Breaking News

குடியேறும் போது பாத்திஹா உண்டா


குடியேறும் போது பாத்திஹா உண்டா
யாஸிர்
பதில்
இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள்செய்து வருகின்றனர்புதுவீட்டுக்கு வந்தவுடன் பால் காய்ச்ச வேண்டும்வீட்டில் ஜமாஅத்தொழுகை நடத்த வேண்டும்ஃபாத்திஹா ஓத வேண்டும்கூலிக்கு மாறடிக்கும் ஆலிம்களைக்கூட்டி வந்து வீட்டில் குர்ஆன் முழுவதையும் ஓதச் சொல்ல வேண்டும் என்று பலவிதமானமூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றதுஇவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்து போடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது.இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களைச் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை.
7281حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ وَأَثْنَى عَلَيْهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ حَدَّثَنَا أَوْ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا فَاضْرِبُوا لَهُ مَثَلًا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنْ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبْ الدَّاعِيَ لَمْ يَدْخُلْ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنْ الْمَأْدُبَةِ فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا فَالدَّارُ الْجَنَّةُ وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ وَمُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ تَابَعَهُ قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ جَابِرٍ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (லிஅவர்கள் கூறினார்கள் :
(ஒருநாள்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சிலவானவர்கள் வந்தார்கள்அவர்களில் ஒருவர் "இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார்அதற்கு மற்றொருவர் "கண்தான் உறங்குகிறது;உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார்பின்னர் அவர்கள் "உங்களுடையஇந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டுஇவருக்கு அந்த உவமையைஎடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள்அப்போது அவர்களில் ஒருவர்"இவர் உறங்குகிறாரே!'' என்றார்மற்றொருவர் "கண் உறங்கினாலும் உள்ளம்விழித்திருக்கிறது'' என்றார்பின்னர் அவர்கள் "இவரது நிலை ஒரு மனிதரின்நிலைக்கு ஒத்திருக்கிறதுஅவர் ஒரு வீட்டைக் கட்டினார்அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடுசெய்தார். (மக்களைஅழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார்அழைப்பாளரின் அழைப்பைஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்விருந்துண்டார்அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள்நுழையவுமில்லைவிருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள், "இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள்அப்போது அவர்களில் ஒருவர் "இவர்உறங்குகிறாரே!'' என்று சொல்லமற்றொருவர் "கண்தான் தூங்குகிறதுஉள்ளம்விழித்திருக்கிறது'' என்றார்அதைத் தொடர்ந்து "அந்த வீடுதான் சொர்க்கம்;அழைப்பாளர் முஹம்மத் (ஸல்அவர்கள்முஹம்மத் (ஸல்அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்முஹம்மத் (ஸல்அவர்களுக்கு மாறுசெய்தவர்அல்லாஹ்வுக்கு மாறுசெய்துவிட்டார்முஹம்மத் (ஸல்அவர்கள் மக்களை (நல்லவர்-கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள்.
புகாரி (7281)
வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு இந்த உவமையைக் கூறியுள்ளார்கள்வீடுகட்டி விருந்து ஏற்பாடு செய்வது நல்ல விஷயத்துக்கு உதாரணமாக்க் கூறப்பட்டுள்ளது.மார்க்கத்தல் அனுமதியுள்ள ஒன்றைத் தான் நல்ல விஷயத்துக்கு உதாரணமாக்க் கூற முடியும்.
புதுவீட்டுக்காக விருந்து கொடுப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால்வானவர்கள் அதை நபியவர்களுக்கு உதாரணமாக்க் கூறியிருக்க மாட்டார்கள்எனவே புது வீடுகட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.
பாத்தியா ஓதுதல் உட்பட அனைத்தும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும்.

POSTED BY S.SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .