Breaking News

நஸாயீ அத்தியாயம் 01

நஸயி - ஹதீஸ் எண்: 1

1 - كِتَابُ الطَّهَارَةِ تَأْوِيلُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ} [المائدة: 6]  أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُمَّ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»

தூய்மை பற்றிய அத்தியாயம்  நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் கைகளையும் கழுகிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன்)  “உங்களில் எவரேனும் உறங்கி எழுந்தால் மூன்று முறை கைகளை கழுகும்முன், ஒளூச் செய்யும் நீரில் கையைவிட வேண்டும்! ஏனெனில் இரவு நேரத்தில் அவனது கை எங்கெங்கே பட்டது என்பதை அவன் அறியமுடியாது என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இது புஹாரி , முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகிவுள்ளது எனினும் மூனறு முறை என்ற வார்த்தை புஹாரியில் இல்லை)

நஸயி - ஹதீஸ் எண்: 2

بَابُ السِّوَاكِ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»

இரவில் எழும்போது பல்துலக்குதல் நபி(ஸல்) இரவில் எழும்போது பல் துலக்கும் பொருளால் தம் வாயை (பற்களை) துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இது புஹாரி , முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 3

بَابُ كَيْفَ يَسْتَاكُ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: أَخْبَرَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: " دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ "ا

எவ்வாறு பல் துலக்க வேண்டும் நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கையில் நான் அவர்களிடம் சென்றேன். பல் துலக்கும் பொருளின் ஒரு பகுதி அவர்களின் நாவு மீது இருக்க ”அஃ அஃ” என்று சப்தம் செய்தார்கள் எனஎஅபூ மூஸா (ரலி) கூறுகிறார்.

நஸயி - ஹதீஸ் எண்: 4

بَابُ هَلْ يَسْتَاكُ الْإِمَامُ بِحَضْرَةِ رَعِيَّتِهِ؟ أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا - أَوْ لنْ - نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ». فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

தலைவர், தம்பிரஜைகள் முன்னிலையில் பல் துலக்கலாமா ? நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ”அஷ் அரி” கூட்டத்தினால் இருவரும் என்னுடன் வந்தனர் ஒருவர் என் வலப்புறமாகவும் இன்னொருவர் இடப்புறமாகவம் இருந்தனர் .ரஸுல்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தனர். (என்னுடன் வந்த) அவ்விருவரும் பொறுப்பான பதவியைய் கோரினார்கள். ”உங்களை நபியாக அனுப்பிவைத்தவன் மீது ஆனையாக (என்னுடன் வந்த) அவ்விருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை என்னிடம் திறந்து காட்டவில்லை , இவர்கள் பதவி நாடித்தான் வந்துள்ளனர் என்பதை நான் உணரவில்லை ” என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி நான் கூறினேன். (பதவி நாடி) இவ்விருவரும் உங்களைச் சந்திக்க வருவதை நான் அறிந்திருக்கமாட்டேன் என்ற கருத்தில் இதைக் கூறுகிறார்.)  (பல் துலக்கும் பொருளை கீழ் உதட்டுக்கு உட்பறமாக நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த தால் அவர்களின் (கீழ்) உதடு கொஞ்சம் மேடாகி விட்டது போல் இருந்தது பின்பு என்னை நோக்கி) ”நீர் செல்வீராக“ என்று கூறி எமன் நாட்டுக்கு அதிகாரியாக அனுப்பிவைத்தனர். பின்பு அவர்களை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக் கொண்டனர் என “அபூ மூஸல் அஷ்அரி“ குறிப்பிடுகிறார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 5

أخبرنا حميد بن مسعدة ومحمد بن عبد الأعلى عن يزيد وهو بن زريع قال حدثني عبد الرحمن بن أبي عتيق قال حدثني أبي قال سمعت عائشة عن النبي صلى الله عليه و سلم قال : السواك مطهرة للفم مرضاة للرب

நபி(ஸல்) அவா;கள் கூறினாh;கள் பல்; துலக்குவது வாயை துhய்மையாக்கும் இறைவனிடத்தில் திருப்தியை தேடித்தரும்;  இதை ஆயிஷா ரலி அறிவிக்கிறார;கள்

நஸயி - ஹதீஸ் எண்: 6

أخبرنا حميد بن مسعدة وعمران بن موسى قالا حدثنا عبد الوارث قال حدثنا شعيب بن الحبحاب عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : قد أكثرت عليكم في السواك

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறாh;கள்  அல்லாஹ்வுடைய தூதா; (ஸல்) அவா;கள் கூறினாh;கள் பல் துலக்குதல் பற்றி உங்களிடத்தில் நான் அதிகம் வலியுறுத்தியுள்ளேன்

நஸயி - ஹதீஸ் எண்: 7

أخبرنا قتيبة بن سعيد عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه و سلم قال : لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة

அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறாh;கள்  அல்லாஹ்வுடைய தூதா; (ஸல்) அவா;கள் கூறினாh;கள்  என்னுடைய சமுதாயத்தின் மீது சிரமம் இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் பல் துலக்க அவா;களுக்கு கட்டளையிட்டு இருப்பேன்

நஸயி - ஹதீஸ் எண்: 8

أخبرنا على بن خشرم قال حدثنا عيسى وهو بن يونس عن مسعر عن المقدام وهو بن شريح عن أبيه قال : قلت لعائشة بأي شيء كان يبدأ النبي صلى الله عليه و سلم إذا دخل بيته قالت بالسواك

ஷுரைஹ் (ரலி) கூறினாh;கள்  அல்லாஹ்வுடைய தூதா; (ஸல்) அவா;கள் தன்னுடைய வீட்டிற்குள் நுழையும் போது முதலில் என்ன செய்வாh;கள் என்று ஆயிஷா (ரலி) அவா;களிடம் கேட்டேன் நபி ஸல் அவர;கள்; பல்லை துலக்குவாh;கள் என்று ஆயிஸா ரலி கூறினாh;கள்

நஸயி - ஹதீஸ் எண்: 9

أخبرنا الحرث بن مسكين قراءة عليه وأنا أسمع عن بن وهب عن يونس عن بن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة عن رسول الله صلى الله عليه و سلم قال : الفطرة خمس الاختتان والاستحداد وقص الشارب وتقليم الأظفار ونتف الإبط

அபு ஹீரைரா (ரலி) கூறியதாவது  இயற்கை வழிமுறைகள் ஐந்தாகும் அவை: கத்னா செய்வது மா;மஸ்தான முடிகளை களைவது மீசையை கத்தாpப்பது நகங்களை வெட்டுவது அக்குள் முடிகளை களைவது என்று நபி(ஸல்) அவா;கள் கூறினார்கள்

நஸயி - ஹதீஸ் எண்: 10

أخبرنا محمد بن عبد الأعلى قال حدثنا المعتمر قال سمعت معمرا عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم : خمس من الفطرة قص الشارب ونتف الإبط وتقليم الأظفار والاستحداد والختان

அபு ஹுரைரா (ரலி) கூறியதாவது  இயற்கை வழிமுறைகள் ஐந்தாகும் அவை: மீசையை கத்தாpப்பது, அக்குள் முடிகளை களைவது நகங்களை வெட்டுவது மறை உறுப்பில் உள்ள முடிகளை களைவது, கத்னா செய்வது, என்று நபி(ஸல்) அவா;கள் கூறினாh;கள்

நஸயி - ஹதீஸ் எண்: 11

نَتْفُ الْإِبْطِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ مِنَ الْفِطْرَةِ: الْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَأَخْذُ الشَّارِبِ

அக்குள் மயிர் நீக்குதல் ஐந்து காரியங்கள் பித்ரத் (எனும் இயற்கயான சுன்னத் ) ஆகும். கத்னா செய்தல், மர்மஸ்தான மயிர் களைதல், மீசையை கத்தரித்தல், அக்குல் மயிர் நீக்குதல் (ஆகியவையே அவை) என நபி (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.  (குறிப்பு :- புஹாரி ,முஸ்லிம், இப்னு மாஜா , அபூ தாவூத், திர்மிதீ ஆகியோரும் இதை பதிவு செய்துள்ளனர்)

நஸயி - ஹதீஸ் எண்: 12

حَلْقُ الْعَانَةِ أَخْبَرَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْفِطْرَةُ: قَصُّ الْأَظْفَارِ، وَأَخْذُ الشَّارِبِ، وَحَلْقُ الْعَانَةِ

மர்மஸ்தான மயிர் களைதல்  நகங்களை வெட்டுவதும் மீசையை எடுப்பதும் , மர்மஸ்தான முடிகளை களைவதும் இயற்கை வழியாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 13

قَصُّ الشَّارِبِ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ يُوسُفَ بْنِ صُهَيْبٍ، عَنْ حَبِيبِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا»

மீசையைக் கத்தரித்தல்  ”எவர் தனது மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சேர்ந்தவரில்லை” என்று நபி (ஸல்) கூறியதாக ஸைது இப்னு அர்கம் (ரலி) அவர்கள் தெரிவிக்கார்கள். (குறிப்பு:- இந்த ஹதீஸ் அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)

நஸயி - ஹதீஸ் எண்: 14

التَّوْقِيتُ فِي ذَلِكَ أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا جَعْفَرٌ هُوَ ابْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «وَقَّتَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَصِّ الشَّارِبِ، وَتَقْلِيمِ الْأَظْفَارِ، وَحَلْقِ الْعَانَةِ، وَنَتْفِ الْإِبْطِ، أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ يَوْمًا» وَقَالَ مَرَّةً أُخْرَى: «أَرْبَعِينَ لَيْلَةً»

மேற்கூறிய காரியங்களுக்கான காலக் கெடு  மீசை வெட்டுவதற்கும், நகங்களைக் களைவதற்கும் மர்மஸ்தான முடிகளை மழித்தல், அக்குள் முடியை நீக்குதல், ஆகியவற்றுக்கும், 40 நாட்களைவிட அதிக நாட்கள் விடக்கூடாது என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தெறிவிக்கார்கள். (குறிப்பு;- முஸ்லிம் , அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது.)

நஸயி - ஹதீஸ் எண்: 15

إِحْفَاءُ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحَى أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»

மீசையை நீக்குதல்! தாடியை விடுதல்!  மீசையை நீக்குங்கள்! தாடியை விடுங்கள் ! என நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (குறிப்பு;- புஹாரி, முஸ்லிம், அஹ்மத், ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகிவுள்ளது.)

நஸயி - ஹதீஸ் எண்: 16

الْإِبْعَادُ عِنْدَ إِرَادَةِ الْحَاجَةِ أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الْخَطْمِيُّ عُمَيْرُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنِي الْحَارِثُ بْنُ فُضَيْلٍ، وَعُمَارَةُ بْنُ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ قَالَ: «خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَلَاءِ، وَكَانَ إِذَا أَرَادَ الْحَاجَةَ أَبْعَدَ»

மலஜலம் கழிக்கும் போது தொலைவாகச்செல்லுதல்  நான் நபி(ஸல்) அவர்களுடன் கழிப்பிடம் சென்றேன் அவர்கள் (மலம் கழிக்கும்) தேவையை நிரவேற்ற என்னும்போது வெகுதொலைவு சென்றுவிடுவார்கள் என அப்துர் ரஹ்மான் அபி குராத் (ரலி) அறிவிக்கிறார்கள்

நஸயி - ஹதீஸ் எண்: 17

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ. قَالَ: فَذَهَبَ لِحَاجَتِهِ وَهُوَ فِي بَعْضِ أَسْفَارِهِ فَقَالَ: «ائْتِنِي بِوَضُوءٍ، فَأَتَيْتُهُ بِوَضُوءٍ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ» قَالَ الشَّيْخُ: إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ الْقَارِئُ

நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்வதென்றால் வெகுதொலைவு சென்றுவிடுவார்கள், அவர்கள் ஒரு பயணத்தில் இருக்கும்போது தன்னுடைய (மலம் ஜலம் கழிக்கும்) தேவையை நிறைவேற்ற சென்றார்கள். ஒளு செய்வதற்காக தண்ணீரை கொண்டுவா! என்று என்னிடம் கூறினார்கள். நான் ஒளு செய்வதற்காக தண்ணீரைக் கொண்டுவந்தேன்; அவர்கள் ஒளு செய்தார்கள்; இரண்டு (காள்கையும் கழுக்காமல்) காலுரையின் மீது மஸஹ் செய்தார்கள் என முகீரா இப்னு ஷூஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 18

الرُّخْصَةُ فِي تَرْكِ ذَلِكَ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ قَالَ: أَنْبَأَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ «فَبَالَ قَائِمًا فَتَنَحَّيْتُ عَنْهُ، فَدَعَانِي وَكُنْتُ عِنْدَ عَقِبَيْهِ حَتَّى فَرَغَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ

சில நேரங்களில்) இதில் சலுகையுண்டு  நான் நபி(ஸல்) அவர்களுடன் நடந்துக் கொண்டிருந்தேன் ஒரு கூட்டத்தினரின் குப்பை மேட்டை அடைந்தார்கள். (அங்கே) நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள்; நான் அவர்களை விட்டு சிறிது விலகி நின்றேன். (அருகே) அழைத்தனர் அவர்கள் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை அவர்களின் குதிகாலுக்கு அருகே நின்றேன் பின்பு ஒளு செய்தார்கள். தனது காலுரையின் மீது மஸஹ் செய்தார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கின்றார்கள்.  (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 19

الْقَوْلُ عِنْدَ دُخُولِ الْخَلَاءِ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

கழிப்பறையில் நுழையும்போது சொல்லவேண்டியவை  நபி(ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும் போது “அல்லாஹும்ம இண்ணீ அவூதுபிக மினல் குப்ஸி வல்கபாயிஸி” இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என்று கூறுவார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.  (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 20

النَّهْيُ عَنِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الْحَاجَةِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ رَافِعِ بْنِ إِسْحَاقَ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ وَهُوَ بِمِصْرَ يَقُولُ: وَاللَّهِ مَا أَدْرِي كَيْفَ أَصْنَعُ بِهَذِهِ الْكَرَايِيسِ وَقَدْ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ أَوِ الْبَوْلِ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا

மலம் ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கத் தடை  “உங்களில் ஒருவர் மலம் ஜலம் கழிக்கச் சென்றாள் கிப்லாவை முன்னோகவும் கூடாது அதை பின்னோக்கவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பாதால் (கிப்லாவை நோக்கி கட்டப்பட்டுள்ள) இந்த கழிவறைகள் விஷயத்தில் நான் என்ன செய்வது என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு தெரியவில்லை என்று அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் ‘எகிப்து’ நாட்டில் வைத்துக் கூறியதை தாம் செவியுற்றதாக ராபிவு இப்னு இஸ்ஹாக் குறிப்பிடுகிறார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 21

النَّهْيُ عَنِ اسْتِدْبَارِ الْقِبْلَةِ عِنْدَ الْحَاجَةِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ، وَلَا تَسْتَدْبِرُوهَا لِغَائِطٍ أَوْ بَوْلٍ، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا»

மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை பின்னோக்கத் தடை  மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்காதீர்கள்! அதை பின்னோக்கவும் செய்யாதீர்கள்! மாறாக கிழக்கு மேற்க்காக அமர்ந்துக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரலி) கூறிகிறார்கள். (குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது கிழக்கு மேற்க்காக அமருமாறு நபி (ஸல்) கூறியது மதீனா வாசிகளை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது என்று அறிக.

நஸயி - ஹதீஸ் எண்: 22

الْأَمْرُ بِاسْتِقْبَالِ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ عِنْدَ الْحَاجَةِ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا غُنْدَرٌ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ قَالَ: أَنْبَأَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَكِنْ لِيُشَرِّقْ أَوْ لِيُغَرِّبْ

மலஜலம் கழிக்குபோது கிழக்கு மேற்க்காக முன்னோக்க கட்டளை  உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் செல்லும்போது கிப்லாவை முன்னோக்க கூடாது “எனினும் கிழக்கு மேற்க்காக அமர்ந்து கொள்க” என்று நபி(ஸல்) கூறியதாக அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 23

الرُّخْصَةُ فِي ذَلِكَ فِي الْبُيُوتِ أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ

வீடுகளில் இதற்க்கு அனுமதியுண்டு  எங்கள் வீட்டின் முகட்டின் மேல் நான் ஏறினேன்; நபி(ஸல்) அவர்கள் மலம் கழிப்பதர்க்காக இரு செங்கற்கள் மீது பைத்துள் முகத்தசை முன்னோக்கியவர்களாக இருப்பதை நான் கண்டேன்;என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (குறிப்பு: மதீனாவிலிருந்து பைத்துள் முகத்தசை முன்னோக்கினால் காஃபா முதுகுக்கு பின்புறமாக அமையும் என்பதை நினைவில் கொள்க!  இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது )

நஸயி - ஹதீஸ் எண்: 24

النَّهْيُ عَنْ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ عِنْدَ الْحَاجَةِ أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْمَاعِيلَ وَهُوَ الْقَنَّادُ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلَا يَأْخُذْ ذَكَرَهُ بِيَمِينِهِ»

மலஜலம் கழிக்கும்போது வலக்கரத்தால் மர்ம உறுப்பை பிடிக்கத் தடை   உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது தன் மர்ம உறுப்பை வலக் கரத்தால் பிடிக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நஸயி - ஹதீஸ் எண்: 25

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْخَلَاءَ فَلَا يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ»

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது தன் மர்ம உறுப்பை வலக் கரத்தால் பிடிக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.   24 வது ஹதீஸே 25 ஹதீசாகவும் இடம் பெறுகின்றது, அறிவிப்பாளர் வரிசை தொடர் மட்டும் வேறு.

நஸயி - ஹதீஸ் எண்: 26

الرُّخْصَةُ فِي الْبَوْلِ فِي الصَّحْرَاءِ قَائِمًا أَخْبَرَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: أَنْبَأَنَا إِسْمَاعِيلُ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا

திறந்த வெளியில் நின்றுக் கொண்டு சிறுநீர் கழிக்க அனுமதி  ஒரு கூட்டத்தினரின் குப்பை மேட்டுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்து நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என (ஹுதைஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்)  (இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 27

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدٌ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، أَنَّ حُذَيْفَةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا

ஒரு கூட்டத்தினரின் குப்பை மேட்டுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்து நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என (ஹுதைஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்)  27,28 வது ஹதீஸாகவும் மேர்க்கூரிய ஹதீஸே இடம் பெற்றுள்ளது அறிவிப்பாளர் தொடர் மட்டுமே மார்யுள்ளது.

நஸயி - ஹதீஸ் எண்: 28

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: أَنْبَأَنَا بَهْزٌ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ وَمَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَشَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ، فَبَالَ قَائِمًا» قَالَ سُليْمانُ: فِي حَدِيثِهِ «وَمَسَحَ عَلَى خُفَّيْهِ» وَلَمْ يَذْكُرْ مَنْصُورٌ الْمَسْحَ

ஒரு கூட்டத்தினரின் குப்பை மேட்டுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்து நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என (ஹுதைஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்)  27,28 வது ஹதீஸாகவும் மேர்க்கூரிய ஹதீஸே இடம் பெற்றுள்ளது அறிவிப்பாளர் தொடர் மட்டுமே மார்யுள்ளது.

நஸயி - ஹதீஸ் எண்: 29

الْبَوْلُ فِي الْبَيْتِ جَالِسًا أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «مَنْ حَدَّثَكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا فَلَا تُصَدِّقُوهُ؛ مَا كَانَ يَبُولُ إِلَّا جَالِسًا

வீட்டில் உட்கார்ந்து சிறுநீர் கழித்தல்  நபி(ஸல்) அவர்கள் நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்தாக எவர் கூறினாலும் அதை நீங்கள் நம்பாதீர்கள்! அவர்கள் உட்கார்ந்தவர்களாக தவிர சிறுநீர் கழித்ததே இல்லை என்று ஆயிஷா (ரலி) தெரிவிக்கிறார்கள்.  (குறிப்பு: திர்மிதி, இப்னு மாஜா, அக்ம்த் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 30

الْبَوْلُ إِلَى السُّتْرَةِ يَسْتَتِرُ بِهَا أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ كَهَيْئَةِ الدَّرَقَةِ، فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ خَلْفَهَا، فَبَالَ إِلَيْهَا. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: انْظُرُوا يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ. فَسَمِعَهُ فَقَالَ: «أَوَمَا عَلِمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ؟ كَانُوا إِذَا أَصَابَهُمْ شَيْءٌ مِنَ الْبَوْلِ قَرَضُوهُ بِالْمَقَارِيضِ، فَنَهَاهُمْ صَاحِبُهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ

மறைத்துக் கொள்ளும் விதமாக ஒரு பொருளை நோக்கி சிறுநீர் கழித்தல்  நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள், அவர்களின் கையில் கேடயம் போன்று ஒரு பொருள் இருந்தது. அதை (இத்தறையில்) வைத்து அதற்க்கு முன்னாள் அமர்ந்து அதை நோக்கி சிறுநீர் கழித்தார்கள் (இதைக் கண்ட) அங்கிருந்தவர்களில் ஒருவர் “இவரை கவனியுங்கள் பெண் சிறுநீர் கழிப்பதுப் போல் சிறுநீர் கழிக்கிறார்” என்று கூறலானார்கள். அதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி “பனீ இஸ்ராயீல்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கதியை நீ அறிவாயா? அவர்களின் ஆடைகளின் மீது சிறுநீர் பட்டுவிடுமையானால் கத்தரிக் கோளால் அதை கத்தரித்துவிடுவார்கள். இதை ஒருவர் தடுத்தார்; அதன் காரணமாக கப்ரில் வேதனை செய்யபட்டார் என்று கூறினார்கள் என அப்துர் ரஹ்மாண் இப்னு ஹஸனா (ரலி) அறிவிக்கிறார்கள்.  (குறிப்பு: இந்த ஹதீஸ் இப்னு மாஜாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
நஸயி - ஹதீஸ் எண்: 31

التَّنَزُّهُ عَنِ الْبَوْلِ أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنِ الْأَعْمَشِ قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ فَقَالَ: " إِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ: أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَإِنَّهُ كَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ، فَشَقَّهُ بِاثْنَيْنِ فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، ثُمَّ قَالَ: «لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا» خَالَفَهُ مَنْصُورٌ، رَوَاهُ عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ وَلَمْ يَذْكُرُ طَاوُسًا

சிறுநீர் விஷயத்தில் கவணமாக் இருத்தல்  நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு மத்தியில் நடந்தனர் “நிச்சயமாக! இவ்விருவரும் பெரிய குற்றத்திர்க்காக வேதனை செய்யப்படவில்லை; இதோ இவர் சிறுநீர் விஷயத்தில் தூமைஓயாக இருக்கவில்லை; அவர் கோள் சொல்லித் திரிந்தார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு பசுமையான பேரித்த மரத்தின் மட்டையை கொண்டுவரச் செய்து அதனை இரண்டாக பிளந்து ஒன்றை இந்த கப்ரின் மீதும் மற்றொன்றை அந்த கப்ரின் மீதும் நட்டு வைத்தார்கள் “இவ்விரண்டும் காய்ந்து போகதிர்க்கும் வரை இவ்விருவருக்கும் வேதனை லேசாக்கப்படக் கூடும்” என்று குறிப்பிட்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.  (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 32

بَابُ الْبَوْلِ فِي الْإِنَاءِ أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، عَنْ أُمِّهَا أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ قَالَتْ: «كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ، وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ

பாத்திரத்தில் சிறுநீர் கழித்தல்  நபி(ஸல்) அவர்களுக்கு மரத்தாளான பாத்திரம் ஒன்று கட்டிலுக்கடியில் இருக்கும். இரவு நேரங்களில் அதில் சிறுநீர் கழிப்பார்கள் என ருகையா (ரலி) அறிவிக்கிறார்.   (குறிப்பு: இந்த ஹதீஸ் அபூ தாவூத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 33

الْبَوْلُ فِي الطَّسْتِ أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا أَزْهَرُ، أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَى إِلَى عَلِيٍّ لَقَدْ دَعَا بِالطَّسْتِ لِيَبُولَ فِيهَا فَانْخَنَثَتْ نَفْسُهُ وَمَا أَشْعُرُ فَإِلَى مَنْ أَوْصَى»، قَالَ: الشَّيْخُ أَزْهَرُ هُوَ ابْنُ سَعْدٍ السَّمَّانُ

பித்தளை தட்டில் சிறுநீர் கழித்தல்  நபி(ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு (தனியாக ஏதோ கடைசி காலத்தில் வசியத் செய்ததாக சிலர் கூறிகின்றனர் அவர்களின் உயிர்மூச்சு தளர்ந்து விட்ட நிலையில் பித்தளை தட்டை சிறுநீர் கழிப்பதற்காக கொண்டுவரச் செய்தார்கள் இவ்வாறு இருக்க அவர்கள் யாருக்கு வசியத் செய்தார்கள்) என நான் அறிவில்லை, என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்  (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 34


كَرَاهِيَةُ الْبَوْلِ فِي الْجُحْرِ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: أَنْبَأَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي جُحْرٍ» قَالُوا لِقَتَادَةَ: وَمَا يُكْرَهُ مِنَ الْبَوْلِ فِي الْجُحْرِ؟ قَالَ: يُقَالَ إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ

புற்றுகளில் சிறுநீர் கழித்தல் வெறுக்கத்தக்கது உங்களில் எவரும் புற்றுகளில் சிறுநீர் கழிக்கலாகாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் அவர்கள் வழியாக அறிவிக்கும் கதாதா அவர்களிடம் “புற்றுகளில் சிறுநீர் கழிப்பது ஏன் வெறுக்கத்தக்கது என்று கேட்கப்பட்டதற்க்கு அவை ஜின்கள் வாழுமிடம் என்பதாக கூறப்படுகின்றது என்று கதாதா பதிலளித்தார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், ஹாக்கிம் பைஹகி ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 35


النَّهْيُ عَنِ الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «نَهَى عَنِ الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ

தேங்கி நிர்க்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கத் தடை ! தேங்கி நிர்க்கும் நீரில் சிறுநீர் கழிப்பாதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 36


كَرَاهِيَةُ الْبَوْلِ فِي الْمُسْتَحَمِّ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الْأَشْعَثِ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ؛ فَإِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ

குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கத் தடை உணக்ளில் எவரும் தனது குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் ஏனெனில் பெரும்பாலான (வஸ்வாஸ் என்னும்) ஊசலாட்டம் அதிலிரித்து தோன்றுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: அஹ்மத், திர்மிதி, அபூ தாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களில் இது இடம்பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 37


السَّلَامُ عَلَى مَنْ يَبُولُ أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ وَقَبِيصَةُ قَالَا: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الضَّحَّاكِ بْنُ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ السَّلَامَ

சிறுநீர் கழிப்பவருக்கு சலாம் கூறல் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டுருக்கும்போது ஒரு மனிதர் அவர்களை கடந்து சென்றார் அப்போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூத், இப்னு மாஜா, திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 38


رَدُّ السَّلَامِ بَعْدَ الْوُضُوءِ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ قَالَ: أَنْبَأَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنٍ أَبِي سَاسَانَ، عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ «سَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، فَلَمَّا تَوَضَّأَ رَدَّ عَلَيْهِ

ஒளுவிர்க்குப் பிறகு பதில் சலாம் கூறுதல் நபி(ஸல்) அவரகல் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தான் சலாம் கூறியதாகவும் ஒளு செய்யும்வரை தனக்குப்பதில் கூறாதிருந்து விட்டு ஒளு செய்யும் வரை தனக்கு நபி(ஸல்) பதில் கூறியதாகவும் முஹாஜிர் இப்னு குன்புத் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: அஹ்மத், இப்னு மாஜா, அபூ தாவூத் ஆகிய நூல்களிலும் இது பதிவாகியுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 39


النَّهْيُ عَنِ الِاسْتِطَابَةِ بِالْعَظْمِ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُثْمَانَ بْنِ سَنَّةَ الْخُزَاعِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَسْتَطِيبَ أَحَدُكُمْ بِعَظْمٍ أَوْ رَوْثٍ

எலும்புகளால் தூய்மை செய்யத்தடை (மலம்ஜலம் கழித்தப்பின்) எலும்பு, விட்டை ஆகியவற்றை கொண்டு உங்களில் ஒருவர் சுத்தம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: அபூ தாவூத், ஹாக்கிம்,தாரகுத்னி ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 40


النَّهْيُ عَنِ الِاسْتِطَابَةِ بِالرَّوْثِ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى يَعْنِى ابْنَ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ قَالَ: أَخْبَرَنِي الْقَعْقَاعُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ أُعَلِّمُكُمْ إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْخَلَاءِ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَا يَسْتَدْبِرْهَا، وَلَا يَسْتَنْجِ بِيَمِينِهِ». وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَنَهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ

விட்டைகளால் தூய்மை செய்யத் தடை நான் உங்களுக்கு (சின்ன விஷயங்களையும்) கற்றுதறுகின்ற தந்தை போன்றவன் உங்களில் ஒருவர் கழிப்பிடம் செல்லும் போது கிப்லாவை முன்னோக்கவும் கூடாது அதை பின்னோக்கவும் கூடாது மேலும் தன் வலது கரத்தால் சுத்தம் செய்யவும் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தண்ணீரின்றி கற்களால் சுத்தம் செய்வதென்றால்) மூன்று கற்கள் என்று கட்டளையிட்டிருந்தார்கள். (சுத்தம் செய்ய) எலும்பையும், விட்டையையும் பயன்படுத்திட தடை செய்தார்கள். என்று அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (குறிப்பு: அஹ்மத், அபூ தாவூத், இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 41


النَّهْيُ عَنِ الِاكْتِفَاءِ فِي الِاسْتِطَابَةِ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ قَالَ: قَالَ لَهُ رَجُلٌ: إِنَّ صَاحِبَكُمْ لَيُعَلِّمُكُمْ حَتَّى الْخِرَاءَةَ قَالَ: أَجَلْ. " نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا، أَوْ نَكْتَفِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ

மூன்று கார்களை விடக் குறையக்கூடாது உங்கள் தோழர் (அதாவது முஹம்மத் (ஸல்) அவர்கள் மலம்ஜலம் கழிப்பது உட்பட உங்களுக்கு கற்றுத் தருகிறாரோ!) என்று ஒரு மனிதர் சல்மான் (ரலி) அவர்களிட கூறினார். ஆம்! மலம்ஜலம் கழிக்கும்போது நாங்கள் கிப்லாவை முன்னோக்குவதையும் நாங்கள் வலக்கையால் தூய்மைசெய்வதையும் மூன்று கற்களுக்கு குறைவான அளவுடன் நாங்கள் போதுமாக்கிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை செய்துருக்கிறார்கள் என சல்மான் (ரலி) குறிப்பிடுகிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 42


الرُّخْصَةُ فِي الِاسْتِطَابَةِ بِحَجَرَيْنِ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ - قَالَ: لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ - وَلَكِنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ يَقُولُ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغَائِطَ، وَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ وَالْتَمَسْتُ الثَّالِثَ فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً فَأَتَيْتُ بِهِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُمَّ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ، وَقَالَ: «هَذِهِ رِكْسٌ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الرِّكْسُ: طَعَامُ الْجِنِّ

இரண்டு கற்களில் செய்ய அனுமதி நபி(ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றார்கள், மூன்று கற்களை எடுத்துவரும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். இரண்டு கற்களை பெற்றேன் மூன்றாவது கல்லை தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு விட்டையை எடுத்துக் கொண்டு அவற்றை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் அந்த இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு விட்டையை எறிந்துவிட்டார்கள். மேலும் இது (விட்டை) ‘ரிக்ஸ்’ என்றும் கூறினார்கள். ரிக்ஸ் என்றாள் ஜின்களில் உணவு என்று அபூ அப்துர் ரஹ்மான் என்ற நான் கூறுகிறேன். (குறிப்பு: இதை புகார், முஸ்லிம், திர்மிதி ஆகியோரும் பதிவு செய்துள்ளார்கள்)


நஸயி - ஹதீஸ் எண்: 43


بَابُ الرُّخْصَةِ فِي الِاسْتِطَابَةِ بِحَجَرٍ وَاحِدٍ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ

ஒரு கல்லில் சுத்தம் செய்ய அனுமதி நீ சுத்தம் செய்யும்போது (கற்களை) ஒற்றைப்படையாக பயன்படுத்து! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சலாமா இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.

நஸயி - ஹதீஸ் எண்: 44


الِاجْتِزَاءُ فِي الِاسْتِطَابَةِ بِالْحِجَارَةِ دُونَ غَيْرِهَا أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُسْلِمِ بْنِ قُرْطٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ، فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ فَلْيَسْتَطِبْ بِهَا؛ فَإِنَّهَا تَجْزِي عَنْهُ»

கற்களால் தூய்மை செய்வது போதுமானது உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் செல்லும்போது தன்னுடன் மூன்று கற்களை எடுத்துச் செல்லாட்டும்! அதன் மூலம் சுத்தம் செய்யட்டும்! நிச்சயமாக அது அவனுக்கு போதுமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: அஹ்மத், அபூ தாவூத், தாரகுத்னி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது)

நஸயி - ஹதீஸ் எண்: 45


الِاسْتِنْجَاءُ بِالْمَاءِ أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ أَحْمِلُ أَنَا وَغُلَامٌ مَعِي نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ فَيَسْتَنْجِي بِالْمَاءِ

தண்ணீரால் தூய்மை செய்தல் நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் என்போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் பாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். அந்த தண்ணீரால் அவர்கள் சுத்தம் செய்வார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது)


1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இதனுடைய தொடர் எப்போது ஆரம்பம் செய்வீர்கள் ஆரம்பம் செய்தால் என் ஈமெயில் ஐடிக்கு அடிபடும்

    ReplyDelete

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .