் பாதங்கள் மீது மஸஹ் செய்வது கூடாது. (மாறாக கழுவியாக வேண்டும்) என்பது இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சட்டமாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 42
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَهَنَّادٌ وَقُتَيْبَةُ قَالُوا حَدَّثَنَا وِكِيعٌ عَنْ سُفْيَانَ ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ مَرَّةً مَرَّةً. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُمَرَ وَجَابِرٍ وَبُرَيْدَةَ وَأَبِى رَافِعٍ وَابْنِ الْفَاكِهِ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَصَحُّ. وَرَوَى رِشْدِينُ بْنُ سَعْدٍ وَغَيْرُهُ هَذَا الْحَدِيثَ عَنِ الضَّحَّاكِ بْنِ شُرَحْبِيلَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ مَرَّةً مَرَّةً. قَالَ وَلَيْسَ هَذَا بِشَىْءٍ وَالصَّحِيحُ مَا رَوَى ابْنُ عَجْلاَنَ وَهِشَامُ بْنُ سَعْدٍ وَسُفْيَانُ الثَّوْرِىُّ وَعَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை (கழுவி) ஒளூ செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்தை உமர்(ரலி), ஜாபிர்(ரலி), புரைதா(ரலி), அபூராபிவு(ரலி), இப்னுல் பாகிஹ்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளனர்; இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் தான் அவற்றில் மிகவும் ஆதாரப்பூர்வமானதும், அழகியதுமாகும் என அபூஈஸா கூறுகிறேன். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை ஒளூ செய்ததாக உமர்(ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. (அதன் அறிவிப்பாளர் வரிசை சரி இல்லாததால்) அது ஆதாரப்பூர்வமானது அல்ல. இப்னு அப்பாஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படுவதே ஸஹீஹ் ஆகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, அஹ்மத், நஸயீ, அபூதாவூது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 43
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالاَ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَابِتِ بْنِ ثَوْبَانَ قَالَ حَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ هُوَ الأَعْرَجُ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ ثَوْبَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ وَهُوَ إِسْنَادٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى هَمَّامٌ عَنْ عَامِرٍ الأَحْوَلِ عَنْ عَطَاءٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا ».
”நபி(ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைக் (கழுவி) ஒளூ செய்துள்ளார்கள்” என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ஜாபிர்(ரலி) வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய ஹதீஸை அப்துல்லாஹ் இப்னுல் பழ்லு வாயிலாக இப்னு ஸவ்பான் என்பவர் அறிவிக்கிறார். இந்த வழியாகத் தவிர வேறு வழிகளில் இதனை நாம் அறியவில்லை; எனினும் இது ஹஸன், ஸஹீஹ் என்ற உயர்ந்த அறிவிப்பாளர் வரிசையாகும், என்று அபூஈஸா கூறுகிறேன். நபி(ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை ஒளூ செய்ததாகவும் அபூஹுரைரா வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதி கூறுவதுபோல் இன்றி அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவிக்க புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 44
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ سُفْيَانَ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى حَيَّةَ عَنْ عَلِىٍّ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَائِشَةَ وَالرُّبَيِّعِ وَابْنِ عُمَرَ وَأَبِى أُمَامَةَ وَأَبِى رَافِعٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَمُعَاوِيَةَ وَأَبِى هُرَيْرَةَ وَجَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِىٍّ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عَلِىٍّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْوُضُوءَ يُجْزِئُ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ أَفْضَلُ وَأَفْضَلُهُ ثَلاَثٌ وَلَيْسَ بَعْدَهُ شَىْءٌ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ لاَ آمَنُ إِذَا زَادَ فِى الْوُضُوءِ عَلَى الثَّلاَثِ أَنْ يَأْثَمَ. وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَزِيدُ عَلَى الثَّلاَثِ إِلاَّ رَجُلٌ مُبْتَلًى.
”நபி(ஸல்) அவர்கள் மும்மூன்று தடவை (கழுவி) ஒளூ செய்தார்கள்” என்று அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உஸ்மான்(ரலி), ஆயிஷா(ரலி), ருபைய்யி(ரலி), இப்னு உமர்(ரலி), அபூஉமாமா(ரலி), அபூராபிவு(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), முஆவியா(ரலி), அபூஹுரைரா(ரலி), ஜாபிர்(ரலி), அப்துல்லாஹ் இப்னுஸைத்(ரலி), உபை இப்னு கஃபு(ரலி) வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது. எனினும் அலி(ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுவதால் இதுவே மிகவும் ஆதாரப்பூர்வமானதும், அழகியதுமாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். ஒவ்வொரு தடவை ஒளூ செய்வது போதுமாகும். இரண்டிரண்டு முறை ஒளூ செய்வது அதைவிட சிறந்ததாகும். மும்மூன்று தடவை ஒளூ செய்வது அதைவிடவும் சிறந்ததாகும். அதற்கு மேல் எதுவுமில்லை என்பதே அறிஞர்களின் கருத்தாகும். மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்துபவன் குற்றாவாளியாவான் என்று நான் அஞ்சுகிறேன் என இப்னுல் முபாரக் குறிப்பிட்டார்கள். (வஸ்வாஸ் போன்ற மன நோயால்) பீடிக்கப்பட்டவனைத் தவிர வேறெவரும் மூன்று தடவைக்குமேல் அதிகமாக்கமாட்டார்கள் என்று அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. உஸ்மான்(ரலி) வழியாக இந்த ஹதீஸை முஸ்லிம், அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்)
திர்மிதி - ஹதீஸ் எண்: 45
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِىُّ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ ثَابِتِ بْنِ أَبِى صَفِيَّةَ قَالَ قُلْتُ لأَبِى جَعْفَرٍ حَدَّثَكَ جَابِرٌ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلاَثًا ثَلاَثًا قَالَ نَعَمْ.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை, இரண்டிரண்டு தடவை, மும்மூன்று தடவை (கழுவி) ஒளூ செய்திருப்பதாக ஜாபிர்(ரலி) அவர்கள் உம்மிடம் கூறி இருக்கிறார்களா? என்று அபூஜஃபரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆம்!’ என்றனர், என்று ஸாபித் இப்னு அபீஸபிய்யா அறிவிக்கிறார். (குறிப்பு : இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஷரீக் இப்னு அப்துல்லாஹ் என்பவர் நிறைய தவறுதலாகக் கூறுபவர் என்பதால் இது பலவீனமானதாகும். இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 46
قَالَ أَبُو عِيسَى وَرَوَى وَكِيعٌ هَذَا الْحَدِيثَ عَنْ ثَابِتِ بْنِ أَبِى صَفِيَّةَ قَالَ قُلْتُ لأَبِى جَعْفَرٍ حَدَّثَكَ جَابِرٌ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ مَرَّةً مَرَّةً قَالَ نَعَمْ. حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ وَقُتَيْبَةُ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ثَابِتِ بْنِ أَبِى صَفِيَّةَ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ شَرِيكٍ لأَنَّهُ قَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ هَذَا عَنْ ثَابِتٍ نَحْوَ رِوَايَةِ وَكِيعٍ. وَشَرِيكٌ كَثِيرُ الْغَلَطِ وَثَابِتُ بْنُ أَبِى صَفِيَّةَ هُوَ أَبُو حَمْزَةَ الثُّمَالِىُّ.
இதே ஹதீஸ் (ஷரீக் வழியாக இல்லாமல்) வகீவு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஷரீக் உடைய ஹதீஸைவிட இது ஆதாரப்பூர்வமானது. ஏனெனில் இது பல்வேறு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷரீக் என்பவர் அதிக அளவில் தவறுதலாகக் கூறுபவராவர் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 47
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَمَسَحَ بِرَأْسِهِ وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ ذُكِرَ فِى غَيْرِ حَدِيثٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ بَعْضَ وُضُوئِهِ مَرَّةً وَبَعْضَهُ ثَلاَثًا. وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِى ذَلِكَ لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يَتَوَضَّأَ الرَّجْلُ بَعْضَ وُضُوئِهِ ثَلاَثًا وَبَعْضَهُ مَرَّتَيْنِ أَوْ مَرَّةً.
”நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்தபோது தங்களின் முகத்தை மூன்று தடவைகளும், தங்களின் இருகரங்களை இரண்டிரண்டு தடவைகளும் கழுவி, தலைக்கு மஸஹ் செய்து, தங்களின் கால்களை இரண்டிரண்டு தடவைகள் கழுவினார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். நபி(ஸல்) அவர்கள் சில உறுப்புகளை ஒரு தடவையும், சில உறுப்புகளை மூன்று தடவைகளும் கழுவியதாக ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது; ஒரு மனிதன் சில உறுப்புகளை மூன்ரு தடவையும் சில உறுப்புகளை இரண்டு அல்லது ஒரு தடவையும் (கழுவி) ஒளூ செய்வதால் தவறில்லை என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 48
حَدَّثَنَا هَنَّادٌ وَقُتَيْبَةُ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى حَيَّةَ قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ حَتَّى أَنْقَاهُمَا ثُمَّ مَضْمَضَ ثَلاَثًا وَاسْتَنْشَقَ ثَلاَثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَذِرَاعَيْهِ ثَلاَثًا وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً ثُمَّ غَسَلَ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَامَ فَأَخَذَ فَضْلَ طَهُورِهِ فَشَرِبَهُ وَهُوَ قَائِمٌ ثُمَّ قَالَ أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ كَانَ طُهُورُ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالرُّبَيِّعِ وَعَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ وَعَائِشَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ.
அலி(ரலி) அவர்கள் ஒளூ செய்தபோது தன் முன்கைகளை நன்கு சுத்தமாகும் வரை கழுவினார்கள். பின்னர் மூன்று முறை வாய் கொப்பளித்து, மூன்றுமுறை மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள்; பின்னர் தங்கள் முகத்தை மூன்று தடவை கழுவினார்கள்; தங்கள் கைகளைமுழங்கை வரை மூன்று தடவை கழுவினார்கள். தங்கள் தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்தார்கள்; பின்னர் கரண்டை வரை தங்கள் கால்களைக் கழுவினார்கள். பின்னர் எழுந்து ஒளூ செய்து எஞ்சிய தண்ணீரை எடுத்து நின்ற நிலையில் குடித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களின் ஒளூ எவ்வாறு இருந்தது என்று உங்களுக்குக் காட்ட விரும்பினேன்” என்று குறிப்பிட்டார்கள் என்று அபுஹய்யா அறிவிக்கிறார். இந்த கருத்து உஸ்மான்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), ருபைய்யீ(ரலி), அப்துல்லாஹ் இப்னு உனைஸ்(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது; என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 49
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ عَبْدِ خَيْرٍ ذَكَرَ عَنْ عَلِىٍّ مِثْلَ حَدِيثِ أَبِى حَيَّةَ إِلاَّ أَنَّ عَبْدَ خَيْرٍ قَالَ كَانَ إِذَا فَرَغَ مِنْ طُهُورِهِ أَخَذَ مِنْ فَضْلِ طَهُورِهِ بِكَفِّهِ فَشَرِبَهُ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِىٍّ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِىُّ عَنْ أَبِى حَيَّةَ وَعَبْدِ خَيْرٍ وَالْحَارِثِ عَنْ عَلِىٍّ وَقَدْ رَوَى زَائِدَةُ بْنُ قُدَامَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِىٍّ رضى الله عنه حَدِيثَ الْوُضُوءِ بِطُولِهِ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ فَأَخْطَأَ فِى اسْمِهِ وَاسْمِ أَبِيهِ فَقَالَ مَالِكُ بْنُ عُرْفُطَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِىٍّ. قَالَ وَرُوِىَ عَنْ أَبِى عَوَانَةَ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِىٍّ. قَالَ وَرُوِىَ عَنْهُ عَنْ مَالِكِ بْنِ عُرْفُطَةَ مِثْلَ رِوَايَةِ شُعْبَةَ وَالصَّحِيحُ خَالِدُ بْنُ عَلْقَمَةَ.
இதே ஹதீஸ் அப்துகைர் வழியாக இங்கே கூறப்படுகிறது. எனினும் இந்த ஹதீஸில், “நபி(ஸல்) அவக்ரள் ஒளூ செய்து முடித்ததும் எஞ்சிய தண்ணீரை ஒருகையில் எடுத்து அதைக் குடிப்பவர்களாக இருந்தனர்” என்று கூறப்படுகிறது. இந்த ஹதீஸ் ஹஸன், என்ற தரத்திலமைந்ததாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அறிவிப்பாளர் சம்பந்தப்பட்ட விபரங்கள் மொழி பெயர்க்காது விடப்பட்டுள்ளது. அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 50
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ الْجَهْضَمِىُّ وَأَحْمَدُ بْنُ أَبِى عُبَيْدِ اللَّهِ السَّلِيمِىُّ الْبَصْرِىُّ قَالاَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنِ الْحَسَنِ بْنِ عَلِىٍّ الْهَاشِمِىِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « جَاءَنِى جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ. قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْهَاشِمِىُّ مُنْكَرُ الْحَدِيثِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى الْحَكَمِ بْنِ سُفْيَانَ وَابْنِ عَبَّاسٍ وَزَيْدِ بْنِ حَارِثَةَ وَأَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ. وَقَالَ بَعْضُهُمْ سُفْيَانُ بْنُ الْحَكَمِ أَوِ الْحَكَمُ بْنُ سُفْيَانَ وَاضْطَرَبُوا فِى هَذَا الْحَدِيثِ.
ஜிப்ரயீல் (அலை) என்னிடம் வந்து “முஹம்மதே! நீர் ஒளூ செய்ததும் (மர்மஸ்தானத்தில்) தண்ணீரைத் தெளித்துக்கொள்” என்று கூறினார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இது ‘கரீப்’ என்ற ஹதீஸாகும். (இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹஸன் இப்னு அலி அல்ஹாஷிமீ என்பவரைப் பற்றி முஹம்மத் (என்ற புஹாரி இமாம்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘அவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத் தக்கவை’ என்று கூறினார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். இந்தக் கருத்து அபுல் ஹகம் இப்னு ஸுப்யான், இப்னு அப்பாஸ்(ரலி), ஸைது இப்னு ஹாரிஸா(ரலி), அபூஸயீது குத்ரீ(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. சிலர் (அபுல்ஹகம் இப்னு ஸுப்யான் என்பதற்கு பதில்) ஸுப்யான் இப்னுல் ஹகம் என்றும், ஹகம் இப்னு ஸுப்யான் என்றும் கூறி இந்த ஹதீஸில் குழம்பியுள்ளனர் என்று அபூஈஸா கூறுகிறேன்.,
திர்மிதி - ஹதீஸ் எண்: 51
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنِ جَعْفَرٍ عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ ». قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ « إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ ».
”குற்றங்களை அழித்து, அந்தஸ்தை உயர்த்தும் காரியம் ஒன்றை நான் உங்களுக்குக் கூறட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். “அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று (நபித்தோழர்கள்) கூறினார்கள். (கடும் குளிர் போன்ற) சிரமங்களின் போதும் ஒளூவை பூரணமாகச் செய்தல், பள்ளிவாசல்களை நோக்கி அதிகம் நடந்து செல்லல், ஒரு தொழுகைக்குப் பின் மறு தொழுகையை எதிர்பார்த்திருத்தல் ஆகியவைகளே அந்தக் காரியங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு இதுதான் மாபெரும் போராட்டமாகும் என்று குறிப்பிட்டார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 52
وَحَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلاَءِ نَحْوَهُ. وَقَالَ قُتَيْبَةُ فِى حَدِيثِهِ « فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ فَذَلِكُمُ الرِّبَاطُ ». ثَلاَثًا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَعَبِيدَةَ وَيُقَالُ عُبَيْدَةُ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِشٍ الْحَضْرَمِىِّ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِى هُرَيْرَةَ فِى هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ يَعْقُوبَ الْجُهَنِىُّ الْحُرَقِىُّ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ.
51-வது ஹதீஸுடன் ‘இதுதான் மாபெரும் போராட்டம் என்ற வார்த்தையை மூன்று தடவை நபி(ஸல்) கூறியதாக இங்கே கூறப்படுகிறது. இந்தக் கருத்து அலீ(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அபீதா(ரலி), ஆயிஷா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஆயிஷா(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. அபூஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலுள்ளதாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ, முஅத்தா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 53
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعِ بْنِ الْجَرَّاحِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ زَيْدِ بْنِ حُبَابٍ عَنْ أَبِى مُعَاذٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- خِرْقَةٌ يُنَشِّفُ بِهَا بَعْدَ الْوُضُوءِ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَيْسَ بِالْقَائِمِ وَلاَ يَصِحُّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى هَذَا الْبَابِ شَىْءٌ. وَأَبُو مُعَاذٍ يَقُولُونَ هُوَ سُلَيْمَانُ بْنُ أَرْقَمَ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ.
ஒளூ செய்தபின் துடைத்துக் கொள்வதற்கென்று நபி(ஸல்) அவர்களிடம் கைக்குட்டை ஒன்று இருந்தது என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து முஆத் இப்னு ஜபல் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன். (அது வருமாறு)
திர்மிதி - ஹதீஸ் எண்: 54
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ عَنْ عُتْبَةَ بْنِ حُمَيْدٍ عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- إِذَا تَوَضَّأَ مَسَحَ وَجْهَهُ بِطَرَفِ ثَوْبِهِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ ضَعِيفٌ. وَرِشْدِينُ بْنُ سَعْدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ الإِفْرِيقِىُّ يُضَعَّفَانِ فِى الْحَدِيثِ. وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَمَنْ بَعْدَهُمْ فِى التَّمَنْدُلِ بَعْدَ الْوُضُوءِ وَمَنْ كَرِهَهُ إِنَّمَا كَرِهَهُ مِنْ قِبَلِ أَنَّهُ قِيلَ إِنَّ الْوَضُوءَ يُوزَنُ. وَرُوِىَ ذَلِكَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَالزُّهْرِىِّ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِىُّ حَدَّثَنَا جَرِيرٌ قَالَ حَدَّثَنِيهِ عَلِىُّ بْنُ مُجَاهِدٍ عَنِّى وَهُوَ عِنْدِى ثِقَةٌ عَنْ ثَعْلَبَةَ عَنِ الزُّهْرِىِّ قَالَ إِنَّمَا كُرِهَ الْمِنْدِيلُ بَعْدَ الْوُضُوءِ لأَنَّ الْوَضُوءَ يُوزَنُ.
நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்ததும் தன் ஆடையின் ஓரத்தால் முகத்தைத் துடைத்துக் கொள்வதை நான் பார்த்ஹ்டிருக்கிறேன்” என்று முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவிக்கிறார்கள். இது ‘கரீப்’ என்ற வகையிலமைந்த ஹதீஸாகும். மேலும் இது பலவீனமானதுமாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ரிஷ்தீன் இப்னு ஸஃது என்பவரும், அப்துர்ரஹ்மான் இப்னு ஸியாத் இப்னு அன்வும் என்பவரும் ஹதீஸ் கலையில் பலவீனர்களாக கருதப்படுபவர்கள். ஆயிஷா(ரலி) வழியாக அறிவிக்கப்படுகின்ற ஹதீஸும் ஆதாரப் பூர்வமானது அல்ல. ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் ஸுலைமான் இப்னு அர்கம் என்ற அபூமுஆத் இடம்பெறுகிறார். ஹதீஸ்கலை வல்லுனர்களிடம் இவர் பல வீனமானவராகக் கருதப்படுபவர் என்று அபூஈஸா கூறுகிறேன். நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களில் சிலர் ஒளூவுக்குப்பின் (துடைத்துக் கொள்ள) கைக்குட்டையைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஒளூவுக்குப்பின் கைக்குட்டை பயன்படுத்தலாகாது என்போர் “(மறுமையில்) ஒளூ (செய்த நீர்) எடை போடப்படும்” என்ற காரணத்தினாலேயே ‘கூடாது’ என்கின்றனர். ஜுஹ்ரீ அவர்கள் இதைக் கூறியுள்ளனர்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 55
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عِمْرَانَ الثَّعْلَبِىُّ الْكُوفِىُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ الدِّمَشْقِىِّ عَنْ أَبِى إِدْرِيسَ الْخَوْلاَنِىِّ وَأَبِى عُثْمَانَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ اجْعَلْنِى مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِى مِنَ الْمُتَطَهِّرِينَ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَنَسٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ قَدْ خُولِفَ زَيْدُ بْنُ حُبَابٍ فِى هَذَا الْحَدِيثِ. قَالَ وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ وَغَيْرُهُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِى إِدْرِيسَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ عُمَرَ. وَعَنْ رَبِيعَةَ عَنْ أَبِى عُثْمَانَ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ عُمَرَ. وَهَذَا حَدِيثٌ فِى إِسْنَادِهِ اضْطِرَابٌ وَلاَ يَصِحُّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى هَذَا الْبَابِ كَبِيرُ شَىْءٍ. قَالَ مُحَمَّدٌ وَأَبُو إِدْرِيسَ لَمْ يَسْمَعْ مِنْ عُمَرَ شَيْئًا.
யார் ஒளூ செய்து, அதை அழகிய முறையில் செய்து அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு அல்லாஹும்மஜ் அல்னீமினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’ என்று கூறினால் சுவர்க்கத்தின் எட்டுவாயில்களும் அவனுக்காகத் திறக்கப்படும். அவன் விரும்பும் எந்த வாயில் வழியாகவும் அவன் அதில் நுழையலாம் என நபி(ஸல்) கூறியதாக உமர்(ரலி) அற்விக்கிறார்கள். இந்தக் கருத்து அனஸ்(ரலி), உக்பா இப்னு ஆமிர்(ரலி) வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. இந்த ஹதீஸ் உமர்(ரலி) வழியாக உக்பா இப்னு ஆமிர் அறிவித்து, அவர் வழியாக அபூஇத்ரீஸ் அறிவிப்பதாகவும், உமர்(ரலி) வழியாக அபூஇத்ரீஸ் நேரடியாக அற்விப்பதாகவும் முரண்பட்டுக் கூறப்படுகிறாது. மேலும் இந்த ஹதீஸ் உமர்(ரலி) வழியாக ஜுபர், அவர் வழியாக அபூ உஸ்மான், அவர் வழியாக ரபீஆ அறிவிப்பதாகவும், உமர்(ரலி) வழியாக அபூஉஸ்மான் நேரடியாக அறிவிப்பதாகவும் கூறப்ப்டுகிறது. என்வே இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடரில் குழப்பம் உள்ளது. இந்தக் கருத்தில் எந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. முஹம்மது (இமாம் புஹாரி) அவர்கள் அபூஇத்ரீஸ் உமர்(ரலி) அவர்களிடம் எதையும் கேட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அல்லாஹும்மஜ்அல்னீ மினத்தவ்வாபீன், வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன், என்ற பிற்பகுதி இல்லாமல் முற்பகுதி மட்டும் முஸ்லிம், அபூதாவூத் இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது. திர்மிதி இமாம் குறிப்பிடும் குழப்பம் இல்லாமல் உறுதியான வேறு அறிவிப்பாளர் தொடருடன் அந்த ஹதீஸ் அமைந்துள்ளது.) ஹதீஸில் இடம்பெற்ற துஆவின் பொருள் வருமாறு; வணக்கத்திற்குரியவன் அல்லஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணியானவன் எவனுமில்லை; என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இறைவா பாவ மன்னிப்புக்கோரி திருந்தியவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! தூய்மையானவர்களிலும் என்னை ஆக்குவாயாக!
திர்மிதி - ஹதீஸ் எண்: 56
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَبِى رَيْحَانَةَ عَنْ سَفِينَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَابِرٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَفِينَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَأَبُو رَيْحَانَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ مَطَرٍ. وَهَكَذَا رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْوُضُوءَ بِالْمُدِّ وَالْغُسْلَ بِالصَّاعِ. وَقَالَ الشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ لَيْسَ مَعْنَى هَذَا الْحَدِيثِ عَلَى التَّوْقِيتِ أَنَّهُ لاَ يَجُوزُ أَكْثَرُ مِنْهُ وَلاَ أَقَلُّ مِنْهُ وَهُوَ قَدْرُ مَا يَكْفِى.
நபி(ஸல்) அவர்கள் ஒருமுத்து (இருகை கொள்ளளவு) தண்ணீரில் ஒளூ செய்துவிடுபவர்களாவும், ஒரு ‘ஸாவு’ (இரு கைக்கொள்ளவு தண்ணீரின் நான்கு மடங்கு) தண்ணீரில் குளித்துவிடுபவர்களாவும் இருந்தார்கள் என ஸபீனா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ஆயிஷா(ரலி), ஜாபி(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. ஸபீனா வழியாக அறிவிக்கப்படும் (மேற்கூறிய) ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற அந்தஸ்து பெற்றதாகும். அறிஞர்களில் சிலர் ஒரு முத்து அளவில் ஒளூ செய்ய வேண்டுமென்றும், ஒரு ‘ஸாவு’ அளவில் குளிக்க வேண்டுமெனவும் கருதுகின்றனர். “இந்த ஹதீஸின் கருத்து இவ்வளவு தண்ணீரில் தான் செய்யவேண்டுமென்பதோ, இதைவிட அதிக அளவோ, குறைந்த அளவோ கூடாது என்பதோ அல்ல. இந்த அளவு போதுமானது என்பதே இதன் பொருளாகும்” என ஷாபியீ, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றனர், என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 57
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِىُّ حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ عَنِ الْحَسَنِ عَنْ عُتَىِّ بْنِ ضَمْرَةَ السَّعْدِىِّ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ الْوَلْهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُبَىِّ بْنِ كَعْبٍ حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِىِّ وَالصَّحِيحِ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ لأَنَّا لاَ نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ خَارِجَةَ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْحَسَنِ قَوْلَهُ وَلاَ يَصِحُّ فِى هَذَا الْبَابِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- شَىْءٌ. وَخَارِجَةُ لَيْسَ بِالْقَوِىِّ عِنْدَ أَصْحَابِنَا وَضَعَّفَهُ ابْنُ الْمُبَارَكِ.
ஒளூவுக்கென்று ஒரு ஷைத்தான் இருக்கிறான். ‘உலஹான், என்று அவன் குறிப்பிடப்படுவான். எனவே தண்ணீரில் வஸ்வாஸ் (மன ஊசலாட்டம்) ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்) கூறியதாக உபை இப்னுகஃபு (ரலி) அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), அப்துல்லாஹ் இப்னு முகப்பால்(ரலி) அவர்கள் மூலகமாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது. உபை இப்னு கஃபு(ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் ‘கரீப்’ என்ற நிலையில் உள்ளதாகும். ஹதீஸ் கலைவல்லுனர்களிடம் இது ஆதாரப்பூர்வமானதும் பலமானதும் அல்ல. ‘காரிஜா’ என்பவரைத் தவிர வேறு எவரும் இதை அறிவிக்கவில்லை. இந்தக் கருத்தில் அமைந்த எந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. ‘காரிஜா’ என்பவர் நம்மவர்களிடம் பலமானவர் அல்ல. இப்னுல் முபாரக் இவரைப் பலவீனப்படுத்தியுள்ளார்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 58
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِىُّ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ طَاهِرًا أَوْ غَيْرَ طَاهِرٍ. قَالَ قُلْتُ لأَنَسٍ فَكَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ أَنْتُمْ قَالَ كُنَّا نَتَوَضَّأُ وُضُوءًا وَاحِدًا. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ حُمَيْدٍ عَنْ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَالْمَشْهُورُ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ حَدِيثُ عَمْرِو بْنِ عَامِرٍ الأَنْصَارِىِّ عَنْ أَنَسٍ. وَقَدْ كَانَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَرَى الْوُضُوءَ لِكُلِّ صَلاَةٍ اسْتِحْبَابًا لاَ عَلَى الْوُجُوبِ.
நபி(ஸல்) அவர்கள் ஒளூவுடனிருந்தாலும், ஒளூவுடனில்லாவிட்டாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தனர். அப்போது நான் அனஸ்(ரலி) அவர்களிடம் (நபித்தோழர்களாகிய) நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நாங்கள் ஒரே ஒளூதான் செய்வோம்” என்று பதிலளித்தார்கள் என ஹுமைத் அறிவிக்கிறார். அனஸ் வழியாக ஹுமைத் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஹஸன், கரீப் என்ற வகையைச் சேர்ந்ததாகும். ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் ஏற்புடையது அனஸ்(ரலி) வழியாக அம்ரு இப்னு ஆமிர் அல் அன்சாரி அறிவிக்கும் ஹதீஸாகும். (அது 60வது ஹதீஸாக வருகிறது) என அபூஈஸா கூறுகிறேன். அறிஞர்களில் சிலர் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்வது விரும்பத்தக்கதுதான். கட்டாயமானதல்ல என்று கருதுகின்றனர் என அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 59
وَقَدْ رُوِىَ فِى حَدِيثٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ بِهِ عَشْرَ حَسَنَاتٍ ». قَالَ وَرَوَى هَذَا الْحَدِيثَ الإِفْرِيقِىُّ عَنْ أَبِى غُطَيْفٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. حَدَّثَنَا بِذَلِكَ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِىُّ عَنِ الإِفْرِيقِىِّ. وَهُوَ إِسْنَادٌ ضَعِيفٌ. قَالَ عَلِىُّ بْنُ الْمَدِينِىِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ذُكِرَ لِهِشَامِ بْنِ عُرْوَةَ هَذَا الْحَدِيثُ فَقَالَ هَذَا إِسْنَادٌ مَشْرِقِىٌّ. قَالَ سَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ مَا رَأَيْتُ بِعَيْنِى مِثْلَ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ.
ஒளூவுடனிருக்கும்போதே யார் (மீண்டும்) ஒளூ செய்கிறாரோ அதன் காரணமாக அல்லாஹ் அவருக்கும் பத்து நன்மைகள் எழுதுகின்றான் என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். ”இதில் இடம் பெறும் அல் இப்ரீக்கீ (ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்) என்பவர் பலவீனமானவர். எஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் அவர்களும் இக்கருத்தைக் கூறியுள்ளனர். இந்த எஹ்யா இப்னு ஸயீத் அவர்களைப் போல் நான் என் கண்களால் எவரையும் கண்டதில்லை” என்று அஹ்மத் இப்னு ஹம்பல் குறிப்பிடுகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 60
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ مَهْدِىٍّ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدٍ عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ الأَنْصَارِىِّ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ. قُلْتُ فَأَنْتُمْ مَا كُنْتُمْ تَصْنَعُونَ قَالَ كُنَّا نُصَلِّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ نُحْدِثْ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
”நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர்” என அனஸ்(ரலி) கூறிய போது நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?” என்று கேட்டேன். “ஒளூவை முறிக்கின்ற காரியங்கள் எங்களிடம் ஏற்படாதவரை ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளை நாங்கள் தொழுவோம்” என்று அனஸ்(ரலி) கூறியதாக அம்ரு இப்னு ஆமிர் அல் அன்ஸாரி அறிவிக்கிறார். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். ஹுமைத் என்பவர் அனஸ்(ரலி) வாயிலாக அறிவிக்கும் (இதே) ஹதீஸ் ஹஸன், கரீப் என்ற நிலையிலுள்ளதாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 61
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ. فَقَالَ عُمَرُ إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ فَعَلْتَهُ. قَالَ « عَمْدًا فَعَلْتُهُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَرَوَى هَذَا الْحَدِيثَ عَلِىُّ بْنُ قَادِمٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِىِّ وَزَادَ فِيهِ « تَوَضَّأَ مَرَّةً مَرَّةً ». قَالَ وَرَوَى سُفْيَانُ الثَّوْرِىُّ هَذَا الْحَدِيثَ أَيْضًا عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ. وَرَوَاهُ وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ. قَالَ وَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ وَغَيْرُهُ عَنْ سُفْيَانَ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مُرْسَلاً وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ وَكِيعٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُصَلِّى الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ يُحْدِثْ وَكَانَ بَعْضُهُمْ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ اسْتِحْبَابًا وَإِرَادَةَ الْفَضْلِ. وَيُرْوَى عَنِ الإِفْرِيقِىِّ عَنْ أَبِى غُطَيْفٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ بِهِ عَشْرَ حَسَنَاتٍ ». وَهَذَا إِسْنَادٌ ضَعِيفٌ. وَفِى الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ بِوُضُوءٍ وَاحِدٍ.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். (மக்கா) வெற்றியின் போது ஒரு ஒளூவின் மூலம் தங்களின் எல்லாத்தொழுகைகளையும் தொழுதார்கள். அப்போது (கால்களைக்கழுவுவதற்கு பதில்) தங்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் “இதற்கு முன் செய்திராத ஒரு செயலை நீங்கள் செய்கிறீர்களே! என்று கேட்டார்கள். “நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்தேன்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். மேற்கூறிய அறிவிப்பாளர் வரிசையில் ஸுப்யான் ஸவ்ரீ வழியாக அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ என்பவர் அறிவிப்பதாக உள்ளது. ஸுப்யான் ஸவ்ரீ வழியாக அலி இப்னு காதிம் என்பவரும் இதை அறிவிக்கிறார். இந்த அறிவிப்பில் (தங்கள் உறுப்புகளை ஒவ்வொரு தடவை (கழுவி) ஒளூ செய்தார்கள் என்ற வரி அதிகமாக உள்ளது. (மேற்கூறிய ஹதீஸ் அல்கமா வழியாக ஸுப்யான் அறிவிப்பதாக உள்ளது.) இதே ஹதீஸை முஹாரிப் இப்னு ஹ்டிஸார் வழியாகவும் ஸுப்யான் அறிவிக்கிறார்கள். (மேற்கூறிய ஹதீஸ்கள் புரைதா(ரலி) என்ற நபித்தோழர் அறிவிப்பதாக அமைந்துள்ளது. புரைதா(ரலி) அவர்களின் மகன் ஸல்மான் (இவர் நபித்தோழர் அல்ல) நேரடியாக அறிவிப்பதுபோல் முர்ஸலாகவும் இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ அவர்கள் அறிடித்துள்ளார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். ஒளூ முறியாமலிருக்கும்போது ஒரே ஒளூவின் மூலம் பல தொழுகைகள் தொழலாம்; என்பதே அறிஞர் உலகின் முடிவாகும். விரும்பத்தக்கது; சிறந்தது என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்வதை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் ஒரே ஒளூவில் தொழுததாக ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த 61வது ஹதீஸை முஸ்லீம், அபூதாவூத், இப்னுமாஜா ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 62
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ أَبِى الشَّعْثَاءِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ حَدَّثَتْنِى مَيْمُونَةُ قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ أَنْ لاَ بَأْسَ أَنْ يَغْتَسِلَ الرَّجُلُ وَالْمَرْأَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأُمِّ هَانِئٍ وَأُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ وَأُمِّ سَلَمَةَ وَابْنِ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ جَابِرُ بْنُ زَيْدٍ.
’நானும், நபி(ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுபவர்களாக இருந்தோம்’ என்று அன்னை மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும்; ஆணும், பெண்ணும் ஒரு பாத்திரத்தில் குளிப்பது தவறில்லை என்பதே அறிஞர்களில் பெரும்பகுதியினரின் முடிவாகும். இந்தக்கருத்து அலி(ரலி), ஆயிஷா(ரலி), அனஸ்(ரலி), உம்முஹானி(ரலி), உம்மு ஸுமய்யாஅல்ஜுஹனிய்யா(ரலி), உம்முஸலமா(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது. (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அபுஷ்ஷஃஸா என்பவர் இடம் பெறுகிறார்.) இந்த அபுஷ்ஷஃஸாவுடைய இயற்பெயர் ஜாபிர் இப்னு ஸைத் என்பதாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 63
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ سُلَيْمَانَ التَّيْمِىِّ عَنْ أَبِى حَاجِبٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِى غِفَارٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنْ فَضْلِ طَهُورِ الْمَرْأَةِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ. قَالَ أَبُو عِيسَى وَكَرِهَ بَعْضُ الْفُقَهَاءِ الْوُضُوءَ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ. وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ كَرِهَا فَضْلَ طَهُورِهَا وَلَمْ يَرَيَا بِفَضْلِ سُؤْرِهَا بَأْسًا.
பெண் ஒளூ செய்து மீதம் வைத்த தண்ணீரை(ப் பயன்படுத்த) நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று பனீகிபார் வைகயாறவைச் சேர்ந்த நபித்தோழர் ஒருவர் அறிவித்தாக அபூஹாஜிப் அறிவிக்கிறார். இந்தக்கருத்து அப்துல்லாஹ் இப்னு ஸாஜிஸ் என்ற நபித்தோழர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது. பெண் ஒளூ செய்து மீதம் வைத்த தண்ணீரிலும் ஒளூ செய்வதை மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். பெண்கள் ஒளூ செய்து மீதம் வைத்தது மக்ரூஹ் என்றும், அவர்கள் வாய் வைத்து அருந்தி மீதம் வைத்ததில் ஒளூ செய்வதில் தவறில்லை என்று இமாம் அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர், என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் அபூதாவூத், நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 64
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ عَنْ عَاصِمٍ قَالَ سَمِعْتُ أَبَا حَاجِبٍ يُحَدِّثُ عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِىِّ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ. أَوْ قَالَ « بِسُؤْرِهَا ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَأَبُو حَاجِبٍ اسْمُهُ سَوَادَةُ بْنُ عَاصِمٍ. وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِى حَدِيثِهِ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ. وَلَمْ يَشُكَّ فِيهِ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ.
ஒரு ஆண், ஒரு பெண் ஒளூ செய்து மீதம் வைத்ததையோ, அல்லது அவள் அருந்தி மிச்சம் வைத்ததையோ (ஒளூ செய்யப்)பயன்படுத்த நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹகம் இப்னு அம்ரு அல்கிபாரி(ரலி) அறிவித்ததாக அபூஹாஜி குறிப்பிடுகிறார். இது ‘ஹஸன்’ என்ற நிலையிலுள்ள ஹதீஸாகும். அபூஹாஜிப் என்பவரின் இயற்பெயர் ஸவாதா இப்னு ஆஸிம் என்பதாகும். (இந்த ஹதீஸில் ஒளூ செய்து மீதம் வைத்தையோ அல்லது அருந்திமிச்சம் வைத்ததையோ என்று சந்தேகத்திற்கிடமான முறையில் கூறப்படுகிறது.) முஹம்மது இப்னு பஷ்ஷார் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் சந்தேகத்திற்குரிய முறையிலன்றி ஒரு பெண் ஒளூ செய்து மிச்சம் வைத்த தண்ணீர் என்று மட்டும் குறிப்பிடப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 65
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى جَفْنَةٍ فَأَرَادَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يَتَوَضَّأَ مِنْهُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّى كُنْتُ جُنُبًا. فَقَالَ « إِنَّ الْمَاءَ لاَ يُجْنِبُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَمَالِكٍ وَالشَّافِعِىِّ.
நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஒரு பாத்திரத்தில் குளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதில் ஒளூ செய்ய விரும்பியபோது “அல்லாஹ்வின் தூதரே நான் குளிப்புக் கடமையானவளாக இருந்(துகுளித்)தேன்” என்று அந்த மனைவி கூறினார்கள். “அதனால் தண்ணீர் பயன்படுத்தத் தகாததாக ஆகாது” என்று பதில் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். ஸுப்யான் ஸவ்ரீ, மாலிக், ஷாபியீ ஆகியோரின் கருத்தும் இதுவே என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸிமாக் இப்னு ஹர்பு என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவரே. எனினும் இக்ரிமா வாயிலாக இவர் அறிவிப்பவை மட்டும் பலவீனமானவை. இந்த ஹதீஸை இக்ரிமா வாயிலாகவே இவர் அறிவிக்கிறார்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 66
حَدَّثَنَا هَنَّادٌ وَالْحَسَنُ بْنُ عَلِىٍّ الْخَلاَّلُ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِىَ بِئْرٌ يُلْقَى فِيهَا الْحِيَضُ وَلُحُومُ الْكِلاَبِ وَالنَّتْنُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ الْمَاءَ طَهُورٌ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَقَدْ جَوَّدَ أَبُو أُسَامَةَ هَذَا الْحَدِيثَ فَلَمْ يَرْوِ أَحَدٌ حَدِيثَ أَبِى سَعِيدٍ فِى بِئْرِ بُضَاعَةَ أَحْسَنَ مِمَّا رَوَى أَبُو أُسَامَةَ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِى سَعِيدٍ. وَفِى الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ.
”அல்லாஹ்வின் தூதரே! மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத் துண்டுகளும் நாற்றமான பொருட்களும் போடப்படுகின்ற ‘புலா ஆ’ என்ற கிணற்றில் நாங்கள் ஒளூ செய்யலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ‘தண்ணீர், தூய்மைப்படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஸயீத்(ரலி) அறிவிக்கிறார்கள். இது ‘ஹஸன்’ என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஉமாமா அவர்கள் இந்த ஹதீஸை (குழப்பமின்றி) உறுதியான சொற்களால் அறிவிக்கிறார்கள். அபீஸயீத்(ரலி) வழியாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகின்றது. எனினும் அபூஉஸாமாவைப் போல் அவ்வளவு அழகிய முறையில் மற்றவர்கள் அறிவிக்கவில்லை. இந்தக்கருத்து இப்னு அப்பாஸ்(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 67
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يُسْأَلُ عَنِ الْمَاءِ يَكُونُ فِى الْفَلاَةِ مِنَ الأَرْضِ وَمَا يَنُوبُهُ مِنَ السِّبَاعِ وَالدَّوَابِّ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ ». قَالَ عَبْدَةُ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْقُلَّةُ هِىَ الْجِرَارُ وَالْقُلَّةُ الَّتِى يُسْتَقَى فِيهَا. قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يُنَجِّسْهُ شَىْءٌ مَا لَمْ يَتَغَيَّرْ رِيحُهُ أَوْ طَعْمُهُ وَقَالُوا يَكُونُ نَحْوًا مِنْ خَمْسِ قِرَبٍ.
கால்நடைகளும் வன விலங்குகளும் வந்து போகக்கூடிய திறந்த வெளியில் இருக்கும் தண்ணீர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு தண்ணீர் இரண்டு ‘குல்லத்’களை அடைந்துவிட்டால் அசுத்தங்களால் பர்திக்கப்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நிறமும், மணமும் மாறாமலிருந்தால் இரண்டு ‘குல்லத்’ தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்று ஷாபியீ, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். ஐந்து தோல் பாத்திரங்களின் கொள்ளளவு தான் இரண்டு குல்லத்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 68
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِى الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ.
”தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு அதிலிருந்தே எவரும் ஒளூ செய்யக்கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். இந்தக் கருத்து ஜாபிர்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : ‘ஒளூ செய்யக்கூடாது’ என்ற இடத்தில் ‘குளிக்கக்கூடாது’ என்ற வார்த்தை புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 69
حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ ح وَحَدَّثَنَا الأَنْصَارِىُّ إِسْحَاقُ بْنُ مُوسَى حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ مِنْ آلِ ابْنِ الأَزْرَقِ أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِى بُرْدَةَ وَهُوَ مِنْ بَنِى عَبْدِ الدَّارِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ جَابِرٍ وَالْفِرَاسِىِّ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَابْنُ عَبَّاسٍ لَمْ يَرَوْا بَأْسًا بِمَاءِ الْبَحْرِ. وَقَدْ كَرِهَ بَعْضُ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- الْوُضُوءَ بِمَاءِ الْبَحْرِ مِنْهُمُ ابْنُ عُمَرَ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو هُوَ نَارٌ.
’அல்லாஹ்வின் தூதரே! குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம்; நாங்கள் அந்தத் தண்ணீரை ஒளூ செய்யப்பயன்படுத்தினால் தாகத்தால் சிரமப்பட்டுவோம். எனவே கடல் நீரால் ஒளூ செய்யலாமா?’ என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். “கடல் நீர் சுத்தப்படுத்த ஏற்றதாகும்; அதில் செத்தவைகளும் (உண்ண) அனுமதிக்கப்பட்டதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். ஜாபிர்(ரலி), பிராஸீ ஆகியோர் வழியாக இந்தக் கருத்து அறிவிக்கப்படுகிறது. இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். அபூபகரு, உமர், இப்னு அப்பாஸ் மற்றும் நபித்தோழர்களில் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தும் ‘கடல்நீரில் ஒளூ செய்யலாம்’ என்பதே. இப்னு உமர், அப்துல்லாஹ் இப்னு அம்ரு போன்ற சில நபித்தோழர்கள் கடல்நீரில் ஒளூ செய்வதை மக்ரூஹ் என்றனர். “கடல்நீர் (உண்மையில் நீர் அல்ல) அது நெருப்பாகும் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) குறிப்பிட்டுள்ளனர் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 70
حَدَّثَنَا هَنَّادٌ وَقُتَيْبَةُ وَأَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الأَعْمَشِ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ عَنْ طَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ عَلَى قَبْرَيْنِ فَقَالَ « إِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِى كَبِيرٍ أَمَّا هَذَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِى بِالنَّمِيمَةِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَأَبِى مُوسَى وَعَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَبِى بَكْرَةَ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَرَوَى مَنْصُورٌ هَذَا الْحَدِيثَ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ طَاوُسٍ. وَرِوَايَةُ الأَعْمَشِ أَصَحُّ. قَالَ وَسَمِعْتُ أَبَا بَكْرٍ مُحَمَّدَ بْنَ أَبَانَ الْبَلْخِىَّ مُسْتَمْلِى وَكِيعٍ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ الأَعْمَشُ أَحْفَظُ لإِسْنَادِ إِبْرَاهِيمَ مِنْ مَنْصُورٍ.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றனர். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும் குற்றத்திற்கோ இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ இவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்வதில்லை; அதோ அவர் கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்” என்று நபி(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து அபூஹுரைரா(ரலி), அபூமூஸா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸனா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ பக்ரா(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். இந்த ஹதீஸை அஃமஷ் அவர்கள் இப்னு அப்பாஸ் வழியாக தாவூஸ் அறிவிப்பதாகக் கூறுகிறார். இந்த ஹதீஸை மன்ஸுர் அவர்கள் இப்னு அப்பாஸ் வழியாக முஜாஹித் அறிவிப்பதாகக் கூறுகிறார். ‘வகீவு’ அவர்களிடம் இதுபற்றி நான் கேட்டபோது மன்ஸுரைவிட அஃமஷ் அவர்கள் நல்ல நினைவாற்றல் உள்ளவர் என்று பதிலளித்தார்கள் என்று முஹம்மது இப்னு அபான் கூறியதாக அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெறுகிறது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 71
حَدَّثَنَا قُتَيْبَةُ وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ دَخَلْتُ بِابْنٍ لِى عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ عَلَيْهِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَعَائِشَةَ وَزَيْنَبَ وَلُبَابَةَ بِنْتِ الْحَارِثِ وَهِىَ أُمُّ الْفَضْلِ بْنِ عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبِى السَّمْحِ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِى لَيْلَى وَابْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا يُنْضَحُ بَوْلُ الْغُلاَمِ وَيُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ وَهَذَا مَا لَمْ يَطْعَمَا فَإِذَا طَعِمَا غُسِلاَ جَمِيعًا.
(பாலைத்தவிர வேறு) உணவை உட்கொள்ளாத என் மகனை நபி(ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அவன், அவர்கள் மேல் சிறுநீர் கழித்துவிட்டன்; அப்போது நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் செய்து தன் மீது தெளித்துக் கொண்டார்கள்; (கழுவவில்லை) என்று உம்முகைஸ் பிந்து மிஹ்ஸன்(ரலி) அறிவிக்கிறார்கள். அலி(ரலி), ஆயிஷா(ரலி), ஸைனப்(ரலி), அப்பாஸ்(ரலி) அவர்களின் மகள் உம்முல் ஃபழ்லு என்ற லுபாபா பிந்துல் ஹாரிஸ்(ரலி), அபுஸ்ஸம்ஹு(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), அபூலைலா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகிறது. நபித்தோழர்களில் ஏராளமானோரின் முடிவும், அவர்களுக்குப் பின்வந்த தாபியீன்களின் முடிவும், அவர்களுக்கும் பின்வந்த அஹ்மத், இஸ்ஹாக் போன்றோர்களின் முடிவும் இதுதான்; ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தண்ணீர் தெளிக்க வேண்டும்; பெண்குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவ வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். உணவுப் பொருட்களை உட்கொள்ளாத பருவத்துக் குழந்தைகளின் சிறுநீருக்கே இந்த நிலை. உணவு உட்கொள்ளும் குழந்தை எனில் ஆண், பெண் இருபால் குழந்தைகளின் சிறுநீர் பட்டாலும் கழுவப்பட வேண்டும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 72
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِىُّ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا حُمَيْدٌ وَقَتَادَةُ وَثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ فَاجْتَوَوْهَا فَبَعَثَهُمْ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى إِبِلِ الصَّدَقَةِ وَقَالَ « اشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا ». فَقَتَلُوا رَاعِىَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَاسْتَاقُوا الإِبِلَ وَارْتَدُّوا عَنِ الإِسْلاَمِ فَأُتِىَ بِهِمُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ مِنْ خِلاَفٍ وَسَمَرَ أَعْيُنَهُمْ وَأَلْقَاهُمْ بِالْحَرَّةِ. قَالَ أَنَسٌ فَكُنْتُ أَرَى أَحَدَهُمْ يَكُدُّ الأَرْضَ بِفِيهِ حَتَّى مَاتُوا. وَرُبَّمَا قَالَ حَمَّادٌ يَكْدُمُ الأَرْضَ بِفِيهِ حَتَّى مَاتُوا. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ. وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا لاَ بَأْسَ بِبَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ.
’உரைனா’ என்ற கூட்டத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தனர். மதீனா(வின் பருவகாலம்) அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. (அவர்களின் நிலையை அறிந்த) நபி(ஸல்) அவர்கள் ஸகாத் ஒட்டகங்கள் (கட்டப்பட்டு) இருந்க்கும் இடத்திற்கு அவர்களை அனுப்பி “இந்த ஒட்டகங்களின் பாலையும், சிறுநீரையும் அருந்துங்கள்!” என்றனர். அவர்கள் ஒட்டகம் மேய்ப்பவரைக் கொன்றுவிட்டு ஒட்டகத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டதோடு இஸ்லாத்தை விட்டும் மதம் மாறிவிட்டனர். நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் பிடித்து வரப்பட்டனர்; அவர்களின் கைகளும் கால்களும் மாறுகால் மாறுகையாக வெட்டப்பட்டன; அவர்களின் கண்களும் பிடுங்கப்பட்டு வெயிலில் போடப்பட்டனர். மரணிக்கும்வரை தம் வாயால் நிலத்தை நக்கியவர்களாக இருந்ததை நான் கண்டேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். அனஸ்(ரலி) வழியாக பல்வேறு வழிகளில் இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. உண்ண அனுமதிக்கப்பட்டவற்றின் சிறுநீரால் தவறேதுமில்லை என்பதுதான் அறிஞர்களில் பெரும்பான்மையினரின் கருத்தாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 73
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِىُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ غَيْلاَنَ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِىُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ إِنَّمَا سَمَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- أَعْيُنَهُمْ لأَنَّهُمْ سَمَلُوا أَعْيُنَ الرُّعَاةِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْلَمُ أَحَدًا ذَكَرَهُ غَيْرَ هَذَا الشَّيْخِ عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ. وَهُوَ مَعْنَى قَوْلِهِ (وَالْجُرُوحَ قِصَاصٌ ). وَقَدْ رُوِىَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ إِنَّمَا فَعَلَ بِهِمُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- هَذَا قَبْلَ أَنْ تَنْزِلَ الْحُدُودُ.
(மேற்கூறிய ஹதீஸில்) நபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட ஒட்டகம் மேய்ப்பவர்களின் கண்களை அவர்கள் பிடுங்கிய காரணத்தால்தான் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் கண்களைப்பிடுங்கினர்” என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை (எஹ்யா இப்னு கைலான் என்ற பெரியவர் தவிர வேறு எவரும் எஸீத் இப்னு ஸுரைவு வழியாக அறிவிக்காததால் இது ‘கரீப்’ என்ற தரத்திலமைந்ததாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். திருக்குர்ஆனின் 5:45 வசனத்தின் பொருள் இதுவேயாகும். “இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் இறக்கப்படுவதற்கு முந்தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என முஹம்மது இப்னு ஸீரின் அவர்கள் கூறுவதாக அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 74
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ وُضُوءَ إِلاَّ مِنْ صَوْتٍ أَوْ رِيحٍ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
”(காற்று வெளிப்படும்) சப்தம் அல்லது நாற்றம் வெளிப்பட்டால் தவிர ஒளூ(முறிதல்) இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் என்ற கருத்திலமைந்த ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெருகிறது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 75
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا كَانَ أَحَدُكُمْ فِى الْمَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلاَ يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ وَعَلِىِّ بْنِ طَلْقٍ وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ مَسْعُودٍ وَأَبِى سَعِيدٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ الْعُلَمَاءِ أَنْ لاَ يَجِبَ عَلَيْهِ الْوُضُوءُ إِلاَّ مِنْ حَدَثٍ يَسْمَعُ صَوْتًا أَوْ يَجِدُ رِيحًا. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِذَا شَكَّ فِى الْحَدَثِ فَإِنَّهُ لاَ يَجِبُ عَلَيْهِ الْوُضُوءُ حَتَّى يَسْتَيْقِنَ اسْتِيقَانًا يَقْدِرُ أَنْ يَحْلِفَ عَلَيْهِ. وَقَالَ إِذَا خَرَجَ مِنْ قُبُلِ الْمَرْأَةِ الرِّيحُ وَجَبَ عَلَيْهَا الْوُضُوءُ. وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَإِسْحَاقَ.
உங்களில் எவரேனும் பள்ளியில் இருக்கும்(போது) தனது மலப்பாதியில் காற்று வெளிப்படுவதுபோல் உணர்ந்தால், அதன் சப்தத்தை அல்லது நாற்றத்தை உணரும் வரை (ஒளூ செய்வதற்காக) வெளியேற வேண்டாம்” என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு : முஸ்லிம், அபூதாவூதிலும் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 76
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ اللَّهَ لاَ يَقْبَلُ صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
’உங்களில் எவருக்கேனும் (ஹதஸ் எனும்) தொடக்கு ஏற்பட்டுவிட்டால் ஒளூ செய்யாதவரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ், கரீப் எனும் நிலையில் அமைந்த ஹதீஸாகும். இந்தக் கருத்து அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி), அலி இப்னு தல்க்(ரலி), ஆயிஷா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூஸயீத்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. சப்தத்தையோ, நாற்றத்தையோ உணராதவரை ஒளூ அவசியமில்லை என்பதே அறிஞர்களின் கூற்றாகும். “ஹதஸ்” ஏற்பட்டதா என்று ஒருவன் சந்தேகப்பட்டால், ஹதஸ் ஏற்பட்டதாக சத்தியம் செய்யும் அளவுக்கு அவனுக்கு உறுதி ஏற்பட்டால் தவிர அவன் மீது ஒளூ கடமை இல்லை’ என்ரு அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்கள் குறிப்பிட்டார்கள். மேலும் அவர்கள் பெண்ணுடைய பிறப்புறுப்பிலிருந்து காற்று வெளிப்பட்டால் அவள் மீதும் ஒளூ கடமையாகும் என்றும் கூறினார்கள். ஷாபி, இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுதான் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : மேற்கூறிய ஹதீஸை அபூதாவூத் அவர்களும், ஏறத்தாழ இந்த ஹதீஸின் கருத்தை புகாரி, முஸ்லிமும் அறிவித்துள்ளனர்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 77
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى - كُوفِىٌّ - وَهَنَّادٌ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِىُّ الْمَعْنَى وَاحِدٌ قَالُوا حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ الْمُلاَئِىُّ عَنْ أَبِى خَالِدٍ الدَّالاَنِىِّ عَنْ قَتَادَةَ عَنْ أَبِى الْعَالِيَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ رَأَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- نَامَ وَهُوَ سَاجِدٌ حَتَّى غَطَّ أَوْ نَفَخَ ثُمَّ قَامَ يُصَلِّى. فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ نِمْتَ قَالَ « إِنَّ الْوُضُوءَ لاَ يَجِبُ إِلاَّ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ ». قَالَ أَبُو عِيسَى وَأَبُو خَالِدٍ اسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَبِى هُرَيْرَةَ.
நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு ஸஜதாவில் உறங்கி விட்டார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தூங்கினீர்களே!” என்று ஞாபகப்படுத்தினேன். ஒருக்களித்துப் படுத்து உறங்கியவன் மீது தவிர மற்றவர்கள் மீது ஒளூ அவசியமில்லை; ஏனெனில் ஒருவன் ஒருக்களித்துப்படுக்கும்போது அவனது மூட்டுக்கள் தோய்வடைகின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா(ரலி), இப்னு மஸ்வூது(ரலி), அபூஹுரைரா(ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகின்றது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் யஸீத் இப்னு அப்துர் ரஹ்மான் என்ற அபூகாலித் இடம் பெறுவதால் திர்மிதி, புகாரி, அஹ்மது ஆகிய அறிஞர்கள் இந்த ஹதீஸைப் பலவீனமானது என்கிறார்கள். மேலும் இந்த அபூகாலித் என்பவர், ‘கதாதா’ என்பவரிடம் கேட்டதாக இதை அறிவிக்கிறார். கதாதாவிடமிருந்து இவர் எதையும் செவியுற்றதில்லை என்று பைஹகீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 78
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنَامُونَ ثُمَّ يَقُومُونَ فَيُصَلُّونَ وَلاَ يَتَوَضَّئُونَ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ وَسَمِعْتُ صَالِحَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ عَمَّنْ نَامَ قَاعِدًا مُعْتَمِدًا فَقَالَ لاَ وُضُوءَ عَلَيْهِ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى حَدِيثَ ابْنِ عَبَّاسٍ سَعِيدُ بْنُ أَبِى عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَوْلَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ أَبَا الْعَالِيَةِ وَلَمْ يَرْفَعْهُ. وَاخْتَلَفَ الْعُلَمَاءُ فِى الْوُضُوءِ مِنَ النَّوْمِ فَرَأَى أَكْثَرُهُمْ أَنْ لاَ يَجِبَ عَلَيْهِ الْوُضُوءُ إِذَا نَامَ قَاعِدًا أَوْ قَائِمًا حَتَّى يَنَامَ مُضْطَجِعًا. وَبِهِ يَقُولُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ. قَالَ وَقَالَ بَعْضُهُمْ إِذَا نَامَ حَتَّى غُلِبَ عَلَى عَقْلِهِ وَجَبَ عَلَيْهِ الْوُضُوءُ وَبِهِ يَقُولُ إِسْحَاقُ. وَقَالَ الشَّافِعِىُّ مَنْ نَامَ قَاعِدًا فَرَأَى رُؤْيَا أَوْ زَالَتْ مَقْعَدَتُهُ لِوَسَنِ النَّوْمِ فَعَلَيْهِ الْوُضُوءُ.
நபித்தோழர்கள் உறங்குவார்கள். பின்னர் எழுந்து ஒளூ செய்யாமலே தொழுவார்கள் என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் தரையில் படியுமாறு உட்கார்ந்து தூங்குவதைப் பற்றி அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு “அவர் ஒளூ செய்ய வேண்டியதில்லை” என்றார்கள். தூங்குவதனால் ஒளூ நீங்குமா என்பதில் அறிஞர்கள் முரண்படுகின்றனர். உட்கார்ந்து, அல்லது நின்று உறங்கினால் ஒளூ நீங்காது. படுத்து உறங்கினால் ஒளூ நீங்கும் என்று பெரும்பாலோர் கருதுகின்றார்கள். ஸவ்ரி, இப்னுல் முபாரக், அஹ்மத் ஆகியோர் இந்தக் கருத்துடையவர்களே! மற்றும் சிலர் (எப்படி உறங்கினாலும்) நினைவு தவறிடும் அளவுக்கு உறங்கினால் ஒளூ நீங்கும் என்கின்றனர். இஸ்ஹாக் இந்தக் கருத்துடையவராவார். உட்கார்ந்து உறங்கி, அந்த உறக்கத்தில் கனவு கண்டாலும் கடும் தூக்கம் காரணமாக (தரையிலிருந்து) அவனது இருப்பிடம் அகன்றுவிட்டாலும் ஒளூ நீங்கும் என்று ஷாபி இமாம் கூறினார்கள் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 79
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ وَلَوْ مِنْ ثَوْرِ أَقِطٍ ». قَالَ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ يَا أَبَا هُرَيْرَةَ أَنَتَوَضَّأُ مِنَ الدُّهْنِ أَنَتَوَضَّأُ مِنَ الْحَمِيمِ قَالَ فَقَالَ أَبُو هُرَيْرَةَ يَا ابْنَ أَخِى إِذَا سَمِعْتَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَلاَ تَضْرِبْ لَهُ مَثَلاً. قَالَ وَفِى الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَأُمِّ سَلَمَةَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَبِى طَلْحَةَ وَأَبِى أَيُّوبَ وَأَبِى مُوسَى. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْوُضُوءَ مِمَّا غَيَّرَتِ النَّارُ وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ عَلَى تَرْكِ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ.
”நெருப்புத் தீண்டிய பொருட்களை உண்பதால் ஒளூ நீங்கும்; பால்கட்டியாக இருந்தாலும் அதுவும் ஒளூவை நீக்கும்” என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) “அபூஹுரைராவே! எண்ணையைச் சாப்பிட்டால் ஒளூ நீங்குமா? வெண்ணீர் சாப்பிட்டல் ஒளூ நீங்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா(ரலி) அவர்கள் “என் சகோதரர் மகனே அல்லாஹ்வின் தூதர் மூலம் ஒரு செய்தியை நீ கேட்க நேர்ந்தால் அதற்கு உதாரணங்கள் கூறிக் கொண்டிராதே!” என்றார்கள். இதை அபூஸலமா அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து உம்முஹபீபா(ரலி), உம்முஸலமா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூதல்ஹா(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூமூஸா(ரலி) ஆகியோர் மூலமும் அறிவிக்கப்படுகிறது. சமைத்த பொருட்களால் ஒளூ நீங்கும் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். நபித்தோழர்கள், அதற்கடுத்த தலைமுறையினர், அதற்கடுத்த தலைமுறையினரில் பொரும்பாலான அறிஞர்கள் சமைத்த பொருட்களால் ஒளூ நீங்காது என்ற கருத்தில் உள்ளனர் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 80
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ سَمِعَ جَابِرًا. قَالَ سُفْيَانُ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَنَا مَعَهُ فَدَخَلَ عَلَى امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ فَذَبَحَتْ لَهُ شَاةً فَأَكَلَ وَأَتَتْهُ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ فَأَكَلَ مِنْهُ ثُمَّ تَوَضَّأَ لِلظُّهْرِ وَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَأَتَتْهُ بِعُلاَلَةٍ مِنْ عُلاَلَةِ الشَّاةِ فَأَكَلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ وَابْنِ عَبَّاسٍ وَأَبِى هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَبِى رَافِعٍ وَأُمِّ الْحَكَمِ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ وَأُمِّ عَامِرٍ وَسُوَيْدِ بْنِ النُّعْمَانِ وَأُمِّ سَلَمَةَ. قَالَ أَبُو عِيسَى وَلاَ يَصِحُّ حَدِيثُ أَبِى بَكْرٍ فِى هَذَا الْبَابِ مِنْ قِبَلِ إِسْنَادِهِ إِنَّمَا رَوَاهُ حُسَامُ بْنُ مِصَكٍّ عَنِ ابْنِ سِيرِينَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِى بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. وَالصَّحِيحُ إِنَّمَا هُوَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. هَكَذَا رَوَى الْحُفَّاظُ. قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ رَأَوْا تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ. وَهَذَا آخِرُ الأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَكَأَنَّ هَذَا الْحَدِيثَ نَاسِخٌ لِلْحَدِيثِ الأَوَّلِ حَدِيثِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ.
நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டபோது நானும் அவர்களுடன் சென்றேன். அன்ஸார்களைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில் அவர்கள் நுழைந்தனர். அந்தப்பெண் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு ஆட்டை அறுத்து விருந்து படைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை சாப்பிட்டார்கள். பேரித்தம் பழன்க்கள் நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார்கள். அதையும் சாப்பிட்டார்கள். பின்பு ஒளூ செய்து தொழுதார்கள். பின்பு மிச்சமிருந்த இறைச்சிகளில் சிறிதளவை அந்தப் பெண் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைச்சாப்பிட்டு, ஒளூ செய்யாமல் அஸர் தொழுதார்கள்” என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள். அபூபக்ரு(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அபூஹுரைரா(ரலி), இப்னு மஸ்வூது(ரலி), அபூராபிவு(ரலி), உம்மு ஆமிர்(ரலி), ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி), உம்முஸலமா(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகிறது. அபூபக்ரு(ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் பலவீனமானதாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். இந்த ஹதீஸின் அடிப்படையில்தான் நபித்தோழர்கள், அதற்கடுத்த தலைமுறையினர் அதற்கும் அடுத்தவர்களில் பெரும்பான்மையான அறிஞர்கள் செயல்பட்டுள்ளனர். ஸுப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் இவர்கள் அதில் அடங்குவர். இருவிதமாக வந்துள்ள ஹதீஸ்களில் இதுதான் கடைசியானதாகும். இதுமுந்திய ஹதீஸின் சட்டத்தை மாற்றிவிட்டது என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 81
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِىِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ فَقَالَ « تَوَضَّئُوا مِنْهَا ». وَسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ فَقَالَ « لاَ تَتَوَضَّئُوا مِنْهَا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَأُسَيْدِ بْنِ حُضَيْرٍ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ. وَالصَّحِيحُ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ. وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ. وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَقَدْ رُوِىَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ أَنَّهُمْ لَمْ يَرَوُا الْوُضُوءَ مِنْ لُحُومِ الإِبِلِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَأَهْلِ الْكُوفَةِ.
ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிட்டால் ஒளூ செய்ய வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டக்கப்பட்டது. தற்காக ஒளூ செய்யுங்கள் என்றார்கள். ஆட்டு இறைச்சியைச் சாப்பிட்டால் ஒளூ செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு “அதற்கு ஒளூ செய்ய வேண்டாம்” என்றார்கள். இதை பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி), உஸைத் இப்னு ஹுலைர்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. பரா இப்னு ஆஸிப்(ரலி), ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) ஆகியோர் வழியாக இரண்டு ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளன; என்று இஸ்ஹாக் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஒட்டக மாமிசம் சாப்பிட்டால் ஒளூ நீங்கும் என்று அஹ்மத், இஸ்ஹாகாகியோர் குறிப்பிடுகின்றனர். தாபியீன்களின் சில அறிஞர்கள் ஒளூ நீங்காது என்கின்றனர். ஸவ்ரீ, கூபாவாசிகள் ஆகியோர் இந்தக் கருத்துடையவர்கள்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெறுகின்றது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 82
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ أَخْبَرَنِى أَبِى عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ مَسَّ ذَكَرَهُ فَلاَ يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَأَبِى أَيُّوبَ وَأَبِى هُرَيْرَةَ وَأَرْوَى ابْنَةِ أُنَيْسٍ وَعَائِشَةَ وَجَابِرٍ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ هَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ مِثْلَ هَذَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ بُسْرَةَ.
”யார் தனது மர்ம உறுப்பைத் தொடுகிறாரோ ஒளூ செய்யும் வரை தொழக்கூடாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புஸ்ரா பிந்து ஸப்வான்(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து உம்முஹபீபா(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூஹுரைரா(ரலி), அர்வா பின்து உனைஸ்(ரலி), ஆயிஷா(ரலி), ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) ஆகியோர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘ஸஹீஹ்’ என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும், என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ, முஅத்தா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 83
وَرَوَى أَبُو أُسَامَةَ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ مَرْوَانَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- نَحْوَهُ. حَدَّثَنَا بِذَلِكَ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ بِهَذَا. 84 - وَرَوَى هَذَا الْحَدِيثَ أَبُو الزِّنَادِ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. حَدَّثَنَا بِذَلِكَ عَلِىُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- نَحْوَهُ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الأَوْزَاعِىُّ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. قَالَ مُحَمَّدٌ وَأَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ بُسْرَةَ. وَقَالَ أَبُو زُرْعَةَ حَدِيثُ أُمِّ حَبِيبَةَ فِى هَذَا الْبَابِ صَحِيحٌ وَهُوَ حَدِيثُ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ عَنْ مَكْحُولٍ عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِى سُفْيَانَ عَنْ أُمِّ حَبِيبَةَ. وَقَالَ مُحَمَّدٌ لَمْ يَسْمَعْ مَكْحُولٌ مِنْ عَنْبَسَةَ بْنِ أَبِى سُفْيَانَ وَرَوَى مَكْحُولٌ عَنْ رَجُلٍ عَنْ عَنْبَسَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ. وَكَأَنَّهُ لَمْ يَرَ هَذَا الْحَدِيثَ صَحِيحًا.
மேற்கூறிய அதே ஹதீஸ்தான் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்கள், மற்றும் தாபியீன்களில் பலருடைய முடிவும் இதுதான். அவ்ஸாயீ, ஷாபியீ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்களின் முடிவும் இதுவே. இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் புஸ்ரா பின்து ஸஃப்வான்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என முஹம்மது (என்ற புகாரி இமாம்) குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உம்முஹபீபா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் இந்தக் கருத்திலமைந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என அபூஸர்ஆ குறிப்பிட்டார்கள். உம்மு ஹபீபா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் அந்த ஹதீஸை ‘அன்பஸா இப்னு அபீஸுஃப்யான்’ வழியாக ‘மக்ஹுல்’ அறிவிக்கின்றனர். இதுபற்றி முஹம்மது இப்னு இஸ்மாயீல்(என்ற புகாரி இமாம்) அவர்கள் ‘மக்ஹுல்’ அவர்கள் அன்பஸா இப்னு அபீஸுஃப்யானிடம் எதையும் செவியுற்றதில்லை என்று விமர்சனம் செய்து உம்முஹபீபா(ரலி) வழியாக வரும் ஹதீஸை பலவீனப்படுத்துகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 84
83 - وَرَوَى أَبُو أُسَامَةَ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ مَرْوَانَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- نَحْوَهُ. حَدَّثَنَا بِذَلِكَ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ بِهَذَا. 84 - وَرَوَى هَذَا الْحَدِيثَ أَبُو الزِّنَادِ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. حَدَّثَنَا بِذَلِكَ عَلِىُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- نَحْوَهُ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الأَوْزَاعِىُّ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. قَالَ مُحَمَّدٌ وَأَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ بُسْرَةَ. وَقَالَ أَبُو زُرْعَةَ حَدِيثُ أُمِّ حَبِيبَةَ فِى هَذَا الْبَابِ صَحِيحٌ وَهُوَ حَدِيثُ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ عَنْ مَكْحُولٍ عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِى سُفْيَانَ عَنْ أُمِّ حَبِيبَةَ. وَقَالَ مُحَمَّدٌ لَمْ يَسْمَعْ مَكْحُولٌ مِنْ عَنْبَسَةَ بْنِ أَبِى سُفْيَانَ وَرَوَى مَكْحُولٌ عَنْ رَجُلٍ عَنْ عَنْبَسَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ. وَكَأَنَّهُ لَمْ يَرَ هَذَا الْحَدِيثَ صَحِيحًا.
மேற்கூறிய அதே ஹதீஸ்தான் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. நபித்தோழர்கள், மற்றும் தாபியீன்களில் பலருடைய முடிவும் இதுதான். அவ்ஸாயீ, ஷாபியீ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகிய அறிஞர்களின் முடிவும் இதுவே. இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் புஸ்ரா பின்து ஸஃப்வான்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மிகவும் ஆதாரப்பூர்வமானது என முஹம்மது (என்ற புகாரி இமாம்) குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உம்முஹபீபா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் இந்தக் கருத்திலமைந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என அபூஸர்ஆ குறிப்பிட்டார்கள். உம்மு ஹபீபா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் அந்த ஹதீஸை ‘அன்பஸா இப்னு அபீஸுஃப்யான்’ வழியாக ‘மக்ஹுல்’ அறிவிக்கின்றனர். இதுபற்றி முஹம்மது இப்னு இஸ்மாயீல்(என்ற புகாரி இமாம்) அவர்கள் ‘மக்ஹுல்’ அவர்கள் அன்பஸா இப்னு அபீஸுஃப்யானிடம் எதையும் செவியுற்றதில்லை என்று விமர்சனம் செய்து உம்முஹபீபா(ரலி) வழியாக வரும் ஹதீஸை பலவீனப்படுத்துகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 85
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِىٍّ هُوَ الْحَنَفِىُّ عَنْ أَبِيهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « وَهَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ أَوْ بَضْعَةٌ مِنْهُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى أُمَامَةَ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِىَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَبَعْضِ التَّابِعِينَ أَنَّهُمْ لَمْ يَرَوُا الْوُضُوءَ مِنْ مَسِّ الذَّكَرِ وَهُوَ قَوْلُ أَهْلِ الْكُوفَةِ وَابْنِ الْمُبَارَكِ. وَهَذَا الْحَدِيثُ أَحْسَنُ شَىْءٍ رُوِىَ فِى هَذَا الْبَابِ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَيُّوبُ بْنُ عُتْبَةَ وَمُحَمَّدُ بْنُ جَابِرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ عَنْ أَبِيهِ. وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِى مُحَمَّدِ بْنِ جَابِرٍ وَأَيُّوبَ بْنِ عُتْبَةَ. وَحَدِيثُ مُلاَزِمِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَدْرٍ أَصَحُّ وَأَحْسَنُ.
ஆணுறுப்பைத் தொடுவது ஒளூவை நீக்குவா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் ‘அதுவும் அவனது உறுப்புக்களில் ஒரு உறுப்புதானே’ என்று நபி(ஸல்) கூறியதாக தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து அபூஉமாமா(ரலி) வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. ஆணுறுப்பைத் தொடுவதால் ஒளூ நீங்காது என்று நபித்தோழர்களில் பலரும், தாபியீன்களில் சிலரும் கூறியதாகவும் அறிவிக்கப்படுகின்றது. ‘கூபா’ வாசிகளின் கூற்றும், இப்னுமுபாரக் அவர்களின் கூற்றும் இதுதான். இந்தக் கருத்தில் அறிவிக்கப்படும் ஹதீஸ்களிலேயே இது மிகவும் அழகியதாகும். தல்க் இப்னு அலி(ரலி) வழியாக “முலாஸிம் இப்னு அம்ரு என்பவர் அறிவிக்கும் ஹதீஸ் மட்டுமே மிகவும் சரியானதும், அழகானதுமாகும். ஆனால் தல்க் இப்னு அலி(ரலி) வாயிலாக அய்யூப் இப்னு உத்பா என்பவரும் முஹம்மது இப்னு ஜாபிர் என்ப்வரும் அறிவித்துள்ள ஹதீஸை ஹதீஸ்கலை மேதைகளில் சிலர் குறை கூறியுள்ளனர், என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ, அஹ்மது, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 86
حَدَّثَنَا قُتَيْبَةُ وَهَنَّادٌ وَأَبُو كُرَيْبٍ وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ وَأَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ حَبِيبِ بْنِ أَبِى ثَابِتٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ قُلْتُ مَنْ هِىَ إِلاَّ أَنْتِ قَالَ فَضَحِكَتْ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِىَ نَحْوُ هَذَا عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَأَهْلِ الْكُوفَةِ قَالُوا لَيْسَ فِى الْقُبْلَةِ وُضُوءٌ. وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ وَالأَوْزَاعِىُّ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ فِى الْقُبْلَةِ وُضُوءٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ. وَإِنَّمَا تَرَكَ أَصْحَابُنَا حَدِيثَ عَائِشَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى هَذَا لأَنَّهُ لاَ يَصِحُّ عِنْدَهُمْ لِحَالِ الإِسْنَادِ. قَالَ وَسَمِعْتُ أَبَا بَكْرٍ الْعَطَّارَ الْبَصْرِىَّ يَذْكُرُ عَنْ عَلِىِّ بْنِ الْمَدِينِىِّ قَالَ ضَعَّفَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ هَذَا الْحَدِيثَ جِدًّا. وَقَالَ هُوَ شِبْهُ لاَ شَىْءَ. قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ وَقَالَ حَبِيبُ بْنُ أَبِى ثَابِتٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ. وَقَدْ رُوِىَ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِىِّ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَبَّلَهَا وَلَمْ يَتَوَضَّأْ. وَهَذَا لاَ يَصِحُّ أَيْضًا. وَلاَ نَعْرِفُ لإِبْرَاهِيمَ التَّيْمِىِّ سَمَاعًا مِنْ عَائِشَةَ. وَلَيْسَ يَصِحُّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى هَذَا الْبَابِ شَىْءٌ.
”நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவரை முத்தமிட்டபின் ஒளூ செய்யாமலேயே ஒதொழச் சென்றார்கள்” என்று ஆயிஷா(ரலி) கூறியபோது ‘அந்த மனைவி உங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? என்று ‘உர்வா’ அவர்கள் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) சிரித்தார்கள்; என்று உர்வா அறிவிக்கிறார்கள். நபித்தோழர்கள், மற்றும் தாபியீன்களில் பலர் மூலம் இந்தக் கருத்து கூறப்படுகின்றது. ஸுஃப்யான் ஸவ்ரீ மற்றும் கூபாவாசிகள், முத்தமிட்டால் ஒளூ நீங்காது என்கின்றனர். ஆனால் மாலிக் இப்னு அனஸ், அவ்ஸாயீ, ஸாபியீ, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் முத்தமிட்டால் ஒளூ நீங்கிவிடும் என்கிறார்கள். நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களில் பலரது கூற்றும் இதுவேயாகும். நமது தோழர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் இந்த ஹதீஸை விட்டு விட்டு ‘ஒளூ நீங்கும்’ என்று கூறுவதன் காரணம், இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள பலவீனத்தினால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதுதான். “இந்த ஹதீஸ் ஒரு மதிப்பற்றதாகும்” என்ரு எஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறியதாக அலீ இப்னுல் மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “இந்த ஹதீஸை ‘உர்வா’ என்பவரிடமிருந்து ஹபீப் இப்னு அபீஸாபித் அறிவிப்பதாக கூறப்படுகின்றது. உர்வாவிடமிருந்து ‘ஹபீப்’ எதனையும் செவியுற்றதில்லை என்பதால் இது பலவீனமானது என்று முஹம்மது இப்னு இஸ்மாயீல் (புகாரி இமாம்) கூற நான் செவியுற்றுள்ளேன். இதே கருத்தை ஆயிஷா(ரலி) வழியாக இப்ராஹீம் அத்தைமீ என்பவரும் அறிவித்திருக்கிறார். அதுவும் சரியானதல்ல; ஏனெனில் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இப்ராஹீம் அத்தைமீ என்பவர் கேட்டிருப்பதற்கான (எந்தக் குறிப்புக்களையும்) நாம் அறியவில்லை; மேலும் இந்தக் கருத்தில் எந்த ஒரு ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. திர்மீதி இமாம் குறிப்பிடக்கூடிய இந்தக் குறை அந்தல் நூல்களில் இடம் பெற்ற ஹதீஸிலும் உள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 87
حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِى السَّفَرِ - وَهُوَ أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَمْدَانِىُّ الْكُوفِىُّ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ أَبُو عُبَيْدَةَ حَدَّثَنَا وَقَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنِى أَبِى عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ قَالَ حَدَّثَنِى عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الأَوْزَاعِىُّ عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ الْمَخْزُومِىِّ عَنْ أَبِيهِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِى طَلْحَةَ عَنْ أَبِى الدَّرْدَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَاءَ فَأَفْطَرَ فَتَوَضَّأَ. فَلَقِيتُ ثَوْبَانَ فِى مَسْجِدِ دِمَشْقَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ صَدَقَ أَنَا صَبَبْتُ لَهُ وَضُوءَهُ. قَالَ أَبُو عِيسَى وَقَالَ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ مَعْدَانُ بْنُ طَلْحَةَ. قَالَ أَبُو عِيسَى وَابْنُ أَبِى طَلْحَةَ أَصَحُّ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَأَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَغَيْرِهِمْ مِنَ التَّابِعِينَ الْوُضُوءَ مِنَ الْقَىْءِ وَالرُّعَافِ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَيْسَ فِى الْقَىْءِ وَالرُّعَافِ وُضُوءٌ. وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِىِّ. وَقَدْ جَوَّدَ حُسَيْنٌ الْمُعَلِّمُ هَذَا الْحَدِيثَ. وَحَدِيثُ حُسَيْنٍ أَصَحُّ شَىْءٍ فِى هَذَا الْبَابِ. وَرَوَى مَعْمَرٌ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ فَأَخْطَأَ فِيهِ فَقَالَ عَنْ يَعِيشَ بْنِ الْوَلِيدِ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِى الدَّرْدَاءِ وَلَمْ يَذْكُرْ فِيهِ الأَوْزَاعِىَّ وَقَالَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ وَإِنَّمَا هُوَ مَعْدَانُ بْنُ أَبِى طَلْحَةَ.
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை வாந்தி எடுத்தார்கள். உடனேயே ஒளூ செய்தார்கள் என்று அபுகதாதா(ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸஃப்வான் இப்னு அஸ்ஸால்(ரலி) அவர்களைச் சந்தித்தபோது இதுபற்றி அவர்களிடம் கேட்டேன். ‘அபுகதாதா உண்மையே கூறி இருக்கிறார்; அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்வதற்காக நான்தான் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தேன்’ என்று ஸஃப்வான்(ரலி) குறிப்பிட்டார்கள் என மஃதான் இப்னு அபீதல்ஹா அறிவிக்கிறார். இவரது பெயரை ‘மஃதான் இப்னு தல்ஹா’ என்று இஸ்ஹாக் இப்னு மன்ஸுர் தவறாகக் கூறியுள்ளார். மஃதான் இப்னு அபீதல்ஹா என்பதே சரியாகும் என அபூஈஸா கூறுகிறேன். வாந்தி எடுப்பதாலும், மூக்கில் இரத்தம் வடிவதாலும் ஒளூ நீங்கும் என நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களில் பலர் கூறியுள்ளனர். ஸுப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவே. “இவற்றால் ஒளூ நீங்காது” என்று மாலிக் ஷாபியீ ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இதன் அறிவிப்பாளர்கள் தொடரின் இடையே ஹுஸைன் இப்னுல் முஅல்லிம் இடம் பெறுகிறார். இவர் மிகச்சரியான முறையில் தனக்கு முன்னுள்ள அறிவிப்பாளர்களைக் குறிப்பிடுவதால் இது ஸஹீஹ் என்னும் தரத்திலமைந்ததாகும். ஆனால் ஹுஸைன் இப்னுல் முஅல்லிம் என்பவரது இடத்தில் மஃமர் என்பவர் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பும் உள்ளது. அவர் தனது முந்தைய அறிவிப்பாளர்களில் ஒருவரது பெயரை விட்டுவிடுகிறார். ஒருவரது பெயரைத் தவறாகக் குறிப்பிடுகிறார் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் குளறுபடி நிறைந்துள்ளது. இதை ஆதாரமாகக் கொள்ள இயலாது என்று பைஹகீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 88
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِى فَزَارَةَ عَنْ أَبِى زَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ سَأَلَنِى النَّبِىُّ -صلى الله عليه وسلم- « مَا فِى إِدَاوَتِكَ ». فَقُلْتُ نَبِيذٌ. فَقَالَ « تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ ». قَالَ فَتَوَضَّأَ مِنْهُ. قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا رُوِىَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِى زَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم-. وَأَبُو زَيْدٍ رَجُلٌ مَجْهُولٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ لاَ يُعْرَفُ لَهُ رِوَايَةٌ غَيْرُ هَذَا الْحَدِيثِ. وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْوُضُوءَ بِالنَّبِيذِ مِنْهُمْ سُفْيَانُ الثَّوْرِىُّ وَغَيْرُهُ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُتَوَضَّأُ بِالنَّبِيذِ وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَالَ إِسْحَاقُ إِنِ ابْتُلِىَ رَجُلٌ بِهَذَا فَتَوَضَّأَ بِالنَّبِيذِ وَتَيَمَّمَ أَحَبُّ إِلَىَّ. قَالَ أَبُو عِيسَى وَقَوْلُ مَنْ يَقُولُ لاَ يُتَوَضَّأُ بِالنَّبِيذِ أَقْرَبُ إِلَى الْكِتَابِ وَأَشْبَهُ لأَنَّ اللَّهَ تَعَالَى قَالَ ( فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ).
’உன்னுடைய தோல் பாத்திரத்தில் என்ன உள்ளது?’ என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் ‘நபீத்’ என்றேன். (அதில் போடப்பட்டது) நல்ல பேரீத்தம் பழமாகும். இந்தத் தண்ணீரும் தூய்மையானதாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அதிலிருந்து ஒளூ செய்தனர் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி) கூறியதாக அபூஸைத் என்பவர் அறிவிக்கிறார். ’அபூஸைத்’ என்ற இவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடத்தில் யாரென்றே அறியப்படாதவர், இந்த ஒரு ஹதீஸைத் தவிர வேறு எந்த ஹதீஸையும் இவர் அறிவித்தாக நமக்குத் தெரியவில்லை. நபீத்தில் ஒளூ செய்யலாம் என ஸுஃப்யான் ஸவ்ரீ மற்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் ‘கூடாது’ என்கின்றனர். ஒருவனுக்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு அவனிடம் ‘நபீத்’ மட்டுமே இருந்தால் அதில் ஒளூ செய்து விட்டு அவன் தயம்மமும் செய்து கொவது எனக்கு விருப்பமானது என இஸ்ஹாக் குறிப்பிடுகிறார். ’நபீத்தில் ஒளூ செய்யலாகாது’ என்பதே திருக்குர்ஆனின் கூற்றுக்கு மிக நெருக்கமாகவும், பொருத்தமாகவும் உள்ளது. ஏனெனில் “தண்ணீரை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் தூய்மையான மண்ணில் தயம்மமும் செய்யுங்கள்” என்றே இறைவன் கூறுகிறான் என அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 89
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ وَقَالَ « إِنَّ لَهُ دَسَمًا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِىِّ وَأُمِّ سَلَمَةَ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمَضْمَضَةَ مِنَ اللَّبَنِ وَهَذَا عِنْدَنَا عَلَى الاِسْتِحْبَابِ وَلَمْ يَرَ بَعْضُهُمُ الْمَضْمَضَةَ مِنَ اللَّبَنِ.
நபி(ஸல்) அவர்கள் பால் அருந்தியபின் தண்ணீர் கொண்டு வரச் செய்து வாய்கொப்பளித்தார்கள். ‘பாலில் வழவழப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். ”ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி), உம்முஸலமா(ரலி) ஆகியோர் மூலமாக இந்தக் கருத்து அறிவிக்கப்படுகிறது. ‘இது ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். பால் அருந்தியபின் வாய் கொப்பளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வாய் கொப்பளிப்பது விரும்பத்தக்கதுதான்; (அது கட்டாயமில்லை) என்பது நமது கருத்தாகும். பால் அருந்தியபின் வாய் கொப்பளிக்க வேண்டியதில்லை எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மது, பைஹகீ ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது)
திர்மிதி - ஹதீஸ் எண்: 90
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِىُّ عَنْ سُفْيَانَ عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلاً سَلَّمَ عَلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَبُولُ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَإِنَّمَا يُكْرَهُ هَذَا عِنْدَنَا إِذَا كَانَ عَلَى الْغَائِطِ وَالْبَوْلِ. وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ ذَلِكَ. وَهَذَا أَحْسَنُ شَىْءٍ رُوِىَ فِى هَذَا الْبَابِ. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ وَعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ وَعَلْقَمَةَ بْنِ الْفَغْوَاءِ وَجَابِرٍ وَالْبَرَاءِ.
நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறவில்லை என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். ”இது ஹஸன் ஸஹீஹ் என்னும் தரத்திலமைந்த ஹதீஸாகும்” என்று அபூஈஸா கூறுகிறேன். ‘மலம் கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும்போதும் தான் ஸலாமுக்கு பதில் கூறுவது கூடாது. (ஒளூ இல்லாவிட்டால் பதில் கூறக்கூடாது என்பது அல்ல) என்பது நமது கருத்தாகும். அறிஞர்களில் சிலர் இவ்வாறே விளக்கம் அளித்துள்ளனர். இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகவும் அழகியதாகும். இந்தக் கருத்து முஹாஜிர் இப்னு குன்புத்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஹன்ளலா(ரலி), அல்கமா இப்னுல் கப்வா(ரலி), ஜாபிர்(ரலி), பரா(ரலி) ஆகியோரின் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது; என அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 91
حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَنْبَرِىُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ أَيُّوبَ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « يُغْسَلُ الإِنَاءُ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ سَبْعَ مَرَّاتٍ أُولاَهُنَّ أَوْ أُخْرَاهُنَّ بِالتُّرَابِ وَإِذَا وَلَغَتْ فِيهِ الْهِرَّةُ غُسِلَ مَرَّةً ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- نَحْوَ هَذَا وَلَمْ يُذْكَرْ فِيهِ « إِذَا وَلَغَتْ فِيهِ الْهِرَّةُ غُسِلَ مَرَّةً ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ.
பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விடுமானால் அந்தப் பாத்திரம் எழுதடவை கழுவப்பட வேண்டும்; முதல் தடவையோ அல்லது கடைசித் தடவையோ மண்ணைப் பயன்படுத்திக் கழுவ வேண்டும். பாத்திரத்தில் பூனைவாய் வைத்துவிட்டால் ஒரு தடவை கழுவப்பட வேண்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன். ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் இந்த ஹதீஸின் படியே முடிவு செய்துள்ளனர். அபூஹுரைரா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் இதேபோல் அறிவிக்கப்படுகின்றது. ஆயினும் அந்த வழிகளில், ’பூனை வாய் வைத்தால் ஒருமுறை கழுவ வேண்டும்’ என்பது கூறப்படவில்லை. இந்தக் கருத்து அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அஹ்மதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 92
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ أَبِى قَتَادَةَ أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا. قَالَتْ فَسَكَبْتُ لَهُ وَضُوءًا قَالَتْ فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ قَالَتْ كَبْشَةُ فَرَآنِى أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِى فَقُلْتُ نَعَمْ. قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِىَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ أَوِ الطَّوَّافَاتِ ». وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْعُلَمَاءِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ الشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ لَمْ يَرَوْا بِسُؤْرِ الْهِرَّةِ بَأْسًا. وَهَذَا أَحَسَنُ شَىْءٍ رُوِىَ فِى هَذَا الْبَابِ. وَقَدْ جَوَّدَ مَالِكٌ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ وَلَمْ يَأْتِ بِهِ أَحَدٌ أَتَمَّ مِنْ مَالِكٍ.
அபூகதாதா(ரலி) அவர்கள் என் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் ஒளூ செய்வதற்காக தண்ணீர் எடுத்து வைத்தேன். அப்போது பூனை ஒன்று வந்து அந்தத் தண்ணீரை அருந்தலானது. அதைக்கண்ட அபூகதாதா(ரலி) அவர்கள் அந்தப் பூனை குடிப்பதற்கேற்ப பாத்திரத்தைச் சாய்த்துப் பிடித்தார்கள். நான் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு “என் சகோதரர் மகளே! இதைப்பார்த்து நீ ஆச்சரியப்படுகிறாயா?” என்றார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அதற்கு அவை உங்களையே சுற்றிச்சுற்றி வரக்கூடியவையாகும் என்று நபி(ஸல்) கூறியிருப்பதாக கூறினார்கள் என அபூகதாதாவின் மகனுடைய மனைவி கப்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து ஆயிஷா(ரலி), அபூஹுரைரா(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. இது ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். நபித்தோழர்களில் பெரும்பான்மையோரின் முடிவும் தாபியீன்கள், அதற்கு அடுத்த காலத்தவர்களில் பெரும்பாலோரின் முடிவும் இதுதான். ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரின் முடிவும் இதுவேயாகும். இவர்களெல்லாம் பூனைவாய் வைப்பதால் எந்தக் குறைபாடும் ஏற்படாது என்கின்றனர். இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகியதாகும் இந்த ஹதீஸ். (குறிப்பு : நஸயீ, அஹ்மது, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 93
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ قَالَ بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا قَالَ وَمَا يَمْنَعُنِى وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَفْعَلُهُ. قَالَ إِبْرَاهِيمُ وَكَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لأَنَّ إِسْلاَمَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ. هَذَا قَوْلُ إِبْرَاهِيمَ يَعْنِى كَانَ يُعْجِبُهُمْ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِىٍّ وَحُذَيْفَةَ وَالْمُغِيرَةِ وَبِلاَلٍ وَسَعْدٍ وَأَبِى أَيُّوبَ وَسَلْمَانَ وَبُرَيْدَةَ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ وَأَنَسٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَيَعْلَى بْنِ مُرَّةَ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ وَأُسَامَةَ بْنِ شَرِيكٍ وَأَبِى أُمَامَةَ وَجَابِرٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ وَابْنِ عُبَادَةَ وَيُقَالُ ابْنُ عِمَارَةَ وَأُبَىُّ بْنُ عِمَارَةَ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ جَرِيرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து பின் ஒளூ செய்தார்கள்; (அதில் தம் கால்களைக் கழுவுதற்கு பதில்) தமது காலுறைகள் மீது ஈரக்கையால் தடவிக் கொண்டார்கள். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கும்போது யார் என்னைத் தடுக்க முடியும்?’ என்று கூறினார்கள். ஜரீர் அவர்கள் ஒளூ பற்றிய வசனம் இறங்கிய காலத்திற்குப் பிறகே இஸ்லாத்தைத் தழுவியவர். அவர் நபி(ஸல்) அவர்களை காலுறைகள் மீது மஸஹ் செய்ததைப் பார்த்ததாகக் கூறுகிறார் என்றால் ஒளூவுடைய சட்டம் அமுலான் பிறகும் நபி(ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தது தெளிவு. இது மாற்றப்பட்டுவிட்டது எனக் கூறுபவர்களுக்கு ஜரீர் அவர்களின் இந்த ஹதீஸ் சரியான விளக்கமளிப்பதாக உள்ளதால் ஹதீஸ் கலை வல்லுனர்களுக்க் இந்த ஹதீஸ் மிகவும் மகிழ்வை ஏற்படுத்துகின்றது என்று இப்ராஹீம் குறிப்பிட்டார்கள். உமர்(ரலி), அலி(ரலி), ஹுதைபா(ரலி), முகீரா(ரலி), பிலால்(ரலி), ஸஃது(ரலி), அபூஅய்யூப்(ரலி), ஸல்மான்(ரலி), புரைதா(ரலி), அம்ரு இப்னு உமய்யா(ரலி), அனஸ்(ரலி), ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி), எஃலா இப்னு முர்ரா(ரலி), உபாதா இப்னுஸ்ஸாமித்(ரலி), உஸாமா இப்னு ஷரீக்(ரலி), அபூஉமாமா(ரலி), ஜாபிர்(ரலி), உஸாமா இப்னு ஸைத்(ரலி), இப்னு உபாதா(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது. ஜரீர் வாயிலாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்ததாகும். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மது ஆகிய நூல்களிலும் இடம் பெற்றள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 94
وَيُرْوَى عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقُلْتُ لَهُ فِى ذَلِكَ فَقَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ. فَقُلْتُ لَهُ أَقَبْلَ الْمَائِدَةِ أَمْ بَعْدَ الْمَائِدَةِ فَقَالَ مَا أَسْلَمْتُ إِلاَّ بَعْدَ الْمَائِدَةِ. حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا خَالِدُ بْنُ زِيَادٍ التِّرْمِذِىُّ عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ جَرِيرٍ. قَالَ وَرَوَى بَقِيَّةُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ جَرِيرٍ. وَهَذَا حَدِيثٌ مُفَسِّرٌ لأَنَّ بَعْضَ مَنْ أَنْكَرَ الْمَسْحَ عَلَى الْخُفَّيْنِ تَأَوَّلَ أَنَّ مَسْحَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَلَى الْخُفَّيْنِ كَانَ قَبْلَ نُزُولِ الْمَائِدَةِ وَذَكَرَ جَرِيرٌ فِى حَدِيثِهِ أَنَّهُ رَأَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَسَحَ عَلَى الْخُفَّيْنِ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் ஒளூ செய்யும்போது தமது காலுறைகள் மீது மஸஹ் செய்யக் கண்டேன். இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது “நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யும்போது தமது காலுறைகள் மீது மஸஹ் செய்ய நான் கண்டிருக்கிறேன் என்றார்கள். அதற்கு நான் (நீங்கள் கண்டது ஒளூ பற்றிய வசனம் இருக்கக்கூடிய) மாயிதா அத்தியாயம் இறங்கிய பின்பா? அல்லது அதற்கு முன்பா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ‘மாயிதா அத்தியாயம் இறங்கிய பிறகுதானே நான் இஸ்லாத்தையே தழுவினேன்’ என்று பதிலளித்தார்கள். காலுறைகள் மீது மஸஹ் செய்யலாகாது என்று கூறக்கூடியவர்கள், இந்த நிகழ்ச்சி ஒளூ பற்றிக் கூறக்கூடிய ‘மாயிதா’ அத்தியாயம் இறங்கியதற்கு முன் நடந்தது என்பர். ஆனால் ஜரீர் அவர்கள் அந்த வசனம் இறங்கிய பின்பும் நபி(ஸல்) அவர்கள் தம் காலுறைகள் மீது மஸஹ் செய்யக் கண்டதாகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 95
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِىِّ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِى عَبْدِ اللَّهِ الْجَدَلِىِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ سُئِلَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ « لِلْمُسَافِرِ ثَلاَثَةٌ وَلِلْمُقِيمِ يَوْمٌ ». وَذُكِرَ عَنْ يَحْيَى بْنِ مَعِينٍ أَنَّهُ صَحَّحَ حَدِيثَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ فِى الْمَسْحِ. وَأَبُو عَبْدِ اللَّهِ الْجَدَلِىُّ اسْمُهُ عَبْدُ بْنُ عَبْدٍ وَيُقَالُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَأَبِى بَكْرَةَ وَأَبِى هُرَيْرَةَ وَصَفْوَانَ بْنِ عَسَّالٍ وَعَوْفِ بْنِ مَالِكٍ وَابْنِ عُمَرَ وَجَرِيرٍ.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “(கால்களைக் கழுவிய பின் காலுறைகளை அணிந்தால்) பிரயாணி மூன்று நாட்களும், உள்ளூர்வாசி ஒரு நாளும் (காலுறைகளைக் கழற்றாமல் அதன் மீது மஸஹ் செய்யலாம்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை எஹ்யா இப்னுமுயீன் அவர்கள் ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஹதீஸை குஸைமா வழியாக அபூ பதுல்லாஹ் அல்ஜதலீ அவர்களும், அவர் வழியாக அம்ரு இப்னு மைமூன் அவர்களும் அவர் வழியாக இப்ராஹீம் அத்தைமீ அவர்களும் அறிவிப்பதாக இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் மற்றொரு அறிவிப்பில் இப்ராஹீம் நகயீ அவர்கள் அபூஅப்துல்லாஹ் அல்ஜதலீ என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஷுஃபா குறிப்பிட்டுள்ளார்கள். (நாம் வெளியிட்ட ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசைத் தொடர் சரியாக உள்ளதால்) இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மது, அபூதாவூத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 96
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ أَبِى النَّجُودِ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفْرًا أَنْ لاَ نَنْزِعَ خِفَافَنَا ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ إِلاَّ مِنْ جَنَابَةٍ وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رَوَى الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ وَحَمَّادٌ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِىِّ عَنْ أَبِى عَبْدِ اللَّهِ الْجَدَلِىِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَلاَ يَصِحُّ. قَالَ عَلِىُّ بْنُ الْمَدِينِىِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعْ إِبْرَاهِيمُ النَّخَعِىُّ مِنْ أَبِى عَبْدِ اللَّهِ الْجَدَلِىِّ حَدِيثَ الْمَسْحِ. وَقَالَ زَائِدَةُ عَنْ مَنْصُورٍ كُنَّا فِى حُجْرَةِ إِبْرَاهِيمَ التَّيْمِىِّ وَمَعَنَا إِبْرَاهِيمُ النَّخَعِىُّ فَحَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِىُّ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِى عَبْدِ اللَّهِ الْجَدَلِىِّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ. قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ حَدِيثُ صَفْوَانَ بْنِ عَسَّالٍ الْمُرَادِىِّ. قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْعُلَمَاءِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ الْفُقَهَاءِ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا يَمْسَحُ الْمُقِيمُ يَوْمًا وَلَيْلَةً وَالْمُسَافِرُ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ. قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِىَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُمْ لَمْ يُوَقِّتُوا فِى الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ. قَالَ أَبُو عِيسَى وَالتَّوْقِيتُ أَصَحُّ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ أَيْضًا مِنْ غَيْرِ حَدِيثِ عَاصِمٍ.
நாங்கள் பிரயாணத்திலிருக்கும் போது (கால்களைக் கழுவிய பின் காலுறைகளை அணிந்து கொண்டால்) மல ஜலம் கழித்தல், உறங்குதல் ஆகிய காரணங்களுக்காக (ஒளூ செய்யும்போது) மூன்று நாட்களுக்கு எங்கள் காலுறைகளைக் கழற்றாமல் (காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம்) என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் கடமையான குளிப்பு ஏற்பட்டுவிடுமானால் (காலுறைகளைக் கழற்றி) கால்களை கழுவ வேண்டுமெனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; என்று ஸஃப்வான் இப்னு அஸ்ஸால்(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இந்த ஹதீஸ் மிகவும் அழகியதாகும் என புகாரி இமாம் குறிப்பிட்டார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன். நபித்தோழர்கள், தாபியீன்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் போன்ற அதற்கடுத்த காலத்தவர்கள் இவர்களில் மிகப் பெரும்பாலோர் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பிரயாணி மூன்று நாட்கள், உள்ளூர்வாசி ஒரு நாள் (காலுறைகளைக் கழற்றிக்கழுவாமல்) காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்கின்றனர். மாலிக் இப்னு அனஸ் போன்ற சில அறிஞர்கள் இதற்கு காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை. (அதாவது எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் கழுவாமல் மஸஹ் செய்யலாம் என்கின்றனர்) (ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காலக்கெடு கூறுப்படுவதால்) காலக்கெடு நிர்ணயிப்பதே சரியான முடிவாகும் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மது, நஸயீ, இப்னு மாஜா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 97
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الدِّمَشْقِىُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ أَخْبَرَنِى ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ عَنْ كَاتِبِ الْمُغِيرَةِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ الْفُقَهَاءِ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِىُّ وَإِسْحَاقُ. وَهَذَا حَدِيثٌ مَعْلُولٌ لَمْ يُسْنِدْهُ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ غَيْرُ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ. قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ وَمُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالاَ لَيْسَ بِصَحِيحٍ لأَنَّ ابْنَ الْمُبَارَكِ رَوَى هَذَا عَنْ ثَوْرٍ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ قَالَ حُدِّثْتُ عَنْ كَاتِبِ الْمُغِيرَةِ مُرْسَلٌ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَلَمْ يَذْكُرْ فِيهِ الْمُغِيرَةَ.
நபி(ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்திலும் அடிப்புறத்திலும் மஸஹ் செய்தார்கள் என்று முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார்கள். நபித்தோழர்கள், தாபியீன்கள் அதற்கடுத்த தலைமுறையினரில் அதிகமானோரின் கருத்தும் இதுவே. மாலிக், ஷாபி, இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே குறிப்பிடுகின்றனர். (இந்த ஹதீஸை முகீரா(ரலி) வழியாக அவரது உதவியாளர், அவர் வழியாக ரஜா இப்னு ஹய்வா, அவர் வழியாக ஸவ்ரு இப்னு யஊத், அவர் வழியாக வலீத் இப்னு முஸ்லிம் அறிவிப்பதாக உள்ளது) ஆனால் இப்னுல் முபாரக் அறிவிக்கும் ஹதீஸில் முகீரா(ரலி) என்ற நபித்தோழர் குறிப்பிடப்படவில்லை. அவரது உதவியாளர் நபி(ஸல்) அவர்கள் வழியாக அறிவிப்பதாகக் கூறப்படுகின்றது. வலீத் இப்னுல் முஸ்லிம் என்பவர் மட்டுமே நபித்தோழரையும் குறிப்பிடுகிறார். அவர் நம்பகமற்றவர் என்பதால் அவரது இந்த ஹதீஸ் குறைகூறப்பட்டதாகும். புகாரி இமாமிடமும், அபூஸாஆ அவர்களிடமும் இந்த ஹதீஸ் பற்றி நான் கேட்டபோது ‘இது ஆதாரப்பூர்வமானது அல்ல’ என்று கூறினார்கள் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மது, அபூதாவூத், இப்னுமாஜா, தாரக்குத்னீ, பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இமாம் திர்மிதீ அவர்கள் சுட்டிக்காட்டும் குறை அந்த நூல்களிலும் காணப்படுவதால் இந்த ஹதீஸ் சரியானது அல்ல)
திர்மிதி - ஹதீஸ் எண்: 98
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ رَأَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ عَلَى ظَاهِرِهِمَا. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنِ الْمُغِيرَةِ وَلاَ نَعْلَمُ أَحَدًا يَذْكُرُ عَنْ عُرْوَةَ عَنِ الْمُغِيرَةِ « عَلَى ظَاهِرِهِمَا ». غَيْرَهُ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَأَحْمَدُ. قَالَ مُحَمَّدٌ وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يُشِيرُ بِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى الزِّنَادِ.
”நபி(ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்திருக்கிறேன்” என்று முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். அறிஞர்களில் பெரும்பாலோரின் முடிவும் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே உள்ளது. ஸுஃப்யான் ஸவ்ரீ, அஹ்மது ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு அபிஸ்ஸினாத் என்பவரை மாலிக் இப்னு அனஸ் அவர்கள் குறை கூறியதாக புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார் என அபூஈஸா கூறுகிறேன். (இதை வலுப்படுத்தும் வேறு ஹதீஸ் உள்ளதால் இது ஹஸன் என்ற நிலைக்கு உயர்கிறது) (குறிப்பு : அஹ்மது, அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 99
حَدَّثَنَا هَنَّادٌ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِى قَيْسٍ عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ تَوَضَّأَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا يَمْسَحُ عَلَى الْجَوْرَبَيْنِ وَإِنْ لَمْ تَكُنْ نَعْلَيْنِ إِذَا كَانَا ثَخِينَيْنِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى مُوسَى. قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ صَالِحَ بْنَ مُحَمَّدٍ التِّرْمِذِىَّ قَالَ سَمِعْتُ أَبَا مُقَاتِلٍ السَّمَرْقَنْدِىَّ يَقُولُ دَخَلْتُ عَلَى أَبِى حَنِيفَةَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَعَلَيْهِ جَوْرَبَانِ فَمَسَحَ عَلَيْهِمَا ثُمَّ قَالَ فَعَلْتُ الْيَوْمَ شَيْئًا لَمْ أَكُنْ أَفْعَلُهُ مَسَحْتُ عَلَى الْجَوْرَبَيْنِ وَهُمَا غَيْرُ مُنَعَّلَيْنِ.
நபி(ஸல்) அவர்கள் தமது காலணிகள் மீதும், நீண்ட காலுறைகள் மீதும் ஒளூ செய்யும்போது மஸஹ் செய்தார்கள் என முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். அறிஞர்களில் அதிகமானோரின் கூற்று இதனடிப்படையில் அமைந்துள்ளது. ஸுப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் காலுறைகள் கடினமானதாக இருந்தால், அவ்விரண்டும் செருப்பாக பயன்படுத்தப்படாவிட்டால் அதன்மீது மஸஹ் செய்யலாம் என்கின்றனர். இந்தக்கருத்து அபூமூஸா(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. அபூஹனீபா எந்த நோயில் மரணமடைந்தாரோ அந்த நோயின் போது அவரிடம் சென்றேன். அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து ஒளூ செய்தார்கள். தமது நீண்ட காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். இதுவரை நான் செய்யாத ஒன்றை இன்று செய்துவிட்டேன்; அதாவது செருப்பாக பயன்படுத்தப்படாத காலுறைகள் மீது மஸஹ் செய்து விட்டேன் என்று அப்போது கூறினார்கள் என்று அபூமுமாதில் ஸமர்கந்தீ அறிவிக்கிறார். (குறிப்பு : அஹ்மது, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 100
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِىِّ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِىِّ عَنِ الْحَسَنِ عَنِ ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ قَالَ تَوَضَّأَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ. قَالَ بَكْرٌ وَقَدْ سَمِعْتُ مِنِ ابْنِ الْمُغِيرَةِ. قَالَ وَذَكَرَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِى هَذَا الْحَدِيثِ فِى مَوْضِعٍ آخَرَ أَنَّهُ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ذَكَرَ بَعْضُهُمُ الْمَسْحَ عَلَى النَّاصِيَةِ وَالْعِمَامَةِ وَلَمْ يَذْكُرْ بَعْضُهُمُ النَّاصِيَةَ. وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ مَا رَأَيْتُ بِعَيْنِى مِثْلَ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ وَسَلْمَانَ وَثَوْبَانَ وَأَبِى أُمَامَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَسٌ. وَبِهِ يَقُولُ الأَوْزَاعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا يَمْسَحُ عَلَى الْعِمَامَةِ. وَقَالَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ لاَ يَمْسَحُ عَلَى الْعِمَامَةِ إِلاَّ أَنْ يَمْسَحَ بِرَأْسِهِ مَعَ الْعِمَامَةِ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ الْجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ سَمِعْتُ وَكِيعَ بْنَ الْجَرَّاحِ يَقُولُ إِنْ مَسَحَ عَلَى الْعِمَامَةِ يُجْزِئُهُ لِلأَثَرِ.
’நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யும்போது காலுறைகள் மீது, தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்’ என்று முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸின் இறுதி அறிவிப்பாளராகிய முஹம்மது இப்னு பஷ்ஷார் அவர்கள் மற்றொரு இடத்தில் முன் நெற்றி உரோமத்தின் மீதும், தலைப்பாகையின் மீதும் நபி(ஸல்) அவர்கள் மஸஹ் செய்ததாகக் கூறுகிறார். முகீரா(ரலி) வாயிலாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகின்றது. சில அறிவிப்புகளில் ‘தலைப்பாகை’ என்று மட்டும் கூறப்படுகிறது. மற்றும் சில அறிவிப்புகளில் “முன் நெற்றி உரோமத்தின் மீதும், தலைப்பாகையின் மீதும்” என்று கூறப்படுகின்றது. (தலைப்பாகையை மட்டும் கூறக்கூடிய ஹதீஸில் எஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் இடம் பெறுகிறார்) எனது கண்களால் எஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான் அவர்களைபோன்ற (நம்பகமானவரை) நான் கண்டதில்லை என்று அஹ்மது இப்னு ஹம்பல் கூறுகிறார்கள். (அதாவது) நெற்றி உரோமத்தின் மீதும் மஸஹ் செய்துவிட்டுத் தான் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்யலாம் என்று வகீவு இப்னுல் ஜர்ராஹ் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 101
َدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَلِىُّ بْنُ مُسْهِرٍ عَنِ الأَعْمَشِ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ عَنْ بِلاَلٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ.
நபி(ஸல்) அவர்கள் தமது காலுறைகள் மீதும், தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்தார்கள் என பிலால்(ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு : முஸ்லிம், நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 102
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ هُوَ الْقُرَشِىُّ عَنْ أَبِى عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ السُّنَّةُ يَا ابْنَ أَخِى. قَالَ وَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ فَقَالَ أَمِسَّ الشَّعَرَ الْمَاءَ.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “என் சகோதரர் மகனே, அது நபிவழியாகும்” என்றார்கள். தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது பற்றி அவர்களிடம் கேட்டபோது ‘(தலைப்பாகையுடன்) தலை முடியிலும் தண்ணீரைத் தடவிக் கொள்வீராக!’ என்று கூறினார்களென அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 103
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ سَالِمِ بْنِ أَبِى الْجَعْدِ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ خَالَتِهِ مَيْمُونَةَ قَالَتْ وَضَعْتُ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- غُسْلاً فَاغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ فَغَسَلَ كَفَّيْهِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِى الإِنَاءِ فَأَفَاضَ عَلَى فَرْجِهِ ثُمَّ دَلَكَ بِيَدِهِ الْحَائِطَ أَوِ الأَرْضَ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِى الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَجَابِرٍ وَأَبِى سَعِيدٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَأَبِى هُرَيْرَةَ.
நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்காக தண்ணீரை நான் எடுத்து வைத்தேன். தமது இடக்கரத்தால் பாத்திரத்தைச் சாய்த்து வலது கையின் மீது ஊற்றி மணிக்கட்டுவரை கைகளைக் கழுவினார்கள். பின்பு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) தமது மர்மஸ்தானத்தில் ஊற்றினார்கள். பின்பு தமது கையை, தரியில் அல்லது சுவற்றில் தேய்த்தார்கள். பின்பு வாய் கொப்பளித்து மூக்குக்கும் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். தமது முகத்தையும், கைகளையும் முழங்கைவரை கழுவினார்கள். பின்பு தமது தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றினார்கள். பின்பு (நின்ற இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தமது கால்களைக் கழுவினார்கள் என்று அன்னை மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். உம்முஸலமா(ரலி), ஜாபிர்(ரலி), அபூஸயீத்(ரலி), ஜுபைர் இப்னு முத்அம்(ரலி), அபூஹுரைரா(ரலி) வாயிலாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது. (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 104
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الإِنَاءَ ثُمَّ غَسَلَ فَرْجَهُ وَيَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ يُشَرِّبُ شَعْرَهُ الْمَاءَ ثُمَّ يَحْثِى عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَثَيَاتٍ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ الَّذِى اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ فِى الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ أَنَّهُ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ يَغْسِلُ قَدَمَيْهِ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَقَالُوا إِنِ انْغَمَسَ الْجُنُبُ فِى الْمَاءِ وَلَمْ يَتَوَضَّأْ أَجْزَأَهُ وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ.
நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற எண்ணும்போது பாத்திரத்தில் தமது கைகளை நுஐப்பதற்கு முன் (மணிக்கட்டு வரை) கழுவுவார்கள். பின்பு தமது மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள். தொழுகைக்குச் செல்வது போலவே ஒளூ செய்வார்கள். பின்பு தமது தலைமுடியைத் தண்ணீரில் நனைப்பார்கள். பின்பு தமது தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றுவார்கள், என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றனர். கடமையான குளிப்புக்கு அறிஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளது இந்த முறையைத் தான். அதாவது தொழுகைக்குச் செய்வதுபோல் ஒளூ செய்துவிட்டு, பின்பு தலைக்கு மூன்று தடவை தண்ணீர் ஊற்றி, பின்பு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி, பின்பு கால்களைக் கழுவ வேண்டும் என்கின்றனர். குளிப்புக் கடமையானவன் தண்ணீரில் மூழ்கி எழுந்து ஒளூ செய்யாவிட்டால் அதுவே போதுமாகும் என்று ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 105
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِى أَفَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ قَالَ « لاَ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِينَ عَلَى رَأْسِكِ ثَلاَثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ ثُمَّ تُفِيضِينَ عَلَى سَائِرِ جَسَدِكِ الْمَاءَ فَتَطْهُرِينَ ». أَوْ قَالَ « فَإِذَا أَنْتِ قَدْ تَطَهَّرْتِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْمَرْأَةَ إِذَا اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَلَمْ تَنْقُضْ شَعْرَهَا أَنَّ ذَلِكَ يُجْزِئُهَا بَعْدَ أَنْ تُفِيضَ الْمَاءَ عَلَى رَأْسِهَا.
”அல்லாஹ்வின் தூதரே! நான் எனது தலைமுடியை சடைபோட்டுக் கொண்டவளாக இருக்கிறேன்; கடமையான (ஜனாபத்) குளிப்புக்காக அதை அவிழ்த்துவிட வேண்டுமா? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் வேண்டாம், தண்ணீரை உன் தலைமீது மூன்று தடவை ஊற்றிக் கொள்வதே உனக்கு போதுமானதாகும். பின்பு உன் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக்கொள்! இவ்வாறு நீ செய்துவிட்டாலே நீ சுத்தமாகி விடுவாய்” என்று நபி(ஸல்) விடையளித்தார்கள் என உம்முஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள். ஒரு பெண் தன் தலையை அவிழ்த்து விடாமல் கடமையான குளிப்புக் குளித்தால், அவள் தலைமீது தண்ணீரை ஊற்றிக்கொள்வதே அவளுக்கு போதுமானதாகும் என்று அறிஞர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். இது ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். (குறிப்பு : முஸ்லும், அஹ்மது, நஸயீ, அபூதாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 106
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ وَجِيهٍ قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « تَحْتَ كُلِّ شَعْرَةٍ جَنَابَةٌ فَاغْسِلُوا الشَّعَرَ وَأَنْقُوا الْبَشَرَ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْحَارِثِ بْنِ وَجِيهٍ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِهِ وَهُوَ شَيْخٌ لَيْسَ بِذَاكَ وَقَدْ رَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ. وَقَدْ تَفَرَّدَ بِهَذَا الْحَدِيثِ عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ وَيُقَالُ الْحَارِثُ بْنُ وَجِيهٍ وَيُقَالُ ابْنُ وَجْبَةَ.
ஒவ்வொரு முடியிலும் பெருந்தொடக்கு இருக்கின்றது. எனவே முடிகளைக் கழுவுங்கள்! மேனியைச் சுத்தம் செய்யுங்கள், என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக்கருத்து அலி(ரலி), அனஸ்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அல்ஹாரிஸ் இப்னு வஜீஹ் என்பவர் வாயிலாக தவிர இந்த ஹதீஸை வேறு வழிகளில் நாம் அறியவில்லை. அவர் பலவீனமான முதியவராவார் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னுமாஜா, பைஹகி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. அந்த நூல்களிலும் மிகவும் பலவீனமானவரான அல்ஹாரிஸ் இப்னு வஜீஹ் என்பவரே இடம்பெறுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 107
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِى إِسْحَاقَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ أَنْ لاَ يَتَوَضَّأَ بَعْدَ الْغُسْلِ.
”குளித்தபின் நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யமாட்டார்கள்” என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். ”குளித்தபின் ஒளூ செய்ய வேண்டியதில்லை” என்பது நபித்தோழர்கள், தாபியீன்களில் எண்ணற்றவர்களின் கருத்தாகும். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 108
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الأَوْزَاعِىِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَاغْتَسَلْنَا. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَرَافِعِ بْنِ خَدِيجٍ.
பெண்ணுறுப்பை, ஆணுறுப்புக் கடந்து சென்றால் குளிப்புக் கடமையாகிவிடும். நானும் நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு செய்துவிட்டு குளித்திருக்கிறோம் என்று ஆயிஷா(ரலி) கூறியதாக காஸிம் அறிவிக்கிறார். அபூஹுரைரா(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), ராபிவு இப்னு கதீஜ்(ரலி) ஆகியோர் வழியாகவும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 109
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَلِىِّ بْنِ زَيْدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ ». قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. قَالَ وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْ غَيْرِ وَجْهٍ « إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ». وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِىٌّ وَعَائِشَةُ وَالْفُقَهَاءِ مِنَ التَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِىِّ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَجَبَ الْغُسْلُ.
”பெண்ணுறுப்பை ஆணுறுப்புக் கடந்து விட்டால் குளிப்புக் கடமையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றனர். ஆயிஷா(ரலி) வாயிலாக பல்வேறு வழிகளில் இந்த ஹதீஸ் அரிவிக்கப்படுகின்றது. அபூபக்ரு(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆயிஷா(ரலி) போன்ற நபித்தோழர்களில் பலரது கருத்தும், ஸுப்யான் ஸவ்ரீ, ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் போன்ற தாபியீன்கள், தபவுத் தாபியீன்களின் கருத்தும் இதுவேயாகும். (விந்து வெளிப்படாவிட்டாலும்) குளிப்புக் கடமை என்று இவர்கள் கூறுகின்றனர். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். (குறிப்பு : முஸ்லிம், அஹ்ம்து, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 110
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ قَالَ إِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ رُخْصَةً فِى أَوَّلِ الإِسْلاَمِ ثُمَّ نُهِىَ عَنْهَا.
விந்து வெளிப்பட்டல் தான் குளிப்புக் கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இந்த சலுகை ரத்துச் செய்யப்பட்டு (ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது அவசியமாகப்பட்டு)விட்டது என்று உபை இப்னு கஃபு(ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு : அஹ்மது, அபூதாவூத், இப்னுமாஜா, இப்னு குஸைமா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 111
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِىِّ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَإِنَّمَا كَانَ الْمَاءُ مِنَ الْمَاءِ فِى أَوَّلِ الإِسْلاَمِ ثُمَّ نُسِخَ بَعْدَ ذَلِكَ. وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ أُبَىُّ بْنُ كَعْبٍ وَرَافِعُ بْنُ خَدِيجٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّهُ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ فِى الْفَرْجِ وَجَبَ عَلَيْهِمَا الْغُسْلُ وَإِنْ لَمْ يُنْزِلاَ.
மேற்கூறிய இதே ஹதீஸ்தான் வேறு வரிசையில் அறிவிக்கப்படுகின்றது. உபை இப்னு கஃபு(ரலி), ராபிவு இப்னு கதீஜ்(ரலி) போன்ற ஏராளமான நபித்தோழர்கள் வாயிலாக இவ்வாறே அறிவிக்கப்படுகின்றது. ஆண் தனது மனைவியுடன் உறவு கொண்டு விந்து வெளிப்படாவிட்டாலும் இருவருக்கும் குளிப்புக் கடமையாகிவிட்டது என்பதே அறிஞர்களின் முடிவாகும். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 112
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ أَبِى الْجَحَّافِ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ فِى الاِحْتِلاَمِ. قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ لَمْ نَجِدْ هَذَا الْحَدِيثَ إِلاَّ عِنْدَ شَرِيكٍ. قَالَ أَبُو عِيسَى وَأَبُو الْجَحَّافِ اسْمُهُ دَاوُدُ بْنُ أَبِى عَوْفٍ. وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِىِّ قَالَ حَدَّثَنَا أَبُو الْجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا. قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَعَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ وَالزُّبَيْرِ وَطَلْحَةَ وَأَبِى أَيُّوبَ وَأَبِى سَعِيدٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « الْمَاءُ مِنَ الْمَاءِ ».
விந்து வெளிப்பட்டாலே குளிக்க வேண்டும் (என்று நபி(ஸல்) கூறியது) உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுவது பற்றியதாகும் என்று இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பட்டதாக இக்ரிமா அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை ‘ஷரீக்’ என்பவர் வாயிலாகத் தவிர நாம் காணவில்லை என்று வகீவு அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘விந்து வெளிப்பட்டாலே குளிப்பது அவசியம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஸுபைர்(ரலி), தல்ஹா(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூ ஸயீத்(ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இப்னு அப்பாஸ்(ரலி) கூறிய விளக்கத்தை அறிவிப்பவர்களில் ஒருவராக இடம்பெறும் ‘ஷரீக்’ பலவீனமானவராவார்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 113
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ هُوَ الْعُمَرِىُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلاَ يَذْكُرُ احْتِلاَمًا قَالَ « يَغْتَسِلُ ». وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلَمْ يَجِدْ بَلَلاً قَالَ « لاَ غُسْلَ عَلَيْهِ ». قَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ هَلْ عَلَى الْمَرْأَةِ تَرَى ذَلِكَ غُسْلٌ قَالَ « نَعَمْ إِنَّ النِّسَاءَ شَقَائِقُ الرِّجَالِ ». قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا رَوَى هَذَا الْحَدِيثَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ حَدِيثَ عَائِشَةَ فِى الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلاَ يَذْكُرُ احْتِلاَمًا. وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ مِنْ قِبَلِ حِفْظِهِ فِى الْحَدِيثِ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ فَرَأَى بِلَّةً أَنَّهُ يَغْتَسِلُ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَأَحْمَدَ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ إِنَّمَا يَجِبُ عَلَيْهِ الْغُسْلُ إِذَا كَانَتِ الْبِلَّةُ بِلَّةَ نُطْفَةٍ. وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَإِسْحَاقَ. وَإِذَا رَأَى احْتِلاَمًا وَلَمْ يَرَ بِلَّةً فَلاَ غُسْلَ عَلَيْهِ عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ
”ஒரு ஆண் ஸ்கலிதம் ஏற்பட்ட உணர்வு இன்றி (தனது ஆடையில்) ஈரத்தைக் கண்டால் என்ன செய்வது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அவன் குளிக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘மற்றொரு ஆண் ஸ்கலிதம் ஏற்பட்டதாக உணர்கிறான்; ஆனால் ஈரம் ஏதும் இல்லை; (அவன் என்ன செய்வது?) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அவன் குளிப்பது அவசியமில்லை’ என்றனர். அப்போது உம்மு ஸலமா(ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! இது போன்றதை ஒருபெண் கண்டால் அவள் மீதும் குளிப்பு உண்டா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்! பெண்கள் ஆண்களுக்கு உடன் பிறப்புகளே’ என்றனர். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு உமர் என்பவர் இடம் பெறுகிறார். (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) என்ற நபித்தோழர் அல்ல இவர்.) இவர் நினைவாற்றல் குரைந்தவர் என்ற காரணம் கூறி எஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் அவரை பலவீனப்படுத்துகின்றார். நபித்தோழர்கள், தாபியீன்களில் அனேகரின்கருத்தும், ஸுஃப்யான் ஸவ்ரீ, அஹ்மது ஆகியோரின் கருத்தும் இந்த ஹதீஸ் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. விந்துடைய ஈரத்தைக் கண்டாலே அவன் குளிக்க வேண்டியது அவசியம். (பொதுவாக ஈரத்தைக் கண்டால் அல்ல) என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஷாபி, இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவே. ஸ்கலிதம் ஏற்பட்டதாக உணர்ந்து ஈரம் எதையும் காணாவிட்டால் அவன் குளிக்க வேண்டியதில்லை என்பது அனைத்து அறிஞர்களின் ஒருமித்த முடிவாகும். (குறிப்பு : அபூதாவூத், அஹ்மது, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 114
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ الْبَلْخِىُّ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ يَزِيدَ بْنِ أَبِى زِيَادٍ ح قَالَ وَحَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِىُّ عَنْ زَائِدَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِى زِيَادٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ عَلِىٍّ قَالَ سَأَلْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- عَنِ الْمَذْىِ فَقَالَ « مِنَ الْمَذْىِ الْوُضُوءُ وَمِنَ الْمَنِىِّ الْغُسْلُ ». قَالَ وَفِى الْبَابِ عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ وَأُبَىِّ بْنِ كَعْبٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ عَنْ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْ غَيْرِ وَجْهٍ « مِنَ الْمَذْىِ الْوُضُوءُ وَمِنَ الْمَنِىِّ الْغُسْلُ ». وَهُوَ قَوْلُ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
நபி(ஸல்) அவர்களிடம் ’மதீ’ பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மதீ வெளிப்பட்டால் ஒளூ செய்ய வேண்டும்; ‘மனி’ வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்’ என்று கூறினார்கள் என அலி(ரலி) அறிவிக்கிறார்கள். மிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரலி), உபை இப்னு கஃபு(ரலி) ஆகியோர் வழியாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகிறது. அலி(ரலி) வாயிலாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகிறது. நபித்தோழர்கள், தாபியீன்கள், அதற்கடுத்த தலைமுறையினர் ஆகிய அறிஞர்களின் கருத்தும் இதுவே. ஸுஃப்யான், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவே. இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்ததாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : இந்தக் கருத்து நஸயீ, முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 115
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدٍ هُوَ ابْنُ السَّبَّاقِ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً وَعَنَاءً فَكُنْتُ أُكْثِرُ مِنْهُ الْغُسْلَ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَسَأَلْتُهُ عَنْهُ فَقَالَ « إِنَّمَا يُجْزِئُكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ». فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِى مِنْهُ قَالَ « يَكْفِيكَ أَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهِ ثَوْبَكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ مِنْهُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ فِى الْمَذْىِ مِثْلَ هَذَا. وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِى الْمَذْىِ يُصِيبُ الثَّوْبَ فَقَالَ بَعْضُهُمْ لاَ يُجْزِئُ إِلاَّ الْغَسْلُ وَهُوَ قَوْلُ الشَّافِعِىِّ وَإِسْحَاقَ. وَقَالَ بَعْضُهُمْ يُجْزِئُهُ النَّضْحُ. وَقَالَ أَحْمَدُ أَرْجُو أَنْ يُجْزِئَهُ النَّضْحُ بِالْمَاءِ.
மதியின் காரணமாக நான் பெரும் கஷ்டத்திற்கும், சிரமத்திற்கும் உள்ளானேன். இதன் காரணமாக அடிக்கடி குளிப்பவனாகவும் இருந்தேன். இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘உமக்கு ஒளூ செய்வதே போதுமே’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனது ஆடையில் ‘மதி’ பட்டுவிடும்போது எப்படி நான் நடந்து கொள்வது? எனக் கேட்டபோது ‘ஒரு கையளவு தண்ணீர் எடுத்து மதிப்பட்ட இடத்தில், தெளித்துக் கொள்வது உமக்குப் போதும்’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ஆடையில் பட்டுவிடும் ‘மதி’ விஷயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். சிலர் “கழுவியாக வேண்டும் என்கின்றனர். ஷாபி, இஸ்ஹாக் ஆகியோர் இக்கருத்துடையோர், மற்றும் சிலர் ‘தெளித்தாலே போதும்’ என்கின்றனர். அஹ்மது இக்கருத்துடையவராவார். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னுமாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 116
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ قَالَ ضَافَ عَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ لَهُ بِمِلْحَفَةٍ صَفْرَاءَ فَنَامَ فِيهَا فَاحْتَلَمَ فَاسْتَحْيَا أَنْ يُرْسِلَ بِهَا وَبِهَا أَثَرُ الاِحْتِلاَمِ فَغَمَسَهَا فِى الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ لِمَ أَفْسَدَ عَلَيْنَا ثَوْبَنَا إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَفْرُكَهُ بِأَصَابِعِهِ وَرُبَّمَا فَرَكْتُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِأَصَابِعِى. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ الْفُقَهَاءِ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِىِّ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا فِى الْمَنِىِّ يُصِيبُ الثَّوْبَ يُجْزِئُهُ الْفَرْكُ وَإِنْ لَمْ يُغْسَلْ. وَهَكَذَا رُوِىَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ مِثْلَ رِوَايَةِ الأَعْمَشِ. وَرَوَى أَبُو مَعْشَرٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ وَحَدِيثُ الأَعْمَشِ أَصَحُّ.
ஆயிஷா(ரலி)யிடம் ஒரு விருந்தினர் தங்கினார். (அவர் படுத்துறங்க) மஞ்சள் நிற விரிப்பு வழங்கச் செய்தார்கள். அவர் அதில் படுத்துறங்கியபோது அவருக்கு ஸ்கலிதம் ஏற்பட்டுவிட்டது. ஸ்கலிதம் ஏற்பட்ட சுவர் அந்த விரிப்பில் இருந்ததால் அதை அப்படியே ஆயிஷா(ரலி)யிடம் திருப்பியளிக்க அவர் வெட்கப்பட்டார். எனவே தண்ணீரில் அதை நனைத்து பின்னர் அதை ஆயிஷா(ரலி)யிடம் வழங்கினார். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள் “தமது ஆடையை பாழாக்கிவிட்டாரே! தனது விரல்களால் அதைச் சுரண்டிவிட்டால் அதுவே போதுமே! நானே பலமுறை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் (பட்ட ‘மனி’யின் சுவடை) எனது விரல்களால் சுரண்டி விட்டிருக்கிறேன்” என்றார்கள். நபித்தோழர்கள், தாபியீன்கள் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அறிஞர்களில் அனேகரின் கருத்தும் இதுவே. ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் இக்கருத்துடையவர்களே. இது ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 117
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ أَنَّهَا غَسَلَتْ مَنِيًّا مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِى الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ. وَحَدِيثُ عَائِشَةَ أَنَّهَا غَسَلَتْ مَنِيًّا مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- - لَيْسَ بِمُخَالِفٍ لِحَدِيثِ الْفَرْكِ لأَنَّهُ وَإِنْ كَانَ الْفَرْكُ يُجْزِئُ فَقَدْ يُسْتَحَبُّ لِلرَّجُلِ أَنْ لاَ يُرَى عَلَى ثَوْبِهِ أَثَرُهُ. قَالَ ابْنُ عَبَّاسٍ الْمَنِىُّ بِمَنْزِلَةِ الْمُخَاطِ فَأَمِطْهُ عَنْكَ وَلَوْ بِإِذْخِرَةٍ.
நபி(ஸல்) அவர்களின் ஆடையில் ‘மனி’பட்டபோது அதைத்தான் கழுவியிருப்பதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது. ‘சுரண்டுவது’ பற்றி வந்துள்ள ஹதீஸுக்கு இது முரண்பட்டதல்ல. ஏனெனில் சுரண்டுவது போதுமெனினும் தனது ஆடையில் அதன் சுவடு கூட காணப்படாதது (அளவுக்கு கழுவுவது) விரும்பத்தக்கதாகும். ‘மனி’ என்பது ‘களி’ போன்றதாகும். ‘இத்கர்’ எனும் புல் மூலமாவது அதை நீ அகற்றலாம் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மது ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 118
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى إِسْحَاقَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنَامُ وَهُوَ جُنُبٌ وَلاَ يَمَسُّ مَاءً.
’நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் குளிக்காமலேயே உறங்குவார்கள்’ என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 119
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِى إِسْحَاقَ نَحْوَهُ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا قَوْلُ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَغَيْرِهِ. وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ كَانَ يَتَوَضَّأُ قَبْلَ أَنْ يَنَامَ. وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِى إِسْحَاقَ عَنِ الأَسْوَدِ. وَقَدْ رَوَى عَنْ أَبِى إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ شُعْبَةُ وَالثَّوْرِىُّ وَغَيْرُ وَاحِدٍ. وَيَرَوْنَ أَنَّ هَذَا غَلَطٌ مِنْ أَبِى إِسْحَاقَ.
இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகிறது. ஸயீத் இப்னுல் முஸய்யப் மற்றும் பலரது கருத்து இதுவே. ‘நபி(ஸல்) அவர்கள் உறங்கும் முன் ஒளூ செய்துவிட்டு உறங்குவார்கள்’ என்று ஆயிஷா(ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது. இது முந்தைய ஹதீஸை விட மிகவும் நம்பத்தக்கதாகும்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 120
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ أَنَّهُ سَأَلَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَيَنَامُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ « نَعَمْ إِذَا تَوَضَّأَ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَمَّارٍ وَعَائِشَةَ وَجَابِرٍ وَأَبِى سَعِيدٍ وَأُمِّ سَلَمَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ أَحْسَنُ شَىْءٍ فِى هَذَا الْبَابِ وَأَصَحُّ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا إِذَا أَرَادَ الْجُنُبُ أَنْ يَنَامَ تَوَضَّأَ قَبْلَ أَنْ يَنَامَ.
குளிப்புக் கடமையான நிலையில் நாங்கள் உறங்கலாமா? என்று உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஆம்! ஒளூ செய்துவிட்டால் உறங்கலாம்’ என்றனர். இப்னு உமர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கின்றனர். அம்மார்(ரலி), ஆயிஷா(ரலி), ஜாபிர்(ரலி), அபூஸயீத்(ரலி), உம்முஸலமா(ரலி) வாயிலாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகின்றது. ஆயினும் உமர்(ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் நம்பத்தகுந்ததும், அழகியதுமாகும் என அபூஈஸா கூறுகிறேன்.\ நபித்தோழர்கள், தாபியீன்களில் பலரது கருத்து இதுவேயாகும். ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவேயாகும்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 121
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِىِّ عَنْ أَبِى رَافِعٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- لَقِيَهُ وَهُوَ جُنُبٌ قَالَ فَانْبَجَسْتُ أَىْ فَانْخَنَسْتُ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فَقَالَ « أَيْنَ كُنْتَ أَوْ أَيْنَ ذَهَبْتَ ». قُلْتُ إِنِّى كُنْتُ جُنُبًا. قَالَ « إِنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ حُذَيْفَةَ وَابْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِى هُرَيْرَةَ أَنَّهُ لَقِىَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ جُنُبٌ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رَخَّصَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ فِى مُصَافَحَةِ الْجُنُبِ وَلَمْ يَرَوْا بِعَرَقِ الْجُنُبِ وَالْحَائِضِ بَأْسًا. وَمَعْنَى قَوْلِهِ فَانْخَنَسْتُ يَعْنِى تَنَحَّيْتُ عَنْهُ.
நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கும்போது என்னை நபி(ஸல்) சந்தித்தனர். நான் அவர்களைவிட்டு மறைந்து குளித்துவிட்டு (அவர்களிடம் வந்தேன். ‘எங்கே போய்விட்டீர்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். ’நான் குளிப்புக் கடமையானவனாக இருந்தேன்’ என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக முஸ்லிம் அசுத்தமாக மட்டான்’ என்றார்கள்; என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றனர். இந்தக் கருத்து ஹுதைபா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் மூலமும் அறிவிக்கப்படுகின்றது. எனினும் அபூஹுரைரா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸே ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்ததாகும். அறிஞர்களில் பலர் குளிப்புக் கடமையானவருடன் முஸாபஹா செய்வதிலும் அனுமதிக்கின்றனர். குளிப்புக் கடமையானவர், மாதவிடாய்க்காரி ஆகியோரின் வியர்வைகள் படுவதால் தவறில்லை எனவும் கூறுகின்றனர்; என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 122
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِى سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ بِنْتُ مِلْحَانَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِى مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ تَعْنِى غُسْلاً إِذَا هِىَ رَأَتْ فِى الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ قَالَ « نَعَمْ إِذَا هِىَ رَأَتِ الْمَاءَ فَلْتَغْتَسِلْ ». قَالَتْ أُمُّ سَلَمَةَ قُلْتُ لَهَا فَضَحْتِ النِّسَاءَ يَا أُمَّ سُلَيْمٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ أَنَّ الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِى الْمَنَامِ مِثْلَ مَا يَرَى الرَّجُلُ فَأَنْزَلَتْ أَنَّ عَلَيْهَا الْغُسْلَ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَالشَّافِعِىُّ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أُمِّ سُلَيْمٍ وَخَوْلَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ.
மில்ஹான் என்பவரின் மகள் உம்முஸுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை(யைப் கூறும்) விஷயத்தில் நிச்சயமாக அல்லாஹ் வெகப்படமாட்டான். ஒரு ஆண் காண்பது போன்ற (ஸ்கலிதத்)தை ஒரு பெண் கண்டால் அவள்மீது குளிப்பு கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்! ஒரு பெண் நீர் வெளிப்பட்டதைக் கண்டால் அவள் குளிக்க வேண்டும்’ என்கிறார்கள். அப்போது நான் ‘உம்முஸுலைம்! பெண்களைக் கேவலப்படுத்தி விட்டாயே! என்று அவரிடம் கூறினேன் என உம்முஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள். சட்ட நிபுணர்களின் கருத்து இதுதான். ஸுப்யான் ஸவ்ரீ, ஷாபி ஆகியோரும் இதையே கூறுகின்றனர். இந்தக் கருத்து உம்முஸுலைம்(ரலி), கவ்லா(ரலி), ஆயிஷா(ரலி), அனஸ்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 123
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ حُرَيْثٍ عَنِ الشَّعْبِىِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ رُبَّمَا اغْتَسَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِى فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ بِإِسْنَادِهِ بَأْسٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ أَنَّ الرَّجُلَ إِذَا اغْتَسَلَ فَلاَ بَأْسَ بِأَنْ يَسْتَدْفِئَ بِامْرَأَتِهِ وَيَنَامَ مَعَهَا قَبْلَ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
’கடமையான குளிப்பை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றியபின், நான் குளிக்காமலிருக்கும் நிலையிலேயே என்னை அணைத்து குளிரைப் போக்கிக் கொள்வார்கள்’ என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றனர். நபித்தோழர்கள், மற்றும் தாபியீன்களில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து இதை ஒட்டியே அமைந்துள்ளது. ஸுபயான் ஸவ்ரீ, ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே முடிவு செய்துள்ளனர். குறைபாடு ஏதுவும் இல்லாத ஒரு ஹதீஸ் என்று அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 124
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِىُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِى قِلاَبَةَ عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ عَنْ أَبِى ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ طَهُورُ الْمُسْلِمِ وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيُمِسَّهُ بَشَرَتَهُ فَإِنَّ ذَلِكَ خَيْرٌ ». وَقَالَ مَحْمُودٌ فِى حَدِيثِهِ « إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وَضُوءُ الْمُسْلِمِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ. قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِى قِلاَبَةَ عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ عَنْ أَبِى ذَرٍّ. وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَيُّوبُ عَنْ أَبِى قِلاَبَةَ عَنْ رَجُلٍ مِنْ بَنِى عَامِرٍ عَنْ أَبِى ذَرٍّ وَلَمْ يُسَمِّهِ. قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ أَنَّ الْجُنُبَ وَالْحَائِضَ إِذَا لَمْ يَجِدَا الْمَاءَ تَيَمَّمَا وَصَلَّيَا. وَيُرْوَى عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ كَانَ لاَ يَرَى التَّيَمُّمَ لِلْجُنُبِ وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ. وَيُرْوَى عَنْهُ أَنَّهُ رَجَعَ عَنْ قَوْلِهِ فَقَالَ يَتَيَمَّمُ إِذَا لَمْ يَجِدِ الْمَاءَ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَمَالِكٌ َالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
சுத்தமான மண் முஸ்லிமைத் தூய்மைப் படுத்திட ஏற்றதாகும். பத்து ஆண்டுகள் அவன் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே! தண்ணீர் கிடைத்துவிட்டால் தன் மேனியில் தண்ணீரைப்படச் செய்ய வேண்டும். தண்ணீர் கிடைக்கும்போது அதுவே ஏற்றதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார்கள். இந்தக் கருத்து அபூஹுரைரா(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி), இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. தண்ணீர் கிடைக்காவிட்டல் குளிப்புக் கடமையானவனும்; மாதவிடாய் குளிப்புக் கடமையானவளும் தயம்மும் செய்து தொழலாம் என்பதே சட்டமேதைகளின் முடிவாகும். தண்ணீர் கிடைக்காவிட்டாலும் குளிப்புக் கடமையானவன் தயம்மும் செய்யலாகாது என்று இப்னு மஸ்வூது(ரலி) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்பு தனது இந்தக் கருத்தை அவர்கள் வாபஸ் பெற்று விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸுப்யான் ஸவ்ரீ, மாலிக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே முடிவு செய்துள்ளனர். இது ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும், என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 125
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ وَعَبْدَةُ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِى حُبَيْشٍ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّى امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ « لاَ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِى الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِى عَنْكِ الدَّمَ وَصَلِّى ». قَالَ أَبُو مُعَاوِيَةَ فِى حَدِيثِهِ وَقَالَ « تَوَضَّئِى لِكُلِّ صَلاَةٍ حَتَّى يَجِىءَ ذَلِكَ الْوَقْتُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ جَاءَتْ فَاطِمَةُ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَمَالِكٌ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ أَنَّ الْمُسْتَحَاضَةَ إِذَا جَاوَزَتْ أَيَّامَ أَقْرَائِهَا اغْتَسَلَتْ وَتَوَضَّأَتْ لِكُلِّ صَلاَةٍ.
பாத்திமா பிந்து அபூஹுபைஷ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! தூய்மையடையாத முறையில் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்படக்கூடியவளாக நான் இருக்கிறேன். இதனால் நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “கூடாது! இது மாதவிடாய் அல்ல, ஒரு நோயாகும். எனவே மாதவிடாய் ஏற்படும்போது (மட்டும்) தொஉழ்கையை விட்டுவிடு. அது நின்றபின் இரத்தத்தைக் கழுவியபின் தொழுதுவிடு! என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். மற்றொரு அறிவிப்பில் “ஒவ்வொரு தொழுகை நேரம் வந்ததும் ஒவ்வொரு தொழுக்கைக்கும் ஒளூ செய்துகொள்!” என்று நபி(ஸல்) கூறியதாக குறிப்பிடப்படுகிறது. நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களில் பல அறிஞர்களின் கருத்தும், ஸுஃப்யான் ஸவ்ரீ, மாலிக், இப்னுல் முபாரக், ஷாபி ஆகியோரின் கருத்தும் இதுவேயாகும். இந்த ஹதீஸ் ஹஸன், ஸஹீஹ் எனும் தரத்திலமைந்ததாகும் என அபூஈஸா கூறுகிறேன்.\ (குறிப்பு : புகாரி, நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 126
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِى الْيَقْظَانِ عَنْ عَدِىِّ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ فِى الْمُسْتَحَاضَةِ « تَدَعُ الصَّلاَةَ أَيَّامَ أَقْرَائِهَا الَّتِى كَانَتْ تَحِيضُ فِيهَا ثُمَّ تَغْتَسِلُ وَتَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ وَتَصُومُ وَتُصَلِّى ».
உதிரப் போக்குக்கு ஆளானவள் தனது வழமையான மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டுவிடுவாள். அந்த நாட்கள் முடிந்ததும் குளித்து ஒவ்வொரு தொழுக்கைக்கும் ஒளூ செய்ய வேண்டும். அவள் தொழவும் வேண்டும்; நோன்பு நோற்கவும் வேண்டும் என நபி(ஸல்) கூறியதாக அதீ இப்னு ஸாபித் தன் பாட்டனார் வழியாக அறிவிக்கிறார்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 127
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ نَحْوَهُ بِمَعْنَاهُ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ قَدْ تَفَرَّدَ بِهِ شَرِيكٌ عَنْ أَبِى الْيَقْظَانِ. قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقُلْتُ عَدِىُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ جَدُّ عَدِىٍّ مَا اسْمُهُ فَلَمْ يَعْرِفْ مُحَمَّدٌ اسْمَهُ وَذَكَرْتُ لِمُحَمَّدٍ قَوْلَ يَحْيَى بْنِ مَعِينٍ أَنَّ اسْمَهُ دِينَارٌ فَلَمْ يَعْبَأْ بِهِ. وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ فِى الْمُسْتَحَاضَةِ إِنِ اغْتَسَلَتْ لِكُلِّ صَلاَةٍ هُوَ أَحْوَطُ لَهَا وَإِنْ تَوَضَّأَتْ لِكُلِّ صَلاَةٍ أَجْزَأَهَا وَإِنْ جَمَعَتْ بَيْنَ الصَّلاَتَيْنِ بِغُسْلٍ وَاحِدٍ أَجْزَأَهَا.
மேற்கூறிய ஹதீஸே அறிவிப்பாளர் வரிசையில் மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை(பலவீனமான) ஷரித் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். அதீ இப்னு ஸாபித் உடைய பாட்டனார் யார் என்று புகாரி இமாமிடம் நான் கேட்டபோது அவரது பெயரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவருடைய பாட்டனார் பெயர் ‘தீனார்’ என்று எஹ்யா இப்னு முயீன் கூறியிருப்பதை புகாரி இமாமுடைய கவனத்திற்கு நான் கொண்டு வந்தபோது அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் குளித்துக் கொள்வது பேணுதலாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் ஒளூ செய்து கொண்டால் அது அவளுக்குப் போதுமானதாகும். ஒரு குளிப்பின் மூலம் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் அவள் தொழுதால் அதுவும் அவளுக்குப் போதுமானதே, என்று அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 128
باب مَا جَاءَ فِى الْمُسْتَحَاضَةِ أَنَّهَا تَجْمَعُ بَيْنَ الصَّلاَتَيْنِ بِغُسْلٍ وَاحِدٍ. 128 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِىُّ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ عَنْ عَمِّهِ عِمْرَانَ بْنِ طَلْحَةَ عَنْ أُمِّهِ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ قَالَتْ كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً فَأَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَسْتَفْتِيهِ وَأُخْبِرُهُ فَوَجَدْتُهُ فِى بَيْتِ أُخْتِى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً شَدِيدَةً فَمَا تَأْمُرُنِى فِيهَا قَدْ مَنَعَتْنِى الصِّيَامَ وَالصَّلاَةَ قَالَ « أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ ». قَالَتْ هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ قَالَ « فَتَلَجَّمِى ». قَالَتْ هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ قَالَ « فَاتَّخِذِى ثَوْبًا ». قَالَتْ هُوَ أَكْثَرُ مِنْ ذَلِكَ إِنَّمَا أَثُجُّ ثَجًّا فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « سَآمُرُكِ بِأَمْرَيْنِ أَيَّهُمَا صَنَعْتِ أَجْزَأَ عَنْكِ فَإِنْ قَوِيتِ عَلَيْهِمَا فَأَنْتِ أَعْلَمُ ». فَقَالَ « إِنَّمَا هِىَ رَكْضَةٌ مِنَ الشَّيْطَانِ فَتَحَيَّضِى سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ فِى عِلْمِ اللَّهِ ثُمَّ اغْتَسِلِى فَإِذَا رَأَيْتِ أَنَّكِ قَدْ طَهُرْتِ وَاسْتَنْقَأْتِ فَصَلِّى أَرْبَعًا وَعِشْرِينَ لَيْلَةً أَوْ ثَلاَثًا وَعِشْرِينَ لَيْلَةً وَأَيَّامَهَا وَصُومِى وَصَلِّى فَإِنَّ ذَلِكِ يُجْزِئُكِ وَكَذَلِكِ فَافْعَلِى كَمَا تَحِيضُ النِّسَاءُ وَكَمَا يَطْهُرْنَ لِمِيقَاتِ حَيْضِهِنَّ وَطُهْرِهِنَّ فَإِنْ قَوِيتِ عَلَى أَنْ تُؤَخِّرِى الظُّهْرَ وَتُعَجِّلِى الْعَصْرَ ثُمَّ تَغْتَسِلِينَ حِينَ تَطْهُرِينَ وَتُصَلِّينَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ تُؤَخِّرِينَ الْمَغْرِبَ وَتُعَجِّلِينَ الْعِشَاءَ ثُمَّ تَغْتَسِلِينَ وَتَجْمَعِينَ بَيْنَ الصَّلاَتَيْنِ فَافْعَلِى وَتَغْتَسِلِينَ مَعَ الصُّبْحِ وَتُصَلِّينَ وَكَذَلِكِ فَافْعَلِى وَصُومِى إِنْ قَوِيتِ عَلَى ذَلِكِ ». فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « وَهُوَ أَعْجَبُ الأَمْرَيْنِ إِلَىَّ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَرَوَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّىُّ وَابْنُ جُرَيْجٍ وَشَرِيكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ عَنْ عَمِّهِ عِمْرَانَ عَنْ أُمِّهِ حَمْنَةَ إِلاَّ أَنَّ ابْنَ جُرَيْجٍ يَقُولُ عُمَرُ بْنُ طَلْحَةَ وَالصَّحِيحُ عِمْرَانُ بْنُ طَلْحَةَ. قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهَكَذَا قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ فِى الْمُسْتَحَاضَةِ إِذَا كَانَتْ تَعْرِفُ حَيْضَهَا بِإِقْبَالِ الدَّمِ وَإِدْبَارِهِ وَإِقْبَالُهُ أَنْ يَكُونَ أَسْوَدَ. وَإِدْبَارُهُ أَنْ يَتَغَيَّرَ إِلَى الصُّفْرَةِ فَالْحُكْمُ لَهَا عَلَى حَدِيثِ فَاطِمَةَ بِنْتِ أَبِى حُبَيْشٍ وَإِنْ كَانَتِ الْمُسْتَحَاضَةُ لَهَا أَيَّامٌ مَعْرُوفَةٌ قَبْلَ أَنْ تُسْتَحَاضَ فَإِنَّهَا تَدَعُ الصَّلاَةَ أَيَّامَ أَقْرَائِهَا ثُمَّ تَغْتَسِلُ وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ وَتُصَلِّى وَإِذَا اسْتَمَرَّ بِهَا الدَّمُ وَلَمْ يَكُنْ لَهَا أَيَّامٌ مَعْرُوفَةٌ وَلَمْ تَعْرِفِ الْحَيْضَ بِإِقْبَالِ الدَّمِ وَإِدْبَارِهِ فَالْحُكْمُ لَهَا عَلَى حَدِيثِ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ. وَكَذَلِكَ قَالَ أَبُو عُبَيْدٍ. وَقَالَ الشَّافِعِىُّ الْمُسْتَحَاضَةُ إِذَا اسْتَمَرَّ بِهَا الدَّمُ فِى أَوَّلِ مَا رَأَتْ فَدَامَتْ عَلَى ذَلِكَ فَإِنَّهَا تَدَعُ الصَّلاَةَ مَا بَيْنَهَا وَبَيْنَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَإِذَا طَهُرَتْ فِى خَمْسَةَ عَشَرَ يَوْمًا أَوْ قَبْلَ ذَلِكَ فَإِنَّهَا أَيَّامُ حَيْضٍ فَإِذَا رَأَتِ الدَّمَ أَكْثَرَ مِنْ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَإِنَّهَا تَقْضِى صَلاَةَ أَرْبَعَةَ عَشَرَ يَوْمًا ثُمَّ تَدَعُ الصَّلاَةَ بَعْدَ ذَلِكَ أَقَلَّ مَا تَحِيضُ النِّسَاءُ وَهُوَ يَوْمٌ وَلَيْلَةٌ. قَالَ أَبُو عِيسَى وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِى أَقَلِّ الْحَيْضِ وَأَكْثَرِهِ فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَقَلُّ الْحَيْضِ ثَلاَثَةٌ وَأَكْثَرُهُ عَشَرَةٌ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَأَهْلِ الْكُوفَةِ وَبِهِ يَأْخُذُ ابْنُ الْمُبَارَكِ وَرُوِىَ عَنْهُ خِلاَفُ هَذَا. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمْ عَطَاءُ بْنُ أَبِى رَبَاحٍ أَقَلُّ الْحَيْضِ يَوْمٌ وَلَيْلَةٌ وَأَكْثَرُهُ خَمْسَةَ عَشَرَ يَوْمًا. وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالأَوْزَاعِىِّ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ وَأَبِى عُبَيْدٍ.
நான் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுபவளாக இருந்தேன். இதுபற்றி விளக்கம் கேட்பதற்காக நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் என் சகோதரி ஸைனப் பின்து ஜஹ்ஷ்(ரலி) உடைய இல்லத்தில் இருந்தனர். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையான இரத்தப்போக்குக்கு ஆளானவள்; எனது தொழுகையையும்) எனது நோன்பையும் அது தடுத்துவிட்டது; எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘சிறிய கைக்குட்டையை உனக்கு பரிந்துரைக்கிறேன். அது இரத்தத்தை நிறுத்தும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதைவிடவும் அதிகமாக வல்லவா வெளிப்படுகின்றது’ என்று நான் கூறினேன். அப்படியானால் (துணியை வைத்து) கடிவாளம்போல் இறுக்கமாக கட்டிக்கொள்! என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘அதற்கும் அதிகமாகவல்லவா நிலை இருக்கிறது’ என்று நான் கூறினேன். ‘அப்படியானால் மிகவும் பெரிய ஆடை ஒன்றைப் பயன்படுத்திக்கொள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதையெல்லாம் கடந்து ஒரேபோக்காக போய்க் கொண்டிருக்கிறது’ என்றேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள் (இரண்டு வழிகளை உனக்குக் கூறுகிறேன். அவற்றில் நீ எதைச் செய்தாலும் அது உனக்குப் போதுமானதாகும். இரண்டையும் செய்ய உனக்கு சக்தி உள்ளதா என்பதை நீயே அறிவாய்! என்று (கூறிவிட்டு அந்த வழிகளைக் கூறலானார்கள். நிச்சயமாக இது ஷைத்தானின் வேலையாகும். ஆறு அல்லது ஏழு நாட்கலை மாதவிடாய் நாட்கள் என்று முடிவு செய்துகொள்! பின்னர் குளித்துவிடு! (மாதவிடாயிலிருந்து) நீ தூய்மையடைந்து விட்டதாக நீ உறுதி கொண்டதும் இருபத்தி மூன்று இருபத்தி நான்கு நாட்கள் தொழு! தொழுகை நோன்பு போன்றவைகளை ஏனைய பெண்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையானபின் செய்வது போல் நீயும் செய்துகொள்! லுஹரை அதன் கடைசி நேரத்திலும், அஸரை அதன் ஆரம்ப நேரத்திலும் சேர்த்துத்தொழு. மஃரிபை அதன் கடைசி நேரத்திலும் இஷாவை அதன் ஆரம்ப நேரத்திலும் சேர்த்துத்தொழு. இயலுமானால் குளித்துவிட்டு இவ்வாறு செய்துகொள்! அதுபோல் சுபுஹ் வேளையிலும் குளித்துவிட்டு தொழு! நீ இதற்கு சக்தி பெற்றால் இவ்வாறே செய்துகொள்! நோன்பும் நோற்றுக் கொள்! ஆனால் இரண்டு விஷயங்களில் இதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஹம்னா பின்து ஜஹ்ஷ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது ஹஸஹ் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று புகாரி இமாமும், அஹ்மது இப்னு ஹம்பலும் குறிப்பிட்டுள்ளனர். அபூஈஸாவும் அவ்வாறே கூறுகிறேன். இதுபோன்ற உதிரப்போக்கு ஏற்பட்டவள் ‘தனது மாதவிடாய் இது; நோயின் உதிரப்போக்கு இது’ என்று இரத்தின் நிறத்தை வைத்து அறிந்துகொண்டால் பாத்திமா பின்து அபூஹுபைஷ் அவர்களின் ஹதீஸ்படி (125வது ஹதீஸ்) அவர்களுக்குரிய சட்டமாகும். உதிரப்போக்கு ஏற்படுவதற்கு முன், மாதவிடாய்க்கென்று அவளுக்குக் குறிப்பிட்ட நாட்கள் வழமையாக இருக்குமானால், அந்த நாட்களில் அவள் தொழுகையை விட்டுவிடலாம். அது முடிந்ததும் குளித்துவிட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்து தொழுவாள். அவளுக்கு உதிரப்போக்கு நிரந்ததரமாக இருந்து, மாதவிடாய்க்கென்று வழமையான நாட்கள் அவளுக்கு இல்லாதிருந்தால், இரத்தத்தின் நிறத்தை வைத்து மாதவிடாயையும் நோயையும் அவள் வித்தியாசப்படுத்த முடியவில்லை என்றால் ஏதேனும் ஆறு நாட்களை மாதவிடாய் நாட்கள் என்று முடிவு செய்துவிட்டு எஞ்சிய நாட்களில் தொழ வேண்டும் என்று அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். அபூ உபைத் அவர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். ’தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்ணுக்கு பதினைந்து நாட்களுக்கும் குறைவாக இரத்தம் வெளிப்படுமானால் அந்த நாட்களின் தொழுகையை அவள் விட்டுவிடுவாள். (அதாவது பதினைந்து நாட்கள் வரை மாதவிடாய் ஏற்பட வாய்ப்புண்டு) பதினைந்து நாட்களுக்கும் அதிகமாக இரத்தம் வெளிப்படுமானால் (பதினைந்து நாட்களுக்கு மேல் மாதவிடாய் இருக்க முடியாது என்பதால்) அவள் பதினைந்து நாட்களின் தொழுகையை ‘களா’ செய்வாள். அதன்பின் குறைந்தபடச மாதவிடாய் அளவாகிய ஒருநாள் தொழுயை மட்டும் அவள்விட்டுவிடுவாள்” என்று ஷாபி இமாம் கூறுகிறார்கள். மாதவிடாயின் குறைந்த அளவு ஒருநாளும், அதிகபட்சம் பதினைந்து நாட்களுமாகும் என்று அதா இப்னு அபீரபாஹ், மாலிக், அவ்ஸாயீ, ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக், அபூஉபைத் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர். (இதனடிப்படையிலேயே பதினான்கு நாட்கள் வரை இரத்தம் வெளிப்பட்டால் அவ்வளவும் மாதவிடாய் எனக்கொள்ள வேண்டும். தொழவேண்டியதில்லை. பதினைந்து நாட்களுக்குமேல் இரத்தம் வெளிப்பட்டால் மாதவிடாய் எவ்வளவு என்று தெரியாததால் குறைந்தபட்ச அளவு ஒருநாள் என்று முடிவு செய்து ஏனைய நாட்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று ஷாபி இமாம் கூறுகிறார்கள்.) மற்றும் சில அறிஞர்கள் மாதவிடாயின் குறைந்த அளவு மூன்று நாட்கள் எனவும், அதிக அளவு பத்து நாட்கள் எனவும் கூறுகின்றனர். ஸுஃப்யான் ஸவ்ரீ, கூபாவாசிகள், இப்னுல் முபாரக் ஆகியோர் இவ்வாறு கூறுகின்றனர். இப்னுல் முபாரக் அவர்கள் இதற்குமாற்றமான கருத்தைக் கூறியதாகவும் அறிவிக்கப்படுகின்றது. (குறிப்பு : அபூதாவூத், அஹ்மது, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 129
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ ابْنَةُ جَحْشٍ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَتْ إِنِّى أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ « لاَ إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَاغْتَسِلِى ثُمَّ صَلِّى ». فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ. قَالَ قُتَيْبَةُ قَالَ اللَّيْثُ لَمْ يَذْكُرِ ابْنُ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَمَرَ أُمَّ حَبِيبَةَ أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلاَةٍ وَلَكِنَّهُ شَىْءٌ فَعَلَتْهُ هِىَ. قَالَ أَبُو عِيسَى وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِىِّ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتِ اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْمُسْتَحَاضَةُ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ. وَرَوَى الأَوْزَاعِىُّ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ عَنْ عَائِشَةَ.
எனக்கு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து சுத்தமாக ஆவது இயலவில்லை; எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று உம்முஹபீபா பின்து ஜஹ்ஷ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, கூடாது! (அது மாதவிடாய் அல்ல) மாறாக அது ஒரு நோய். எனவே குளித்துவிட்டு நீ தொழு; என்று கூறினார்கள். அதன்பின் அந்தப் பெண்மணி ஒவ்வொரு தொழுகையின் போதும் குளிப்பவர்களாக இருந்தனர், என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றனர். ’ஒவ்வொரு தொழுக்கைக்கும் குளிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் கட்டளையிடவில்லை; மாறாக உம்மு ஹபீபா(ரலி) அவர்கள் தானாக விரும்பிச்செய்த செயலாகும் இது என்று இதன் அறிவிப்பாளர்களில் இடம்பெறும் இப்னுஷிஹாப் குறிப்பிட்டார்கள். சில அறிஞர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் குளிக்க வேண்டும் என்கின்றனர். (குறிப்பு : முஸ்லிம், அஹ்மது, நஸயீ, ஆகிய நூல்களிலும் இந்தக் கருத்து அறிவிக்கப்படுகின்றது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 130
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِى قِلاَبَةَ عَنْ مُعَاذَةَ أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ أَتَقْضِى إِحْدَانَا صَلاَتَهَا أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ فَلاَ تُؤْمَرُ بِقَضَاءٍ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ عَنْ عَائِشَةَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّ الْحَائِضَ لاَ تَقْضِى الصَّلاَةَ. وَهُوَ قَوْلُ عَامَّةِ الْفُقَهَاءِ لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ فِى أَنَّ الْحَائِضَ تَقْضِى الصَّوْمَ وَلاَ تَقْضِى الصَّلاَةَ.
’தனது மாதவிடாய்க் காலத்தில் விட்டுவிட்ட தொழுகைகளை ஒரு பெண் ‘களா’ செய்ய வேண்டுமா? என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டபோது (நபியின் காலத்தில்) எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது (தொழுகையை) ‘களா’ செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிடப்படவில்லை’ என்று ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள். ஆயிஷா(ரலி) வாயிலாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகின்றது. மாதவிடாய்க்காரி நோன்பை ‘களா’ செய்ய வேண்டும். தொழுகையைக் ‘களா’ செய்யலாகாது என்பதில் அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இது ‘ஹஸஹ் ஸஹீஹ்’ எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்; என அபூஈஸா கூறுகிறேன்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 131
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ وَالْحَسَنُ بْنُ عَرَفَةَ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَقْرَإِ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَلِىٍّ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ يَقْرَإِ الْجُنُبُ وَلاَ الْحَائِضُ ». وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِىِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا لاَ تَقْرَأُ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ مِنَ الْقُرْآنِ شَيْئًا إِلاَّ طَرَفَ الآيَةِ وَالْحَرْفَ وَنَحْوَ ذَلِكَ وَرَخَّصُوا لِلْجُنُبِ وَالْحَائِضِ فِى التَّسْبِيحِ وَالتَّهْلِيلِ. قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ إِنَّ إِسْمَاعِيلَ بْنَ عَيَّاشٍ يَرْوِى عَنْ أَهْلِ الْحِجَازِ وَأَهْلِ الْعِرَاقِ أَحَادِيثَ مَنَاكِيرَ. كَأَنَّهُ ضَعَّفَ رِوَايَتَهُ عَنْهُمْ فِيمَا يَنْفَرِدُ بِهِ. وَقَالَ إِنَّمَا حَدِيثُ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ عَنْ أَهْلِ الشَّأْمِ. وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ أَصْلَحُ مِنْ بَقِيَّةَ وَلِبَقِيَّةَ أَحَادِيثُ مَنَاكِيرُ عَنِ الثِّقَاتِ. قَالَ أَبُو عِيسَى حَدَّثَنِى أَحْمَدُ بْنُ الْحَسَنِ قَالَ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ ذَلِكَ.
’மாதவிடாய் ஏற்பட்டவர்களும், குளிப்புக் கடமையானவர்களும் குர்ஆனில் எதனையும் ஓதலாகாது! என்று நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றனர். இந்தக் கருத்து அலி(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. ‘இஸ்மாயீல் இப்னு அய்யாஷ்’ என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி புகாரி இமாம் அவர்களிடம் நான் கேட்டபோது, மறுக்கத்தக்க பல ஹதீஸ்களை இவர் இராக்வாசிகள், ஹிஜாஸ்வாசிகள் வழியாக அறிவித்துள்ளார் என்று கூறினார்கள். அதாவது இவர்கள் வழியாக ‘இஸ்மாயீல் இப்னு அய்யாஷ்’ மட்டும் அறிவிக்கும்போது அது பலவீனமானது என்ற கருத்தைக் கூறினார்கள். ’ஷாம்வாசிகள் வழியாக அவர் அறிவிப்பது மட்டுமே ஹதீஸ் ஆகும்’ எனவும் புகாரி இமாம் கூறினார்கள். நம்பகமானவர்களின் பெயரைப் பயன்படுத்தி ‘பகிய்யா’ என்பவர் பல மறுக்கப்படத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவரைவிட ’இஸ்மாயீல் இப்னு அய்யாஷ்’ பரவாயில்லாதவர் என்று அஹ்மது இப்னு ஹம்பல் குறிப்பிடுகிறார்கள். நபித்தோழர்கள், தாபியீன்கள், அதற்கடுத்த தலைமுறையினர் இவர்களில் அனேகரின் கூற்றும், ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இந்த ஹதீஸின் அடிப்படையில் ‘ஒரு வசனத்தில் ஒரு பகுதியைத் தவிர குர்ஆனில் எதையும் மாதவியாக்கார்களும்; குளிப்புக் கடமையானவர்களும் ஓதக்கூடாது’ என்கின்றனர். ஆயினும் தஸ்பீஹ் போன்றவற்றுக்கு அனுமதி உண்டு என்கின்றனர், என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அபூதாவூத், இப்னுமாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இதில் ‘இஸ்மாயில் இப்னு அய்யாஷ்’ என்பவர் இடம்பெறுவதால் பலவீனமானதாகும்.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 132
حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا حِضْتُ يَأْمُرُنِى أَنْ أَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُنِى. قَالَ وَفِى الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَمَيْمُونَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
”எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடும்போது கீழாடை அணிந்து கொள்ளுமாறு நபி(ஸல்) என்னிடம் கூறிவிட்டு என்னைக் கட்டி அணைப்பார்கள்” என்று ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள். இந்தக் கருத்து உம்முஸலமா(ரலி), மைமூனா(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. நபித்தோழர்கள், தாபியீன்களில் ஏராளமான அறிஞர்களின் கூற்றும் ஷாபி, அஹ்மது, இஸ்ஹாக் ஆகியோரின் கூற்றும் இதுவேயாகும். இந்த ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 133
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِىُّ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ عَنْ حَرَامِ بْنِ مُعَاوِيَةَ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ قَالَ سَأَلْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- عَنْ مُوَاكَلَةِ الْحَائِضِ فَقَالَ « وَاكِلْهَا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَنَسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لَمْ يَرَوْا بِمُوَاكَلَةِ الْحَائِضِ بَأْسًا. وَاخْتَلَفُوا فِى فَضْلِ وَضُوئِهَا فَرَخَّصَ فِى ذَلِكَ بَعْضُهُمْ وَكَرِهَ بَعْضُهُمْ فَضْلَ طَهُورِهَا.
மாதவிடாய்க்காரியுடன் சேர்ந்து உண்ணலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘அவளுடன் சேர்ந்து உண்ணலாம்’ எனப் பதிலளித்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷா(ரலி), அனஸ்(ரலி) வாயிலாகவும் இக்கருத்து அறிவிக்கப்படுகின்றது. அறிஞர்கள் அனைவரின் கருத்தும் இதுதான். மாதவிடாய்க்காரி ஒளூ செய்துவிட்டு வைத்த மீதி தண்ணீரில் ஒளூ செய்யலாம் எனவும், செய்வது விரும்பத்தக்கதல்ல எனவும் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கின்றனர். இது ‘ஹஸன் கரீப்’ எனும் தரத்திலமைந்ததாகும்; என்று அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : அஹ்மது, அபூதாவூதிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 134
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنِ الأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ قَالَتْ لِى عَائِشَةُ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَاوِلِينِى الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ». قَالَتْ قُلْتُ إِنِّى حَائِضٌ. قَالَ « إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِى يَدِكِ ». قَالَ وَفِى الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِى هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا فِى ذَلِكَ بِأَنْ لاَ بَأْسَ أَنْ تَتَنَاوَلَ الْحَائِضُ شَيْئًا مِنَ الْمَسْجِدِ.
பள்ளியில் உள்ள சிறிய பாயை எடுத்துத்தருமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ‘நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன். ‘உன் மாதவிடாய் உனது கைகளில் இல்லையே’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். பள்ளியில் உள்ள பொருளை மாதவிடாய்க்காரி எடுக்கலாம் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் இருப்பதாக நாம் அறியவில்லை. இந்தக் கருத்து இப்னு உமர்(ரலி), அபூஹுரைரா(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகின்றது. இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்ததாகும் என அபூஈஸா கூறுகிறேன். (குறிப்பு : முஸ்லிம், அஹ்மது, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
திர்மிதி - ஹதீஸ் எண்: 135
حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ وَبَهْزُ بْنُ أَسَدٍ قَالُوا حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ حَكِيمٍ الأَثْرَمِ عَنْ أَبِى تَمِيمَةَ الْهُجَيْمِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِى دُبُرِهَا أَوْ كَاهِنًا فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ -صلى الله عليه وسلم- ». قَالَ أَبُو عِيسَى لاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ حَكِيمٍ الأَثْرَمِ عَنْ أَبِى تَمِيمَةَ الْهُجَيْمِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ. وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ عَلَى التَّغْلِيظِ. وَقَدْ رُوِىَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى حَائِضًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ ». فَلَوْ كَانَ إِتْيَانُ الْحَائِضِ كُفْرًا لَمْ يُؤْمَرْ فِيهِ بِالْكَفَّارَةِ. وَضَعَّفَ مُحَمَّدٌ هَذَا الْحَدِيثَ مِنْ قِبَلِ إِسْنَادِهِ. وَأَبُو تَمِيمَةَ الْهُجَيْمِىُّ اسْمُهُ طَرِيفُ بْنُ مُجَالِدٍ.
மாதவிடாய்க்காரியை எவரேனும் புணர்ந்தால்,அல்லது பெண்ணின் மலப்பாதையில் புணர்ந்தால்,அல்லது (வருங்காலத்தைக் கணித்துச்சொல்வதாகக்கூறும்)சோதிடனிடம் சென்றால் அவன் முகம்மதின் மீது இறக்கியாருளபட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள். ‘அபூதமீமா அல்குஜைமீ’ என்பவர் வழியாக தவிர வேறு வழிகளில் இந்த ஹதீஸ் அறியவில்லை . புகாரி இமாமிடம் இந்த ஹதீஸ் பற்றி நான் கேட்ட போது இதன் அறிவிப்பாளர் வரிசையை பொறுத்தவரை இது பலவீனமான ஹதீஸ் என்றார்கள் . மாதவிடாய்க்காரியைப் புணர்ந்தால் ஒரு தீனார் (தங்க நாணயம்) தர்மம் செய்யவேண்டும் என்று நபி(ஸல்) கூறியதாக அறிவிக்கப்படுகிறது இவ்வாறு புணர்வது ‘குப்ர்’ என்று இருக்குமானால் அதற்குப் பரிகாரத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள் எனவே இதன் கடுமையைக் காட்டுவதர்க்கே இந்த ஹதீஸில் ‘காஃபிராகிவிட்டான்’என்ற வார்த்தயை நபி(ஸல்) பயன்படுத்தியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள் . (குறிப்பு :இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குறைபாடு உள்ளது .எனினும் மாதவிடாய்க்காரியுடன் புணர்வது கூடாது என்று திருக்குறான் மூலம் தடுக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் )
திர்மிதி - ஹதீஸ் எண்: 136
حَدَّثَنَا عَلِىُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا شَرِيكٌ عَنْ خُصَيْفٍ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى الرَّجُلِ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِىَ حَائِضٌ قَالَ « يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ ».
மாதவிடாய் சமயத்தில் தான் மனைவியுடன் புணர்ந்துவிட்டவன் அரை தினார் தர்மம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்)கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு : அபூதாவூத்,நஸயீ,அஹ்மத்,இப்னு மாஜா,தாரகுத்தினி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 137
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ أَبِى حَمْزَةَ السُّكَّرِىِّ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا كَانَ دَمًا أَحْمَرَ فَدِينَارٌ وَإِذَا كَانَ دَمًا أَصْفَرَ فَنِصْفُ دِينَارٍ ». قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْكَفَّارَةِ فِى إِتْيَانِ الْحَائِضِ قَدْ رُوِىَ عَنِ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا وَمَرْفُوعًا. وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ ابْنُ الْمُبَارَكِ يَسْتَغْفِرُ رَبَّهُ وَلاَ كَفَّارَةَ عَلَيْهِ. وَقَدْ رُوِىَ نَحْوُ قَوْلِ ابْنِ الْمُبَارَكِ عَنْ بَعْضِ التَّابِعِينَ مِنْهُمْ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَإِبْرَاهِيمُ النَّخَعِىُّ وَهُوَ قَوْلُ عَامَّةِ عُلَمَاءِ الأَمْصَارِ.
சிவப்பு ரத்தமாக இருக்கும் பொது ஒரு தீனாரும் ,மஞ்சள் ரத்தமாக இருக்கும் போது (புணர்ந்தால்) அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்)கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் அவர்களின் சொந்தக்கூற்றாகவும் ,நபி(ஸல்)கூறியதாகவும் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகிறது . அஹ்மத் இஸ்ஹாக் அவர்களின் கருத்தும் இதுதான். “பாவமன்னிப்பு தேடுவதே போதுமானதாகும் . பரிகாரம் ஏதும் கிடையாது”. இப்னுல் முபாரக் ,சயீத் இப்னு ஜுபைர் இப்ராகிம் நகயீ ஆகியோர் இந்த கருத்தை உடையவர்கள் என்று அபு ஈசா கூறுகிறேன் . (குறிப்பு : பைஹகி ,தப்ரானி,தாரகுத்தினி,அபூயஃலா,தாரமி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது எனினும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்டுல்கரீம் என்பவர் இடம் பெறுவதால் இது பலவீனமானதாகும் )
திர்மிதி - ஹதீஸ் எண்: 138
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِى بَكْرٍ أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِىَّ -صلى الله عليه وسلم- عَنِ الثَّوْبِ يُصِيبُهُ الدَّمُ مِنَ الْحَيْضَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ رُشِّيهِ وَصَلِّى فِيهِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَأُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَسْمَاءَ فِى غَسْلِ الدَّمِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِى الدَّمِ يَكُونُ عَلَى الثَّوْبِ فَيُصَلِّى فِيهِ قَبْلَ أَنْ يَغْسِلَهُ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ إِذَا كَانَ الدَّمُ مِقْدَارَ الدِّرْهَمِ فَلَمْ يَغْسِلْهُ وَصَلَّى فِيهِ أَعَادَ الصَّلاَةَ. وَقَالَ بَعْضُهُمْ إِذَا كَانَ الدَّمُ أَكْثَرَ مِنْ قَدْرِ الدِّرْهَمِ أَعَادَ الصَّلاَةَ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِىِّ وَابْنِ الْمُبَارَكِ. وَلَمْ يُوجِبْ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ عَلَيْهِ الإِعَادَةَ وَإِنْ كَانَ أَكْثَرَ مِنْ قَدْرِ الدِّرْهَمِ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ الشَّافِعِىُّ يَجِبُ عَلَيْهِ الْغَسْلُ وَإِنْ كَانَ أَقَلَّ مِنْ قَدْرِ الدِّرْهَمِ وَشَدَّدَ فِى ذَلِكَ.
நபி (ஸல்) அவவ்ர்களிடம் ஒரு பெண்மணி ஆடையில் பட்டுவிடும் மாதவிடாய் இரத்தத்தை பற்றி கேட்டார். அதற்க்கு நபி(ஸல்)அவர்கள் “அந்த இடத்தை சுரண்டி விட்டு தண்ணீர் விட்டு தேய்த்து கழுவியபின் அதே ஆடையில் தொழுது கொள்ளலாம்” என்று கூறியதாக அஸ்மா பிந்த் அபீபக்ரு (ரலி) அறிவிக்கிறார்கள். இந்த கருத்து அபூஹுரைரா (ரலி) ‘உம்மு கைஸ் பிந்த் மிக்சன் (ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது இந்த விஷயத்தில் அறிண்கற்கள் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றானார் .இரத்தம் ஒரு தீர்கம் (நாலான ) அளவு இருந்து அதை கழுவாமல் அவள் அதே ஆடையில் தொழுதால் அந்த தொழுகையை திருப்பி தொழ வேண்டுமென சிலர் கூறுகின்றனர் .ஒரு திர்கத்தின் அளவை விட அதிகமாக இருந்தால் தான் அவள் திருப்பி தொழ வேண்டுமென மற்றும் சிலர் கூறுகின்றனர் .சூஃப்யான் சவ்ரி ,இப்னுல் முபாரக் ஆகியோர் இந்த கருத்துடையவர்கள் ஒரு திர்காத்தின் அளவை விட அதிகமாக இருந்தாலும் அவள் திருப்பி தொழ வேண்டியது இல்லை என்று வேறு சிலர் கூறுகிறார்கள் அஹ்மத் இஸ்காக் ஆகியோர் இந்த கருத்துடையவர்கள் .ஒரு திர்கத்தை விட குறந்த அளவு இருந்தாலும் கட்டாயம் கழுவவேண்டும் என்று சஃபி கூறுகிறார் .இந்த விஷயத்தில் அவர்கள் மிகவும் கடுமையான போக்கை கொண்டிருக்கிறார்கள் மேற்கூறிய ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று ஆபூ ஈசா கூறுகிறார் . ((குறிப்பு :புகாரி ,முஸ்லிம் ,அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 139
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ الْجَهْضَمِىُّ حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ أَبُو بَدْرٍ عَنْ عَلِىِّ بْنِ عَبْدِ الأَعْلَى عَنْ أَبِى سَهْلٍ عَنْ مُسَّةَ الأَزْدِيَّةِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ كَانَتِ النُّفَسَاءُ تَجْلِسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَرْبَعِينَ يَوْمًا فَكُنَّا نَطْلِى وُجُوهَنَا بِالْوَرْسِ مِنَ الْكَلَفِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِى سَهْلٍ عَنْ مُسَّةَ الأَزْدِيَّةِ عَنْ أُمِّ سَلَمَةَ. وَاسْمُ أَبِى سَهْلٍ كَثِيرُ بْنُ زِيَادٍ. قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ عَلِىُّ بْنُ عَبْدِ الأَعْلَى ثِقَةٌ وَأَبُو سَهْلٍ ثِقَةٌ. وَلَمْ يَعْرِفْ مُحَمَّدٌ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِى سَهْلٍ. وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ عَلَى أَنَّ النُّفَسَاءَ تَدَعُ الصَّلاَةَ أَرْبَعِينَ يَوْمًا إِلاَّ أَنْ تَرَى الطُّهْرَ قَبْلَ ذَلِكَ فَإِنَّهَا تَغْتَسِلُ وَتُصَلِّى. فَإِذَا رَأَتِ الدَّمَ بَعْدَ الأَرْبَعِينَ فَإِنَّ أَكْثَرَ أَهْلِ الْعِلْمِ قَالُوا لاَ تَدَعُ الصَّلاَةَ بَعْدَ الأَرْبَعِينَ وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. وَيُرْوَى عَنِ الْحَسَنِ الْبَصْرِىِّ أَنَّهُ قَالَ إِنَّهَا تَدَعُ الصَّلاَةَ خَمْسِينَ يَوْمًا إِذَا لَمْ تَرَ الطُّهْرَ. وَيُرْوَى عَنْ عَطَاءِ بْنِ أَبِى رَبَاحٍ وَالشَّعْبِىِّ سِتِّينَ يَوْمًا.
நபி(ஸல்) காலத்தில் பிரசவித்த பெண்கள் நாற்பது நாட்கள் (தொழாமல்) அமர்ந்த்து விடுபவர்களாக இருந்தனர் .மேலும் எங்கள் முகத்தில் குங்குமப்பூவின் இலைகளை பூசிக்கொள்வோம் என்று உம்முசலாமா(ரலி) அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றும் அபூசஹ்ல் என்ற கஸீர் இப்னு சியாத் ,அலி இப்னு அப்துல் அஃல ஆகிய இருவரைப்பற்றியும் புகாரி இமாமிடம் நான் கேட்டபோது அவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றார்கள். நபித்தோழர்கள்,தாபியின்கள் அதர்க்கடுத்த தலைமுறையினரில் அறிஞர் பெருமக்கள் “பிரசவித்த பெண்” நாற்பது நாள்களுக்கு தொழுகையை விட்டு விடலாம்” என்பதில் ஏகோபித்த முடிவுக்கு வருகின்றனர். ஆயினும் அதற்க்கு முன்பே இரத்தமும் ண்டிரு விடுமானால் உடனே குளித்துவிட்டு தொழ வேண்டும் என்கிறனர் . நாற்பது நாட்களுக்கு பின்பும் இரத்தம் வெளிப்படல் அதன் பிறகு தொழுதாக வேண்டும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள் சூஃப்யான் சவ்ரி இப்னுல் முபாரக் ,ஷாஃபி, அகமத் ,இசாக் ஆகியோர் இந்த கருத்து கொண்டவர்களாவர் இரத்தம் நிற்கவில்லை என்றாள் இம்பாது நாட்கள் வரை அவள் தொழ வேண்டியதில்லை என்று ஹாசன் பசரி அவர்களும் அறுபது நாட்கள் தொழவேண்டியடில்லை என்று அடா இப்னு ஆபீரபாக் ,ஷாஃபி ஆகியோரும் கூறிப்பிடுகின்றனர் (குறிப்பு :ஈடன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் ‘முஸ்ஸா அல் ஆஸ்திய’ என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் . அஹ்மத்,அபூதாவூத், இப்னு மாஜா,தரக்குத்னி ,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 140
حَدَّثَنَا بُنْدَارٌ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَعْمَرٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِى غُسْلٍ وَاحِدٍ. قَالَ وَفِى الْبَابِ عَنْ أَبِى رَافِعٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ الْحَسَنُ الْبَصْرِىُّ أَنْ لاَ بَأْسَ أَنْ يَعُودَ قَبْلَ أَنْ يَتَوَضَّأَ. وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ يُوسُفَ هَذَا عَنْ سُفْيَانَ فَقَالَ عَنْ أَبِى عُرْوَةَ عَنْ أَبِى الْخَطَّابِ عَنْ أَنَسٍ. وَأَبُو عُرْوَةَ هُوَ مَعْمَرُ بْنُ رَاشِدٍ. وَأَبُو الْخَطَّابِ قَتَادَةُ بْنُ دِعَامَةَ. قَالَ أَبُو عِيسَى وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنِ ابْنِ أَبِى عُرْوَةَ عَنْ أَبِى الْخَطَّابِ. وَهُوَ خَطَأٌ وَالصَّحِيحُ عَنْ أَبِى عُرْوَةَ.
“நபி(ஸல்) அவர்கள் தமது பல மனைவிகளிடம் ஸின்றுவிட்டு ஒரு தடவை குளிப்பவர்களாக இருந்தனர் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். இக்கருத்து அபூரபிவு (ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது ஹாசண்பசரி உட்பட அறிஞர்களில் அனேகரின் கருத்தும் இதுவேயாகும் .ஒளு செய்வதற்க்கு முன் மீண்டும் உறவு கொள்வது தவறில்லை என்கின்றனர் இவர்கள் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறார் (குறிப்பு :முஸ்லிம் ,அஹமத்,நஸயீ,இப்னு மாஜா,அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 141
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ عَاصِمٍ الأَحْوَلِ عَنْ أَبِى الْمُتَوَكِّلِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ بَيْنَهُمَا وُضُوءًا ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِى سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَهُوَ قَوْلُ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَقَالَ بِهِ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ قَبْلَ أَنْ يَعُودَ. وَأَبُو الْمُتَوَكِّلِ اسْمُهُ عَلِىُّ بْنُ دَاوُدَ. وَأَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ اسْمُهُ سَعْدُ بْنُ مَالِكِ بْنِ سِنَانٍ.
“தான் மனைவியுடன் உறவு கொண்டு விட்டு மீண்டும் ஒருவர் விரும்பினால் அவர் ஒளூ செய்து கொள்ளட்டும்! என்று நபி(ஸல்)கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவ்ரகள் இயற்பெயர் ஜைது இப்னு மாலிக் இப்னு ஸீனான் என்பதாகும் , இக்கருத்து உமர் (ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது ஏராளமான அறிஞர்கள் இவ்வாறே கூறி இருக்கிறார்கள். இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறார் (குறிப்பு :முஸ்லிம் ,அஹமத்,நஸயீ,இப்னு மாஜா,அபூதாவூத்,இப்னு குஸைமா,இப்னு ஹிப்பான்,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 142
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَخَذَ بِيَدِ رَجُلٍ فَقَدَّمَهُ وَكَانَ إِمَامَ قَوْمِهِ وَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ وَوَجَدَ أَحَدُكُمُ الْخَلاَءَ فَلْيَبْدَأْ بِالْخَلاَءِ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِى هُرَيْرَةَ وَثَوْبَانَ وَأَبِى أُمَامَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. هَكَذَا رَوَى مَالِكُ بْنُ أَنَسٍ وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ.
وَرَوَى وُهَيْبٌ وَغَيْرُهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ رَجُلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ قَالاَ لاَ يَقُومُ إِلَى الصَّلاَةِ وَهُوَ يَجِدُ شَيْئًا مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ. وَقَالاَ إِنْ دَخَلَ فِى الصَّلاَةِ فَوَجَدَ شَيْئًا مِنْ ذَلِكَ فَلاَ يَنْصَرِفْ مَا لَمْ يَشْغَلْهُ.
وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ بَأْسَ أَنْ يُصَلِّىَ وَبِهِ غَائِطٌ أَوْ بَوْلٌ مَا لَمْ يَشْغَلْهُ ذَلِكَ عَنِ الصَّلاَةِ.
அப்துல்லா இப்னுல் அர்கம் (ரலி) அவர்கள் தமது சமுதாயத்தின் இமாமாக இருந்தார் .தொழுகைக்கு இக்காமத் சொல்லப்பட்டதூம் ஒரு மனிதராய் இமாமாக முன் நிறுத்தி விட்டு “இகமத் சொல்லப்பட்டதும் மலஜல உபாதை ஏற்பட்டால் அதையே முதலில் முடிக்க வேண்டும்” என்று நபி(ஸல்) கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்றார்கள் இதை ஊர்வ அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆயிஷா(ரலி) , அபூஹுரைரா (ரலி),ஸவ்ஃபான்(ரலி)அபு உமாமா (ரலி) வாயிலாகவும் இந்தக்கருத்து அறிவிக்கப்படுகிறது .நபித்தோழர்கள் தாபிங்கள் அனேகமானோரின் கருத்து இதுதான் .அகமத் ,இசாக் ஆகியோர் இந்த கருத்து கொண்டவர்களாவர். தொழுகையை துவங்கிவிட்டபின் இந்த உபாதை ஏற்பட்டால் தொழுகைக்கு குந்தகம் ஏற்படாத வரை தொழுகையை விடலாகாது என்று இருவரும் கூறுகிறார்கள்மலஜல உபாதை ஏற்பட்டாலும் தொழுகைக்கு குந்தகம் ஏற்படாத வரை தொழுவதில் எந்த தவருமில்லை என சில அறிஞர்கள் கூறுகிறார்கள் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறார்
திர்மிதி - ஹதீஸ் எண்: 143
حَدَّثَنَا أَبُو رَجَاءٍ قُتَيْبَةُ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أُمِّ وَلَدٍ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَتْ قُلْتُ لأُمِّ سَلَمَةَ إِنِّى امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِى وَأَمْشِى فِى الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يُطَهِّرُهُ مَا بَعْدَهُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لاَ نَتَوَضَّأُ مِنَ الْمَوْطَإِ. قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا وَطِئَ الرَّجُلُ عَلَى الْمَكَانِ الْقَذِرِ أَنَّهُ لاَ يَجِبُ عَلَيْهِ غَسْلُ الْقَدَمِ إِلاَّ أَنْ يَكُونَ رَطْبًا فَيَغْسِلَ مَا أَصَابَهُ. قَالَ أَبُو عِيسَى وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أُمِّ وَلَدٍ لِهُودِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ. وَهُوَ وَهَمٌ وَلَيْسَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ابْنٌ يُقَالُ لَهُ هُودٌ وَإِنَّمَا هُوَ عَنْ أُمِّ وَلَدٍ لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ. وَهَذَا الصَّحِيحُ.
“கீழாடையை நீளமாக அணிந்துள்ள பெண்ணாக நான் இருக்கிறேன் .அசுத்தமான இடங்களிலெல்லாம் நான் நடந்து வருகிறேன்” என்று உம்முஸலமா (ரலி) அவர்களிடம் நான் கேட்ட போது அசுத்தமான இடங்களை அடுத்து வருகின்ற (சுத்தமான) இடம் அந்த அசுத்தத்தைத் தூய்மைப்படுத்தி விடும்” என்று நபி(ஸல்) கூறியுள்ளதாக உம்முஸலாமா (ரலி) அறிவிக்கிறார்கள். என அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃபு (ரலி) அவர்களின் அடிமை பெண் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்களுடன் நானாகள் அசுத்தமான இடங்களைக் கடந்து வரும் பொது நாங்கள் உளூ செய்ய மாட்டோம் என்று அப்துல்லா இப்னு மஸ்வூத் (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது .
ஒரு மனிதன் அசுத்தமான இடங்களை கடந்து வந்தால் அவன் கால்களைக் கழுவ வேண்டியதில்லை; ஆனால் அந்த அசுத்தம் ஈரமானதாக இருந்தால் அதுபட்ட இடத்தை மட்டும் கழுவிக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்கள் அனேகரின் கருத்து அபூ ஈசா கூறுகிறேன்
திர்மிதி - ஹதீஸ் எண்: 144
حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِىٍّ الْفَلاَّسُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ عَزْرَةَ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَمَرَهُ بِالتَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَقَدْ رُوِىَ عَنْ عَمَّارٍ مِنْ غَيْرِ وَجْهٍ. وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مِنْهُمْ عَلِىٌّ وَعَمَّارٌ وَابْنُ عَبَّاسٍ وَغَيْرِ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ مِنْهُمُ الشَّعْبِىُّ وَعَطَاءٌ وَمَكْحُولٌ قَالُوا التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ. وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْهُمُ ابْنُ عُمَرَ وَجَابِرٌ وَإِبْرَاهِيمُ وَالْحَسَنُ قَالُوا التَّيَمُّمُ ضَرْبَةٌ لِلْوَجْهِ وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَمَالِكٌ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِىُّ. وَقَدْ رُوِىَ هَذَا الْحَدِيثُ عَنْ عَمَّارٍ فِى التَّيَمُّمِ أَنَّهُ قَالَ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ مِنْ غَيْرِ وَجْهٍ. وَقَدْ رُوِىَ عَنْ عَمَّارٍ أَنَّهُ قَالَ تَيَمَّمْنَا مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلَى الْمَنَاكِبِ وَالآبَاطِ.
فَضَعَّفَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ حَدِيثَ عَمَّارٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى التَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ لَمَّا رُوِىَ عَنْهُ حَدِيثُ الْمَنَاكِبِ وَالآبَاطِ. قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَخْلَدٍ الْحَنْظَلِىُّ حَدِيثُ عَمَّارٍ فِى التَّيَمُّمِ لِلْوَجْهِ وَالْكَفَّيْنِ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَحَدِيثُ عَمَّارٍ تَيَمَّمْنَا مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلَى الْمَنَاكِبِ وَالآبَاطِ لَيْسَ هُوَ بِمُخَالِفٍ لِحَدِيثِ الْوَجْهِ وَالْكَفَّيْنِ لأَنَّ عَمَّارًا لَمْ يَذْكُرْ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَمَرَهُمْ بِذَلِكَ وَإِنَّمَا قَالَ فَعَلْنَا كَذَا وَكَذَا فَلَمَّا سَأَلَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَمَرَهُ بِالْوَجْهِ وَالْكَفَّيْنِ فَانْتَهَى إِلَى مَا عَلَّمَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- الْوَجْهِ وَالْكَفَّيْنِ وَالدَّلِيلُ عَلَى ذَلِكَ مَا أَفْتَى بِهِ عَمَّارٌ بَعْدَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى التَّيَمُّمِ أَنَّهُ قَالَ الْوَجْهِ وَالْكَفَّيْنِ فَفِى هَذَا دَلاَلَةٌ أَنَّهُ انْتَهَى إِلَى مَا عَلَّمَهُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَعَلَّمَهُ إِلَى الْوَجْهِ وَالْكَفَّيْنِ. قَالَ وَسَمِعْتُ أَبَا زُرْعَةَ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ الْكَرِيمِ يَقُولُ لَمْ أَرَ بِالْبَصْرَةِ أَحْفَظَ مِنْ هَؤُلاَءِ الثَّلاَثَةِ عَلِىِّ بْنِ الْمَدِينِىِّ وَابْنِ الشَّاذَكُونِىِّ وَعَمْرِو بْنِ عَلِىٍّ الْفَلاَّسِ.
قَالَ أَبُو زُرْعَةَ وَرَوَى عَفَّانُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ عَلِىٍّ حَدِيثًا.
முகம் முன் கைகள் (மணிக்கட்டு வரை )ஆகிய உறுப்புகளுக்கு தயம்மும் செய்ய வேண்டும் என்று தமக்கு என்று நபி(ஸல்)கூறியதாக இப்னு யாசிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இக்கருத்து ஆயிஷா (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி), வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது .அம்மார்(ரலி)வாய்லாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கபட்டுள்ளது.அலி(ரலி) அம்மார்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) உட்பட பல நபித்தோளர்களின் கருத்தும் “முகத்திர்க்கும் முன்காய்க்கும் தரையில் ஒருமுறை அடிப்பதே தயமும்” என்பதாகும் அஹ்மத் ,இஷ்ஹாக் இந்த கருத்து கொண்டவர்களாவர்
இப்னு உமர்(ரலி),ஜாபிர்(ரலி) ,இப்ராஹிம்(ரலி) ஹாசன் உட்பட சில அறிஞர்கள் “சில தடவை தரையில் அடிபடும் தயமும் என்றனர் சுப்யான் சவ்ரி மாலிக் ,இப்னுல் முபாரக்,ஷாஃபி ஆகியோரும் இக்கருத்துடையவர் .
“நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் தோள் பூஜாங்கள் ,அக்குல்வரை தயமும் செய்கிறோம்.” என்றும் அம்மார் (ரலி)வாயிலாக அறிவிக்கப்படுகிறது தோள் பூஜாம் வரை தயமும் செய்த ஹதீஸ் அம்மார்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படுவதால் மணிக்கட்டு வரை தயமும் செய்வது பற்றிய ஹதீஸை சில அறிஞர்கள் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்
மணிக்கட்டுவரை தயாமம் செய்வது பற்றி ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் ஆயினும் டொல்புஜம் வரை தாமும் செய்த ஹதீஸுக்கு இது முரண்பட்ட ஹதீஸ் அல்ல .ஏனெனில் தோள்புஜம் வரை செய்யுமாறு நபி(ஸல்) கட்டளை இட்டதாக இங்கே கூறப்படவில்லை . நாங்கள் செய்தோம் என்றே அம்மார் குருப்பிடுகிறார் . இது பற்றி நபி(சில)அவர்களிடம் கேட்ட போது முகம்,முங்கைக்கு தயம்மும் செய்ய கட்டளை யிடுகிறார்கள்.நபி(சில) அவர்களின் இந்த கட்டளை அடிப்படையிலே அம்மார் (ரலி) செயல்பட்டார்கள் என்றே கொள்ள வேண்டும் நபி(ஸல்)அவர்கள் மரணத்திர்க்கு பின் அம்மார்(ரலி) இதனடிப்படையில் பத்வா வழங்கியிருப்பது இதற்க்கு சான்றாகும் என இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் குருப்பிடுகிறார்
பசர நகரில் அலி இப்னுல் மடீணி இப்னுஸ்ஷாதகூணி ,அம்ரு இப்னு அலி அல்பத்தாஹ் ஆகிய மூவரை விட ஹதீஸ்களில் நல்ல நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூசர்ஆ குறிப்பிட்டார்.அம்மூவரில் ஒருவரான அம்ரு இப்னு அலி பல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கிறார்கள் இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன்
ஹதீஸ் எண்:145
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தாமும் பற்றி கேட்கப்பட்ட போது “உலுவைப்பற்றி இறைவன் கூறும் போது உங்கள் கைகைன் மூலங்கைவரை களுவுங்கள் என்கிறான் .ஆனால் தயமும் பற்றி அல்லாஹ் கூஉம் போது ‘மூலங்கை வரை’ என்று கூறாமல் ‘கைகள்’ என்று பொதுவாகவே குருப்பிடுகிறான்.(பொதுவாகக் கைகள் என்றுக்கூறினால் மணிக்கட்டு வரை என்ற கருத்தாகும். திருடுபவர்களின் கையை வெட்டுமாறு இறைவன் கூறுகிறான் மணிக்கட்டு வரி தான் கைகள் வெட்டப்படவேண்டும் என்பது நபிவழி இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தயமும் செய்யவேண்டுமென்பதே இந்த வசனத்தின் கருத்தாகும் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாக இக்ரிமா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இது ஹஸன் கரீப் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன்
திர்மிதி - ஹதீஸ் எண்: 145
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ وَعُقْبَةُ بْنُ خَالِدٍ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ وَابْنُ أَبِى لَيْلَى عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلِمَةَ عَنْ عَلِىٍّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُقْرِئُنَا الْقُرْآنَ عَلَى كُلِّ حَالٍ مَا لَمْ يَكُنْ جُنُبًا. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِىٍّ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَبِهِ قَالَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَالتَّابِعِينَ.
قَالُوا يَقْرَأُ الرَّجُلُ الْقُرْآنَ عَلَى غَيْرِ وُضُوءٍ وَلاَ يَقْرَأُ فِى الْمُصْحَفِ إِلاَّ وَهُوَ طَاهِرٌ. وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِىُّ وَالشَّافِعِىُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ.
குளிப்பு கடமையாக ஆகாமலிருக்கும் எல்லா நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குரான் ஒதிக்காட்டுவார்கள் என்று அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபித்தோழர்கள் தாபியீங்களில் பலரது கருத்தும் இதுவே யாகும் உலுவின்றி குர்ஆனை ஓதலாம் தூய்மையாக இருந்தால் தவிர குர்ஆனை பார்த்து ஓதலாகாது என்பது இறைவனிங்கூற்று . சூஃப்யான் சவ்ரி ,ஷாஃபி ,அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோரும் இந்த கருத்து உடையவர்கள்
(குறிப்பு :இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அப்துல்லா இப்னு சலமா என்பவர் நம்பகமானவரே எனினும் தனது முதுமையில் நினைவுதடுமாற்றம் இவருக்கு ஏற்பட்டுவிட்டது அந்த முதுமையான காலத்தில் தான் இந்த ஹதீஸை அறிவிப்பதாக ஷுஃபா கூறுகிறார் .ஷாஃபி அஹமத் ஆகிய இமாம்களும் இதை பலவீனமானது என்கின்றனர்)
திர்மிதி - ஹதீஸ் எண்: 146
حَدَّثَنَا ابْنُ أَبِى عُمَرَ وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِىُّ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ دَخَلَ أَعْرَابِىٌّ الْمَسْجِدَ وَالنَّبِىُّ -صلى الله عليه وسلم- جَالِسٌ فَصَلَّى فَلَمَّا فَرَغَ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِى وَمُحَمَّدًا وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا. فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا ». فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِى الْمَسْجِدِ فَأَسْرَعَ إِلَيْهِ النَّاسُ فَقَالَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « أَهْرِيقُوا عَلَيْهِ سَجْلاً مِنْ مَاءٍ أَوْ دَلْوًا مِنْ مَاءٍ ». ثُمَّ قَالَ « إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ ».
ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்தார்,அப்போது நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள் .வந்தவர் தொழுத்துமுடித்துவிட்டு “இறைவா! எனக்கும் முஹம்மதுக்கும் அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு எவருக்கும் நீ அருள் புரியாதே என்று பிரதித்தார் ,அவரை நோக்கி நபி(ஸல்) திரும்பி “இறைவனின் விசாலமான கருணையை சுருக்கிவிட்டிறே!” எனக் கூறி அவரைக் கடிந்து கொண்டார்கள் . சற்று நேரத்தில் பள்ளியிலே அவர் சிறுநீர் கழிக்களானார் .மக்கள் அவரை நோக்கி விரைந்தனர் .அப்போது நபி(ஸல்) அவர்கள் “அவரது சிறுநீர் மீது ஒரு வளித் தண்ணீரைக் கொடுங்கள்! நீங்கள் எளிய முறையில் எடுத்துச் சொல்பவர்களாகவே அனுப்பபட்டிருக்கிறீர்கள் ! கடினமான முறையில் எடுத்து சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்றார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்
(குறிப்பு :புகாரி ,அஹ்மத்,இப்னு மாஜா,அபூதாவூத்,நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
திர்மிதி - ஹதீஸ் எண்: 147
قَالَ سَعِيدٌ قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِى يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ نَحْوَ هَذَا. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَدْ رَوَى يُونُسُ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِى هُرَيْرَةَ.
மேற்கூறிய அதே ஹதீஸ் அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது .அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) வாசிலா இப்னுல் அஸ்கஃ (ரலி) வழியாகவும் அக்கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது.சில அறிஞர்கள் இதனடிப்படையிலே தீர்ப்பு கூறியுள்ளனர் அஹ்மத்,இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவே.
இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்
- என்று அபூ ஈசா கூறுகிறேன்
திர்மிதி - ஹதீஸ் எண்: 148
قَالَ سَعِيدٌ قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِى يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ نَحْوَ هَذَا. قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَابْنِ عَبَّاسٍ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ. قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ. وَقَدْ رَوَى يُونُسُ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِى هُرَيْرَةَ.
மேற்கூறிய அதே ஹதீஸ் அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது .அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) வாசிலா இப்னுல் அஸ்கஃ (ரலி) வழியாகவும் அக்கருத்து அறிவிக்கப்பட்டுள்ளது.சில அறிஞர்கள் இதனடிப்படையிலே தீர்ப்பு கூறியுள்ளனர் அஹ்மத்,இஸ்ஹாக் ஆகியோரின் கருத்தும் இதுவே.
இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்
என்று அபூ ஈசா கூறுகிறேன்
806
ReplyDeleteஹதீஸ் எண்: 2613?
ReplyDeleteதிர்மிதி 3895
ReplyDelete2230
ReplyDelete2510
ReplyDelete1376
ReplyDelete