Breaking News

தொடரும் பாசிச சிந்தனையாளர்களின் மத துவேஷ நடவடிக்கைகள்


  சமிபகாலமாக பெரும்பான்மை மக்கள் மத்தியிலிருந்து சிறுபான்மை மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மத துவேச  சக்திகள் செயல்பட்டுக் கொண்டு வருவது அதிகமாக காண முடிகிறது.

முஸ்லிம்களின் நம்பிக்கைகளை விமர்சிப்பது... அவர்களின் மீது வேண்டுமென்றே பொய்யான பழியைப் போடுவது... மட்டுமல்லாமல் அவ்வப்போது...
சமூக வலைத்தளங்களில் வாயிலாகவும் முஸ்லிம்களை சீண்டுவதும் வாடிக்கையாகி விட்டது.


சென்ற ஜுன் 18 ந்தேதி நடைபெற்ற சம்பவம்
பூஜா என்ற பெண் தனது ஏர்டெல் டிடிஎச் மறு இணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டதாகவும்  அப்போது பேசிய ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி தன்னிடம் அத்துமீறிப்  பேசினதாகவும்’  குற்றம்சாட்டி ஏர்டெல் ட்விட்டர் ஐ.டி-யில் ஒரு புகார் பதிவிட்டு இருந்தார்
அவரின் புகாருக்கு ஏர்டெல் பிரதிநிதி ஷோயிப் அவர்கள் ஏர்டெல் ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து
  "இந்த விஷயத்தை உடனடியாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி எனவும். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம்’ எனவும் மிகவும் கனிவாகப் பதில் அளித்தார்.
ஷோயிப் ட்வீட்டுக்கு பதிலளித்த பூஜா, 
"நீங்கள் இஸ்லாமியராக இருப்பதாலும்,குர்ஆன் காரணத்தாலும் உங்கள் நேர்மை மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
எனவே, இந்து பிரதிநிதியை நியமிக்கவும்’ என்று  பதிவிட்டார். 
உடனே ககன்ஜுட் என்ற மற்றொரு ஏர்டெல் பிரதிநிதி, `உங்களின் புகாரை விரைவில் விசாரிக்கிறோம்’ என்று பூஜாவுக்குப் பதிலளித்தார்.



`மதத்தையும், இஸ்லாமியர்களின் புனித வேதமான திருக்குர்ஆனையும்  காரணம் காட்டி வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்கச் சொன்ன வாடிக்கையாளரை  ஏர்டெல் கண்டிக்க தவறி விட்டது என்பதை குறித்து’ இணையத்தில் பெரும் சர்ச்சையும், கண்டனங்களும் எழுந்தது. `ஏர்டெல் சேவையில் இருந்து வேறு சேவைக்கு மாறப் போகிறோம்’ என்று பலர் ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாக கண்டித்தனர்.

திருக்குர்ஆன் சொல்லும் அளவுக்கு உலகில் வேறு எங்கும் நேர்மையை சொல்ல முடியாது. திருக்குர்ஆன் மனிதர்கள் நேர்மையாக நடக்க வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்த கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக இறைவன் திருக்குர்ஆனின் 33 அத்தியாயத்தின்  70 வசனத்தில் கூறுகிறான்
*يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!*
திருக்குர்ஆன் மனிதர்களுக்கு நேர்மை குறித்து சொல்லும் செய்திக்கு சிறந்த உதாரணமாக இந்த வசனம் திகழக்கூடியதை பார்க்கலாம் பேசும் பேச்சில் கூட நேர்மையை வலியுறுத்தக்கூடியது இஸ்லாம் மாத்திரம் தான்.
நிதர்சனம் இப்படி இருக்க அதை மறைத்து பொய்யாக  குர்ஆன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு
சுமார் 9 மணி நேரம் கழித்து ஏர்டெல் நிறுவனம் பூஜா எனும் அந்த பெண்ணின் ஐடி-யை டேக் செய்து

`ஏர்டெல் நிறுவனம்,
'சாதி மத அடிப்படையில் ஊழியர்களையும் வாடிக்கையாளரையும்  ஒருபோதும் வேற்றுமைப்படுத்தாது. நீங்களும் சாதி மத வேற்றுமை பார்க்காமல் நடந்துகொள்வதே சரி. ஷோயிப், ககன்ஜுட் இருவருமே எங்கள் பிரதிநிதிகள்தான்’
என்று அந்தப் பெண்ணுக்கு விளக்கம் அளித்தது.
இது போல சில மாதங்களுக்கு முன்,




"ஓலா கார் ஓட்டுநர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது சவாரிக்கான முன்பதிவை ரத்து செய்வதாகவும் தனது பொருளாதாரத்தை ஜிகாதிகளுக்கு வழங்க மாட்டேன் என்றும்" சில மாதங்களுக்கு முன் அபிஷேக் மிஸ்ரா என்பவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இப்பதிவானது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் 2014 ஆம் ஆண்டு ''நான் மோடியை ஆதரிக்கிறேன்'' என்ற அணிக்காக விருது பெற்ற விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ஓலா நிறுவனம்
"ஓலா, நம் நாட்டைப் போலவே, ஒரு மதச்சார்பற்ற தளமாக இருக்கிறது,
நாங்கள் எங்கள் பங்கீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஓட்டுநர்களை அவர்களின் சாதி,பாலினம், மதத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டுவதில்லை.
எங்கள் ஓட்டுநர்களிடம் வாடிக்கையாளர்களை எல்லா நேரங்களிலும்  ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். "
என்று பதிலடி கொடுத்தது.
இதுபோன்று
சில நேரங்களில் இந்த வகுப்பு வாத கும்பல்களால் சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்றும், இஸ்லாமியர்களின் தயாரிப்புக்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் மத துவேஷக் கருத்துக்களை பதிந்து வருவதையும் காண முடிகிறது.
இப்படி அவ்வப்போது சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களது தொழில்,வேலை, வருமானம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இக்கும்பல்கள் செயல்படுகிறதை நம்மால் உணர முடிகிறது.
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சீண்டி பதிவிடுவதும் அவர்களின் அப்பதிவில் அப்பாவி முஸ்லிம்கள் ஏதாவது பதில் அளித்தால் அதனை வைத்து இஸ்லாத்தை விமர்சிப்பது என்பதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இப்படி மக்கள் மத்தியிலே பிளவை உண்டு பண்ண வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவோரை அரசு கண்டித்து வைக்க வேண்டும். ஆனால் அரசும் அதை கண்டு கொள்வதில்லை.
இவர்களை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு, அவர்களின் சதிவலையில் சிக்கி விடாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திட வேண்டும்.
அதுபோல, எந்த திருக்குர்ஆனை, இஸ்லாத்தை அவர்கள் அவதூறு பிரச்சாரத்தின் வாயிலாக விமர்சிக்கிறார்களோ, அந்த குர்ஆனின் போதனைகளை கொண்டு அவர்களை எதிர் கொள்ள வேண்டும். மனிதக் குலத்திற்கு திருக்குர்ஆன் கூறும் போதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
*بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
திருக்குர்ஆன்  21:18*

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .