Breaking News

ஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரம்

ஆப் கீ பார் ‘கடன்’சர்க்கார் - அதிர்ச்சிகொடுத்த புள்ளிவிவரங்கள்


பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 82 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நாட்டின் கடன் அதிகரித்துள்ளது.



இந்தியாவின் 14-வது பிரதமராக, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார் மோடி. பதவி ஏற்ற சில மாதங்களிலே பொருளாதார சீர்திருத்தம் என்று கூறி  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டன.  இந்த மே மாதத்துடன் பா.ஜ.க-வின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், அவர் தலைமையிலான நான்கரை ஆண்டுகால ஆட்சியில், 50 சதவிகிதம் அளவில் கடன் தொகை உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் கடன் மதிப்பு 54 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 



இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரையில் மத்திய அரசுக்கு உள்ள கடன் தொகை 82 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதாவது, 49 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  அதேபோல, பொதுக் கடனைப் பொறுத்தவரை 48 லட்சம் கோடியிலிருந்து 73 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, 51.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டு இறுதியில் தங்கப் பத்திரங்கள்மீது எந்த ஒரு கடனும் இல்லாமல் இருந்தது. தங்கத்தை நாணயமாக்கல் திட்டத்தின் கடன் 9,089 கோடி ரூபாயாக இருந்தது. 2010-2011 நிதி ஆண்டு முதல், அரசுக்கு உள்ள கடன் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுவருகிறது. அப்படி இந்த முறை 8-வது பதிப்பு வெளியானதில், இந்தக் கடன் விவரங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது..


No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .